ஈவில் டெட் பர்ன் திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -5/5

ஈவில் டெட்’ படங்களைப் போலவே, இந்த படமும் அமானுஷ்ய சக்திகள் மற்றும் மனிதர்களுக்கிடையிலான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

செபாஸ்டியன் வானிசெக் இயக்கிய ,இந்த படத்தில் ஹண்டர் டூன், லூசியானே புக்கானன், சௌஹெயில யாகோப், தாண்டி வ்ரைட், ஜார்ஜ் புல்லர் நடித்திருக்கிறார்கள்
ஆலிஸாக சோஹைலா யாகூப்,
டான்டி ரைட் சூசனாக,
ஜோசப்பாக ஹண்டர் டூஹான்,
தியாவாக லூசியன் புக்கானன்,
எட்கராக எர்ரோல் ஷாண்ட்,
பாலியாக மாட் டேவி
வில்,
ஜார்ஜ் புல்லர்
தபிவா சொரோபா மைக் ஆக,
ஜாரெடாக கீனு கரீம்,
ஆலிஸின் அப்பாவாக அலெய்ன் சபாட்,
ஜெசிகாவாக கிரேட்டா வான் டென் பிரிங்க,
என அனைவரும் சிறப்பாக
நடித்துள்ளார்கள்.

ஈவில் டெட் (Evil Dead) என்கிற பெயரைக் கேட்டாலே சிலருக்கு பயத்தில் கை காலெல்லாம் நடுங்கும். அந்த அளவுக்கு உலகெங்கிலும் மிகவும் பிரபலமான திகில் திரைப்படங்களில் ஒன்றாகும். அந்த வரிசையில் இந்த படம் திகில் மற்றும் அமானுஷ்யம் ஆகிய இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம்
இந்தத் தொடர் அதன் தனித்துவமான கதாபாத்திரங்கள், பயங்கரமான ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்காக மிகவும் பிரபலமானது. இந்தத் திரைப்படத்தொடர், திகில் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

ஈவில் டெட் திரைப்படம் 1979 இல் சூட்டிங் எடுக்கப்பட்டு, 1981 ஆம் ஆண்டு வெளியானது. இயக்குனர் ‘சாம் ரேமி’ என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து குறைந்த பட்ஜெட்டில் இந்தத் திரைப்படத்தை உருவாக்கினார். இந்தத் திரைப்படம் ஒரு நண்பர்கள் குழு காட்டில் கைவிடப்பட்ட ஒரு குடிசையில் தங்கி இருக்கும் போது, அங்கு இருக்கும் பழங்கால புத்தகம் ஒன்றைத் திறந்து விடுகின்றனர். அந்தப் புத்தகம் ஒரு பேயை விடுவித்து விடுகிறது. இதன் பிறகு நிகழும் சம்பவங்கள்தான் இந்தத் திரைப்படத்தின் கதை.

ஈவில் டெட் திரைப்படம் வெளியானது முதலே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்தத் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதிகமான வருமானத்தை ஈட்டியது. மேலும், இதன் வெற்றிக்குக் காரணம் அதன் தனித்துவமான கதை, வன்முறைக் காட்சிகள் மற்றும் அதிகமான ரத்தம் தெறிக்கும் காட்சிகள். இந்தத் திரைப்படம் பல விருதுகளை வென்றது மட்டுமின்றி திகில் திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்தது.‌

ஈவில் டெட் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தொடர் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.இந்த தொடரில் பல புதிய கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. என்றாலும், திகில் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றன. இந்தத் திரைப்படத் தொடர் திகில் திரைப்படத்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதற்கு அடுத்து எடுக்கப்பட்ட பேய் படங்களில் ஈவில் டெட் திரைப்படத்தின் காட்சிகள் கருத்துக்கள் அப்படியே பின்பற்றப்பட்டன. இன்று வரை இந்தத் திரைப்படத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அந்த காலத்திலேயே இப்படி ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு பேய் படத்தை எடுத்து வெற்றி கண்டது .படக்குழு

இந்த படத்தின்
கதை களம்

கதை முழுவதும் ஒரு தனிமையான வீட்டில் நடைபெறும் re குடும்பச் சந்திப்பு. ஆனால் அந்த சந்திப்பு, Deadites காரணமாக கொடூரமான உயிர் பிழைப்புப் போராட்டமாக மாறுகிறது.
, கணவரின் மரணத்திற்குப் பிறகு துயரத்தில் மூழ்கிய ஒரு பெண் தனது மாமியார் வீட்டின் தனிமையான இல்லத்திற்குச் செல்வதை மையமாகக் ஆரம்பித்து. ஒரு சங்கடமான சந்திப்பாகத் தொடங்குகிறது இது, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராகப் பேய் பிடித்தவர்களாக மாறுவதால், விரைவாக அமானுஷ்யப் படுகொலையாக மாறுகிறது., “நரகத்தில் நடந்த ஒரு குடும்ப ஒன்றுகூடலாக” மாற்றுகிறது.

