டார்க்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

🔥இது ஒரு உளவியல் ஹாரர் (Psychological Horror) – த்ரில்லர் திரைப்படம்.
படத்தை கல்யாண் கே. ஜெகன் இயக்கியுள்ளார்.

🔥இயக்குனர்
கே.பாக்யராஜின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்துக் கொள்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீட்டில் யாரும் குடிவாரத நிலையில், குறைந்த வாடகை என்பதால், அந்த வீடு பற்றிய உண்மை தெரிந்தும் அந்த வீட்டில் குடி வருகிறார் நாயகன் அஜய் கார்த்திக். தைரியத்துடன் அந்த வீட்டில் வசிக்கும் அஜய் கார்த்திக், சில தினங்களுக்குப் பிறகு சில அமானுஷ்ய விசயங்களை எதிர்கொண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

இதற்கிடையே, நாயகன் அஜய், தன்னைத் தானே கொடூரமாக தாக்கிக் கொண்டு இறந்து போக, வீட்டு உரிமையாளரான கே.பாக்யராஜும் இறந்து போகிறார். சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை அதிகாரி நட்டி, சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போது, இறந்து போன அஜய் கார்த்திக் திடீரென்று எழுந்து, அவரை எச்சரித்து விட்டு மீண்டும் சரிந்து விழுகிறார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நட்டி, திடுக்கிடும் இந்த சம்பவத்தையும், தனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் தன் பெயரை குறிப்பிட்டதையும் வைத்துக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தும் போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன ? , அஜய் கார்த்திக் எதிர்கொண்ட அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் இளைஞர்களின் மர்ம மரணங்களின் பின்னணி என்ன
என்பது திரைக்கதை மாயாஜால வித்தை
விறுவிறுப்பான திரைக்கதை படத்தின் வெற்றிக்கு வித்தாக அமைந்திருக்கிறது.

கடவுள் நம்பிக்கை இல்லாத (Atheist) ஒருவரைச் சுற்றி நகர்கிறது. அவர் ஒரு மர்மமான வீட்டிற்குக் குடிபெயர்ந்த பிறகு அமானுஷ்ய சம்பவங்களை எதிர்கொள்கிறார்.
ஒரு கொடூரமான குற்றச்சம்பவத்திற்குப் பிறகு, அவர் தனது நம்பிக்கைகளையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு பயங்கர அனுபவங்களைச் சந: நாயகன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அதனால் பேய் சம்பவங்கள் உண்மையா, மனப்பிரமையா என்ற குழப்பத்தை படம் முழுவதும் உருவாக்குகிறது.
படத்தின் மையம் ஒரு மர்மமான பழைய வீடு. அந்த வீட்டின் இருண்ட கடந்தகாலமே கதையின் முக்கிய ரகசியமாக இருக்கிறது.
பல காட்சிகள் குறைந்த வெளிச்சத்தில் (Low-light) படமாக்கப்பட்டுள்ளன. இது பார்வையாளர்களுக்கு பதற்றமான உணர்வை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

திகில் படங்கள் தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு திகைக்க வைக்கும் சம்பவஙகள் மற்றும் அச்சத்தில் உறைய வைக்கும் காட்சிகள் என்று மிரட்டும் இந்த ‘டார்க்’ பார்வையாளர்களை படம் முழுவதும் படபடப்பாக வைத்திருக்கிறது.

