மதிப்பீடு
குடும்பப் படம்: ⭐⭐⭐⭐
சூர்யா நடிப்பு: ⭐⭐⭐⭐½
மமிதா: ⭐⭐⭐½
இசை: ⭐⭐⭐⭐
இயக்கம்: ⭐⭐⭐⭐
மொத்தம்: 4- / 5
ஒரு வரியில் சொன்னால் படம் வெற்றி.
கதை களம்
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள குடும்ப மற்றும் உணர்வுப்பூர்வமான திரைப்படம்.
சூர்யா (சஞ்சய் விஸ்வநாத் என்ற வேடத்தில் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரராக நடித்துள்ளார். தனது மகன் தங்கம் வென்று வந்த மகிழ்ச்சியில் ராதிகா இருந்தாலும், 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறானே என்கிற கவலையில் இருக்கிறார். சின்ன வயதில் தந்தை செய்த தவறான செயல் சூரியா மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆனால், இந்த குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று ராதிகா தொடர்ந்து சூர்யாவிடம் கூறி வருகிறார். இதனால் வாடகைத் தாய் மூலம் குழ்நதையை பெற்றெடுக்கிறார் சூர்யா.
அந்தக் குழந்தை ஒரு நோயால் பாதிக்கப்பட, சூர்யா அந்த வாடகை தாயை மீண்டும் தேடிச்சென்று இந்தியாவுக்கு அழைத்து வருகிறார்.
வளர்ப்பு தாயான மம்தா சூர்யாவின் நல்ல குணங்களைப் பார்த்து நிரந்தரமாக அவரை அடைய வேண்டும் என்று நினைக்கிறார். சூர்யா விலகிப் போகிறார். முடிவில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதைக்களம்.
நாயகன்: சூர்யா
❤️இது சூர்யாவின் 46-வது படம்.
👀 படத்தின் பெரிய சுவாரசியம்
, இது வழக்கமான சூர்யாவின் ஆக்ஷன் படம் மாதிரி இல்லாமல் குடும்ப உறவுகள், காதல், உணர்வுகள் கலந்த ஒரு குடும்பப் பொழுதுபோக்கு படமாக அமைந்தது.
🎵 இன்னொரு ஸ்பெஷல் – சூர்யா பாடிய பாடல்!
இந்தப் படத்தில் சூர்யா ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்
: படத்தின் மிகப்பெரிய பலம். குறிப்பாக அப்பா–குழந்தை உறவைச் சுற்றியுள்ள காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது . அவர் குழந்தையை baby carrier-ல் சுமந்து வருவது படத்தின் குடும்ப மையத்தை உணர்த்தியது.
தாய்மார்களை திரையரங்குக்கு அழைத்து வரும்.
“மாஸ் சூர்யாவை எதிர்பார்த்து போனால் வேறு சூர்யா; குடும்ப உணர்வுகளோடு போனால் ரசிக்கக்கூடிய சூர்யா!”
❤️மமிதா பைஜு: சூர்யாவுக்கு ஜோடியாக தனது இளமைத் துள்ளலுடன் வருகிறார். பாடல்களில் அவரது presence கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பட்டாம்பூச்சி பாடல் ஏற்கெனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது
குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, அவனுக்கு உடனடியாக bone marrow transplant அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர் கூற நண்பா அங்கு வருவது மிகப்பெரிய சுவாரசியம்.
ஒவ்வொரு காட்சியிலும் மம்தா அசத்தியிருக்கிறார் அவரின் குறும்பு பேச்சும் குறும்புத்தனமான செயலும் கண் சிமிட்டலும் களைகட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது , . குழந்தைக்காக வரும் மமிதா பைஜூவிற்கு சூர்யா மீது காதல் ஏற்படுகிறது; நான் உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என அவர் கூறுகிறார். ஆனால், சூர்யா மமிதாவை ஏற்க மறுக்கிறார்.
இந்த காட்சிகளில் அசத்தியிருக்கிறார் மம்தா. மேடி என்ற கதாபாத்திரம் அருமையாக பொருந்தி இருக்கிறது.
