பியார் பிரேமா கல்யாணம் திரை விமர்சனம்

கதை களம்

❤️நாயகன் இளன், துபாயில் வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்துக்கு பிறகு அங்கிருந்து வேலையில் இருந்து தூக்கப்படுகிறார். சென்னை வந்து குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நாயகி பவி, instagram பிரபலம்
நாயகன் ஒரு முறை பெண் பார்க்க ஹோட்டலுக்கு வரும் பொழுது நாயகியை சந்திக்கிறார். அந்த சந்திப்பு ,இருவர் மனமும் காதலின் விழுகிறது.
அதன் பிறகு இரு வீட்டார் பேசி திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
மணமேடையில் இருந்து பவி எழுந்து ஓடுகிறாள். நாயகன் இளன் அவளை துரத்திக் கொண்டு ஓடுகிறார்.
காரணம்
பெண் வீட்டை விட்டு, செல்ல மறுப்பதுதான் பிரச்சினையின் தொடக்கம்!
திருமணத்திற்குப் பிறகும் பவி, தனது குடும்ப வீட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. இதனால் கணவர் அவளுடைய வீட்டுக்கே செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
குடும்பக் குழப்பம் + காதல் + நகைச்சுவை!
இந்த வித்தியாசமான திருமண வாழ்க்கை காரணமாக குடும்பத்தில் ஏற்படும் கலாச்சார மோதல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் நகைச்சுவையான சூழ்நிலைகள்தான் படத்தின் முக்கியமான அம்சங்கள்.
படத்தின் மையக் கருத்தே வித்தியாசமானது: திருமணத்திற்குப் பிறகு ,மாப்பிள்ளை பெண் வீட்டில் குடியேறினால் என்ன நடக்கும்?
“எட்டினால்குடுமியை பிடி,எட்டாவிட்டால்காலை பிடி” என்ற கணக்கில் போகிறது கதை.
வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ளது. அதே நேரத்தில் இன்றைய சமூகத்தில் ஒவ்வொருவருடைய மனநிலையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையும் எப்படி மாறியிருக்கிறது என்பதையும், அந்த மாற்றத்துக்கு ஏற்ப அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் இப்படம் பேசுகிறது.
குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு காதல், திருமணம், வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய பார்வை முற்றிலும் வேறுபட்டிருக்கிறது.அவர்களுடைய எண்ணங்களை நாம் எப்படி புரிந்துகொள்கிறோம், அதை எப்படி ஏற்றுக்கொள்கிறோம், அந்த மாற்றங்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
காதலில் விழுந்த இலன் மனைவிக்காக தன் தாய் வீட்டை விட்டு மாமியார் வீட்டுக்கு போகிறார்.
முதலில் அன்பாக உபசரிக்கும் ராதிகா சரத்குமார் நாயகனுக்கு வேலை இல்லை என்றவுடன் கொடுமை செய்யும் மாமியாராக மாறுகிறார் மருமகனை, வீட்டு வேலையில் பிழிந்து எடுக்கிறார். ஒரு கட்டத்தில் முடியாத நாயகன் என்ன முடிவு எடுத்தான் ?
கால்வாயை தாண்டாதவன் கடலை தாண்ட போகிறானா? என்ற கணக்கில் வீட்டு வேலை செய்ய பழகிக் கொள்கிறான் அதன்பின் என்ன நடந்தது?
வழக்கமான காதல் படங்களில் திருமணத்திற்கு முன்புதான் பெரும்பாலும் கதை நகரும். இங்கே அதற்கு மாறாக, திருமணத்துக்குப் பிறகு தொடங்கும் குடும்ப வாழ்க்கையே கதையின் மையமாகிறது.

