காதல், நட்பு மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு அழகிய படைப்பாக வெளிவந்துள்ளது.
இதயம் முரளி.
இளைஞர்களின் உணர்வுகளையும் காதலின் பல பரிமாணங்களையும் மனதைத் தொடும் வகையில் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
கதை களம்
🧶ஆரம்ப காட்சிகள் அதர்வாவின் திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வருகின்றன. அதர்வாவின் தாய் மாமன் நட்டி நட்ராஜ் திருமணத்திற்கான வேலைகளை செய்து வருகிறார். திருமணம் நாளை நடக்கவிருக்கும் நிலையில் மாப்பிள்ளை நண்பர்களுடன் வெளிநாட்டில் உள்ளார்.
அதர்வா தனது நண்பர்களுடன் கிளம்பி சென்னைக்கு . வரும் வழியில் விமானத்தில் பகத் பாசிலை பார்க்க, அவரிடம் தன்னுடைய காதலை பற்றி சொல்ல தொடங்குகிறார் அதர்வா.
🧶சின்ன குழந்தையாக அதர்வா, இருக்கும் பொழுது கீதா மிஸ்
கதை வருகிறது. முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும் என்று குண்டு சச்சின் சொல்ல,
கீதா மிஸ் சின்ன குழந்தை அதர்வாவுக்கு அன்பினால் முத்தம் கொடுக்க பின்னர் அவர் ஸ்கூலுக்கு கர்ப்பமாக வருகிறார். தனக்கு முத்தம் கொடுத்ததால் கீதா மிஸ் கர்ப்பமாகி விட்டார் என்று சின்ன வயதில் அதர்வா தப்பு கணக்கு போட்டு அன்பு செலுத்த,அது ஒரு எபிசோடாக மலர்கிறது.
🧶அடுத்து ,
பள்ளி பருவத்தில் ப்ரீத்தி முகுந்தனை பார்த்த அதர்வா, அவரை காதலிக்க தொடங்குகிறார். டியூஷன் சென்டர், டென்னிஸ் விளையாடும் இடம் என ப்ரீத்தி செல்லும் இடத்திற்குள் அதர்வாவும் செல்கிறார். எப்படியாவது அவளிடம் தன்னுடைய காதலை சொல்ல வேண்டுமென துடிக்கிறார். ஒரு நாள் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அதர்வாவை தனது வீட்டிற்கு ப்ரீத்தி அழைக்கிறார்.
அங்கு சென்ற அதர்வா தனது காதலை சொல்லப்போகும் நேரத்தில், ப்ரீத்தி ஒருவர் அல்ல, இரட்டையர்கள் (Twins) என தெரிய வருகிறது. இதனால், இதுநாள் வரை யாரை காதலித்தோம் என்கிற குழப்பத்திற்கு ஆளாகிறார் அதர்வா. இதனால் ப்ரீத்தியிடம் அவரால் காதலை சொல்ல முடியாமல் போகிறது.
அந்த எபிசோடு மிகவும் ரசிக்கும் படி சொல்லப்பட்டிருக்கிறது. ப்ரீத்தியை அதர்வா பார்த்து பார்த்து ரசிக்க, அந்த காட்சிகள் அவ்வளவு இளமை ஊஞ்சலாடுகிறது.
🧶அடுத்து அதர்வா. சென்னையில் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் கயாடு லோஹரை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். அவருடன் பேசி பழகுகிறார். ஆனால், தனது காதலை சொல்ல தயங்கிக்கொண்டே இருக்கிறார். கல்லூரி முடிந்து கயாடு தனது சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில், ரயில் நிலையத்தில் தனது காதலை சொல்ல செல்கிறார் அதர்வா. ஆனாலும் அவரால் காதலை சொல்லவே முடியவில்லை.
இந்த எபிசோடு இதயம் படத்தை ஞாபகப்படுத்தியது சின்னி ஜெயந்த்
ரயில்வே ஸ்டேஷனில் எப்படியாவது காதலை சொல்லிவிடு, என்று சொல்லும் பொழுது இதயம் படம் பார்த்தது போலவே ஒரு உணர்வை ஏற்படுத்தியது.
🧶இப்படி ,தான் நேசித்த
கீதா மிஸ், சமந்தா, அமுதா, இந்த மூன்று பெண்களிடமும்
காதலை சொல்லாமல் தவிக்கும் அதர்வா, இறுதியில் காதலை சொன்னாரா?
நாசாவில் வேலை செய்யும் சமந்தா விடம் காதலை சொன்னாரா?
அல்லது தனக்காக தன் மாமா பார்த்து வைத்துள்ள பெண் ணான அதிதியை, திருமணம் செய்துகொண்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.
காதல் காட்சிகள் படத்திற்கு மிகவும் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதர்வா காதலை சொல்ல தயங்கும் பொழுது, படம் பார்க்கும் ரசிகர்களே எப்படியாவது காதலை சொல்லிவிடு!! என்று தவிப்பது புரிகிறது. அந்த அளவுக்கு இயக்குனர் உணர்வு பூர்வமாக படத்தை இயக்கி இருக்கிறார்.
நடிகர் & நடிகைகள்
அதர்வா முரளி நாயகனாக
இதயா என்ற கதாபாத்திரத்தில் மூன்று விதமான தோற்றத்தில் வருகிறார்.
மூன்றும் ரசிக்க வைக்கிறது. தன் தந்தை இதயம் படத்தில் எப்படி காதலை சொல்லாமல் தவித்தாரோ? அதேபோல இந்த படத்திலும் அதர்வா அற்புதமாக நடித்திருக்கிறார்.