🔥நாயகனாக(விக்னேஷ் )நடித்திருக்கும் அஜய் கார்திக், பேய் வீடு என்ற உண்மை தெரிந்தும், தைரியத்துடன் இருந்தாலும், அங்கு நடக்கும் அமானுஷ்ய விசயங்களை கண்டு அச்சம் கொள்ளும் போது, அந்த உணர்வை மிக சரியாக தன் நடிப்பில் வெளிப்படுத்தி பார்வையாளர்களிடத்திலும் அச்சத்தை கடத்தியிருக்கிறார். , பேய் வீட்டுக்குள் சென்றதும், நாளுக்கு நாள் தனது நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதனால் ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளையும் தன் நடிப்பில் கச்சிதமாக பிரதிபலித்திருப்பவர், அழுத்தமான கதாபாத்திரை அளவான நடிப்பின் மூலம் மிக சிறப்பாக கையாண்டு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பட்டியலில் அஜய் கார்த்தி இடம் பெறுவார் .
அவ்வளவு அற்புதமான நடிப்பு, பயம், விரக்தி, ஏமாற்றம் என கலந்து கட்டி நடித்திருக்கிறார்.
காளிதாஸ் 2 இவருக்கு அறிமுகப் படம் என்றாலும்
இதுதான் அவரது முதல் படம் முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கிறார்.

🔥காவல்துறை அதிகாரி பாலசந்தர் வேடத்தில் நடித்திருக்கும் நட்டி, வழக்கமான குற்ற வழக்கு என்று விசாரிக்க தொடங்கி, பிறகு அதன் பின்னணி குறித்து அறிந்துக் கொண்டு, அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அசத்தல்.
படத்தின் கிளைமாக்ஸ் இவர் மீது முடிவது இன்னும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
குற்றவாளி யார்? என்று இவர் கண்டுபிடிக்க திணறுவதும்! விக்னேஷ் ஏன் தன் பெயரை சொன்னான்? என்று புலம்புவதும், இவர் தவிக்கும் தவிப்பு சிறப்பான நடிப்பு.

🔥இயக்குனர்
கே.பாக்யராஜ், தனது அனுபவமான நடிப்பு மற்றும் திரை இருப்பு மூலம் படத்தை பிரகாசிக்கச் செய்யும் விளக்காக பயணித்திருக்கிறார். தன்னுடைய வீடு விற்க முடியாமல் தவிப்பதும், தனக்காக நாயகன் வந்து தங்கி இருப்பதை கண்டு நன்றி உணர்ச்சியால் பொங்குவது, கிளைமாக்ஸ் காட்சியில், உனக்காக ஒரு இரவு வந்து தங்குகிறேன் என்று அவர் உயிரை தியாகம் செய்வது என படத்தில் பன்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் இனி அவரை காண முடியாது என்று நினைக்கும் போது மனம் ஏங்குகிறது.
வாழ்த்துக்கள் சார்

🔥அஞ்சனா நேத்ரன்,
பிரியதர்ஷினி என்ற வேடத்தில் சில காட்சிகளை வந்தாலும் அழகு தேவதையாக மனதில் மையம் கொள்கிறார் நல்ல நடிப்பு.

விடிவி கணேஷ்,
ஒரே காட்சியில் நடிகராக வந்தாலும் அந்த காட்சி தன்னம்பிக்கை ஏற்படுத்தும் காட்சி.

இந்துமதி மணிகண்டன்,
மனநல மருத்துவராக அருமையாக நடித்தி ருக்கிறார்.

சிபி சக்கரவர்த்தி
நாயகனின் நண்பனாக படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
அவருக்கு
சிறிய வேடம் என்றாலும், திரைக்கதையோடு பயணித்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
மற்றும் பிரபு, சதீஷ்,
மோகன் என அந்த மூன்று கதாபாத்திரங்களும் பேயாக வருகிறார்கள் அவர்களது கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்பதால் இதற்கு மேல் விளக்க முடியாது .நன்றாக நடித்திருக்கிறார்கள்.

