சம்ஹாரம் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-7/-5

🧶ஒரே வீட்டில், ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரில்லர் படம்,
சம்ஹாரம் “👍
தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கிறது. குறைந்த கதாபாத்திரங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட இடத்தை பயன்படுத்தியிருந்தாலும், திரைக்கதை தொடர்ந்து பதற்றத்தை உருவாக்குகிறது.🔥
வீட்டிற்குள் நடக்கும் மர்மமான சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் மறைக்கப்பட்ட ரகசியங்கள் கதையை சுவாரஸ்யமாக முன்னெடுக்கின்றன பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரவின் அச்சமூட்டும் சூழலை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.🔥
சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தாலும், இறுதியில் வரும் திருப்பம் அந்த குறையை மறக்க வைக்கிறது. பெரிய அளவிலான ஆக்‌ஷன் இல்லாமல், மனஅழுத்தம் மற்றும் சஸ்பென்ஸை நம்பி வெற்றி பெறும் திரில்லர் இது.
மொத்தத்தில்: குறைந்த இடத்தில் அதிக பதற்றத்தை உருவாக்கும், ஒரு இரவுக்குள் நடக்கும் திரில்லர் படங்களை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வு.👍

கதை களம்

🧶படத்தின் ஆரம்பத்தில் உதயா, மாரி ,என்ற இரு ரௌடிகளை முகமூடி மனிதன் போட்டுத் தள்ளுகிறார். அப்பொழுது படம் ஹைப்”😎 ஏற்றுகிறது
யார் அந்த முகமூடி மனிதன்? 👽

நாயகன் பிரஜன்
(நரசிம்மன்)
வீட்டை விட்டு ஓடி போகும் தன் தங்கையை ரூமில் வைத்து பூட்டிவிட்டு உறவினரான இன்பாவுக்கு மணமுடிக்க திட்டமிடுகிறார் .🪩

அசோக்கை விரும்பும் மித்ரா, தன்னை வந்து காப்பாற்றும்படி கெஞ்ச அசோக்கை அந்த வீட்டுக்கு வர வைக்கிறார்.

மித்ராவின் அக்கா சித்ரா, இன்பாவுக்கு திருமணம் முடிக்கும் பொழுது மர்மமான முறையில் இறந்து போகிறார்!!
அவர் எப்படி கொல்லப்பட்டார்? 😎

சித்ராவின் காதலன் பிரகாஷ் இதற்காக இன்பாவை கொலை செய்ய பிரஜின் வீட்டுக்கு வருகிறார் !!

பிரஜன் நண்பன் பாலாவின் உறவினரான ஜோசப், எமி, இருவரும் கார் ரிப்பேர் ஆகிவிட்டது என்று பிரஜன் வீட்டுக்கு வருகிறார்கள்?

அந்த வீட்டில் அலாவுதீன், என்று சொல்லும் “ஆந்தை கண்ணன் “ஒரு மர்மமான நபராக காட்சிக்கு காட்சி மிரட்டுகிறார்?
அவர் யார்?👁️

பிரஜன் ஒரு காட்சியில் நல்லவராகவும், மறுக்காட்சியில் வில்லன் போலவும், காட்சி தருகிறார்!! அவருடைய கதாபாத்திரம் என்ன? அவருடைய நோக்கம் என்ன? 👽

அடுத்த நாள் திருமணம் செய்து கொள்வதற்காக இன்பா அந்த வீட்டுக்கு வருகிறார் இரவு தங்குகிறான்?

இன்பாவை கொலை செய்ய, மித்ராவும், அசோக்கும் திட்டமிடுகிறார்கள்!! ஜோசப்பும் எமியும் திட்டமிடுகிறார்கள் சித்ராவின் காதலன் பிரகாஷ் திட்டமிடுகிறார் இதில் யார் இன்பாவைக் கொன்றது? என்ன நடந்தது? பிரஜன் காட்சக்குகாட்சி மர்மமான செய்தியின் மூலம் ஆந்தை கண்ணனிடம் ,ஒரு செய்தி காட்டுகிறார் அது என்ன? 👁️

இறந்து போன சித்ரா, தன் அண்ணன் பிரஜனிடம் வந்து 💩அழுகிறார் பேயாக அது ஏன்?