.
இளன்

❤️இயக்குநர் இளன் இயக்கி, அவரே நடிகராகவும் அறிமுகமாகிறார் .
:இளன் — Pyaar Prema Kaadhal, Star படங்களை இயக்கியவர். இந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகிறார்.
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ,இளன் வருவதால், அவருடைய நடிப்பு எப்படி இருக்கும் என்பதும் படத்தின் மீது இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகளில்ஒன்றாக இருந்தது இளனின் முதல் படமான Pyaar Prema Kaadhal காதல் மற்றும் உறவுகளில் இருக்கும் தலைமுறை வித்தியாசங்களைப் பேசியது. இப்போது Pyaar Prema Kalyanam திருமணத்திற்குப் பிறகான குடும்ப அமைப்பு மற்றும் நவீன உறவு முறையை மையமாக பேசி இருக்கிறது. ”
இயக்குநரிடமிருந்து கதாநாயகனாக ஒரு பெரிய மாற்றம்
இது அவருக்கு நடிகராக முதல் முக்கியமான முயற்சி.
இளனுக்கு இரட்டை பொறுப்பு
இளன் இயக்குநராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரே படத்தை எழுதி இயக்கியுள்ளார். இதனால் கதை உருவாக்கம் முதல் கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வருவது வரை அவருக்கு மிகப் பெரிய பொறுப்பு இருந்திருக்கிறது.
இதில் இரண்டிலும் வெற்றி பெற்று இருக்கிறார்.

❤️கதாநாயகி: குடும்பஸ்தன் மூலம் கவனம் பெற்ற சான்வே மேகனா. தமிழில் அவருக்கு இது முக்கியமான அறிமுகமாக அமைகிறது
சான்வே நடிக்கும் பவி என்ற கதாபாத்திரம் பிரபலமான influencer. திருமணத்திற்குப் பிறகும் தனது குடும்ப வீட்டை விட்டு வெளியேற விரும்பாதவர்.
அதனால் வழக்கமான “திருமணம் → தனிக்குடித்தனம்” என்ற பாதைக்கு மாறாக, மாப்பிள்ளை பெண் வீட்டில் வாழ்வது என்ற சூழ்நிலையை வைத்து அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது நாயகனை தன் பிடிக்குள் கொண்டு வருகிறார் நாயகி.
இந்த கதாபாத்திரத்தில் நாயகி அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.” எது எப்படி போனாலும் தன் காரியம் தனக்கு” என்று கணவனை கைக்குள் போடும் மனைவியாக
பவி கதாபாத்திரம் மிகவும் நவீனமானது.
அங்கு உருவாகும் குடும்பக் குழப்பம்தான் படத்தின் சுவாரசியம்
மாப்பிள்ளை பெண் வீட்டில் வாழ்வதால் குடும்பத்தில் ஏற்படும் எதிர்பார்ப்புகள், கலாச்சார வேறுபாடுகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் கதையை நகர்த்துகின்றன

❤️படத்தின் பலம்
பெரிய நட்சத்திர கூட்டணி!
இளன், சான்வே மேகனா ஆகியோருடன்
☘️ராதிகா சரத்குமார்,
நாயகி அம்மாவாக வெளுத்து வாங்கி இருக்கிறார்.முதலில்நாயகனுக்கு
அம்மா போல வருபவர், நாயகனுக்கு வேலை இல்லை என்றவுடன் அத்தையாக மாறி,
“தஞ்சம் என்று வந்த மருமகனை வஞ்சி த்தல் ஆகாது” என்று சொல்வார்கள் ஆனால் இவர் நாயகனை வறுத்தெடுப்பது
“தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரில் தான் கரைய வேண்டும்” என்று இவரும் நாடகம் ஆடி அற்புதமாக நடித்திருக்கிறார்.

☘️ யோகி பாபு,
வினோத் என்ற கதாபாத்திரத்தில்
நாயகன் நண்பர்கள் மைக்கேல் உடன் சேர்ந்து கலகலப்பூட்டுகின்றனர்.” நாயகன் இளன் இரும்பு துண்டு விழுங்கி விட்டு இஞ்சி சாறை குடித்தது போல, தவிப்பவர்க்கு ஆலோசனை தருகிறார்.யோகிபாபு . கிளைமாக்ஸ் காட்சியில் மனைவியை புரிந்து கொண்டு திருந்துகிறார்-சிறப்பு

☘️ எம்.எஸ். பாஸ்கர்,
நாயகன் இளன் அப்பாவாக,
“வயதுக்குத் தகுந்த புத்தி, “வரும் முன் காப்பான் அறிவாளி”என்பது போல இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. தன் மகனிடம்
ஈகோ பார்த்துக்கொண்டு பேசாமல் இருப்பது
அறிவுரை சொல்வதும், நாயகன் அதைக் கேட்காமல், இருப்பது என சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

☘️ கீதா கைலாசம்,
நாயகனின் அம்மாவாக
அற்புதமாக நடித்திருக்கிறார். மகனை மாமியார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, “இலவுகாத்த கிளி போல் காத்திருப்பதும் ,
ஹார்ட் அட்டாக் வந்ததைப் போல நாடகம் போட்டு மகனை வீட்டுக்கு அழைப்பது, அருமையான நடிப்பு .
“யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம் “என்பதைப் போல காத்திருந்து காரியம் சாதிக்கும் கதாபாத்திரம் சூப்பர்.

