பெத்லகேம் குடும்ப யூனிட் – திரைவிமர்சனம்

❤️கதை:
அங்கமாலி சுற்றுவட்டார கிராமத்து கிறிஸ்தவ குடும்பங்களின் பின்னணியில் கதை நடக்கிறது. கேட்டரிங் தொழில் செய்யும் ஜஸ்டின் வாழ்க்கையில், அவரைவிட வயதில் இளைய ஆஷ்லி வருகிறார். இருவருக்கும் இடையே உருவாகும் காதல், வயது வித்தியாசம் காரணமாக குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் தயக்கம் அதையெல்லாம் சுற்றியுள்ள நகைச்சுவைதான் படத்தின் மையம்.
வயது வித்தியாசமுள்ள காதல் திரைப்படங்களில் காணப்படும் ஒரு முக்கியப் பிரச்சினை என்னவென்றால், அவை அனைத்திலும் ஒருவித அருவருப்பான தன்மை வெளிப்படையாகத் தென்படுவதுதான். அவை பெரும்பாலும் ஆண் பார்வையாளர்களையும் அவர்களின் கற்பனைகளையும் திருப்திப்படுத்துவதற்காகவோ, அல்லது ஆணாதிக்க மரபுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களுக்காகவோ உருவாக்கப்படுகின்றன. இதன் விளைவாக, அத்தகைய படங்களில் கதாநாயகனின் கேள்விக்குரிய செயல்கள் பெரும்பாலும் மூடிமறைக்கப்படுகின்றன, பூசி மெழுகப்படுகின்றன, அல்லது கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன.
அந்த வரிசையில் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்.

❤️ நிவின் பாலி – இந்தப் படத்தில் மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். காதலன், அண்ணன், நண்பன் என பல பரிமாணங்களை பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் வெளிப்படுத்துகிறார். குறிப்பாக காதலை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று தயங்கும் காட்சிகளில் அவரது முகபாவனைகள் நன்றாக வேலை செய்கின்றன.

அந்த ஊரில் மதிப்பும் மரியாதையும் மிக்கவராக வலம் வந்தாலும், ஆங்காங்கே வெளிப்படும் க்யூட் குழந்தைத்தனத்துடன் நிவின் பாலி, படம் முழுக்க நிறைந்து கிடக்கிறார். முதிர்ச்சியான நடிப்பு, கோபத்தின் வெளிப்பாடு தாண்டி, வெட்கப்படும் தருணங்கள்.. சூப்பர்…

❤️மமிதா பைஜு படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவர். ஆரம்பத்தில் அமைதியாகத் தெரியும் ஆஷ்லி, பின்னர் தன்னுடைய குறும்பு மற்றும் துடுக்குத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் ரசிக்க வைக்கிறது. நிவினுடன் அவரது கெமிஸ்ட்ரியும் படத்திற்கு பெரிய பலம்.

துடிப்பான கதாபாத்திரத்தில் இயல்பாக மனதில் நிறைகிறார் மமிதா பைஜு. நிவினைச் சீண்டும் இடங்கள், காதலை வெளிப்படுத்தும் காட்சிகள், குடும்பத்தின் பிளாக்மெயிலுக்கு கலங்கும் இடம் போன்றவற்றில் எமோஷன்களிலும் அட்டகாசப்படுத்துகிறார்.

😂 காமெடி
படத்தின் மிகப்பெரிய பலம் இயல்பான காமெடி. தனியாக காமெடி டிராக் வைத்திருப்பதைவிட, குடும்பத்தில் நடக்கும் சிறுசிறு சம்பவங்கள், உரையாடல்கள் மூலமாகவே சிரிப்பை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக சங்கீத் பிரதாப் பல இடங்களில் காமெடிக்கு நல்ல பங்களிப்பு செய்கிறார்
நிவினின் சகோதரராக சங்கீத் பிரதாப் தன் வழக்கமான காமெடி கவுன்ட்டர்களாலும் உடல்மொழியாலும் அதகளப்படுத்துகிறார். இயக்குநராக அவர் கூட்டும் அலப்பறைகள் ரகளை! நிவினின் சீனியர் நண்பர்களில் மது பிரியராக சுரேஷ் கிருஷ்ணா காமெடி கதகளி ஆட, க்ளிக்சனாக ரோஷன் ஷானவாஸ், கோபக்காரராக தன் ‘பிரேமலு’ பாத்திரத்தை மீண்டும் பிரதிபலிக்கும் ஷ்யாம் மோகன் ஆகியோர் படத்துக்கு கலகலப்பூட்டுகின்றனர். வினய் ஃபோர்ட், ஷ்ரிந்தா உள்ளிட்ட மற்ற துணை கதாபாத்திரங்களும் இந்த குடும்ப யூனிட்டின் முக்கிய அங்கங்களாகின்றனர்

