ராவ் பகதூர்”திரை விமர்சனம்

ரேட்டிங் 4 -/5

மதிப்பெண்: ⭐⭐⭐⭐

🧶Presented by – GMB Entertainment

Banners – SriChakraas Entertainments, A+S Movies, Better Invest Media Vision Fund, Mahayana Motion Pictures
Producers – Chinta Gopalakrishna Reddy, Anurag Reddy, Sharath Chandra, Eshwran Vijayaraghavan
Writer, Director & Editor – Venkatesh Maha
Executive Producer – Dinesh Yadav Bolleboina

கதை 1960 முதல் 1991 வரையிலான இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. ஒரு காலத்தில் பெரும் புகழோடு வாழ்ந்த அரச குடும்பத்தின் வாரிசுதான் புவனாலயம் ராமப்ப ராவ் பகதூர் (சத்யதேவ்). இவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதால், இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள்.அதே நேரத்தில், அவர் ஒரு தீவிர குடிப்பழக்கம் உள்ளவராகவும், அடையாளம் காணப்படாத மனநலப் பிரச்சினையால் (பிரமைகள், மாயத்தோற்றங்கள்) பாதிக்கப்பட்டவராகவும் இருக்கிறார். “அதிசயங்களின் மனிதன்” என்று அழைக்கப்படும் ராவ், மரண படுக்கையில் இருக்கும்போது அவரது குடும்ப கௌரவம், பரம்பரை வெறி மற்றும் அவரது கடந்த கால ரகசியங்கள்
பற்றி சொல்லபடுகிறது.

இரண்டாம் பாதியில் ஒரு போலீஸ் அதிகாரி வழக்கு விசாரணைக்காக அரண்மனைக்கு வரும்போது, படத்தின் வேகம் கூடி மர்மங்கள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றன
இது கமர்ஷியல் சண்டைக் காட்சிகளோ, பஞ்ச் வசனங்களோ இல்லாத ஒரு கலைப் படம்

:ராவ் பகதூர் சமூகப் பின்னணியுடன் உருவான ஒரு தெலுங்கு திரைப்படம்.

அதிகாரம், குடும்ப உறவுகள், மனித மதிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. கதாநாயகனின் வாழ்க்கைப் போராட்டமும், அவர் எடுக்கும் முடிவுகளும் படத்தின் முக்கிய அம்சம்.
ஆரம்பத்தில் கதை மெதுவாகச் சென்றாலும், இரண்டாம் பாதியில் நல்ல விறுவிறுப்பைப் பெறுகிறது. அடுத்தது என்ன நடக்கும்! என்ற எதிர்பார்ப்பை படம் ஓரளவு தக்க வைத்திருக்கிறது.
நடிப்பைப் பொறுத்தவரை, முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தங்களுடைய வேடங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். குறிப்பாக உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் நடிப்பு மிகவும் இயல்பாக இருக்கிறது.
இயக்குநர் தேவையற்ற வணிக அம்சங்களை அதிகப்படுத்தாமல், கதைக்குத் தேவையான விஷயங்களைச் சொல்ல முயற்சி செய்துள்ளார். மொத்தத்தில் படம் சலிப்பை ஏற்படுத்த
ல்லை.

நடிகர் &நடிகைகள்

🧶சத்யதேவின் அசாத்திய நடிப்பு: ராமப்ப ராவ் கதாபாத்திரத்தில் சத்யதேவ் தனது திரைப்பயணத்தின் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இளமைக்காலம் மற்றும் முதுமைக்காலம் ஆகிய இரண்டிற்கும் உடல் அமைப்பை மாற்றி, பிரமாதமாக நடித்துள்ளார்.
பல காட்சிகளில் நம்ம ஊரு நடிகர் திலகத்தை பார்த்தது போல அவர் நடிப்பு இருந்தது. உளவியல் சார்ந்த பிரச்சனையை சிக்கிக் கொண்டு கண்களை உருட்டுவது, தனக்குத்தானே பேசுவது ,சிரிப்பது அழுவது ,என நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.
மனைவியின் மீது சந்தேகம் ,கருப்பாக பிறந்த குழந்தையை வெறுப்பாக நினைப்பது, என்று பொறுப்பற்ற ஒரு நாயகனின் பல அவதாரங்களை ஆச்சரியப்படுத்தி பிரமிக்க வைக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் ஒரு சிவாஜி.

🧶விகாஸ், டாக்டர் ஆச்சார்யா என்ற கதாபாத்திரத்தில் , நாயகனுக்கு உதவி செய்து பெரும் ஒரு ரகசியத்தை காப்பாற்றும் பாத்திரத்தில் மிளிர்கிறார்.
பல காட்சிகளில் அவர் மீது நாம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை இயக்குனர் திரைக்கதையில் மாயாஜாலப்படுத்தியிருக்கிறார் விகாஸ் நடிப்பு அருமை, சிறப்பு,

🧶தீபா தாமஸ் ரேணுகா ,என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் துருதுருவென, ராவ் பகதூரைமட்டுமல்ல நம்மையும் கவர்கிறார் .இடை வேளைக்குப் பிறகு, ரூமுக்குள் சென்றவர் கிளைமாக்ஸில் வந்து, ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார். அவர் நடிப்பு நன்றாக இருந்தது . இயக்குனர்
மணிரத்தினம் படங்களில் வரும் கதாநாயகிகளை ஞாபகப்படுத்துகிறார்.

🧶பாலா பராசர், அச்சம்மா ,என்ற வேலைக்காரி வேடத்தில் படம் முழுக்க அவர் மீதும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் பாணியில் அம்சமாக நடித்திருந்தார் .
கைகளை உதறி கொண்டு ,திருட்டுப் பார்வை பார்த்துக்கொண்டு ,
ராவ் பகதூரை
அப்பா “என்று அடிக்கடி அழைத்து அச்சம் உடன் பார்க்கும் நடிப்பில் கொடிகட்டி பறக்கிறார்.