🔥ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, ஒரு வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்கள் என்பதால் ஒளியை மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருக்கிறார். வெறும் இருட்டை மட்டும் காட்டாமல், அந்த இருளுக்குள் ஏதோ ஒரு மர்மம் ஒளிந்திருப்பது போன்ற உணர்வை கடத்தியுள்ளார். குறிப்பாக, குறைந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி காட்சிகளுக்குள் ஒரு வித தவிப்பை உருவாக்கியிருப்பவர், அதை பார்க்கும் பார்வையாளர்களிடத்தில் படபடப்பு அதிகரிக்கும் விதத்தில் காட்சிகளின் கோணங்களை கையாண்டிருக்கிறார்.ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்
ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்களை காட்சிப்படுத்துவது, ஒளிப்பதிவாளருக்கு மிகப்பெரிய சவால் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மனு ரமேஷின் பின்னணி இசை திகில் காட்சியில் பார்வையாளர்களை பயத்தின் உச்சக்கட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. பயங்கரமான சத்தத்தை மட்டுமே வைத்து பயம் காட்டும் பேய் படங்களின் வழக்கமான பாணியை தவிர்த்திருக்கும் இசையமைப்பாளர் மெளனத்தையும், இசையையும் கையாண்ட விதம் தியேட்டரில் ஒருவித அமைதியின்மையை உருவாக்குவதோடு, சிறு சிறு ஓசைகள் மூலமாகவே பார்வையாளர்களின் இதயத்துடிப்பை வேகமாக்கி விடுகிறது.
பின்னணி இசை படம் பார்ப்பவர்களை பதட்டப்பட வைக்கிறது .அடுத்து என்ன நடக்கும்! என்று அச்சத்தை ஏற்படுத்துவதில் இசையமைப்பாளருக்கு வெற்றி.

வழக்கமான பேய் கதை என்றாலும், அதை தனது நேர்த்தியான படத்தொகுப்பு மூலம் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கும் கதிரேஷ் அலகேஷன், எந்த நொடியில், எந்த வகையில் பயமுறுத்தப் போகிறார்கள், என்பதை கணிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்து மிரட்டியிருக்கிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில், ஒரு சில இடங்களில் குழப்பம் நிலவியது ?அது ஏன் என்பதை தெளிவுபடுத்தி இருக்கலாம். மோகன், பிரபு ,சதீஷ் மூவரும் கட்டில் படுத்து கிடக்கும் விக்னேஷ் பார்த்து இறந்துவிட்டார் என்று சொல்வதும், இல்லை, நான் உயிரோடு இருக்கிறேன் என்று சொல்வதும் ,அந்த இடம் கொஞ்சம் குழப்பமாக இருந்தது.

வீட்டை பார்த்தாலே மனதில் ஒருவித அச்சம் ஏற்படும்படி வடிவமைத்திருக்கும் கலை இயக்குநர் சண்முகராஜா, தனது பணி மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ஆர்ட் டைரக்டர் இந்த படத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைத்திருக்கிறார்.

🔥எழுதி இயக்கி இருக்கும் கல்யாண் கே.ஜெகன், திகில் கதை என்றாலும் அதை உளவியல் ரீதியாக கையாண்ட விதம், ஒரு வித்தியாசமான திகில் அனுபவத்தை கொடுக்கிறது. மர்மமான முறையில் இறந்து போகும் மூன்று இளைஞர்கள், அவர்களை தொடர்ந்து அந்த வீட்டுக்குள் குடி வரும், நாயகனுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனைகள் அனைத்தையும் பார்வையாளர்கள் மனதில் பதட்டம் ஏற்படும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பதோடு, அதற்கான பின்னணியை சற்றும் எதிர்பார்க்காதபடி சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

கதை ஒரு வீட்டுக்குள்ளேயே அந்த வீட்டுக்குள் நடக்கும் அமானுஷ்ய விசயங்களில், பேயைக் காட்டாமல், கதாபாத்திரங்களின் மனரீதியான பயத்தை பார்வையாளர்களிடத்தில் கடத்திய விதமும், நொடிக்கு நொடிக்கு பயத்தை கொடுக்கும் காட்சிகளும், அந்த குறைகளை மறைத்து, பார்வையாளர்களை பயத்துடனே படம் பார்க்க வைக்கிறது.

