7 ஸ்டார் பாய்ஸ்- -திரைவிமர்சனம்

மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ (Aanaparambile World Cup) என்ற திரைப்படம், தற்போது தமிழில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுவெளியாகியுள்ளது. வெற்றி பட்டியலில் இடம் பிடித்துள்ளார் கள். இந்த பாய்ஸ்கள்☘️

☘️.கதைக்களம்:

இது முழுக்க முழுக்க கால்பந்து (Football) விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா (Sports Drama) வகைத் திரைப்படம் . 7சிறுவர்களின் கால்பந்தாட்டக் கனவுகள், மற்றும் அவர்களின் மைதானப் போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக விவரிக்கிறது.

கேப்டன் குஞ்சு, உமர், வினீத், ஜோயல் ,நைனூஸ்என்று ஏழு சிறுவர்களின் கனவு, அவர்கள் சாதனை பற்றி சொல்கிறது படம்.

இஸ்மாயில், மற்றும் ரஹினா இவர்கள் காதலையும் ரஹீனாவின் ராவுத்தர் குடும்பத்தையும் பற்றி சொல்கிறது.

ஆத்தங்கரை கிராமம், புட்பால் மீது உயிரை வைத்திருக்கிறது. அவர்களைப் பற்றியும் இந்த படம் சொல்கிறது.

கால்பந்தாட்ட விளையாட்டு பின்னணியில், ஒரு கிராமத்து மக்களின் கால்பந்து விளையாட்டு ஆர்வத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது.

செவன் ஸ்டார் பாய்ஸ் “என்று தங்களுக்கு தானே பெயர் வைத்துக் கொண்டு ,அந்த ஏழு சிறுவர்களும் நக்கலும், நையாண்டிமாக, கலாய்த்துக்கொண்டு ,படம் முழுக்க ஒரு விறுவிறுப்பான ஜானராய் வந்திருக்கிறது.

விளையாட மிகுந்த ஆர்வம் இருந்தாலும், முறையான மைதானம் இல்லாததால் அவர்களால் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.

உள்ளூர் போட்டிகளில் திறமையாக விளையாடும் ஆண்டனி வர்கீஸை அந்தச் சிறுவர்கள் தங்களுடைய ரோல் மாடலாக நினைக்கிறார்கள். அவர்களின் நிலைமையை அறிந்த ஆண்டனி, அவர்களுக்காக விளையாட ஒரு மைதானத்தை ஏற்படுத்தித் தருகிறார்.

சிறுவர்களின் திறமையைப் பார்த்து, அவர்களுக்கு, சரியான பயிற்சி கிடைத்தால், பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று நினைக்கும் ஆண்டனி, முன்னாள் இந்திய கால்பந்து நட்சத்திரமான ஐ.எம். விஜயனை அணுகுகிறார்.

அதன் பிறகு விஜயன் அவர்களுக்கு கால்பந்தின் நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கிறார். சிறுவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு செல்கிறார்கள். அவர்கள்”சென்னைராக்கர்ஸ் என்ற அணியுடன், இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றினார்களா? என்பதே மீதிக்கதை……

மொத்தத்தில் இந்த படம் ஒரு வெற்றி பட்டியல் இடம் பிடிக்கும் படமாக வந்துள்ளது.

☘️இந்த படத்தை நிகில் பிரேம்ராஜ் இயக்கியுள்ளார் இரண்டு மணி நேரம் ஓடும் திரைப்படம் குழந்தைகளின் கனவை அவர்களின் எதிர்காலம், விளையாட்டு துறையில் அவர்கள் சாதிக்க துடிப்பது, என்று இயக்குனர் ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார்.

புட்பால் சம்பந்தமான ஸ்போர்ட்ஸ் டிராமா வாக மட்டும் அல்லாமல், திரைப்படத்தில், கால்பந்து விளையாட வேண்டும் என தீராத ஆர்வம் கொண்ட
உமர்” என்ற ஒன்பது வயது சிறுவனின் கனவை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

12 வயதிற்கு உட்பட்ட சிறார்கள், உள்ளூரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின்போது மைதானத்தில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில்
சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

திறமையாக விளையாடும் ஆண்டனி வர்கீஸை, ராவுத்தர் தன்னுடைய வீட்டில் நுழைந்ததற்காக தள்ளி வைப்பது ஒரு மென்மையான சோகம். கிளைமாக்ஸ் காட்சியில் அந்த காதல் ஜோடியை இணைத்து மக்கள் மனதில் சந்தோஷத்தை கொடுக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சியில் சென்னை ராக்கர்ஸ் அணிக்கும்செவன் ஸ்டார் பாய்ஸ் ஆத்தங்கரை ,அணி க்கும், நடக்கும் அந்த பந்தயம் எதார்த்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளத. தன்னம்பிக்கை, விளையாட்டு மீது சின்ன வயதில் இருந்தே கனவு காணுங்கள். என்று சொல்லி ,ஒரு ஆத்தங்கரை கிராமத்தை ,கண் முன்னே நிறுத்தி இருக்கிறார். இயக்குனர் வாழ்த்துக்கள்.

