கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன் லட்சுமிகாந்தன் கொலை வழக்கை படத்தை, சமூக அக்கறையோடு இயக்கியுள்ளார்.
இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன், கன்யா பாரதி,மற்றும் கவிதா பாரதி,அருவி மதன், நர்மதா ஆகியோர் நடித்துள்ளனர்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தை “2எம் சினிமாஸ் நிறுவனம் மற்றும், டி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து, தயாரித்துள்ளது.
கதை களம்
விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவுமதி, படித்துவிட்டு தகுந்த வேலை தேடிக் கொண்டிருக்கிறார்.
அவர் தந்தை குடித்துவிட்டு ஊதாரியாக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் கதாபாத்திரம்.
அறிவுமதியின் அம்மா சூடாமணி, திறமையால் அந்த குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
லட்சுமி காந்தன் ரெட்டியாரிடம் படிப்பு செலவுக்காக வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடியாமல் ரெட்டியார், அறிவுமதி குடும்பத்தை அவமானப்படுத்துகிறார்.
வயிற்றுப் பசிக்கு அல்லல்படும் நிலை அறிவுமதி, தன் நண்பன் மூர்த்தியிடம் அரிசி வாங்க பணம் கேட்க மூர்த்தி திருடுவதற்கு சொல்லிக் கொடுக்கிறான்.
அதன் பிறகு மெல்ல மெல்ல திருட்டுத் தொழிலில் ஈடுபடும் அறிவுமதி மனைவி வந்த பிறகு, ரெட்டியாரிடம் அடகு வைத்த நிலத்தில் பயிரிட்டு கடனை அடைக்க எண்ணி அந்த நிலத்தை கேட்க ரெட்டியார் கொடுக்க மறுக்கிறார்.
பின்னர் ஒரு சூழலில் கொலைகாரனாக மாறுகிறார் அறிவு மதி.
அந்த கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தூக்கு தண்டனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
அறிவின், கடந்தகால கதையை எமோஷனல் கலந்து சொல்லியிருக்கும் படம் தான் லட்சுமி காந்தன் கொலை வழக்கு.
இந்த படம் ஒரு முக்கிய விவாதத்தை ஏற்படுத்துகிறது. உலகம் எங்கும் 155 நாடுகளில், மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 45 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா ?என்ற ஒரு புதிய விவாதத்தை இந்த படத்தின் மூலம் இயக்குனர் முன் வைத்து இருக்கிறார்: இயல்பான பாத்திரங்கள், பெருமளவில் நம்பகத்தன்மை கொண்ட திரைக்கதை, கதாபாத்திரங்களின் பின்னணிகளுக்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அணுகுமுறை, விறுவிறுப்பான காட்சிகள் ஆகியவற்றால் இயக்குநர் தயாள் பத்மநாபன், கவனம் ஈர்க்கிறார். பாத்திரங்களின் பின்புலங்களை அறிமுகப்படுத்தும் விதமும், புலனாய்வு நகரும் விதமும் பார்வையாளர்களின் கவனத்தைத் திரைக்குள் குவியச் செய்துவிடுகின்றன.
🧶நாயகன் வெற்றி அறிவு ,என்னும் கதாபாத்திரத்தில் கிராமத்து நாயகனாக படித்துவிட்டு, வேலை கிடைக்காமல் திருட்டு தொழிலில் ஈடுபடும் அவர் ஏன்? கொலைகாரன் ஆனார்!! என்பதை சஸ்பென்ஸ் கொண்டு சென்று அந்த கதாபாத்திரத்தின் மீது ,ஒரு மரியாதை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர். வெற்றியும், தூக்கு தண்டனை கைதியாக பரிதாபமான தோற்றத்தில் மனைவி, குழந்தைகளை பிரிந்து, அம்மாவை பார்க்க முடியாமல் அழுது புலம்பும் காட்சிகளில் கவனத்தில் இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
🧶கந்து வட்டிகேட்டு
ஏழைகளை மிரட்டும் அடாவடி ரெட்டியார் கவிதா பாரதி, சில காட்சிகளை வந்தாலும் கவனம் இருக்கிறார் கதையின் மையம் அவர்தான் என்பதால், அவர் பக்கம் கவனம் திரும்புகிறது அவர் கொலை செய்யப்படுவது ஏன்,? என்று இறுதிவரை சஸ்பென்ஸ் ஆக இயக்குனர் கொண்டு சென்று இருப்பது திரைக்கதையின் வெற்றிக்கான
யுக்தி.
