சாரு கேசி”திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -/5

கதை களம்

🥅உறவுகளின் அருமை நம் அருகில் இருக்கும் போது தெரிவதில்லை. அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்ற பிறகுதான் அந்த அருமை புரிகிறது. என்ற அருமையான தத்துவத்தை இந்த சாருகேசி” படம் சொல்கிறது.
சாருகேசி ,என்ற நாணயத்திற்கு ஒரு பக்கம் இசை, என்றால் மறுபக்கம் வலி “அந்த வலி பெற்ற மகனால், வீட்டுக்கு வந்த மருமகளால், தாங்க முடியாத மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்.
அந்த மன வருத்தத்தில் இருந்து மீண்டாரா? இல்லையா?.
என்பது ஒன் லைன்!

சாருகேசி, ஒர்பிரபல கர்நாடக இசைக் கலைஞர் . இசைக் கலைஞரான தந்தைக்கும், அவரது மகனுக்கும், இடையே உள்ள மோதலை படம் சொல்கிறது . மனைவியை நேசிக்கும் கர்நாடக சங்கீத வித்வான் சாருகேசி,
அல்சைமர் நோயால் நினைவுகளை இழக்கிறார். அதன் பின்னர், ஒரு கலைஞரின் வாழ்க்கை, என்ன ஆனது? என்பதை மிகவும் நெழ்ச்சியோடு, சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஒய். ஜி. மகேந்திரன் அவர்கள் நடத்திய புகழ்பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நாடகமே சாருகேசி. இதில் செவ்வியல், இசை, உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் கலைப் பாரம்பரியத்தை பற்றி படம் அழகாகவும் சொல்கிறது.

இந்த படத்தில்
:ஒய். ஜி. மகேந்திரன் மற்றும் சுகாசினி மணிரத்னம் ஆகியோரின் அனுபவமிக்க நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ள ஒரு தனித்துவமான திரைப்படமாகும்

🎵 இசை மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ற உணர்வை தருகிறது.
👏 முதிர்ந்த நடிகர்களின் நடிப்பு படத்தின் பெரிய பலமாக அமைந்துள்ளது.
❤️ குடும்ப பாசம், மன்னிப்பு, நினைவுகள் போன்ற உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட கதை.
சில இடங்களில் கதை மெதுவாக நகர்வதாக இருந்தாலும்
வணிகத் திரைப்பட வேகம் எதிர்பார்ப்பவர்களுக்கு படம் சற்று அமைதியான அனுபவமாக இருக்கலாம்.
குடும்பக் கதைகளையும் இசையை மையமாகக் கொண்ட திரைப்படங்களையும் விரும்புபவர்களுக்கு “சாருகேசி” ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ஆக்ஷன் அல்லது மாஸ் அம்சங்களை எதிர்பார்க்காமல் பார்த்தால், படம் மனதைத் தொடும் வகையில் அமைந்துள்ளது.

நடிகர் &நடிகைகள்

🌸ஒய் ஜி மகேந்திரன்
சாருகேசி யாக,அவர் ஒரு பிராமண குடும்பத் தலைவராக, தன் மனைவி பாக்யம், புன்னகை தான் உலகம் என்பதைதத்ரூபமாக சித்தரிக்கிறார்– படத்துக்காக
அவர் கடினமாக உழைத்திருக்கிறார் .
மகன், மீது பாசம்
தன்னை எதிரியாக பார்க்கும் மருமகள் ,
தன்னை நேசிக்கும் தலைவாசல் விஜய்,
இவர்களுடன் இயல்பான நடிப்பு நன்றாக இருக்கிறது
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருந்திருந்தால்
நிச்சயம் இந்த சாருகேசியின் நடிப்பை “உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார்.

🔥சத்யராஜ்,
ராகதேவன் என்னும் கதாபாத்திரத்தில் கடவுளின் அவதாரமாக வருகிறார். பிரச்சனை வரும் போதெல்லாம்
அதற்கு தீர்வு சொல்லும் அவரது வசனங்கள் படைப்பின் வலி “என சிறப்பாக வசனம் பேசி நடித்திருக்கிறார்.

🌸 சமுத்திரக்கனி, இவர் தான் படத்தை நகர்த்தி செல்லும் வழிகாட்டியாக சிறப்பாக நடித்திருக்கிறார் .

🔥 தலைவாசல் விஜய்,
செந்தில், என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் .

🌸 சுஹாசினி மணிரத்னம்,
ஒய் ஜி மகேந்திரன் மனைவியாக பாக்கியம் ,என்ற கதாபாத்திரத்தில்
ஒய்.ஜி. மகேந்திரன்
நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு வரும்பொழுது” என் தெய்வத்தை, என்ன செஞ்சீங்க “என்று கூறி அழும் காட்சியில் உருக்கமாக நடித்திருக்கிறார்.
புதிய பரிமாணம் தொட்டு இருக்கிறார்.

