4 இடியட்ஸ் -திரைவிமர்சனம்

💥கதை களம்

கொரோனா காலத்தில் வருமானம் பாதிக்கப்பட்ட நான்கு நண்பர்கள், கடற்கரை ஓர பங்களாவில் பணம் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு செல்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்த இடம் ஆபத்தான ஒரு சதியில் சிக்கியிருப்பது தெரியவருகிறது. அதன்பிறகு நடக்கும் தப்பிக்கும் போராட்டம்தான் படம்…

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை, என்றாலும் அடுத்தது என்ன? என்பதை யாரும் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பொழுதுபோக்குடன் மெசேஜும் படத்தில் இருக்கிறது.

முதல் பாதி:

படம் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக நகர்கிறது. நான்கு நண்பர்களின் நிலை, பங்களாவுக்குச் செல்லும் சூழல், அங்கு இருக்கும் மர்மம் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது

இரண்டாம் பாதி:

இங்குதான் படத்தின் முக்கியமான திருப்பங்கள் வருகின்றன.

💥நடிகர்& நடிகைகள் .

புகழ், கிங் என்ற வேடத்தில் கலக்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் ,அவர் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அவர் போடும் திட்டங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறதுபிரக்யா நயன்,

போலீஸ் அதிகாரி என்று சொல்லிக்கொண்டு அந்த வீட்டுக்குள் வந்து நால்வரையும் காப்பாற்ற நினைக்கிறார். கிளைமாக்ஸ்சில் இவர் கதாபாத்திரம் டுவிஸ்ட் வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

ரவி மரியா, வின்சென்ட் அசோகன்,சொல்வதைக் கேட்டு புலி “என்ற கதாபாத்திரத்தில் அந்த வீட்டுக்குள் அதகலம் செய்கிறார். நண்பர்கள் நால்வர் அந்த வீட்டுக்கு வந்து, அந்த பணத்தை திருட நினைக்கும் பொழுது” ரவி மரியா” அவர்களுக்கு வேறு ஒரு செக், வைத்து காய் நகர்த்துகிறார். அவர் ஆடும் ஆட்டமும், போட்டு இருக்கும் கெட்டப்பும், நடிப்பும் அசத்தல் ரகம். நிறைய படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது. இந்த படத்தில் நடிப்பின் உச்சத்தை தொட்டுஇருக்கிறார் ரவி மரியா சூப்பர் சூப்பர்!!

வின்சென்ட் அசோகன் மருத்துவராக வந்து அந்த பங்களாக்குள் சிக்கும் நபர்களின் உடல் உறுப்புகளை திருடும் கொடூர வில்லனாக கலக்கியிருக்கிறார்.மற்றும்இப்படத்தில் நடிப்பில் கலக்கிய
‘கும்கி’ அஸ்வின்

திடியன், இந்திரன், உள்ளிட்ட பலரும் அற்புதமாக நடித்துள்ளனர்.

💥தொழில் நுட்ப கலைஞர்கள்

யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை, என்றாலும் கேமரா கோணம், மற்றும் லைட்டிங்ஸ், எல்லாம் கச்சிதமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

💥இந்தப்படத்துக்கு சுபாஷ் முனி ரத்தினம் இசையமைத்துள்ளார்.
பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

☘️அன்பே சிவம், புதுப்பேட்டை, கோகுலத்தில் சீதை, உன்னை நினைத்து உள்பட பல படங்களைத் தயாரித்த லக் ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், அதன் நிறுவனர்கள் கே.முரளிதரன், சுவாமி நாதன் ஆகியோர் மறைவுக்குப்பின் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது

தற்போது கே. முரளிதரனின் மகன்களான எம். கோகுல் கிருஷ்ணன், டாக்டர்  வத்ஸன் இணைந்து தயாரித்துள்ளனர்.

நிச்சயம் இவர்களுக்கு இது ஒரு வெற்றி படமாக அமையும்.

☘️புதுமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கி இருக்கிறார் இவர், “இயக்குநர் ஹரி, பிரகாஷ் ராஜ் இயக்கிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார் .அந்த அனுபவம் இந்த படத்திற்கு நன்றாக கை கொடுத்திருக்கிறது.

இவருக்கு இதுமுதல் படம். டார்க் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறோம் என நினைத்து முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் 4 பேரின் கதையை எந்த ஒரு இடத்திலும் படம் விறுவிறுப்பு குறையாமல் படத்தை இயக்கி இருக்கிறார்..
இப்படம். பார்வையாளர்கள் கவலையை மறந்து ரசிக்கும்படி இயக்கிஇருக்கிறார். நான்கு பேரும் அந்த வீட்டுக்குள் இருந்து எப்படி தப்பிப்பது, என்று பிளான் போட ரவி மரியா ,அதை முறியடிக்க ,ஒரே கலகலப்பாக படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

☘️ எஸ். என். ஃபாசில் காட்சிகளைத் தொகுத்து, படத்தொகுப்பில் படத்தின் ஓட்டத்தை சிறப்பாக செய்திருக்கிறார்

🎨 மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள்

☘️கலை இயக்கம்: எம். டி. பிரபாகரன்
சண்டைப் பயிற்சி: ஸ்பியர் சதீஷ்
நடன அமைப்பு: சாய் பாரதி
ஆடை வடிவமைப்பு: ஷெர் அலி
பாடல் வரிகள்: கலைகுமார், திவ்யபாரத் ரவி
இவர்களின் பணிகள் படத்தின் காட்சியமைப்பு, சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகுத்து படத்தை சிறப்பாக கொண்டு செல்ல உதவி இருக்கிறார்கள்.

☘️மக்கள் தொடர்பாளர்

டைமண்ட் பாபு அவர்கள். படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள் .

மொத்தத்தில் இந்த படம் இரண்டு மணி நேரம் கலகலப்பு குறையாமல், நகைச்சுவையாக, திரில்லர், ஜானரில்
இயக்குனர் கொண்டு சென்று ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள்☘️