மதிப்பீடு
குடும்பப் படம்: ⭐⭐⭐⭐
விஷால் நடிப்பு: ⭐⭐⭐⭐½
அஞ்சலி: ⭐⭐⭐½
இசை: ⭐⭐⭐⭐
இயக்கம்: ⭐⭐⭐⭐
மொத்தம்: 4- / 5
ஒரு வரியில் சொன்னால் படம் வெற்றி.
👑புரட்சி தளபதி
விஷாலுக்கு ,இது நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் ஒரு முக்கியமான படம். படத்தில் பல்வேறு தோற்றங்களில் விஷால் வருகிறார்
நிறைய உழைப்பை தந்திருக்கிறார் .
முதல் பாதியில்:
கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, பின்னணியை உருவாக்குவதில் இயக்குனராக வெற்றியும் பெற்றுள்ளார்.
இரண்டாம் பாதியில்:
படம் வேகம் பெறுகிறது. ஆக்ஷன் காட்சிகளும், விஷாலின் பல்வேறு தோற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. குறிப்பாக கிளைமாக்ஸ் மற்றும் ஆக்ஷன் பகுதிகள் படத்தின் பலமாக பேசப்படுகின்றன.
👑விஷால்
நடிப்பிலும், இயக்கத்திலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், திரைக்கதையில் மாயாஜாலம் செய்து இருக்கிறார்.
ரசிகர்களின் “பல்ஸ் அறிந்து இயக்கி இருக்கிறார்.
அவரின் முயற்சி, ஆக்ஷன் காட்சிகள், பல்வேறு தோற்றங்கள்
கவனத்தை பெறுகிறது.
இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் . ரவுடி தந்தை, மகன் என அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.
ஒரு சுவாரஸ்யமான ஆக்ஷன் த்ரில்லரை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஷால்.
, மூன்று வெவ்வேறு தோற்றங்கள். கிருபாவாக பிரச்சனையை கண்டு ஒதுங்கி போவது, லிங்காவாக அடாவடி செய்வது என இருவேறு பாத்திரங்களுக்கு வித்தியாசம் காட்டி மனைவியிடம் அடங்கிப் போகும் காட்சி, ஒரு தாக்குதலுக்கு பின்னர் கலங்கும் காட்சி என முடிந்த வரை தன் நடிப்பால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்கிறார். துணை பாத்திரங்களில் துஷாரா, தம்பிராமையா, ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ் வந்து போகிறார்கள். இதில் அழுத்தமாக மனதில் பதிவது அஞ்சலியின் நடிப்பு தான். அன்னபூரணி ரோலில் ஒரு ஆக்ரோஷமான பெண் பாத்திரத்தில் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதை களம்
👑அப்பா ,லிங்கா, மகன் கிருபாகரன், என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அப்பா லிங்கா ஒரு கேங்ஸ்டர். மக்களுக்கு நன்மை செய்யும் அவரை பிரிந்து வாழும் மகன் கிருபாகரன் ஒரு மெடிக்கல் ரெப்.அவரும் அப்பாவும் ஏன் பிரிகிறார்கள்?
என்பதும்,
மனைவி ஜமுனா(துஷாரா விஜயன்), இரண்டு பிள்ளைகளுடன் சென்னையில்வாழும்கிருபா. அவர் மாமனார் தம்பிராமையா வின் வீண் ஜம்பத்திற்கு ஆசை பட்டு.கார்வாங்குகிறார். கணவரின் கஷ்டத்தை புரிந்து நடந்து கொள்கிறார். ஜமுனா..
விஷால் வாங்கிய கார் படத்தில் முக்கிய திருப்பு முனையாக வருகிறது.
அதன் பிறகு அப்பா
லிங்கா யார்?
மகன் கிருபாகரன் ஏன் அவரை பிரிந்தார் என்பது உச்ச கட்ட விறுவிறுப்பாக இருக்கிறது.
இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் வருபவர்களை கூட ரசிகர்கள் நினைவு வைத்திருக்கும்படி செய்திருக்கிறார் இயக்குநர். கமர்ஷியல் படத்தில் இது போன்று அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது
மகன் கிருபாகரனை விட அப்பா லிங்கா கதாபாத்திரம் தான் நன்றாக இருக்கிறது. லிங்காவின் மனைவியாக ஃபிளாஷ்பேக்கில் வந்து போகிறார் அஞ்சலி. நல்ல திறமைசாலிகளான அஞ்சலி,
அவர் கதாபாத்திரம் அவர் நடிப்பு அவரின் ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்
துஷாரா விஜயன்
நடிப்பு நன்றாக இருக்கிறது
இது ஒரு அக்மார்க்
கமர்ஷியல் படம் , இரட்டை வேடத்தில் வரும் ஹீரோ, குடும்ப சென்டிமென்ட், மாஸ் காட்சிகள் என எதையும் விட்டு வைக்கவில்லை.
கிளைமாக்ஸ் காட்சியை சிறப்பாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.இந்த படத்தில் சமுதாய நலன் விஷயம் பேச பட்டிருக்கிறது.
டூ வீலர் மெஷின் எப்படி போலி யாக பொருத்த படுகிறது என்பது சொல்ல பட்டிருக்கிறது.
.
🎭 நடிகர் விஷால்& எப்படி?
ஆக்ஷன் காட்சிகளில் விஷாலின் பலம் நன்றாக வெளிப்படுகிறது. உடல் மொழி, சண்டைக் காட்சிகளில் வேகம், மாஸ் ஹீரோவுக்கான அணுகுமுறை ஆகியவை அவருக்குச் சாதகமாக இருக்கின்றன.
படத்தில் விஷாலுக்கு பல தோற்றங்கள்/கெட்டப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று தோற்றங்களிலும் தனது காட்சிகளை விஷாலின் நடிப்புக்கான தாக்கம் சில இடங்களில் முழுமையாக செயல்பட்டுள்ளார்.
🎬 இயக்குநர் விஷால் எப்படி?
இங்கேதான் முக்கியமான விஷயம் பாஸ்.
30 ஆண்டுகளாக இயக்குநராக வேண்டும் என்ற கனவு இருந்ததாக விஷால் கூறியிருந்தார். “மகுடம்” அவருடைய அதிகாரப்பூர்வ இயக்குநர் அறிமுகம்.
இயக்குநராக அவருடைய பிளஸ் பாயிண்ட்கள்:
மாஸ் ஹீரோவை எப்படி காட்ட வேண்டும் என்ற புரிதல்.
ஆக்ஷன் காட்சிகளை பிரம்மாண்டமாக அணுகியிருப்பது.
பல காலகட்டங்கள்/பல தோற்றங்கள் கொண்ட கதையை காட்சிப்படுத்த முயன்றிருப்பது.
பாராட்டுக்கள்
முதல் பாதியில் வேகமும் ,. அதே நேரத்தில் இரண்டாம் பாதி அதிக ஈர்ப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
மொத்தத்தில்: மகுடம் விஷாலின் “சிறந்த படம்” என்று சொல்லலாம் .
நடிகர் விஷாலுக்குள் இருந்த இயக்குநரை வெளியே கொண்டு வந்திருக்கும் ஒரு முக்கியமான முயற்சி. குறிப்பாக ஆக்ஷன் ரசிகர்களுக்கு சில காட்சிகள் பிடிக்க நிறைய இருக்கிறது.
👑துஷாரா விஜயன்,
ஜமுனா என்ற கதாபாத்திரத்தில்
இயல்பான நடிப்பு எதார்த்தமாக வழங்கி இருக்கிறார்.
👑ஜான் விஜய்,
ஜனா என்ற கதாபாத்திரத்தில் விஷால் நண்பராக நடிப்பை கொடுத்திருக்கிறார்.