🧶ஆனந்த் பாரதி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆக இடைவேளைக்கு பிறகு வந்து படத்தின் விறுவிறுப்பை கூட்டி பெரும் உண்மையை காப்பாற்றுகிறார் .
இவரும் மாமுல் வாங்கும் இன்ஸ்பெக்டர் என்று காட்டிவிட்டுப் போகிறார்.

🧶பிரணாஸ், லாவனா” என்ற கதா பாத்திரத்தில் ராகு பகதூரில் மூத்த மகனாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிகப்பாக பிறப்பவன் ராஜா வீட்டு கண்ணுகுட்டி என்றும் கருப்பாக பிறப்பவன் எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்று ராகுபகதூர் லாவண்ணாவை கொஞ்சுவது லாவண்ணாவுக்கு கிடைத்த ஒரு பெரும் மரியாதை.

🧶மாஸ்டர் கிரண் குஸ்மா ,என்ற கதாபாத்திரத்தில் கதையின் மையமே இவர்தான், இவர் மீது அனுதாபம் ஏற்பட வைத்து கருப்பாக இருந்தாலும், பொறுப் பான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அந்த சின்ன குழந்தையின் முகத்தில் ஏக்கம், பரிதாபம், தன் அப்பாவே தன்னை வெறுக்க படும்போது, ஏற்படும் அவமானம் என சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார் மாஸ்டர் கிரண்

🧶இயக்குனர்
கேர் ஆஃப் காஞ்சரபாலம்’ புகழ் இயக்குனர் வெங்கடேஷ் மஹா, கௌரவம் என்ற பெயரில் பதுங்கியிருக்கும் சாதி, வர்க்கம் மற்றும் நிறவெறி போன்ற சமூகப் படிநிலைகளை மிகத் துணிச்சலாகவும், பாடல்கள் மூலமாகவும் விவரித்துள்ளார்
தேவையற்ற வணிக அம்சங்களை அதிகப்படுத்தாமல், கதைக்குத் தேவையான விஷயங்களைச் சொல்ல முயற்சி செய்துள்ளார். சில காட்சிகள் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம்
இயக்குநர் கதையை அமைதியான வேகத்தில் சொல்ல முயற்சித்துள்ளார். முக்கியமான காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
புவனாலயம் அரண்மனையே படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக மாற்றி சொல்லி இருக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல நடிகர்களை தேர்வு செய்து சமூகத்துக்கு தேவையான அக்கறையான ஒரு கதையை கொடுத்ததில் இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து வழங்கலாம்.🌷

🧶 கார்த்திக் பர்மரின் ஒளிப்பதிவு, அருமையாக இருக்கிறது.
ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு அழகைச் சேர்க்கிறது.
படம் முழுக்க அரண்மனை தான் வருகிறது. என்றாலும் அந்த நீரோடை, பசும் புல் வெளிகள், என்று
கேமரா கவிதை பேசுகிறது.

🧶ரோஹன் சிங்கின் கலை இயக்கம்
வசந்த காலத்தின் போது ,அரண்மனை அழகாகவும், சோகமான காலத்தில் அரண்மனை வெறிச்சோடி கிடப்பது ,ஆர்ட் டைரக்டர் கைவண்ணம் அற்புதம்.

🧶 ஸ்மரன் சாயின் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு உலகத்தரம் வாய்ந்த இசை தந்துள்ளன
இசையின் பின்னணி, கதைக்கு நல்ல பலமாக அமைந்துள்ளன.
வயலின் இசை காதுக்குள் இன்னும் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது.
பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது.

🧶சர்வான் முப்பாரி
நடனப் பயிற்சி கொடுத்திருக்கிறார் நடனங்கள் அப்படி ரசிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் வரும் ஹாலிவுட் பாடலுக்கான நடனமும், அரண்மனையில் நடக்கும் மூளை சலவை செய்யும் நடனமும், அப்படி ரசிக்க வைக்கிறது.

🧶சவுண்ட் டிசைன் அஸ்வின் ராஜசேகர்

🧶சவுண்ட் மிக்சிங் அரவிந்த் மேனி

🧶DI ஸ்ரீ பிரசாத் சாகோ

🧶தயாரிப்பு நிர்வாகி
ரோஹன் சிங்

🧶VFX Supervisor
Ramji Dott

🧶Publicity Designer – YellowTooths

Marketing – First Show

🧶PRO – Sathish Kumar, S2 Media

Line Producer – Naveen Patel

🧶Head of Production – Sriram MV (A+S Movies)

🧶 மொத்தத்தில் இந்தப் படத்தின் பலம் என்னவென்றால், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல கருத்து, உணர்ச்சிகரமான காட்சிகள், மற்றும் நேர்த்தியான நடிப்பு. பலவீனம் என்று பார்த்தால், முதல் பாதி சற்று மெதுவாக இருப்பதும், சில திருப்பங்களை முன்கூட்டியே யூகிக்க முடிவதும் என்று இருந்தாலும்
ஒரு வித்தியாசமான கதை களம் ,
நாம் உண்மை என்று நம்புவது எதுவும் உண்மை இல்லை.
பிறப்பு ,இறப்பு, சாதி மதம், வர்க்கம், ராஜா ஏழை என்று எல்லா விஷயங்களும் ஒருநாள் மாறி போகும் !என்ற அற்புதமான தத்துவத்தை சொல்லி இருக்கும் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பெறுகிறது.🌷