☘️இளங்கோ குமரவேல்,
நாயகியின் அப்பாவாக, பொறுப்புள்ள கதாபாத்திரம். “ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? தன் பணி செய்து கிடப்பதே சிறப்பு! என்று பொறுப்பான அப்பாவாக வந்து போகிறார்.
இவர் கதாபாத்திரத்தை பார்க்கும்போது, ‘நமக்கும் இதுபோல ஒரு மாமனார் கிடைக்க வேண்டும்’ என்று எல்லோரும் எதிர்பார்க்கும் அளவுக்கு, மாமனார் கதாபாத்திரத்தை மிகவும் அழகாக அமைத்திருக்கிறார். இயக்குனர்.

🍇 செந்தில், இந்தப் படத்தில் நாயகியின் தாத்தாவாக,
“ஆடுபகை குட்டி உறவு”என்று பார்வையாலே அற்புதமாக நடித்திருக்கிறார்.

☘️மாறன் வரும் காட்சிகள் காமெடிக்கு கேரண்டி

🔥தொழில் நுட்ப கலைஞர்கள்

மீண்டும் இளன் – யுவன் கூட்டணி! 🎵
இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்துள்ளார். இளன் இயக்கும் படத்தில் யுவன் இசையமைப்பது இது மூன்றாவது கூட்டணி.*
. Pyaar Prema Kaadhal மற்றும் Star படங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி தொடர்கிறது
படத்தின் முதல் பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி இருக்கிறார்
இசைக்கு யுவன் சங்கர் ராஜா என்பதால், காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு இசை முக்கிய பங்கு வகிக்கிறது
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

☘️ஒளிப்பதிவு
தினேஷ் கே. பாபு
காட்சிகள் ஒவ்வொன்றும், கண்ணுக்கு குளிர்ச்சியாக இளமையாக இருக்கிறது. வீட்டுக்குள் நடக்கும் படப்பிடிப்பு, கேமரா கோணம், லைட்டிங்ஸ், எல்லாம் கச்சிதமாக இருக்கிறது.

☘️எடிட்டிங்
பிரதீப் E. மற்றும் ராகவ்
படத்தை கச்சிதமாக செதுக்கியிருக்கிறார். படம் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் செல்வதற்கு படத்தொகுப்பு மிக பெரிய பலம்
மற்றும் படத்தில் பணி புரிந்த
,மேக்கப் மேன், காஸ்ட்யூம் டிசைனர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடன இயக்குநர், என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான முறையில் பணி புரிந்திருக்கிறார்கள்.

💥தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர், Rise East Entertainment நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார் கள் .வெற்றி கிடைத்துள்ளது.

☘️மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள் .
நல்ல முறையில், மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்.

☘️மொத்தத்தில்
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியுடன் கணவரும் மனைவியின் வீட்டிலேயே சென்று வசிக்கும் சூழலை மையமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் திருமண வாழ்க்கை, குடும்ப உறவுகள், காதல், எதிர்பார்ப்புகள் மற்றும் அதனால் உருவாகும் நகைச்சுவையான சம்பவங்களை புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறது.
இளன் இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகி, அவருடன் சான்வீ மேக்னா கதாநாயகியாகவும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல முக்கிய ஜாம்பவான்கள் இயக்குனருக்கு கை கொடுத்தது வெற்றி யை நோக்கி வீர நடை போட்டுள்ளார் கள் என்றே சொல்லலாம்.
காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது .

☘️வித்தியாசமான கதைகளம். இளைஞர்களுக்கு பிடித்த நகைச்சுவை கலந்த இந்த படம் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்☘️🙏