கணவனை இழந்த பெண் ஒருத்தி ஆலிஸ் ,தன்னுடைய மீதி காலத்தை கணவனின் உறவினர் உடன் கழிக்க வருகிறாள் அப்போது அந்த வீட்டில் நடக்கும் அசம்பாவிதம் தீய சக்திகளால் அனைவரும் சித்தர்வாதங்களை அனுபவிக்கிறார்கள் அந்த காட்சிகள் ஒவ்வொன்றும் பயத்தின் உச்சகட்ட காட்சிகளாகும் அவர்களுக்கு இடையே சிக்கும் ஆலிஸ் தன்னுடைய வாழ்க்கை போராட்டத்தை எப்படி எதிர்கொண்டால் எப்படி அங்கிருந்து தப்பினால் என்பது கதைக்களம்.
ஐந்து விதமான கதாபாத்திரங்கள் ஜோசப் அமானுஷ்த்தால்
சித்திரவதை செய்து சாகடிக்கும் காட்சிகள் உச்சகட்ட திகிலான காட்சிகள் ஆகும்.

அதேபோல சூசன் பேய் பிடித்து ஆலீசை, துரத்தும் பொழுதும் அம்மாவிடம் உருகும் பொழுதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தந்தையாக நினை
நடித்திருக்கும் எக்வர்ட், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சூசனிடம் கதறி அழுது உள்ளே வரும் பொழுதும் பயத்தின் உச்சகட்ட காட்சிகளாக மாறுகிறது.

ஆலிஸ் அந்த பேய் வீட்டிலிருந்து தப்பித்து ஓடும் பொழுதும் அமானுஷ்ய சக்தி அவளை பின்தொடர்ந்து துரத்தும் பொழுதும் பயந்து நடுங்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு கொடூரமான காட்சிகள்.
கிளைமாக்ஸ் காட்சிகள் எப்படி ஆளிஸ் தப்பிக்க போகிறார் என்ற பதட்டத்தை ஏற்படுத்தி நுட்பமான திரைக்கதையால் வெற்றியை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஈவில் டெட் பர்ன்’ (Evil Dead Burn) செபாஸ்டின் வனிசெக் (Sébastien Vaniček) இயக்கியுள்ள இப்படம், பார்வையாளர்களுக்கு ரத்தம் தெறிக்கும், தூக்கத்தை கெடுக்கும் ஒரு தீவிரமான மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவத்தைத் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை
பார்வையாளர்களை சீட்டின் நுனியிலேயே அமரவைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது
திகில் காட்சிகளில் வரும் ரத்தம் மற்றும் அதிரடி சண்டை காட்சிகள், படம் பார்ப்பவர்களுக்கு ஒரு அட்ரினலின் (adrenaline – உற்சாகம்/பயம்) பூஸ்ட்டை கொடுக்கிறது

.வெறும் ரத்தத்தை சிந்தும் படமாக இல்லாமல், உணர்வுபூர்வமான இழப்பு மற்றும் சோகம் ஆகியவையும் கதையில் அழுத்தமாகப் பேசப்பட்டுள்ளது.

முடிவுவழக்கமான ஹாரர் படங்களை விட, மிகவும் தீவிரமான மற்றும் துள்ளலான வேகத்தைக் கொண்ட படங்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சரியான தேர்வாகும். , அதிகப்படியான வன்முறை மற்றும் கொடூரமான காட்சிகள் இருப்பதால், இதய பலவீனமானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இப்படம் நிச்சயமாகப் பரிந்துரைக்கப்படாது.

நியூசிலாந்தில் ஜூலை 22, 2025 ல் அன்று முதன்மைப் படப்பிடிப்பு தொடங்கியது,
பிலிப் லோசானோ ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி சிறப்பான காட்சிகளை திகில் ஊட்டும் வண்ணம் கொடுத்திருக்கிறார்.

கதை, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடும் ஒரு தனிமையான வீட்டில் நடப்பதையும் பின்னர் Deadites தாக்கி அந்த சந்திப்பு பயங்கரமாக மாற்றுவதை திரைக்கதையின் மூலம் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

நாயகியாக Souheila Yacoub நடித்துள்ளார். அவருடன் Hunter Doohan, Luciane Buchanan, Tandi Wright உள்ளிட்டோர் நடிப்பு நன்றாக இருக்கிறது
கொடூரமான ஒப்பனைகள் ரத்தம் சிந்தி எடுத்திருக்கிறார்கள் அனைவரும் நடிப்பும் படம் பார்ப்பவர்களை உரையச் செய்கிறது.

ஆரம்பத்தில் வரும்
மீன்பிடிக்கும் காட்சியில், இருந்து
வில்லியம் கார் ஆக்சிடென்ட் ஆகும் காட்சி, அதன் பிறகு எக்வர்ட் காருக்குள் நடத்தும் யுத்தம், ஜோசப் தம்பி ஓட அவரை துரத்தும் தீவிரம் ,வீட்டுக்குள் புகுந்து நடத்தும் வெறியாட்டம், என அமானுஷ்யத்தில் பிடியில் சிக்கி அந்த குடும்பம் சின்னாபின்ன மாவதை காண்பவர்கள் மனம்
வயிற்றில் நடுங்க செய்யும்.
அதற்கு
பின்னணி இசை மிரட்டலாக உயிர் கொடுத்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம்
வி .எப்.எக்ஸ் காட்சிகள் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக வந்துள்ளது.

வன்முறை இரத்தக் காட்சிகள் இருக்கும்
நீண்ட ஒற்றை ஷாட் (One-shot) ஆக எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

மொத்தத்தில் இந்த படம், ரசிகர்களை அலற வைக்கும் அதிர வைக்கும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும்.

இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் என்டர்டைமண்ட் இந்தி ,தமிழ், தெலுங்கு ,ஆகிய மொழிகளில் வெளியிடுகிறது.