☘️தொழில் நுட்ப கலைஞர்கள்.

🎭 இயக்கம்
‘பிரேமலு’ படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. மீண்டும் இளைஞர்களின் காதல் மற்றும் அன்றாட வாழ்க்கை உணர்வுகளை மையமாக வைத்திருக்கிறார். ஆனால் இந்த முறை காதலுடன் குடும்ப உறவுகள், திருமண நிகழ்வுகள், ஊர் வாழ்க்கை ஆகியவற்றையும் இணைத்திருக்கிறார்.
பெரிய ஆக்ஷன், அதிரடி திருப்பங்கள் இல்லாமல், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை வைத்து சுவாரஸ்யமாக சொல்ல முயன்றிருப்பது படத்தின் சிறப்பு.

📸
அஜ்மல் சாபுவின் ஒளிப்பதிவு கிராமத்து கேரளச் சூழலையும் குடும்பங்களின் இயல்பான வாழ்க்கையையும் அழகாகப் பதிவு செய்கிறது.

☘️விஷ்ணு விஜய்யின் இசை/பின்னணி இசையும் படத்தின் feel-good தன்மைக்கு உதவுகிறது

☘️திரைக்கதை – கிரிஷ் ஏ.டி.
‘பிரேமலு’, ‘சூப்பர் சரண்யா’ மூலம் இளைஞர்களின் இயல்பான காதல் மற்றும் நகைச்சுவையை ரசிக்க வைக்கும் இயக்குநர். இப்படத்தில் கிரண் ஜோசியுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்.
இரண்டாம் பாதியில் வேகம் திரைக்கதை யில்சில காட்சிகள் ஏற்கெனவே பார்த்த காதல்-குடும்பப் படங்களின் template போலத் தோன்றினாலும் கிளைமாக்ஸும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது

☘️தயாரிப்பு – பாவனா ஸ்டூடியோஸ்
ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

☘️படத்தொகுப்பு – ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் ✂️
முதல் பாதியின் வேகத்தையும் நகைச்சுவை timing-ஐயும் சரியாக வைத்திருப்பது முக்கியமான பணி.

🎨 மற்ற முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள்
பணி
கலைஞர்
Production Design
Ashik S
பாடல்கள்
Suhail Koya, Vinayak Sasikumar
Sound Design
Sankaran A.S., K.C. Sidharthan
Sound Mix
Vishnu Sujathan
VFX
Egg White VFX
DI Studio
Color Planet Studios
DI Colourist
Remesh CP
Costume Design
Dhanya Balakrishnan
Make-up
Ronex Xavier
Action
Action Sandhosh
Associate Editor
Vishnu Manik
Publicity Designs
Yellow Tooths
Stills
Rinson M.B., Rishlal Unnikrishnan

☘️விஷ்ணு விஜய் – கிரிஷ் ஏ.டி. கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் இசைத் தரப்பில் குறிப்பிடத்தக்கது. ‘பிரேமலு’ போன்ற படங்களில் இருந்த அந்த இளமை + நகைச்சுவை + காதல் feel இந்தப் படத்திலும் பின்னணி இசை மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

☘️மேலும், அஜ்மல் சாபுவின் கேமரா வேலை படத்தை மிகைப்படுத்தாமல் இயல்பான கேரளச் சூழலுடன் காட்டுகிறது. அதனால் கதாபாத்திரங்கள் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களைப் போலவே தோன்றுகின்றன.

☘️மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்கள்.
படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் 🙏