🧶நாயகன் வெற்றியின் நண்பராக வரும் மாறன், மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் திருட, அவர் சொல்லும் விளக்கமும், அந்த கதாபாத்திரமும் சில காட்சிகள் வந்தாலும் ரசிக்க வைக்கிறது.
🔥வெற்றியின் அம்மாவாக வரும் லிசி ஆண்டனி
சூடாமணி, என்ற கதாபாத்திரத்தில் பொறுப்பான அம்மாவாக கிளைமாக்ஸ் கட்சியில், மகனைப் பார்த்து சிறையில் கதறும் காட்சிகளில் கல் மனதையும் கரைக்க வைக்கும் அவர் நடிப்பு.
🧶ஜெயிலராகவரும் ரங்கராஜ் பாண்டே அறிவுமதியிடம் சரியான ஒரு வாதத்தை கிளப்புகிறார். அறிவுமதியாக வரும் வெற்றி கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து சில நேரங்களில் போதும் நிறுத்து!!
என்று அரசாங்கப் பிரதிநிதியாக அம்சமாக பொருந்தி இருக்கிறார்.
🧶பிரகிடா, மல்லி என்ற கதை பாத்திரத்தில், இடைவேளைக்குப் பிறகு வந்தால் கூட அழகு நடிப்பாலும், கிராமத்தில் வாழும பெண்ணாக, ஒளிருகிறார் கணவனை அவர் திருட சொல்லும் போது நெருடல் ஏற்படுகிறது.
🧶கன்னியா பாரதி நீதிபதியாக வந்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ,முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.
அந்த சஸ்பென்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காதது.
அறிவுமதியின் குடும்பத்திற்கு நீதிபதி உதவுவது போல அந்த குழந்தைகளை படிக்க வைப்பது போல காட்டி இருக்கலாமே!!
🧶அருவி மதன் வேல்முருகன் என்ற கதாபாத்திரத்தில், கொலை குற்றம் சாட்டப்பட்டு கதையின் முக்கிய புள்ளியாக திகழ்கிறார்.
🧶பருத்திவீரன் சரவணன், சற்குணம் என்ற ஆசிரியராக வந்து நாயகன் வெற்றிக்கு போதனைகள் வழக்கும்போது அந்த கதாபாத்திரம் உயர்வு பெறுகிறது.
🧶இயக்குனர் தயாள் பத்மநாபன் கதை ,திரைக்கதை எழுதி படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்.
கிராம பின்னணியில் நடக்கும் இந்த கதைக்களம். அங்கு வாழும் ஏழை எளிய மக்களின் உணர்வுகளை பேசி இருக்கிறது. அவர்கள் படும் துன்பங்களை பேசி இருக்கிறது. ஒருவன் ஏன் கொலைகாரன் ஆகிறான்? என்று பின்னணியை பேசியிருக்கிறது! அவன் கொலை செய்ததற்கு இந்த சமூகமும் ஒரு காரணம் என்று சொல்லி இருக்கிறார் .
அவனுக்கு சரியான வேலை வாய்ப்பு அமைந்து இருந்தால் அவன் நல்லவனாக வாழ்ந்திருப்பானே என்று ஆதங்கத்தை சொல்லி இருக்கிறது
பணமே பிரதானம் எனக் கருதப்படும் சூழலில் பாதிக்கப்படும் சாமானியன் ஒருவன், வெகுண்டு எழுந்து குற்றப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் நிகழக்கூடிய சாத்தியங்களையும், அதன் விளைவுகளையும் இயன்றவரையில் நம்பகத்தன்மையுடன் தந்திருப்பது பாராட்டுக்குரியது. சினிமா அனுபவத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் சமூக அரசியலை அழுத்தமாகப் பேசிய விதம் நன்று.
முழுமையான திரைக்கதை என்பது கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களுக்குமான முழுமையைத் தர வேண்டும். அதற்கு நம்பத் தகுந்த சம்பவங்களும் திருப்பங்களும் வேண்டும். இந்தப் படத்தில் இவை எல்லாமே வசப்பட்டிருக்கின்றன. . அது இந்தக் கதையில் சாத்தியமாகியிருக்கிறது.அறிவுமதி பாத்திரப் படைப்பும் அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமும் படத்தைத் தனித்துக் காட்டுகின்றன.
