கதை களம்
1940–50களின் கோவா பின்னணியில், குற்ற உலகில் வளர்ந்து வரும் ராயா என்ற கதாபாத்திரத்தைச் சுற்றி கதை நகர்கிறது. குடும்பம், அதிகாரம், துரோகம், வன்முறை, மீட்பு ஆகியவை கதையின் மையமாக இருக்கின்றன. சாதாரண கேங்ஸ்டர் படமாக இல்லாமல், ஒரு கேங்ஸ்டரின் மனநிலையையும் அவனுடைய உலகத்தையும் வித்தியாசமான பாணியில் காட்ட இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.
ராயா (யாஷ்), கங்கா (நயன்தாரா) இருவரும் உடன்பிறப்புகள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் வளர்கின்றனர். 1947-ஆம் ஆண்டில், போர்ச்சுகீசிய ஆட்சியின் கீழ் இருந்த கோவாவில் ராயா ஒரு மாஃபியா டானாக மாறுகிறார்.
சர்க்கஸில் பணியாற்றும் நாடியாவை (கியாரா) ராயா சந்திக்கிறார். அவர் மற்றொரு டானின் மகள். இதை விரும்பாத அந்த டான் ராயா மற்றும் நாடியாவை பிரிக்க முயற்சிக்கிறார்.
இந்தச் சூழலில் கங்காவுக்கு என்ன நடந்தது? அதன்பிறகு நாடியாவின் மகன் ராயாவின் வாழ்க்கைக்குள் எப்படி வந்தான்? இதுதான் மீதமுள்ள கதை.
டாக்ஸிக் மூன்று மணி நேரம், 15 நிமிடங்கள் ஓடும் ஒரு திரைப்படம்.
பிரமாண்டமான தயாரிப்புத் தரத்திலும், அதிகமான ஆக்ஷன் காட்சிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ இதுதான் படத்தின் மிகப்பெரிய பலம்.
படத்தின் ஹை லைட்
💥ஊருக்கு வரும் சர்க்கஸ் கலைஞரான கியாரா அத்வானி மீது யாஷூக்கு மோகம் ஏற்படுவது
💥 இருவரும் நெருக்கமாக பழகுவதால் கியாரா அத்வானி கர்ப்பம் அடைவது
💥 யாஷூக்கும், தாரா சுதாரியாவுக்கும் திருமணம் நடக்கும் போது . கியாரா அத்வானி கர்ப்பமாக இருப்பது திருப்பு முனை
💥தன்னையேவளர்த்த முதலாளிக்கும், யாஷூக்கும் இடையே நடக்கும் சண்டை உச்சம்.
💥யாஷை தாரா சுதாரியா துப்பாக்கியால் சுடுவது
💥சுதாரியாவை நயன்தாரா கொல்லும்காட்சி
💥நயன்தாராவை கியாரா அத்வானி கொலை செய்ய குரோஷி வஞ்சகமாக திட்டம் தீட்டி நயன்தாராவை கியாரா அத்வானி கொல்லும் காட்சி? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
💥யாஷ்
யாஷ் அதிரடி விருந்து படைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் புரிந்துள்ள அவர், கே.ஜி.எப். படத்தை நினைவூட்டுகிறார். பெண் பித்தனாக சுற்றும் அவர், கியாரா அத்வானியுடன் காதல் காட்சிகளில் மட்டும் ரொம்ப பாசம் காட்டியுள்ளார்.
திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவரது மாஸ் இமேஜ் நன்றாக வேலை செய்கிறது. ஆக்ஷன் காட்சிகளிலும், ஸ்டைலிலும் ரசிகர்களை ஈர்க்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பு சூப்பர்!! கிளைமாக்ஸ் காட்சியில் புத்திர சோகத்தை நடிப்பில் காட்டி பரவசப்படுத்துகிறார்.
⭐ நயன்தாரா – கதாநாயகனின் சகோதரி கங்கா என்ற முக்கியமான பாத்திரம். அண்ணன்–தங்கை உறவின் பின்னணியில் வரும் காட்சிகளில் அவரது அனுபவமான நடிப்பு நன்றாக வெளிப்படுகிறது. குறிப்பாக கதாபாத்திரத்தின் வலி, கோபம், குடும்பப் பின்னணி ஆகியவற்றை அவர் முகபாவனைகளில் காட்டியிருக்கிறார்
ஆனால் ஒரு குறை இருக்கிறது பாஸ் — நயன்தாராவின் கதாபாத்திரத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு முழுமையான ‘ஆர்க்’ கொடுக்கப்படவில்லை என்று நயன்தாரா மாறுபட்ட கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். அவரது துணிச்சலை பாராட்டலாம்.