🌸ரம்யா பாண்டியன்,
கௌதமி, என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில், திமிர் பிடித்த பெண்ணாகவும், மாமனார், மாமியாரை வெறுக்கும், கதாபாத்திரம். அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வீட்டுக்குள் வந்தவர், பின்னால் திருந்தி மனம் உருகுவது சிறப்பு !!

🔥 ராஜ் அய்யப்பா
சஞ்சய், என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாய் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.

🔥ஜெயபிரகாஷ் டாக்டர் ஜேக்கப்பாக,
மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை அமைப்பாளர்
🌍இசையமைப்பாளராக தேனிசை தென்றல் தேவாவின் இசை, படத்தின் உணர்வு ஆழத்திற்கு பெரும் மதிப்பைச் சேர்க்கிறது. அவரது இசையமைப்புகள் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஏக்க உணர்வைத் தூண்டுகிறது
அவள் தந்த வரம் என்ற பாடலும், கிளைமாக்ஸ் இல் வரும் இறைவா என்ற பாடலும், மனதுக்குள் தேனிசையாக ரீங்காரம் இடுகிறது.
கலாச்சாரச் செழுமை, இசையும் நிறைந்த
இத்தகைய பாடல்கள் நெருக்கமான ஒன்றாக இருக்கிறது நினைவில் நிற்கும் இசை வலுவான இசை அடித்தளம் காரணமாக, இப்படத்தை சங்கராபரணம் மற்றும் சிந்து பைரவி போன்ற புகழ்பெற்ற படங்களின் வரிசையில் ஒரு காலத்தால் அழியாத கிளாசிக் பாடல்கள் தந்துள்ளார் தேவா.

🪩*இயக்குனர்*
இயக்குனர்
சுரேஷ் கிருஷ்ணா
கிளாசிக்கல், ஆக ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். தந்தை, மகன், அவர்கள் இருவருக்கும் ஏற்படும் மோதல், மகனுக்கு, தந்தை மீது ஏற்படும் கோபம், மருமகளாக வரும் ரம்யா பாண்டியன் சாரு கேசி யை அவமானப்படுத்த வேண்டும், என்று அவமரியாதை செய்வது, போன்ற கட்சிகள் வெகுஜன மக்களுக்கு போய் சேரக்கூடிய காட்சிகளாகும்.

கணவனை கண் இமைபோல் காக்கும் மனைவி பாக்கியம்,
கார் டிரைவர் ஆகவும் உற்ற நண்பனாகவும்
சாருகேசி அவர்களுக்கு எல்லாமாய் இருக்கும் தலைவாசல் விஜய், கதாபாத்திரம் படத்தில் எவரெஸ்ட் சிகரம்.
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருக்கிறார் . இயக்குனர்.
சமுத்திரக்கனி, சத்யராஜ், கதாபாத்திரம் சாருகேசி கேரக்டரோட இணைத்திருப்பது புத்திசாலித்தனம்.

🌍ஒளிப்பதிவு சஞ்சய்
காட்சிகள் ரிச் ஆகவும், சிறப்பாக இருக்கிறது.
படமாக்கிய விதம் சூப்பர்!

🌍வெங்கட், கதை எழுதி இருக்கிறார் .
இன்று எல்லா குடும்பத்திலும் நடக்கும் சம்பவங்களை கதை தொகுப்பாக ஜனரஞ்கமாக எழுதியிருக்கிறார்.

🌍வசனம், பாடல்கள் பா.விஜய் அருமையாக இருக்கிறது.

🌍ரிச்சர்ட் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது‌ .

🪩வாசுதேவன், ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார்.
சாருகேசி அவர்களின் வீடு, இசைக் கச்சேரி நடக்கும் இடம், என எல்லா இடங்களிலும் இவர் கை வண்ணம் பளிச்சிடுகிறது.

🔥நடன மாஸ்டர்கள்
கலா, அசோக் ராஜ்,
ஸ்வர்ணா நடனம் .
ஆடை வடிவமைப்பாளர்
தஸ்தா பிள்ளை
எல்லோருக்கும் உடைகள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

🔥Di Studio: Reel boys
VFX: Vangogh studios

🌍PRO : Riyaz k Ahmed. Paras Riyaz

🌍Executive producer: Kavin KR
Producer : R.Arun

🔥இப்படி அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறார்கள்.

🍩சாருகேசி ,காலம் கடந்து நிற்கும் ஒரு பேரிசை.👑