👑ஜெயபிரகாஷ் ,
நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்.மற்றும்,
அஜய், வம்சி கிருஷ்ணா,
அபு சலீம் ,
அர்ஜய் ,
விஜே ஜான்சி ,
பதம் குமார் எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
👑Present : R.B Choudary
Production: Super good films
Producers : B.Suresh, R.B.Jeevan Choudary, Jithan Ramesh, Jiiva
👑Director of Photography: Richard.M. Nathan & Abinandhan Ramanujam
ஒளிப்பதிவு
சண்டைக் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. அஞ்சலி, விஷால் பாடும் பாடல் காட்சிகளில் கேமரா கோணம் நன்றாக படமாக்கப்பட்டு இருக்கிறது, கிளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவு பாராட்டு பெறுகிறது.
👑Music: G.V Prakash Kumar
இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது லிங்கா வரும் காட்சிகளில் ஜீவிபிரகாஷ்க்குமார் இசையமைத்து இருக்கும் பின்னணி இசை மிரட்டல் பாடல் காட்சிகளில் பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது.
👑Art Director : G. Durairaj
காட்சிகளுக்கு உயிரோட்டமாக ஆர்ட் டைரக்டர் அமைத்திருக்கும் அரங்குகள் சிறப்பாக அமைந்துள்ளது. விஷால் வீடு, அஞ்சலி இருக்கும் மார்க்கெட் ,போன்ற இடங்கள் கவரும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
👑Action Director: Dhilip Subbarayan
ஆக்ஷன் காட்சிகளில் ,
பட்டையை கிளப்பி இருக்கிறார்
படத்தின் மிகப்பெரிய பலம் சண்டை காட்சிகள் கடைசி பத்து நிமிடம் இளையராஜாவின் இசையோடு ,வரும் சண்டைக்காட்சிகளும் அதன் பிறகு மார்ட்டினை, அழிக்க போராடும் சண்டைக் காட்சிகளும் அஞ்சலி போடும் சண்டைக் காட்சியும், வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது.
👑Editor: N.B Srikanth
மூன்று மணி நேரம் என்றாலும் படம் விறுவிறுப்பாக செல்கிறது.
படத்தொகுப்பு செதுக்கியிருக்கிறார்.
👑Dialogues: Pon Parthiban , Vishal , Anadh Kumaresan (Tamil) & Rajesh A Moorthy ( Telugu)
படத்தின் வசனங்களை,
சிறப்பாக எழுதி இருக்கிறார்கள் வசனம் ரசிக்க வைக்கிறது.
👑Story: Ravi Arasu
👑Lyrics: Ekadesi, Vivek, Uma devi, Karunakaran
பாடல்களை ஏகாதசி விவேக் உமாதேவி கருணாகரன் மூவரும் சிறப்பாக எழுதி இருக்கிறார்கள்.
👑Costume Designer: Vasuki Bhaskar
காஸ்ட்யூம்
விஷால் மூன்று கெட்டப்புகளில்
வந்தாலும், மூன்று பேர் ஆடை தேர்வு கச்சிதமாக இருக்கிறது. அஞ்சலி, துஷாரா விஜியன், இவர்கள் ஆடை தேர்வு சிறப்பாக இருக்கிறது.
Choreography: Brinda, Dinesh, Azar, Apsar
இனிமையான பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்கள்.
விஷால், அஞ்சலி போடும் குத்தாட்டம் தியேட்டரில், கரவொலி காதில் பறக்கிறது.
👑Production Executive: M.V Ramesh
Visual Effects Studio: Lorven studio
Sound Effects & Mix: T. Uday kumar (sound vibe studio)
DI: B2H studios
Title Designer: Tuney Johan
Publicity Designer: kannadasan DKD
Promo stills : Sudarshan
Stills: Sai Santosh
👑Pro: Riaz k Ahmed – Paras Riyaz
படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் மக்கள் தொடர்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்☘️
👑 மொத்தத்தில் இந்த படம் மகுடம் சூட்டும் ,இயக்குனர் விஷால் அவர்களுக்கு, கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள். சார் 🙏👑