தம்பிக்காக தன்னையே மற்றவர்களிடம் ஒப்படைப்பு, தன் தம்பி தெருவுக்கு வராமல் காப்பாற்றும் தியாகி கங்கா கதாபாத்திரம் தம்பி மீது உயிரே வைத்திருக்கும் கங்கா கதாபாத்திரத்திற்கு நயன்தாரா உயிர் கொடுத்திருக்கிறார்.
💥கியாரா — திரை ஆளுமை + கவர்ச்சி + confident performance: ⭐⭐⭐⭐
இயல்பான நடிப்பு + நல்ல presence, ஆனால் குறைந்த அழகும், ஆபத்தும் நிறைந்த நடிகையாக கவனிக்க வைக்கிறார். கியாரா அத்வானிக்கு கிடைத்திருக்கும் பாத்திரம் திரையில் உடனடியாக கவனம் ஈர்க்கிறது நாடியா கதாபாத்திரத்தில் அவர் நிதானமாகவும், அதே நேரத்தில் வலுவான presence-உடனும் நடித்திருக்கிறார்.
அவர் யஷ் கதாபாத்திரத்தின் குழப்பமான உலகத்திற்கு எதிர்மாறான அமைதியான சக்தியாக நன்றாகப் பொருந்துகிறார் .
🌟 ருக்மிணி வசந்த்
இந்தப் படத்தில் மெலிசா ,என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய லுக், உடல் மொழி, திரையில் இருக்கும் நிதானம் ஆகியவை கவனம் பெறுகின்றன. குறிப்பாக முதல் பாதியில் அவரது தோற்றமும் நடிப்பும் நன்றாக இருக்கிறது
ஆனால்— ருக்மிணியின் நடிப்பைவிட, அவருக்கு எழுதப்பட்ட கதாபாத்திரம்தான் குறைவாகத் தோன்றுகிறது. அவருடைய திறமைக்கு இன்னும் அதிகமான உணர்ச்சிக் காட்சிகள் கொடுத்திருக்கலாம்.
மற்றும் ஹூமா குரேஷி, வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். தன்னுடைய சகோதரன் டோனி கொலை செய்யப்பட, அதற்காக யஷ் “வை பழி வாங்குவது குரூரம்
💥 தாரா சுதாரியா, அமித் திவாரி, சுதேவ் நாயர், பாலாஜி மனோகர், அக்ஷய் ஓபராய் என அனைவருமே நல்ல தேர்வு.
💥 படத்தின் பெரிய பலம் நடிகர்கள் மட்டுமல்ல; அதன் ஒளிப்பதிவு, கலை இயக்கம், எடிட்டிங், சண்டைக்காட்சிகள், இசை மற்றும் பின்னணி இசை ஆகிய தொழில்நுட்பப் பணிகளும் பிரமிக்க வைக்கிறது
🎬 இயக்கம் – கீது மோகன்தாஸ்
Geetu Mohandas இயக்கிய படம். கீது மோகன்தாஸ், யஷ் இருவரும் திரைக்கதையிலும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
கீது வழக்கமான மாஸ் கேங்ஸ்டர் படமாக மட்டும் இல்லாமல், dark fantasy + gangster world கலந்த ஒரு வித்தியாசமான visual world-ஐ உருவாக்கி இருக்கிறார். அதனால்தான் படத்தின் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிரடி – ஆக்ஷன் கதைக்களத்தை மட்டுமே நம்பி, இயக்குனர் கீது மோகன்தாஸ்..சைக்காலிஜிகல் திரில்லர் பாணியில் கிளைமாக்ஸ் காட்சியில் வைத்து படம் இயக்கி இருக்கிறார்.
📷 ஒளிப்பதிவு – ராஜீவ் ரவி
Rajeev Ravi ஒளிப்பதிவாளராக இவருடைய வேலைதான் படத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப பலங்களில் ஒன்று என்று சொல்லலாம் பாஸ். இருண்ட நிறப்பதிவு
காலகட்டத்தை உணர்த்தும் lighting gangster உலகத்தின் அழுத்தமான சூழல் action காட்சிகளில் camera movement கதாபாத்திரங்களின் முகபாவனைகளை highlight செய்வது என்று காட்சிகளுக்கு ஒரு gritty, atmospheric feel கொடுத்திருக்கிறார். படத்தின் cinematography மற்றும் visual appeal பாராட்டப்படும்
✂️ எடிட்டிங் – உஜ்வல் குல்கர்னி
Ujwal Kulkarni படத்தொகுப்பாளர். இவருடைய முக்கியமான பணி, மிகப்பெரிய action காட்சிகளையும் பல கதாபாத்திரங்களையும் ஒரே narrative flow-ல் இணைப்பது. Toxic மூன்று மணி நேரத்துக்கும் அதிகமான runtime கொண்ட படம் என்பதால், editing மிகவும் முக்கியமான பொறுப்பு.
