பிருத்விராஜ் சுகுமாரன், மற்றும் பார்வதி திருவோத்து நடிப்பில், நிசாம் பஷீர் இயக்கத்தில் வெளிவந்துள்ள மலையாளத் திரைப்படம் ‘ஐ, நோபடி’ (I, Nobody).
ஒரு வெற்றி படமாக வந்துள்ளது.
கதை களம்
🧶 வங்கியின் கொள்ளைச் சம்பவத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண அரசு ஊழியர் ராஜீவின்
வாழ்க்கை போராட்டத்தை மையமாகக் கொண்ட து
இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம்
ராஜீவன் ஒரு அரசு ஊழியர். அவர் எதிர்பாராதவிதமாக ஒரு வங்கிக் கொள்ளையில் சிக்கிக்கொள்கிறார். தன் மனைவி மீரா (பார்வதி) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் சாதாரணமாக வாழ்ந்து வந்த ஒருவரின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் நிகழ்வுகளுக்கு இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமைகிறது.
அந்த சம்பவத்திற்கு பிறகு நாயகனின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.
இந்தச் சம்பவம், ஒருவன் அமைப்புக்கு எதிராகப் போராடும் கதைக்கு விதையாகவும் அமைகிறது.
மனைவியின் மறைமுக உறவில் இருக்கும் வங்கி மேலாளர் ஸ்ரீநாத் அவர்களை சந்திக்க வங்கிக்கு செல்லும் ராஜீவன் எதிர்பாராத மூன்று கொள்ளைக்களிடம் சிக்க அதுவே அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை பழமொழியை பொழிய அந்த பணத்தை எப்படி காப்பாற்றுகிறார்
என்பது திரைக்கதை மாயாஜால வித்தை.
🧶இந்த மலையாள த்ரில்லர் படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ஒரு வழக்கமான ஹீரோவாக அல்லாமல், சாதாரண மனிதராக மிகவும் அடக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மிக இயல்பான, கட்டுப்பாடான நடிப்பு. இந்தக் கதாபாத்திரத்திற்காக தனது வழக்கமான “ஸ்டார்” இமேஜை முழுமையாக விலக்கி நடித்திருக்கிறார்.
🔥பார்வதி திருவோத்து – தனது அனுபவத்தை வெளிப்படுத்தும் வலுவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்
இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக வீட்டில் எந்த நேரமும் சண்டை போடும் கணவனிடம் அன்பு கிடைக்காமல் வாழும் ஒரு பெண்ணாக பார்வதி மீரா என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
🧶துணை நடிகர்களும் கதைக்கேற்ற வகையில் சிறப்பாக நடித்துள்ளனர்.
🧶தொழில்நுட்பம்
ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் ஆகியவை படத்தின் மிகப்பெரிய பலம்.
🧶இயக்குநர் நிஸாம் பஷீர் தனது Rorschach படத்தைப் போலவே, இந்தப் படத்திலும் உளவியல் த்ரில்லர் பாணியை கையாண்டு உள்ளார்.
கதை
ராஜீவன் (பிருத்விராஜ் சுகுமாரன்) ஒரு சாதாரண அரசு ஊழியர்.
என்று காட்டியது.
சமயம் வரும்போது சாமானியனும் தன்னை பாதுகாத்துக் கொள்ள சண்டை போடுவான் என்று அவரை ஆக்சன் காட்சியில் நடிக்க வைத்தது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
பெரிய வங்கி கொள்ளை, தவறாக குற்றம் சாட்டப்பட்டு துரத்தப்படும்
நாயகன் ,ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றவும், உண்மைக்காகவும் அவர் எவ்வாறு போராடுகிறார் என்பதை இயக்குனர் சிறப்பாக திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் படம் செம விறுவிறுப்பு.
படத்தின் கதை மெதுவாக ஆரம்பித்தாலும், முதல் பாதி முழுவதும் மர்மம், பதற்றம் மற்றும் எதிர்பார்ப்பை சிறப்பாக உருவாக்குகிறது. ஒவ்வொரு காட்சியும் அடுத்தது என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கதை வேறு திசைக்குச் செல்வதால், முதல் பாதி ஏற்படுத்திய தாக்கம் சற்றே குறைகிறது !
குறிப்பாக முதல் பாதியின் த்ரில்லர் உணர்வை தொழில்நுட்ப அம்சங்கள் மேலும் உயர்த்துகின்றன.
🔥படத்தின் ப்ளஸ்
வித்தியாசமான திரைக்கதை அமைப்பு,
பிரித்விராஜின் சிறந்த நடிப்பு,
தரமான ஒளிப்பதிவு, மற்றும் பின்னணி இசை,
பரபரப்பான முதல் பாதி,
இரண்டாம் பாதி செம விறுவிறுப்பு.
இறுதிக்கட்ட திரைக்கதை கூர்மையாக இருக்கிறது .
🔥சிறப்பம்சங்கள்
பிருத்விராஜ் அளவான மற்றும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பார்வதி திருவோத்து (மீரா) ஒரு மனைவியாகவும், தாயாகவும் மிகச்சிறப்பான நடிப்பை தந்துள்ளார்.
இயக்கம் மற்றும் திரைக்கதை: படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும், நேர்த்தியான சஸ்பென்ஸுடனும் நகர்கிறது.
🧶 சேவியர் அப்துல் அவர்களின் எழுத்து மற்றும் நிசாம் பஷீரின் மேக்கிங் பாராட்டுக்குரியது.தொழில்நுட்பம்: தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகள் மிக எதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ளன.
.🧶படத்தில் பிருத்விராஜ் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு முறை மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் ரசிக்க வைத்தது.
🧶ஜேக்கப் என்ற கதாபாத்திரம் பிரித்விராஜுக்கு உதவி செய்வது போல காட்சிப்படுத்தி இருப்பது மிகச் சிறப்பாக இருக்கிறது.
🔥 ஊரும் உலகமும் பிரீத்திவ் ராஜகுமாரன்
17 கோடி ஏமாற்றி விட்டார் என்றும், சில சமூக வலைதளங்கள் அவர் மீது சேற்றி வீசி பூசும் பொழுதும், அதையெல்லாம் தாங்கிக் கொண்டு இறுதியில் ,
முதல்வர் அவரை ஒரு நிரபராதி என்று சொல்ல வைக்கும் திரைக்கதை, புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது.
🔥 மொத்தத்தில்
‘ஐ, நோபடி’ ஒரு வழக்கமான மாஸ் படம் அல்ல. அமைதியாக நகரும், சஸ்பென்ஸ் மற்றும் உளவியல் அம்சங்கள் நிறைந்த
திரைப்படம். த்ரில்லர்களை விரும்புபவர்களுக்கு இது நல்ல திரையரங்கு அனுபவமாக இருக்கும். . பிரித்விராஜின் நடிப்பிற்கும் தொழில்நுட்ப தரத்திற்கும் இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.
🔥நல்ல த்ரில்லர் அனுபவம்; குறிப்பாக முதல் பாதிக்காக தவறவிடக் கூடாத படம்.
இரண்டாம் பாதி நிச்சயமாக தவற விடக்கூடாத படம்.
🧶வெற்றி பட்டியலில் இந்த படம் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்🌷