பாடல் காட்சிகள், ஆகியவை படத்தின் பலம் .சிறையில் அறிவுபேசும் நீண்ட வசனம் சில நேரங்களில் ஒரு கைதி இப்படியெல்லாம் பேச முடியுமா? என்று யோசிக்க வைக்கிறது
நடிகர்,நடிகைகள் இயல்பு மீறாத நடிப்பாற்றல் மூலம் கதாபாத்திரத்தின் அடர்த்தியைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குனர்.. அடுக்கடுக்கான சோதனைகளால் புண்பட்டு மனம் வெதும்பும் வேதன அதன் விளைவான ஆவேசத்தைய நன்கு வெளிப்படுத்தி யிருக்கிறார் வெற்றி சுப்பிரமணிய சிவா தூக்குபோட்டுவராக வருகிறார் மிகவும் எமோஷனலான நடிப்பு.
🧶டி எம் சினிமாஸ் சார்பில் கேபி சபரீசன் மற்றும் டி
பிக்சர்ஸ் சார்பில் தயாள் பத்மநாபன்
படத்தை தயாரித்து இருக்கிறார்கள்
அவர்கள் தரமான சமூகத்துக்கு தேவையான நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.
🧶திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்கள் கவிதா பாரதியும், தயாள்பத்மநாபன் அவர்களும் ,
கிரியேட்டிவிட்டி கவிதா பாரதி, சாருராஜ், நல்ல சிந்தனை நல்ல படைப்பு.
🧶பின்னணி , இசையில் தர்புகா சிவா உருக வைத்துள்ளார்
பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பாடல்கள் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் இயக்குனர் தயாள் பத்மநாபன்
மற்றும், பாரதிதாசன் பாடலை கையாண்ட விதம் சிறப்பு. அந்த பாடல் அவ்வளவு ரசிக்க வைக்கிறது.
மகாகவி பாரதியாரோட காலத்தால அழியாத கவிதைக்கு, தர்புகா சிவா புது இசை வடிவம் கொடுத்திருப்பதும்
விஜய் பிரகாஷ் + பவித்ரா சாரி- இந்த பாட்டுக்கு உயிர் கொடுத்திருப்பதும் சிறப்பு.
கவித்துவமான, ரொமாண்டிக் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.
மற்றும் ஒரு பாடலான,
உசுருக்கு’ என்ற பாடல் தர்புகா சிவா + மதிச்சியம் பாலா. இது ஒரு கலக கீதம் மாதிரி. சமூக கட்டமைப்பை கேள்வி கேட்குற வரிகள். பாடல் வரிகள் தயாள் பத்மநாபனே எழுதியிருக்காரு
படத்துக்கு தேவையான பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது.
வயலின் மட்டும் வச்சு தர்புகா சிவா பண்ணியிருக்குற பின்னணி இசை டிராக். மனிதனோட இரட்டை தன்மையை பேசுது.
🧶எம். வி பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு அருமை.
கிராமத்து அழகை அள்ளி வந்திருக்கிறது கேமரா .சிறையில் ஒரு விதமான கலர் கரெக்ஷன் கவனத்தை பெறுகிறது.
🧶 படத்தின் தொகுப்பாளர்
பூபதி வேதகிரி, படத்தை சீராக செதுக்கியிருக்கிறார்.
🧶கலரிஸ்ட் ஜான் ஸ்ரீராம்
🧶ஆர்ட் டைரக்டர் சூலை அன்பு
🧶குப்புசாமி ஒப்பனையாளராக சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்.
🧶கடலூர் ரமேஷ் ஆடை வடிவமைப்பாளராக கச்சிதமாக பணி புரிந்திருக்கிறார்-
🧶 இயக்குநர் தயாள் பத்மநாபன் அவர்களின்
22வது படம், தமிழ்ல 3வது படம்
சமூக அக்கறையோடு கதைக்களம் அமைத்து ,சிறப்பான நடிகர் ,நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைத்து படத்தை இணைந்து தயாரித்த இயக்குனர் தயாள் பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மக்கள் தொடர்பாளர் ரேகா அவர்கள்.
