ஹாய் -திரை விமர்சனம்

மதிப்பீடு 4-/5

❤️ ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ள”ஹாய்”திரை படம் வெற்றி படமாக வந்துள்ளது.

❤️கதை களம்

கோயம்புத்தூரில் இருக்கும், கவின் (மயில் சாமி) தன் மாமன் மகள் மைதிலியை ஒருதலையாய் காதலிக்கிறார். ஆனால் மைதிலி நீ எல்லாம் காதலுக்கு செட்டாக மாட்டாய் என்று உதாசீன படுத்து விடுகிறார். இதனால் கோயம்புத்தூரை விட்டு சென்னைக்கு ஓடிப் போகிறார் கவின்.

அதேபோல நயன்தாராவும் 8 வயதில் தன் அம்மா ஓடிப்போனதால், தன் அப்பா பிரபு குடிகாரன் ஆகிவிட, குடும்பத்தில் அமைதி இல்லாமல் அவருக்கு திருமணம் செய்த மாப்பிள்ளை பிடிக்காமல், இவரும் கோயம்புத்தூரை விட்டு சென்னைக்கு ஓடி போகிறார்.

அங்கு காஸ்டியூம் டிசைனராக இருக்கும் லட்சுமி இருவருக்கும் அடைக்கலம் கொடுக்கிறார். ஒரே வீட்டில் இருக்கும் இருவரும் ஒரு புள்ளியில் இணைந்தார்களா? இவர்கள் மனம் மாறியதா? கவின் எதிர்பார்த்த காதல் கிடைத்ததா? நயன்தாரா வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறியதா? என்பதை மிகவும் கலகலப்போடு, சொல்லி இருக்கிறது இந்த படம்.

காதல், ரொமான்ஸ், ஃபன், டிராமா மற்றும் காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு முழுமையான ரோம்-காம் டிராமாவாக இப்படம் உருவாகியிருக்கிறது .குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமாக பயணிக்கிறது.

குறிப்பாக, திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின், களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை கரம் பிடித்து, அவரைக் காதலிக்க வைக்கப் போராடும் காட்சிகள் , கவனம் ஈர்க்கின்றன. இவர்களுக்கிடையேயான காதல் காட்சிகளுடன் நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது . படம் முழுக்க சுவாரஸ்யமான அம்சங்கள் நிறைந்துள்ளன.

கொங்கு மண்டலத்தின், சிறப்பான பாஷை அனைவரையும் மரியாதையாக அழைப்பது ,அந்த பாஷையை, நயன்தாராவும், கவினும், கச்சிதமாக பேசி நடித்திருப்பது படத்திற்கு நெருக்கமான ஒரு உணர்வை கொடுத்திருக்கிறது .கிளைமாக்ஸ் முடித்த வித,ம் மிகச் சிறப்பாக இருக்கிறது. தாய்மையின் உணர்வை நயன்தாரா வெளிப்படுத்தியிருக்கிறார்.

❤️நடிகர் &நடிகைகள்

மறைந்த இயக்குநர் நடிகர் கே. பாக்யராஜ், வாத்தியார் என்ற வேடத்தில் மகனை கண்டிப்பதிலும், அன்பு செலுத்துவதிலும், நயன்தாராவை தன்னுடைய மருமகள் என்று வீட்டுக்கு அழைத்து வருவது ,என்று பல இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆண்களுக்கு மூன்று வாழ்க்கை இருக்கிறது என்று தத்துவம் சொல்லும் பொழுது சிறப்பாக இருக்கிறது இவர் நடிப்பு.

❤️பிரபு, இந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நயன்தாராவின், அப்பாவாக இவருடைய மனைவி உஷா வீட்டை விட்டு ஓடி போனதால், குடிகாரனாக மாறி 50 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியதால், நயன்தாராவை கட்டாய திருமணத்துக்கு தள்ளப்படும், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் மனிதராக சிறப்பாக நடத்திருக்கிறார். ஓடிப்போன மனைவி உஷாவை எந்த வகையிலும் குறை சொல்லாமல் அவருக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் போதும் ,அவர் வந்த பிறகு கண்கலங்கி அழுவது, மிகச் சிறப்பான நடிப்பு

❤️ராதிகா சரத்குமார்,

பரிமளம் என்ற கதாபாத்திரத்தில் கவின் அம்மாவாக, பாக்யராஜ் அவர்களின் மனைவியாக, சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். தன் மகன் காதல் செட்டாகவில்லை என்று குலுங்கி குலுங்கி அழும் பொழுது, தன் மடியில் சாய்த்து கொண்டு, உனக்கென்று ஒருத்தி நிச்சயமாக வருவார். தைரியமாக இரு என்று, தன்னம்பிக்கை சொல்லும் தாயாக , மிளிர்கிறார் .

