🔥கதைக்களம்
ஜி.வி. பிரகாஷ் மஹி என்ற இளைஞராக நடித்திருக்கிறார். அவரது மாமாவாக மாறன் மற்றும் நண்பராக கதிர் வருகிறார்கள்.
தங்குவதற்கு ஒரு அறை தேடும் அவருக்கு கயாடு லோஹர் சிந்து அறிமுகமாகிறார். இருவரும் ஒரே வீட்டில் தங்க ஆரம்பிக்க, மஹிக்கு சிந்துவின் மீது காதல் உருவாகிறது. ஆனால் அந்த வீட்டில் நடக்கும் சில விசித்திரமான சம்பவங்கள், சிந்துவைச் சுற்றியுள்ள மர்மங்கள் கதையை ஹாரர்–சூப்பர்நேச்சுரல் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன
ஒரு சாதாரண இளைஞனாக, (ஜி.வி.பிரகாஷ்), மர்மம் நிறைந்த பெண்ணாக (கயாடு லோஹர்)
இருவரும் நெருக்கமாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் .ஆனால், அவர்களது அந்த ஆசை ஒரு மிகப்பெரிய கனவாக மாறுகிறது. கயாடு ஒரு பயங்கரமான அமானுஷ்ய சக்தியாலும், விசித்திரமான மிருகமாக மாற, அதிலிருந்துமஹி எப்படி தப்பிக்கிறான், அதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன? என்பதே படத்தின் விறுவிறுப்பான கதை.
👍 படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள் புதுமையான ஜானர்: தமிழ் சினிமாவில் அரிதாக வரும் வேம்பயர் மற்றும் ஹாரர் க்ரியேச்சர் (Vampire / Creature Horror) பாணியை கையில் எடுத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
☘️நடிகர் & நடிகைகள்
⭐ ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்தில் வழக்கமான காமெடி கலந்த இளைஞர் கதாபாத்திரத்தை விட பயம், குழப்பம், காதல், பதற்றம் ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கிறார். குறிப்பாக மர்மம் அதிகரிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பு படத்திற்கு துணை நிற்கிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் விசித்திரமான அந்த மிருகத்துடன் சண்டை போடுவது ரோப் கட்டி, மேலே பறப்பது, இப்படி நிறைய உடல் உழைப்பை கொடுத்திருக்கிறார் .அவருக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும்
👩 கயாடு லோஹர்
படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று கயாடு லோஹரின் சிந்து கதாபாத்திரம். ஆரம்பத்தில் காதல் நாயகியாகத் தெரிந்தாலும், கதையின் மர்மம் அதிகரிக்கும்போது அவரது கதாபாத்திரம் வேறு பரிமாணங்களில்
வருகிறார்.
காதல் காட்சிகளில் அழகாகவும் மற்றும் மர்மம் நிறைந்த பெண்ணாக மிரட்டுகிறார்.
☘️தொழில்நுட்பக் குழு:
🎵 சாம் சி.எஸ். இசையில் மிரட்டி இருக்கிறார்.
,ஹாரர் படத்திற்கு பின்னணி இசை ரொம்ப முக்கியம். அந்த வகையில் சாம் சி.எஸ். இசை படத்தின் பதற்றமான சூழலுக்கு நல்ல பலம். பாடல்களிலும் குறிப்பாக She Is My பாடலில்.
பின்னணி இசை படத்தின் த்ரில்லர் மற்றும் ஹாரர் உணர்வை நச்சென்று கடத்துகிறது.
📷 ஒளிப்பதிவு & தொழில்நுட்பம் அருண் ராதாகிருஷ்ணன் , மிரட்டி இருக்கிறார்.
அழகான பங்களாக்குள் ஒரு குகை ஆரம்பக் காட்சிகளில் வரும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நடக்கும் காட்சி இரவு நேர காட்சி என கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது.
🤞 படத்தொகுப்பு சான் லோகேஷ் படத்தின் மர்மமான சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். ஒரே வீட்டை மையமாகக் கொண்ட காட்சிகளிலும் சஸ்பென்ஸை தக்கவைத்திருப்பது சவாலான விஷயம்.
அருமையாக படத்தொகுப்பு செய்து இருக்கிறார்.
👑கதை, இயக்கம்: மரியப்பன் சின்னா விறுவிறுப்பான திரைக்கதை: த்ரில்லர் படத்திற்குரிய வேகம் காட்சிகள் சீரமைப்பு காதல், எமோஷனல், என கதையின் மையக்கரு புதுசாக இருக்கிறது, சில ஹாரர் மற்றும் காதல் காட்சிகள் தமிழ் சினிமாவில் புதிது ஹாலிவுட் பாணி காட்டேரி (Vampire) மற்றும் அமானுஷ்ய த்ரில்லர் படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார்
படத்தின் முதல் பாதியில் ,காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுடன் தொடங்கி, அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்கள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள்.
☘️தயாரிப்பாளர்: அருண்குமார் தனசேகரன் தயாரிப்பு நிறுவனம்: AK Film Factory
ஒரு நல்ல படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் வாழ்த்துக்கள்.
☘️கலை இயக்கம்: சிவசங்கர்
ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த ஆதி மனிதர்கள், மற்றும் கையாடு வாழும் அந்த ரிச்சான மாளிகை அங்கு குவிந்து கிடக்கும் பிணங்கள். ஜிவி திறந்து பார்க்கும் குகை, என்று ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறது.
💥ஆர். சக்தி சரவணன்
அமைத்திருக்கும் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது கிளைமாக்ஸ் சண்டை காட்சி அனல் தெரிக்கிறது
☘️ஹாலிவுட் தர சிஜி (CG & VFX): படத்தில் வரும் கிராபிக்ஸ் மற்றும் சிஜி காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் மிக நேர்த்தியாக வடிவமைத்த இருக்கிறார் மஹி.
💥நடன அமைப்பு: சபரீஷ
DI / Colour Grading: Get In Dream Studio – ஸ்ரீராம்
பப்ளிசிட்டி டிசைன்: கோபி பிரசன்னா
ஆடை வடிவமைப்பு: வினோத் சுந்தர், தமிழ்செல்வன் U
Costumer: ரவி தேவராஜ்
மேக்கப்: பி. மரியப்பன்
ஸ்டில்ஸ்: இ. ராஜேந்திரன்
PRO: AIM சதீஷ்,சிவா
☘️மொத்தத்தில்
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் CGI மற்றும் VFX காட்சி கள். இயக்குநர் மரியப்பன் சின்னா, படத்தின் விஷுவல் கான்செப்ட்டுக்காக படப்பிடிப்புக்கு முன்பே நீண்ட காலம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டதாகவும், வெளிநாட்டில் ஸ்டுடியோவில் சுமார் 7 மாதங்கள் visual model உருவாக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்
அது படம் பார்க்கும் பொழுது நன்றாக தெரிகிறது அவரின் உழைப்பு.
படத்தை உருவாக்க ஒரு வருடம் படப்பிடிப்புக்கும், ஒரு வருடம் CG பணிகளுக்கும் செலவானதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கமான தமிழ் ஹாரர் படத்தை விட விஷுவல் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிகிறது
☘️ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் கூட இது ஒரு பரிசோதனை முயற்சி என்றும், கடினமான லொகேஷன்களிலும் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியதாகவும் தெரிவித்து இருந்தார்.
☘️மொத்தத்தில் இந்த படம் ஒரு திரில்லர் பேண்டஸி படமாக வந்துள்ளது வெற்றி படமாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள்🙏
