☘️கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள காமெடி கலந்த குடும்ப பொழுதுபோக்கு படம். இயக்குநர் ராஜா கருப்பசாமி இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
☘️இப் படத்தை
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, வச்ச ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ளனர்.
படம் வெற்றி பட்டியலில்..
கதை களம்
☘️ திருமணத்துக்குப் பிறகு, நடைபெறும் ஒரு இரவுதான் கதையின் முக்கிய களம்.
ஒரு சாதாரண கிராமத்து திருமணம் எப்படி எதிர்பாராத குழப்பங்களாலும், தவறான புரிதல்களாலும், நகைச்சுவையான சம்பவங்களாலும் மறக்க முடியாத இரவாக மாறுகிறது
என்பது சுவராஸ்யமான கதை களம்.
கிராமங்களில் இன்றும் நங்கூரமாக நிற்கும் சாதிவெறி, வர்க்கப் பாகுபாடு ஆகியவற்றையும் திணிப்பாக இல்லாமல் சரியாக பேசியுள்ளார் இயக்குநர் ராஜா கருப்பசாமி. கரெக்டான எமோஷ்னல், கலவையான காமெடி என ஒரு பக்கா பேமிலி எண்டர்டெய்ன்மெண்ட்டாக இப்படம் வந்துள்ளது. நாயகன் ரிஷிகாந்த்(மருத நாயகம்) துபாயிலிருந்து வருகிறார். வந்தவரிடம் நாயகிஅனிஸ்மா,
(முத்து செல்வியை) கல்யாணம் பண்ணச் சொல்கிறது குடும்பம். அவருக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லை. அதேபோல் மணப்பெண்ணான அனிஷ்மா அனில்குமாருக்கும் கல்யாணத்தில் இஷ்டமில்லை. மேலும், மொத ராத்திரிக்கு முன்பாக தன் காதலனோடு ஓடிப்போகவும் திட்டம் போடுகிறார். அனிஷ்மாவின் காதலன் பொருளாதாரத்தில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார். அப்படியே அனிஷ்மா வந்தாலும் ,அவரை காப்பாற்ற முடியாது என்ற நிதர்சனத்தை சொல்கிறான்.
இது தான் படத்தை தூக்கி நிறுத்தும்,வேறலெவல் ட்விஸ்ட்! இந்தக் களேபரத்தில்
மருதநாயகம், முத்து செல்வி, இவர்கள் இருவரும்
எப்படி, இணைய போகிறார்கள்?திருமணத்திற்காக கூடிய உறவுகள்ஒருபுறம்,
காதலனுடன் ஓடிப் போக திட்டமிடும் முத்து செல்வி , திருமணத்தை விரும்பாத மருதநாயகம், இவர்களுக்கு இடையே உறவுகளின் ஈகோ, பக்ஸ் நடத்தும் ஈகோ போராட்டம், இயக்குனர் ஏ. வெங்கடேஷ் க்குள் இருக்கும் சாதிய வன்மம் , தன்னையும் தான் வணங்கும் கடவுளையும் யாரும் கண்டுகொள்ளவில்லையே? என்று
புலம்பி, நாயகன் நாயகியை சேர்த்து வைக்க துடிக்கும் பூசாரி சேத்தன் ,
நாயகனின் தங்கை, நாயகனுக்கு காது குத்து என்று சொல்லி துபாயில் இருந்து வரவைத்து திருமணத்தை நடத்த பார்க்கும் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் அப்துல்லீ, முதல் ராத்திரிக்கு கட்டில் செய்துவிட்டு விலாசம் தெரியாமல் விழிக்கும் துணை கதாபாத்திரங்கள், முத்து செல்வியை அடைய கையில் பணம் இல்லாமல் ,
இரவு முழுவதும் பைக்கோடு, போராடும் நிதிஷ் என்கிற கதாபாத்திரத்தில் இயக்குனர் ராஜா கருப்புசாமி. பெண்ணுக்கு படிப்பு எதற்கு?என்று திருமண வீட்டில் புறம் பேசும் உறவுகள். இப்படி இவர்களுடைய கதாபாத்திரங்களை அழகாக வடிவமைத்து, கிராமங்களில் நடக்கும் சண்டை, சச்சரவு ,காதல் தோல்வி ,காதலுக்கு எதிர்ப்பு, தெரிவிக்கும் பெற்றோர்கள் இப்படி எல்லாம் கலந்து ஒரு வெற்றி படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்புசாமி.
கதை முழுவதும் ஒரே இரவில் நடைபெறுவது
முக்கியமாக படத்தின் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று.படத்தின்
கிளைமாக்ஸ் காட்சி, இயல்பாகவும் எதார்த்தமாகவும் அமைந்துள்ளது.