இப்படி காட்சிக்கு, காட்சி விறுவிறுப்பும், வித்தியாசமாகவும் கதை உருவாக்கப்பட்டு திரைக்கதையில் ஹைப்ஏற்றி இருக்கிறார்கள்!!🔥
ஆரம்ப காட்சியில் இருந்து முடிவு வரை ரெக்கை கட்டி பறக்கிறது.👍

நடிகர் & நடிகைகள்-

🪩 பிரஜின் நரசிம்மன் என்ற கதாபாத்திரத்தில்- படம் முழுக்க ஒரு புரிந்து கொள்ள முடியாத கதாபாத்திரமாக வருகிறார். ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். தன் தங்கையின் மீது காட்டும் கரிசனம். அந்த இரவுக்குள் ஏதோ ஒன்று முடித்து விட வேண்டும் என்ற தீவிரமாக இருக்கும் இந்த கதாபாத்திரத்தின் மீது கவனம் ஏற்படுத்துகிறது. பிரஜனுக்கு இது ஒரு திருப்பு முனையாக அமையும் .

🧶நாயகிகள்- ஷருமிஷா,
நியா வர்கீஸ் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்
மித்ரா, சித்ரா, ஷாலினி என்று பெண் கதாபாத்திரங்களும் பிரஜனின், தங்கைகளாகவும், மனைவியாகவும், வந்து படத்திற்கு விறுவிறுப்புக்கு உதவுகிறார்கள்.

🧶கணேஷ் சாவரட்டில் வில்லனாக, இன்பா என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க மிரட்டி இருக்கிறார். அந்த இரவில் “இன்பா சாகபோகிறார்!! ஆனால் அவரை யார் கொல்லப் போகிறார்கள் என்பதுதான் படத்தின் ஹைலைட் இந்த கதாபாத்திரத்திற்கு இன்பாவாக சிறப்பாக நடித்திருக்கிறார் 👍


👁️ராஜ்குமார், ஆந்தை கண்ணனாக படம் முழுக்க மிரட்டி இருக்கிறார் விழிகளை உருட்டி, மதுவை குடித்து, வினோதமாக சிரிக்கும் அவரை பார்க்கும் பொழுது ஒரு அச்சம் ஏற்படுகிறது .
கவனம் ஈர்க்கிறார். மற்றும்
தென்றல் ராஜா, ராம் பிரபா.என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

தொழில்நுட்ப குழு விபரம்

🪩தயாரிப்பு: Vidhya Productions
தயாரிப்பாளர்: வேல் முருகன்
சிறப்பான படத்தை தயாரித்து இருக்கிறார்.

🧶படத்தின் கதையை திரைக்கதையை எழுதி இருக்கிறார் : ராம் பிரபா
ஒரே வீட்டில் நடக்கும் கதை ,ஒரு பத்து பேரை சுற்றி நடக்கும் கதை. விறுவிறுப்பாக சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

🪢 V G ஹரி கிருஷ்ணன் இசையில் ,
பின்னனி இசை மிரட்டலாக இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இசை பலமாக இருக்கிறது.

👑: சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு,
இரவு நேரகாட்சிகளையும்,
சிறப்பாக படம் பிடித்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து அந்த முக மூடி மனிதன் யார்? என்று மிரட்டி இருக்கிறது ஒளிப்பதிவு.

🌚:ராம்நாத் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. காட்சிக்கு காட்சி மிரட்டலாக படத்தை செதுக்கியிருக்கிறார் .

🌍பாடலாசிரியர்: அபிநயா ஆரம்பத்தில் டைட்டில் பாடல் மிரட்டி இருக்கிறார்.

🌷போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: சசி & சசி

🌸மக்கள் தொடர்பாளர் சரண் ,இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.

🍩மொத்தத்தில் இந்த சம்ஹாரம்” தீயவனை அழிக்க எடுத்திருக்கும் சம்ஹாரம் ஆக வந்து
இருக்கிறது.👍 வெற்றி பட்டியலில் இந்த படம் இடம் பிடிக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்🔥