அனாவாசிய சத்தங்களை பயன்படுத்தாமல், மெளனத்தை வைத்தே பதட்டத்தை அதிகரிக்கச் செய்திருக்கும் இயக்குநர் கல்யாண் கே.ஜெகன், கதையின் சூழலை அமைத்த விதம் படம் முடிந்தும் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது.
தெளிவான திரைக்கதை சரியான நடிகர்கள் தேர்வு, சரியான லொகேஷன், திட்டமிட்ட உழைப்பு என இயக்குனர் ஒரு திகிலான படத்தை 🌷ஹாலிவுட் தரத்தில் கொடுத்ததற்காக அவருக்கு ஒரு பூங்கொத்து
இயக்குநர் கல்யாண் கே. ஜெகன், ஹாரர் மட்டுமல்லாமல் மனோதத்துவ த்ரில்லர் அம்சத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்
வெறும் இருட்டை மட்டும் குறிக்கவில்லை. கதாநாயகனின் மனதில் இருக்கும் “இருண்ட” உண்மைகளையும் குறிக்கிறது
ஒரே வீட்டை மையமாக வைத்து கதை நகர்வது இதனால் ஹாலிவுட் பாணி “contained horror thriller” அனுபவம் கிடைக்கிறது.
படத்தில் ஜம்ப் ஸ்கேர்களை விட மனநிலை பதற்றத்தை அதிகம் உருவாக்க முயற்சித்திருப்பது பாராட்டுக்கள்

🔥UA16+ சான்றிதழ் பெற்றிருப்பதால், வன்முறை மற்றும் பதற்றமான காட்சிகள் இடம்பெறுகின்றன
ஹாரர் ரசிகர்கள்
கொண்டாட கூடிய படமாக இப்படம் இருக்கும்.

🌍இயக்குனர் கல்யாண் கே ஜெகன், இவருக்கு பக்கபலமாக
டாடா படத்தின் இயக்குனர்
கணேஷ் கே பாபு கதை எழுதி இருக்கிறார்.
இருவருக்கும் பாராட்டுக்கள்.
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு கதையை கொடுத்திருக்கிறார்கள்.

🔥மனு ரமேசன் இசையமைப்பில்
பாடல்களை யுக பாரதி விவேக் கணேஷ்கே பாபு எழுதியிருக்கிறார்.
பாடல் வரிகள் மிரள வைக்கிறது.

🔥சவுண்ட் டிசைனராக அருணாச்சலம், சிவலிங்கம் முருகேசன் மிரட்டி இருக்கிறார்கள்.
சண்டை பயிற்சியாளர் நரேன்
நாயகனுக்கு நன்றாக பயிற்சி கொடுத்திருக்கிறார்.

🔥சவுண்ட் மிக்சிங்
முத்துகிருஷ்ணன் மிரட்டி இருக்கிறார்.

சதீஷ் கிருஷ்ணனின் நடன அமைப்பு கச்சிதமாக இருக்கிறது.

🔥காஸ்ட்யூம் டிசைனராக
காயத்ரி பாலசுப்பிரமணியம்
பணி புரிந்திருக்கிறார் சிறப்பு.

முகமதுவின் ஒப்பனை அபாரம்

புரோடக்ஷன் மேனேஜர் பாலாஜி பாபு

🔥மக்கள் தொடர்பாளர் திரு நிகில் முருகன் அவர்கள் படத்தை நல்ல முறையில் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்
அவருக்கும் வாழ்த்துக்கள் .

🔥மொத்தத்தில் இந்த டார்க்”வித்தியாசமான படமாக வந்திருக்கிறது. திரைக்கதையில் தெளிவு, அச்சமூட்டும் படப்பிடிப்பு ,அதிர வைக்கும் பின்னணி இசை ,கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத” டிவிஸ்ட்”
என எல்லா அம்சங்களும் பொருந்தி வெற்றி பட்டியலில், இந்த படம் இடம் பிடிக்கிறது.
ஒற்றை ஆளாக தனது நடிப்பின் மூலம் தாங்கிப் பிடித்து இருக்கும் அஜய் கார்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்🌷