☘️ராதிகா சரத்குமார்- நிர்மலா தேவியாக
சூர்யாவின் அம்மாவாக அசத்தலாக நடத்திருக்கிறார் படத்தின் மிகப்பெரிய பலம் இவரின் நடிப்பு மந்தவுடன் இவர் போடும் சண்டை பிறகு சமாதானம் சூர்யா மாசத்தில் மூணு நாள் வெளிநாடு போய் தங்குவது இப்படி குட்டை உடைப்பது என்று ராதிகா அற்புதமாக நடித்திருக்கிறார்.
☘️ரவீனா டாண்டன் – அஞ்சலி
திரை நட்சத்திரமாக சூர்யாவின் சித்தி ஆக வந்து நிறைவு காட்சிகளில் இவரின் கதாபாத்திரம் வலுப்பெறுகிறது.
ராதிகா சரத்குமார் – ரவீனா டாண்டன்: இருவருக்கும் முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களின் கதாபாத்திரங்கள்தான் கதையின் சில முக்கியமான உணர்ச்சிப் பகுதிகளுக்கு வலு சேர்க்கின்றனர்
நாசர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
☘️இயக்கம்: வெங்கி அட்லூரி — இவர் தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படங்களை இயக்கியவர்.
ஒரு குடும்ப கதையை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வித்தியாசமாக கதையை சொல்லி வெற்றி பட்டியலில் மீண்டும் இணைகிறார்.
வெங்கி அட்லூரி
20 வயது வித்தியாசம் உள்ள இருவரின் காதலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் குழந்தை, அம்மா, உறவுகள் என பல உணர்ச்சிகளை திரைக்கதையில் அடக்கிய விதம் நன்றாக இருந்தது. நகைச்சுவையாக காட்சிகளை கொண்டு சென்ற விதமும் ரசிக்க வைத்தது.
🔥தயாரிப்பு: சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் (சூர்யதேவார நாக & சாய் சௌஜன்யா
ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஸ்டுடியோயாஸ்
🎵 இசை
ஜி.வி. பிரகாஷ் இசை படத்தின் இன்னொரு எதிர்பார்ப்பு. குறிப்பாக சூர்யா சொந்தக் குரலில் பாடியுள்ள பாடல் குடும்பத் திருமணக் கொண்டாட்டப் பின்னணியில் உருவாக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடம் கவனம் பெற்றது
இவர் இசையில் உருவான பட்டாம்பூச்சி மற்றும் அம்மாவுக்காக வந்த பாடலை தவிர்த்து வேறு எதுவும் மனதை
தொடுகிறது. பின்னணி இசையும் பிரமாதம்
தொழில்நுட்பக் குழு:
:
☘️ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
ஒவ்வொரு காட்சியும் ரிச் ஆகவும் சிறப்பாக இருக்கிறது.
☘️படத்தொகுப்பு : நவீன் நூலி
படத்தொகுப்பு கச்சிதம்.
☘️கலை இயக்கம் : பங்களன்
சூர்யா வீடு, ஊட்டியில் கல்யாண வீடு, சூர்யாவின் அலுவலகம், என எல்லா இடங்களிலும் ஆட் டைரக்டர் பணி அற்புதம்
☘️நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)
☘️சண்டை பயிற்சி : V. வெங்கட்
மக்கள் தொடர்பு : யுவராஜ*
❤️படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் சூர்யா, இவருக்கு நடிப்பை சொல்லித்தர வேண்டிய அவசியமே இல்லை. வழக்கம்போல் இப்படத்திலும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கண்டிப்பு, மறைந்திருந்து காதலை காட்டுவது, நகைச்சுவை என தனது நடிப்பால் திரைக்கதையை அழகாக கொண்டு சென்றுள்ளார்.
❤️கதாநாயகி மமிதா பைஜூ, இப்படத்தில் சூர்யாவுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சுறுசுறுப்பான பெண்ணாக வரும் இவரது சேட்டைகளும் ரசிக்க வைக்கின்றன.
❤️நடிகை ராதிகா சரத்குமாரின் அனுபவ நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். மேலும், ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பு.
☘️ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். சூர்யாவின் வீடு, மருத்துவமனை காட்சிகள், திருமண காட்சிகள் என அனைத்தையும் அழகாக காட்டியுள்ளார். .
❤️மொத்தத்தில், இந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை குடும்பத்தோடு கண்டிப்பாக பார்க்கலாம்.
வெற்றி பட்டியலில் இணைகிறார் விசுவநாத்🙏