🧶 பகத் பாசில்,
சூர்யா என்ற கதை பத்திரத்தில் விமானத்தில் அதர்வாவின் கதையை கேட்பது போல அவரது கதாபாத்திரம் வந்தாலும், அவர்தான் கீதா மிஸ் கணவர் என்று தெரிய வரும் பொழுது படம் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி!! அதர்வாவின் காதலுக்கு தூதுவராக, அருமையாக நடித்திருக்கிறார்.
கயாது லோகர்
அம்மு, என்கிற அமுதா, கதா பத்திரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவியாக அழகு ஓவியமாக வருகிறார். காதலை சொல்ல தயங்கும் அதர்வாவை பார்த்து அவர் கண்கள் ஏங்குவதும், பிறகு ஐந்து வருடம் கழித்து, குழந்தை எல்லாம் பெற்ற பிறகும் தன் காதலை வந்து சொல்லும் பொழுதும் ,மனதுக்கு மிக நெருக்கமாக நடித்திருக்கிறார்.
🌸ப்ரீத்தி முகுந்தன்,
சமந்தா என்ற கதாபாத்திரத்தில் ட்வின்ஸ் ஆக நடித்திருக்கிறார். டென்னிஸ் விளையாடும் அழகும், நாசாவில் வேலை செய்யும் மதிய நுட்பமும், சச்சின் கல்யாண வீட்டில் அதர்வாவை மறைந்து பார்க்கும் அழகும், படத்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கிறது.
🧶 ரக்ஷன், பிரபு என்ற கதாபாத்திரத்தில் அதர்வாவின் தோழனாக படம் முழுக்க வந்து நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.
🌸ஏஞ்சலின், நல்ல நடிப்பு.
நல்ல கதாபாத்திரம் மனதில் நிற்கும் அருமையான வேடம்
🧶மற்றும் சுதாகர், டிராவிட், தமன், மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
🧶அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் எடுத்துக்கொண்ட கதைக்களமும் அதை சுற்றி அமைத்த திரைக்கதையும் ரசிக்க வைக்கிறது
நண்பர்கள், காதல், காமெடி என்று படத்தை என்டர்டைன்மென்டாக கொடுத்திருக்கிறார். நியூயார்க் நகரில்
நடக்கும் காட்சிகளும், மதுரையில் திருமண வீட்டில் நடக்கும் காட்சிகளும், டியூசன் சென்டரில் நடக்கும் காட்சிகளும், இயக்குனர் ரசித்து ரசித்து எடுக்கப்பட்ட காட்சிகளாகும். இளமை துள்ளும் வகையில் இருக்கிறது.
🧶தமன் இந்தப் படத்தில் சச்சின் என்ற வேடத்தில் சிறப்பாக நடித்ததோடு
இசையில் புதிய எழுச்சியையும் இளைஞர்கள் விரும்பும் வண்ணம் நல்ல பாடல்களை கொடுத்து இருக்கிறார்.
அதற்கு பாடல் எழுதிய
விவேக் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது பட்டாம்பூச்சிகள்” என்ற பாடலும் இதயா” என்ற பாடலும் செம :
🧶மனோஜ் பரமசிம்ஹாவின் ஒளிப்பதிவு
கண்ணுக்குள் இருக்கிறது .
ஆரம்ப கால காட்சிகளும், திருச்சி அழகை அழகாக காட்டியதோடு மதுரை மண்ணையும் அருமையாக காட்டியது. நியூயார்க் நகரை, நாசா விண்வெளி மையத்தின் அருகில் படப்பிடிப்பு ,என அசத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்.
🧶பிரதீப் இ. ராகவா படத்தொகுப்பில்
கொஞ்சம் நீளம் தான் ,கத்தரி வைத்திருக்கலாம். மற்றபடி படத்தை சிறப்பாக செதுக்கியிருக்கிறார்.
🧶ரமணகிரி வாசன் வசனத்தில்
அவருக்கு உதவியாக வசனம் எழுதிய ஆகாஷ் பாஸ்கரன்,
டிராவிட் செல்வன்,
அனைவரும் இளமை துள்ளும் வசந்த கால நினைவுகளை எண்ணிப் பார்க்கும் வண்ணம் வசனம் எழுதி இருக்கிறார்கள் வசனம் அத்தனையும் முத்துக்கள்.
🧶அனுஷ்கா விஸ்வநாதன், நடனப் பயிற்சி அருமையாக இருக்கிறது ஒவ்வொரு பாடலுக்கும் அவர் மெனக்கெட்டு நடனம் அமைத்திருக்கிறார்.
🧶காஸ்ட்யூம் டிசைனராக பல்லவி சிங் பணி புரிந்துள்ளார் அருமை.
🧶ஆடை வடிவமைப்பாளராக மூர்த்தி
அனைவருக்கும் உடைத்தேர்வு கச்சிதமாக இருந்தது
🧶 எட்வர்ட் கென்னடி யின் ஒப்பனை பூச்சு எழில் ஓவியமாக திகழ்கிறது.
🧶Co-Director – LK Senthilkumar
🧶Stills – Jaikumar Vairavan
🧶VFX Supervisor – Praveen D
🧶Sound Design – Suen G, Alagiakoothan
🧶Post Production Supervisor – Guna
🧶Publicity Designer – Kabilan
🧶PRO – சதீஷ் &சிவா (AIM)
🧶creative Producer – Dev Ramnath
Executive Producer – Krishna Chandar Elango
Line Producer – Vickys RA
Production Controller – K. Sridhar Raj, Sadagopan
🧶Marketing Headed – Manoj Maddy
🌸மொத்தத்தில் இந்த படம் இளைஞர்கள் இதயம் மகிழும் வண்ணம் ரசிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது வெற்றி பட்டியலில்” இதயம் முரளி”🌷