☘️ஆண்டனி வர்கீஸ் (Antony Varghese) முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் படத்தின் மையமே அந்த ஏழு சிறுவர்களின் கால்பந்து அணிதான். அவர்கள் வெறும் கதாபாத்திரங்களாக இல்லாமல், கால்பந்தின் மீது இருக்கும் குழந்தைகளின் ஆர்வம், நட்பு, போட்டி உணர்வு, வெற்றி பெற வேண்டும் என்ற கனவு ஆகியவற்றை பிரதிபலிக்கிறார்கள். இவர்களுக்கு நாயகன் உதவி செய்வது படத்திற்கு பெரிய பலம்.

ராவுத்தர் மகன் அகமது விடம், நான் என்றாவது ஒருநாள் உங்கள் வீட்டு சொத்தை களவாடி செல்வேன்” என்று சவால் விடுவது, அப்போது காருக்குள் அமர்ந்திருக்கும் ரஹினா பார்வையால் நாயகனை பார்ப்பது போன்று இளமை தரும் காட்சிகள் படத்திற்குள் இதமாக இருக்கிறது.

இவருடன் பாலு வர்கீஸ், லுக்மேன் மற்றும் இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஐ.எம். விஜயன் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது மற்றும் லுக்மான் அவறான் நிஷாந்த் சாகர், டி.ஜி. ரவி, சாய்ஜு குருப்
ஜுமனா கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

☘️புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். மூன்று பாடல்கள் முத்தாக இருக்கிறது. பின்னணி இசை உயிரோட்டமாக இருக்கிறது.

.
🎬 தொழில்நுட்பக் கலைஞர்கள்
இயக்கம்: நிகில் பிரேம்ராஜ்
ஒளிப்பதிவு: ஃபயஸ் சித்திக்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங்: நௌஃபல் அப்துல்லா / ஜித் ஜோஷி
சவுண்ட் டிசைன்: கே.சி. சித்தார்தன், சங்கரன் ஏ.எஸ்.
சவுண்ட் மிக்சிங்: விஷ்ணு சுஜாதன்
கலை இயக்கம்: ஜெயன் கிரேயான்
காஸ்டிங்: அபு வலயங்குளம்
ஆடை வடிவமைப்பு: அருண் மனோகர்.

☘️மொத்தத்தில் இந்த படம் சிறுவர்கள் செய்யும் சேட்டைகள் தான் படத்தின் மிகப் பெரிய பலம். இயக்குநர் கிராமத்து விளையாட்டு மைதானத்தின் நாட்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த உலகத்தை உருவாக்கி இருக்கிறார். குழந்தைகள் பெரியவர்கள் போல பேசாமல் உண்மையான குழந்தைகள் போலவே பேசவும் நடக்கவும் வேண்டும் என்று நடிக்க வைத்திருக்கிறார்

உமர், அஸ்கர் அண்ணன் தம்பி குழந்தைகளின் சின்னச் சின்ன போட்டிகள் எதார்த்தமாக பதிவு செய்துள்ளார்.அவர்கள் வாழ்க்கையில் செய்யும் குறும்புகள், மற்ற மாணவர்களுடன் ஏற்படும் சண்டைகள் எல்லாமே குழந்தைகளின் இயல்பான உலகத்தை காட்டுகின்றன. குழந்தைகளுக்குள் வரும் பொறாமை + போட்டி + ஈகோ என்று படம் அழகாக காட்டுகிறது.

☘️உமரின் மெஸ்ஸி கனவு: அதைஎண்ணி கனவுப் காண்பது அதை பார்த்த மற்ற மாணவர்களும் தங்களுடைய எதிர்காலக் கனவுகளை பெயருடன் இணைத்துக்கொள்வது மிகவும் அழகான காட்சி.

⭐ இயக்குனர் சிறப்பு என்ன?

பொதுவாக சினிமாவில் குழந்தைகள் பெரியவர்கள் மாதிரி வசனம் பேசுவார்கள். ஆனால் ‘இந்த படத்தில் அதைத் தவிர்த்து, குழந்தைகளின் பொறாமை, பிடிவாதம், சண்டை, நண்பர்கள் மீதான பாசம், ஜாலியான குறும்பு, உடனடி கோபம் ஆகியவற்றை இயல்பாகக் காட்ட முயன்றுள்ளார் இயக்குனர்.

அதனால்தான் இந்த’ படத்தில் சிறுவர்கள் நடிக்கவில்லை; அவர்கள் உண்மையிலேயே வாழ்ந்தார்கள் போலத் தெரிகிறது என்பதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு . ❤️

☘️தமிழ் வெளியீடு: பீனிக்ஸ் ஸ்டுடியோஸ் (Phoenix Studios) சார்பில் தயாரிப்பாளர் டி. அசோக் இப்படத்தைத் தமிழில் வெளியிடுகிறார்.

☘️மக்கள் தொடர்பாளர் வேலு அவர்கள்.

வெற்றி பட்டியலில் “செவன் ஸ்டார் பாய்ஸ் “☘️