மொத ராத்திரி’யின் பலம் பெரிய ஹீரோ, பிரம்மாண்ட ஆக்ஷன் அல்ல. அதற்கு பதிலாக,
திருமணம் → உறவினர்களின் தலையீடு → புதுமணத் தம்பதிகளின் எதிர்பார்ப்பு → குழப்பம் → நகைச்சுவை → உணர்ச்சி
என்ற பாதையில் செல்லும் கிராமத்து குடும்பக் காமெடி என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.
கிராமத்துப் பின்னணி கொண்ட தமிழ் சினிமாக்கள் நிறைய வந்துள்ளது.அவை பெரும்பாலும் செயற்கையான பூச்சுகளைக் கொண்டிருக்கும் அசலான கிராமத்து மனிதர்களையோ, நிலப்பரப்புகளையோ சொல்ல தவறி விடும் ஆனால் இந்த படம். அசலான கிராமத்து காமெடி, மற்றும் எதார்த்தம்: கோபம் நிறைய இருக்கிறது. கிராமத்துச் சூழல்களில் வசனங்கள் ரகளையான காமெடியையும், சில இடங்களில் நெகிழ்ச்சியையும் தருகின்றன. மற்றும் பிற நடிகர்களின் நடிப்பு படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
⭐ ஹீரோ –
ரிஷிகாந்த் – இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
மறைந்த நடிகர் சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தக் கதாபாத்திரம் இருந்தாலும், கிராமத்து காதல் தோல்வியால் துவண்ட ஒரு நாயகனாக அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
தன்னுடைய முன்னாள் காதலி நிர்மலா எப்படி இறந்து போனார்? என்பதை சொல்லும் பொழுது அவருடைய நடிப்பு அற்புதமாக இருந்தது.
ரிஷிகாந்த், ஏற்றிருக்கும் கதாபாத்திரம் அதிகமான ஹீரோயிசம் இல்லாத, திருமணத்துக்குப் பிறகு எதிர்பாராத சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு சாதாரண இளைஞனுக்கு எப்படி
திருமண நாள் அன்று ஏற்படும் பதற்றம் ,
மனைவியுடன் ஏற்படும் தயக்கம்
முதல் இரவைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு,
திடீரென உருவாகும் குழப்பங்கள்
நகைச்சுவைக்கும், உணர்ச்சிக்கும், இடையே மாறும் காட்சிகள்
இவற்றில் ரிஷிகாந்தின்
நடிப்பு நன்றாக இருக்கிறது.
❤️ஹீரோயின்
அனிஷ்மா அனில்குமார் – . அவர் ‘சிறை’, ‘யூத்’ படங்களுக்குப் பிறகு நடிக்கும் மூன்றாவது தமிழ் படம்.
அனிஷ்மாவின் கதாபாத்திரத்தின் பெயர் முத்துசெல்வி. அவர் ஒரு அடக்கமான, அமைதியான மணப்பெண்ணாக நடித்திருக்கிறார்.
கதையின் நகைச்சுவையான சூழ்நிலைகளில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரமாக மட்டுமே அனிஷ்மாவின் கதாபாத்திரம் இல்லாமல், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான மாற்றத்தின்போது உருவாகும் அமைதியான மற்றும் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தவும் உறவுகள், குடும்பச் சூழல்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் வழியாக கதை நகரும் நிலையில், அனிஷ்மா கதாபாத்திரம் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
🎭 பெரிய துணை நடிகர் பட்டாளம்
ரிஷிகாந்த், அனிஷ்மாவுடன்:
சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.அனைவரும் கிராமத்து மனிதர்களாக பொருந்தி, தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு திருமண வீட்டில் நாமும் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது இவர்கள் நடிப்பு. குறிப்பாக பக்ஸ் (சரவணன்) என்ற கதாபாத்திரத்தில் திருமண வீட்டில் ஒரு போட்டோவை கையில் வைத்துக் கொண்டு சகலை இருந்திருந்தால்… என்று டயலாக் பேசிக் கொண்டு நித்திஷ் ,என்ற கதாபாத்திரத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் ,அந்த நித்திஷ் இயக்குனர் ராஜா கருப்புசாமி தான் என்று தெரிந்த பொழுது, திரையரங்கம் கர ஒளியால் அதிர்கிறது. அற்புதமான டிவிஸ்ட்!
தொழில்நுட்பக்குழு
🎥 ஒளிப்பதிவு
சுரேந்திரன் பரஞ்சோதியின், உழைப்பு படம் முழுக்க நன்றாகவே தெரிகிறது .ஒரே இரவில் நடக்கும் கதை ,சரியான லைட்டிங் ,சரியான கேமரா கோணம். மழையில் சண்டை போடும் உறவுகள். நாயகன் நாயகியின் மனப்போராட்டங்கள். இவை அனைத்தையும் தனது கேமரா மூலம் ரசிகர்களுக்கு கடத்திக் கொண்டு போய் சேர்க்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஊரெல்லாம் பெய்யும் மழை, இயல்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.
