இரட்டையர் திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

🌸ஜோசப் ,ஜான்சி, குமார் பிலோமினா இவர்கள் கொடைக்கானல் மலை மீது குடியிருந்து வருகிறார்கள். அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு சிலிண்டர் வருகிறது. ஜோசப் மகன் குமார் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். மகள் பிலாமினா கோவமாக வீட்டுக்கு வருகிறாள். ஜோசப்பும், ஜான்சியும், என்ன விஷயம்? என்று கேட்க தன் கணவனுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய 5 லட்சம் தேவைப்படுகிறது. அதில் 3 லட்சம் நிர்வாகம் ஓகே சொல்லிவிட்டது. இன்னும் இரண்டு லட்சம் வேண்டும் என்று சொல்கிறார் 😨

🪩அடுத்து அபிஷேக், அமிர்தா,
அனுமிதா,அனுசிதா
இரண்டு குழந்தைகள்உடன் மலைப்பாதையில் காரில் வருகிறார்கள். ஜோசப் வீட்டில் இருந்து அந்த சிலிண்டர் தவறி விழுந்து அந்த காரின் மீது விழுந்து கார் ஆக்சிடெண்ட் ஆகிறது.😨

💩அதற்கு முன் ராஜரத்தினம், அபிஷேக் காரில் வரும் பொழுது, அந்த வீட்டை விற்று கொடு, கடனை கட்ட வேண்டும் என்று சொல்கிறார். அபிஷேக் முடியாது என்கிறார்.

😭இப்பொழுது கார் ஆக்சிடென்ட் ,ஆகி
அதில் அபிஷேக், இறந்து விட ,இரண்டு குழந்தைகளும் அமிர்தாவும்,🥵 உயிர்பிழப்பைதாக சொல்கிறார்கள்.

🌸அதன் பிறகு அமிர்தாவுக்கு, முகத்தில் சர்ஜரி செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்ல ராஜரத்தினம் வேறு மாதிரியான கற்பனை செய்ய,😭 படம் பார்ப்பவர்கள், சர்ஜரி மூலம் வேறொரு பெண்ணை வைத்து அந்த சொத்தை அடையை திட்டமிடுகிறார். என்று படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடிகிறது. 🥵

🔥இப்பொழுது சர்ஜரி செய்யப்பட்டு முகத்தில் கட்டுடன் இருக்கும் அமிர்தா இரண்டு குழந்தைகளும், வீட்டில் தனியாக இருக்கிறார்கள்
.அந்த குழந்தைகளுக்கு இது தன்னுடைய அம்மா இல்லை என்று தெரிய வர அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள் 🔥

😨அது உண்மையான அமிர்தா வா? அல்லது வேறு பெண்ணா ?

🌚ராஜரத்தினம் அந்த வீட்டை விற்று தன் பங்குக்கு சொத்தை அடைந்தாரா? இல்லையா ?😨

👑அந்த குழந்தைகள் தன் அம்மா இல்லை என்று நினைத்து அந்த வீட்டில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள்!! தப்பித்தார்களா? இல்லையா?
இதுதான் இரட்டையர்
படத்தின் கதை ,🔥

படத்தின் ஹை லைட்

🌚குழந்தைகள் அஸ்மிதா, அனுசிதா இருவரும்
படம் முழுக்க செய்யும் திட்டங்கள் தந்திரங்கள்,👍
தன்அம்மா இல்லை என்று கண்டுபிடிக்க அவர்கள் போடும் அந்த யோசனைகள்👍 வீட்டிலிருந்து தப்பிக்க வரைபடம் மூலம் திட்டம் தயாரிக்கும் அந்த எண்ணம்🔥 என இரண்டு குழந்தைகளும் நடிப்பில் பட்டையை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறார்கள் 👍

🌚சுப்பிரமணிய சிவா ,ராஜரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் நல்லவரா? கெட்டவரா ?என்று தெரியாத அளவுக்கு படம் முழுக்க வந்து ஒரு திருப்புமுனை ஏற்படுத்துகிறார் .

🌸அபிநயா ,அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க ஒற்றை ஆளாக வந்து பல சிரமங்கள், நெருக்கடி 😨முகத்தில் கட்டுடன் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் 😭

🔥இந்த படத்துக்கு வசனம் எழுதி, ஜோசப் ,என்ற கதாபாத்திரத்தில் பாலபாரதி நடித்திருக்கிறார். வசனங்கள் மிக அருமையாக இருக்கிறது. இயல்பாக இருக்கிறது. பாலபாதி அவர்களுக்கு பாராட்டுக்கள்👍 நடிப்பிலும் ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தி ருக்கிறார் 👍

🔥மற்றும் பிலோமினா, ஜான்சி என்ற கதாபாத்திரங்கள் அவ்வப்போது படத்துக்கு உயிர் ஊட்டுகிறது.*

🌸: Asia Iconic Studios சார்பில் ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன், இணை தயாரிப்பாளர்- ஹரிஹரன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது .
தொழில்நுட்பக் குழு

:
🔥ஜெகதீஷ் இப்படத்திற்கு கதை, திரைக்கதை & எழுதி இயக்கி உள்ளார் .
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, அம்மாவுக்கும் இரட்டை பெண் குழந்தைகளுக்குமான அன்பும் உறவும் மையமாகக் எழுதி இயக்கி இருக்கிறார் .
திகில் சம்பவங்களே இப்படத்தின் ஹை லைட் 🔥

😎வசனம் – பால பாரதி
வசனம் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்👍

: 🌸முகமது அமீன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து இருக்கிறார். வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்களையும், மலைப்பகுதியும், நன்றாக படமாக்கி இருக்கிறார் .👍

🔥GKVஇசையமைப்பாளராக பின்னணி இசை பிரமாதமாக கொடுத்திருக்கிறார். .
🌸ஈஸ்வர மூர்த்தி
படத்தொகுப்பு : கச்சிதமாக இருக்கிறது.

🔥கலை இயக்கம் : பிரபாகரன் ராகுல்,
நிர்வாக தயாரிப்பாளர் : பாலச்சந்தர்,
தயாரிப்பு மேலாளர் : பிரதீப் மிதுல்
இணை தயாரிப்பாளர் – ஹரிஹரன்

🔥மக்கள் தொடர்பு – மணி மதன்

👍என அனைவரும் இந்த வெற்றி படத்துக்காக உழைத்திருக்கிறார்கள்.👍
இரண்டு குழந்தைகளை வைத்து, ஒரு வீடு மையமாக வைத்து, அதில் நடக்கும் சம்பவங்களை தொய்வின்றி விறுவிறுப்பாக கொண்டு சென்றதில் இயக்குனரையும் குழந்தைகளையும் அபிநயாவையும் பாராட்டலாம்👍
படம் முழுக்க குழந்தைகள், இருவரும் செய்யும் திட்டங்கள், தந்திரங்கள் , தன் அம்மா இல்லை என்று கண்டுபிடிக்க அவர்கள் போடும்
கணக்கு பலே👍