இவர்கள் மூவரும் அனுபவம் மிக்க திரை ஆளுமைகளின் அட்டகாசமான அதேபோல், கவின் – நயன்தாரா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

❤️கவின் – கதாநாயகன்

மயில்சாமி என்ற கதாபாத்திரத்தில் ஒரு இன்னசென்ட் ஆன இளைஞனாக அருமையாக நடித்திருக்கிறார்.

தனக்கு காதலி செட்டாகவில்லை என்று குலுங்கி குலுங்கி அழும் பொழுது, நயன்தாரா தான் நமக்கு கிடைத்த தேவதை என்று ரசித்து ரசித்து அவரை காதல் செய்யும் பொழுதும் நயன்தாராவை கடவுள் கார்பன் பேப்பரில் மறைந்த கவிதை என்று நயன்தாராவை புகழ்வதும், ஓடிப்போன நயன்தாராவின் அம்மா சுகாசினியை கண்டுபிடித்து கூட்டி வருவது நண்பன் ஆதித்யா கதிருடன் காமெடியில் கலக்குவது, குரோசியுடன் காமெடியில் கலக்குவது என்று படம் முழுக்க பட்டை தீட்டிய வைரமாக இவர் நடிப்பு ஜொலிக்கிறது இவருக்கு ஒரு வெற்றிப் படம் ஆசை வந்துள்ளது.

❤️நயன்தாரா – கதாநாயகி யாக

கோயம்புத்தூர் பெண்ணாக கொங்கு பாஷையில் பேசி தேவயானி என்ற கதாபாத்திரத்தில் ஆளுமை மிக்க பெண்ணாக நடித்திருக்கிறார் தனியாக சென்னை வரும் நயன்தாரா கையில் அரிவாளுடன் மிரட்டுவது கவினுக்கு ஆறுதல் சொல்வது தனக்கு அடைக்கலம் கொடுக்கும் லட்சுமி இடம் பளிச் பளிச் பேசுவது,
அம்மாவை பார்த்தவுடன் பாசத்துடன் அள்ளி அணைப்பது அப்பா திருந்தி விட்டார் என்று மகிழ்வது என்று பல இடங்களில் தன்னுடைய நவரசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தில் பார்த்த நயன்தாரா இந்த படத்திலும் அது போலவே நடித்திருக்கிறார்.

💥VTV கணேஷ்

சண்முகி என்ற மருத்துவராக, மொட்டை மாடியில் ஜட்டி காய போடுபவர் என்று நயன்தாரா கலாய்க்கும் வண்ணம் சிரிக்க வைக்கிறார்.

சந்திரமுகி ஆக சூப்பர்ஸ்டார் வந்தார் சண்முகையாக நான் வரக்கூடாதா என்று கேட்கும் காட்சி கலகலப்பு.

💥FEFSI விஜயன்

பரிசுத்தம் என்ற கதாபாத்திரத்தில் சென்னையில் நயன்தாராவுக்கு இவர் அம்மாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு கொடுத்து முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் .

💥 சுகாசினி ஒரு காட்சியில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார் தாய்மையும் பாசம் இவர் கண்களில் தெரிகிறது.

💥சத்யன் யோகேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் கவின்” மாமாவாக வந்து கலகலப்பு ஊட்டுகிறார்.

ஆதித்யா கதிர் கணபதி என்ற கதாபாத்திரத்தில் கவினுக்கு உற்ற தோழனாக வந்து காமெடிக்கு கை கொடுக்கிறார்.

மற்றும் ரேஞ்சி பணிக்கர், அமிர்தா சீனிவாசன் என ஒரு அனுபவம் வாய்ந்த துணை நடிகர்கள் குழுவும் உள்ளது. அனைவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

: 🎥 தொழில்நுட்பக் குழு

💥இயக்கம் – விஷ்ணு எடவன்

இது அவருடைய இயக்குநர் அறிமுகப் படம். இவர் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். காதல் கதையை இப்படி எதிர்பாராத கோணத்தில் சொல்வது பலருடைய கவனத்தையும் ஈர்த்த இருக்கிறது
முதல் படத்தில் வெற்றி கோப்பையை பெற்று இருக்கிறார்.

படம் முழுக்க, காமெடியும், எமோஷனலும், கலகலப்பு எதார்த்தமான, காட்சிகளால் கவனம் பெறுகிறார் இயக்குனர்.

💥ஒளிப்பதிவு – ராஜேஷ் சுக்லா

காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை ஆகியவற்றை இயல்பான சூழலில் காட்டுவது இவருடைய முக்கியப் பணி.

கோவை, மற்றும் பொள்ளாச்சி பகுதிகளின் வயல் வரப்புகளில், பசுமையாக குழுமையாக ஒலிப்பதிவு இருக்கிறது. கவின் வயநாடு செல்லும் பொழுது கேரளாவின் மழைக்காலத்தை நமக்கு குளிர்ச்சியாக ஊட்டுகிறது கேமரா.