🎨 Production Design – Abid T.P.
Abid T.P. production designer. ஒரு படத்தின் உலகத்தை திரையில் உருவாக்குவது இவருடைய முக்கியப் பணி. அதாவது, செட் + கட்டிட அமைப்பு + பின்னணி சூழல் + காலகட்ட தோற்றம் + பொருட்களின் தேர்வு இவற்றை ஒருங்கிணைத்து, படம் நடக்கும் உலகம் உண்மையாகத் தோன்றும்படி செய்வார்.
Toxic படத்தின் visual world பற்றி ரசிகர்கள் பாராட்டுவதற்கு production design-க்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
🥊 சண்டைக்காட்சிகள் – JJ Perry & Action Team
இந்தப் படத்தின் மற்றொரு மிகப்பெரிய தொழில்நுட்ப ஈர்ப்பு action choreography.
J.J. Perry உட்பட Kecha Khamphakdee, Anbariv, Amrit Singh ஆகியோரும் action பணியில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் செய்யும் பணி வெறும் “சண்டை அமைப்பது” மட்டும் அல்ல எந்த இடத்தில் எந்த fight நடக்க வேண்டும் நடிகர்கள் எப்படி நகர வேண்டும் camera எந்த கோணத்தில் இருக்க வேண்டும். stunt performers எப்படி பாதுகாப்பாக செயல்பட வேண்டும். impact எப்படி திரையில் உணரப்பட வேண்டும். எல்லாவற்றையும் திட்டமிடுவார்கள்.
அதனால்தான் Toxic-ன் action sequences படத்தின் முக்கிய attraction-களில் ஒன்றாக இருக்கிறது.
🎵 இசை – Ravi Basrur & மற்ற இசையமைப்பாளர்கள்
Ravi Basrur பின்னணி இசையில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவருடன் Vishal Mishra, Tanishk Bagchi, Faheem Abdullah, Arslan Nizami ஆகியோரும் இசைப் பணியில் இணைந்துள்ளனர்.
குறிப்பாக background score தான் gangster/action படங்களுக்கு tension-ஐ உருவாக்கும்.
யஷ் கதாபாத்திரம் திரையில் வரும் நேரத்தில், “இவர் சாதாரண மனிதர் இல்லை”
என்ற உணர்வை ரசிகருக்கு ஏற்படுத்துவது background score-ன் முக்கிய வேலை.
👗 Costume Design – Neha Vishwas Bajaj
Neha Vishwas Bajaj costume designer.
ஒரு கதாபாத்திரத்தின் உடை அதன் personality-ஐ வெளிப்படுத்த வேண்டும்.
Toxic போன்ற period gangster பின்னணியுள்ள படத்தில் உடை, நிறம், accessories, hairstyle ஆகியவை கதாபாத்திரத்தின் காலகட்டத்தையும் சமூக நிலையையும் காட்டுவதில் முக்கியம்.
💄 Hair, Makeup & Prosthetics – Shipra Acharya
Shipra Singh Acharya hair, makeup மற்றும் prosthetic design பணிகளில் இடம்பெற்றுள்ளார்
கதாபாத்திரங்களின் தோற்றம், வயது மாற்றம், குறிப்பிட்ட physical appearance போன்றவற்றை உருவாக்குவது இவரது துறை.
⭐ தொழில்நுட்ப ரீதியாக என் பார்வையில்…
ஒளிப்பதிவு – ⭐⭐⭐⭐½
Production Design – ⭐⭐⭐⭐½
Action – ⭐⭐⭐⭐½
இசை/பின்னணி இசை – ⭐⭐⭐⭐
Editing – ⭐⭐⭐½
Costume & Makeup – ⭐⭐⭐⭐
மொத்தத்தில் Toxic-ன் மிகப்பெரிய பலம் “கதை மட்டும்” அல்ல; அந்தக் கதையை திரையில் எப்படி ஒரு பெரிய உலகமாக உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான். ஆரம்ப விமர்சனங்களிலும் visual presentation, production design மற்றும் Yash-ன் screen presence ஆகியவை குறிப்பிடத்தக்க பலங்களாகப் பேசப்படுகின்றன.
💥மொத்தத்தில் இந்த டாக்ஸிக் ஒரு பிரம்மாண்டமான வெற்றி படைப்பாக வந்திருக்கிறது ரசிகர்கள் கொண்டாடுவார்கள்
💥மக்கள் தொடர்பாளர் யுவராஜ்