🎵 இசை – பரத் சங்கர்
படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். மண்டேலா, மாவீரன் போன்ற படங்களில் வித்தியாசமான இசைக்காக கவனம் பெற்றவர்.
‘மொத ராத்திரி’யிலும் பாடல்களை விட காட்சிகளின் நகைச்சுவை மற்றும் உணர்வுகளுக்கு பின்னணி இசை பிரமாதமாக இருக்கிறது
‘முதலா முடிவா’ என்ற பாடலும்
ரசிக்க வைக்கிறது.
கவிஞர் யுகபாரதியின், வரிகளுக்கு திருமண வீட்டில் கவிஞர் முத்தமிழ் பாடுவது போன்ற பாடல் ரசிக்க வைக்கிறது. உறவுகள் சண்டை போடும் பொழுது பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது.
.
🎥
இயக்கம் / திரைக்கதை: ராஜா கருப்பசாமி .
சீரான திரைக்கதை, கிராமத்து மனிதர்களில் கோபம், ஈகோ, சாதிய வன்மம்
பெண்ணுக்கு படிப்பு எதற்கு? என்று இன்னும் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கும் ஒரு கும்பல் இருக்கிறது என்பதையும் ,காதல்
வெற்றியடைவதற்கு பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதையும் சொல்லி இருக்கிறார். நித்திஷ், என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய இரண்டு நண்பர்கள் மனசாட்சியாக இவரை மிரட்ட, படம் முழுக்க ஒரு ஓட்டை பைக்கை வைத்துக்கொண்டு இவர் படும் அவஸ்தை அருமையாக இருக்கிறது. படத்தின் காமெடியை இன்றைய இளைஞர்களின் நிலையை அற்புதமாக நடித்து இயக்கி முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக, வெற்றி நடிகராக, வலம் வந்திருக்கிறார். ஆணவக் கொலையை மறைமுகமாக சொல்லி, தொட்டால் தீட்டு இன்னும் கிராமப்புறங்களில் இருக்கிறது என்பதை நாசுக்காக சொல்லி, ஒரு திருமண வீட்டில் என்ன? என்ன? நடக்குமோ !அதை இயல்பாக கதைக்களமாக கொண்டு படம் ஆக்கியதில் இயக்குனருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
குறிப்பாக இந்த கதையை
குறும்படமாக உருவாக்கி, பின்னர் சுமார் 6 ஆண்டுகள் பயணித்து முழுநீளப் படமாக உருவாகி இருக்கிறது.நீண்டபோராட்டம் இன்று வெற்றி படமாக வந்துள்ளது.
☘️படத்தொகுப்பு: அசோக் அர்ஜுனன்
படத்தை சிறப்பாக செதுக்கி இருக்கிறார். தெளிவாக இருக்கிறது .எந்த இடத்திலும் படம் லேக், ஆகவில்லை
☘️ஏ. பாலுமகேந்திரா
வின், கலை இயக்கம் திருமண வீடு நன்றாக வடிவமைக்கப்பட்ட விதம் பாராட்டுக்குரியது.
☘️ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி
அனைவருக்கும் ஆடைதேர்வு, நன்றாக பொருந்தி இருக்கிறது.
திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் பெண்கள் இயல்பாக என்ன உடைஅணிவார்களோ, அதைக் கூட சரியாக செய்திருக்கிறார்! பூர்ணிமா ராமசாமி படத்தின் வெற்றிக்கு ஆடைத் தேர்வு கச்சிதமாக இருக்கிறது.
☘️தளபதி ராஜா வின்,
சண்டை பயிற்சி உறவுகளுக்குள் ஏற்படும் கைகலப்பு இயல்பாக அமைத்திருக்கிறார் பாராட்டுக்கள்.
☘️நடனம் அனுஷ்கா விஸ்வநாதன்.
சவுண்ட் மிக்சிங் ராகவ் ரமேஷ்.
சவுண்ட் டிசைன் டி எஸ் ஹரி
ஹ ரசுதன்& ராகவ் ரமேஷ்
☘️மக்கள் தொடர்பாளர்கள் திரு.சுரேஷ் சந்த்ராஅவர்கள்
திருஅப்துல் நாசர்அவர்கள்
☘️மொத்தத்தில்
நீண்ட நாட்களுக்குப் பின்
இயக்குனர்கள்
திரு.பாரதிராஜா, திரு.பாக்கியராஜ் இருவரின் ஸ்டைலில் ஒருபடம்.
படத்தின் பெயர் தான் மொதராத்திரி அதில் விரசமில்ல..ஆனா விசயமிருக்கு
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🙏☘️