பாடல்களில் கேமரா புகுந்து விளையாடுகிறது படம் முழுக்க ஒரு ரிச்சான ஒளிப்பதிவு தெரிகிறது.

💥இசை – ஜென் மார்ட்டின்

படத்தின் பாடல்களுக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன; அதில் “ரசகுல்லா” பாடலை அனிருத் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரை” என்ற பாடல் ரசிக்க வைக்கிறது. மெலோடி பாடலால் ரசிக்க வைக்கிறார்.

💥எடிட்டிங் – பிலோமின் ராஜ்

காதல் படங்களில் மிகவும் முக்கியமான timing—நகைச்சுவை காட்சியின் timing, உணர்ச்சிக் காட்சியின் நீளம், பாடல்களின் placement—இவற்றை சரியாக அமைப்பது இவருடைய முக்கியப் பணி.

💥இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டராக கண்ணன் பணிபுரிந்து இருக்கிறார். கவின் நயன்தாரா நிச்சயதார்த்த இடத்தில், ஆரம்பக் காட்சிகளில், மற்றும் ரசகுல்லா பாடலுக்கும், கலை இயக்கம் நன்றாக இருக்கிறது.

💥இந்த படத்தின் நடன பயிற்சியாளராக பிருந்தா மாஸ்டர், தினேஷ் மாஸ்டர் காவியா மாஸ்டர், பணிபுரிந்து இருக்கிறார்கள் . ரசகுல்லா பாடலுக்கும், சக்கரை பாடலுக்கும், நடனப் பயிற்சி அற்புதம் சண்டை பயிற்சியாளராக தினேஷ் காசி பணிபுரிந்து இருக்கிறார். சண்டைகள் அவ்வளவாக இல்லை என்றாலும் இவர் பணி சிறப்பாக இருக்கிறது.

காஸ்ட்யூம் டிசைனராக காவியா ஸ்ரீராம் , மற்றும் அனுவர்தன், பணி புரிந்திருக்கிறார்கள் .இவர்கள் பணி சிறப்பாக இருக்கிறது.

பப்ளிசிட்டி டிசைன்ராக வியாகி, ஸ்டில்ஸ்: தேனி முருகன் நன்றாக இருக்கிறது.

திரைக்கதையில் உதவி, மற்றும் வசனங்களை முத்து செல்வன் எழுதி இருக்கிறார்
வசனம் சிறப்பாக இருக்கிறது.

மற்றும் இப்படத்தின் ,கோ, இயக்குனராக, வினோ பாலா, அசோசியேட் இயக்குனராக தங்கவேல் செல்வமணி, பத்மன் ,பணி புரிந்திருக்கிறார்கள். உதவி இயக்குனராக நிரஞ்சன், அருண் பணி புரிந்திருக்கிறார்கள்.

படத்தொகுப்பில் உதவி புரிந்திருக்கிறார்கள் சக்திவேல் வரதராஜ்,

மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்.
DI: Annapurna Studios
Colorist: Andreas Brueckl
Vfx: SPECTRE POST VFX STUDIO , SOZO
Sfx: Sync Cinemas
Chief Costume Designer: Nagu
Production Manager: Parthiban Natarajan
Production Controller: S.Krishnaraj
Production Executive: G.Murugapoopathy

என அனைவரும் ஒரு வெற்றிப் படத்துக்காக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் இந்த படம் ஒரு வெற்றி படமாக அமைந்திருக்கிறது

💥மக்கள் தொடர்பாளர் திரு யுவராஜ், அவர்கள் இந்த படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார். ஒரு வெற்றி படத்திற்காக இவரது டீம் உழைத்திருக்கிறது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

💥 கவின் – நயன்தாரா கூட்டணி
இந்தப் படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கவின் + நயன்தாரா முதல் முறையாக இணைவதுதான். கவின், நயன்தாராவுடன் தனது career-ல் தான் எதிர்பார்க்காத ஒரு முக்கியமான வாய்ப்பு . என்று கவின் கூறியிருந்தார் அது உண்மை.
இருவர் கெமிஸ்ட்ரியும் அவ்வளவு சூப்பராக இருக்கிறது.

🎯
Hi படத்தின் பலம் பெரிய action அல்லது mass elements அல்ல; கதாபாத்திரங்களின் relationship மற்றும் humour + emotion அதிகம். குறிப்பாக கவின்–நயன்தாரா chemistry தான் படம் வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

💥படத்தில் பணி புரிந்த நடிகர், நடிகைகள். தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் ,என அனைவருக்கும் வெற்றிப் படமாக வந்துள்ளது கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்☘️