❤️கதைக்களம்:
தனிமை, வலி மற்றும் உணர்வுபூர்வமான சூழலில் மாட்டும் இளைஞன்
கார்த்தி, தன் அப்பாவின் அன்பு கிடைக்காததால் அம்மா, சின்ன வயதில் இறந்து விட்டதால், குடிக்கு அடிமையாகிறான்.
கொல்கத்தாவிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் மது என்ற பெண்ணும், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் பணக்கார இளைஞன் கார்த்திக்கும் ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பு அவர்களின் வாழ்க்கையிலும் மனதிலும் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் கதையின் மையம்i
இப்படத்தின் மிகப்பெரிய பலம் காதலை அணுகும் விதம். காதல் என்றாலே பாடல், சண்டை, காமெடி என்று செல்லாமல், இரண்டு மனிதர்களுக்குள் உருவாகும் உணர்வுகள், குழப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கிறது
வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மாற்றங்களைச் சொல்லும் ஒரு இன்டென்ஸ் ரொமான்டிக் (Intense Romantic) டிராமா இதுவாகும். இது வழக்கமான காதல் படமாக இல்லாமல், உணர்வுகளுக்கும் மதுமிதா, என்கிற ஒரு பெண் அவளது குழந்தை ஸ்ரேயா. அவள் மீது காதலை வளர்க்கும் நாயகன் என சீராக செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.
.
⭐ மதுமிதா தாஸ் மதுமிதா தாஸுக்கு இது அறிமுகப் படம். அதிகம் பேசப்படாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் குறிப்பாக கதாபாத்திரத்தின் பெங்காலி பின்னணி படத்தில் முக்கியமான அம்சமாக இருக்கிறது.
அதனால், இந்தப் படத்தில் கதாநாயகியின் நடிப்பு வெறும் காதல் காட்சிகளுக்கானதாக இல்லாமல், கதையின் உணர்ச்சியை தாங்கிச் செல்ல வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கிறார் .
🎭 டி. ஆண்டனி இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு மட்டுமின்றி கதாநாயகனாகவும் டி. ஆண்டனி அறிமுகமாகிறார். மேலும், அவர் இயக்கிய குறும்படத்தை விரிவுபடுத்தி முழுநீளப் படமாக உருவாக்கியுள்ளார் என்பது சுவாரஸ்யமான விஷயம்.
புதுமுக இயக்குநர் என்பதால் சில இடங்களில் அனுபவக் குறைபாடு தெரிந்தாலும், ஒரு தனிப்பட்ட காதல் கதையைச் சொல்ல வேண்டும் என்ற முயற்சி பாராட்டுக்குரியது
இளைஞர்கள் குடிக்கு அடிமை ஆவது பற்றியும்,
தவறான பெண்ணாக இருந்தாலும் தன் மனதை கவர்ந்தால் அவளை வாழ்நாள் முழுவதும் வைத்து காப்பாற்றலாம் என்ற லட்சியத்துடனும் அவளுக்கு பிறந்த குழந்தையை தன் குழந்தையாக இருப்பது, என்று பல புரட்சிகரமான கருத்துக்களை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்.
அமைதியான ஆழமான நடிப்பு, படம் பார்ப்பவர்களை அவரின் உலகத்துக்குள் அழைத்து செல்கிறது.
கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, தயாரிப்பு – டி. ஆண்டனி
ஒரே படத்தில் இந்தப் பொறுப்புகளை ஏற்றிருப்பதுடன், கதாநாயகனாகவும் அறிமுகமாகி
கிளைமாக்ஸ் காட்சியில் அழ வைத்து விடுகிறார் வெல்டன் .
மற்றும் இந்த கதை மில் வரும் ஸ்ரீனி, சதீஷ், வித்யா, ரேகா, ஸ்ரேயா, மற்றும் நாயகனின் தந்தையாக வரும் ஜீவா ரவி இவர்கள் அனைவர் கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
நண்பர்களுக்குள் தேவையில்லாத காமெடி பகையை ஏற்படுத்தும் என்று இயக்குனர் உணர்த்தி இருக்கிறார்.
அதேசமயம் தன்னை உயிருக்குயிராக நேசிக்கும் ஒரு பெண்ணிடம் அவளின் கடந்த காலத்தை பற்றி பேசக்கூடாது என்பதையும் இந்த படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்.
.
🎵 இசை & தொழில்நுட்பம்
அசோக் ஸ்ரீதரன், ஜெய்கார் ஹரிநாத் ஆகியோர் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்; ஜோயி ரிடா பின்னணி இசையை கவனித்துள்ளார்.
☘️ பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடற்கரை காட்சிகள் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகள் இன்று காட்சிகளை பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
☘️கார்த்திக் நேத்தா, தமிழ்மணி பாடல்களை எழுதியுள்ளனர்.
குறிப்பாக படத்தின் தலைப்பே பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வழங்கியது. இயக்குநர் டி. ஆண்டனி, அந்தத் தலைப்பின் முதல் வரியிலேயே ஒரு “மேஜிக்” கிடைத்ததாக தெரிவித்துள்ளார்
பாடல் வரிகள் மனதை தொடும் வகையில் அமைந்திருக்கிறது
☘️பின்னணி இசை – ஜோயி ரிடா
படத்தின் உணர்வுகளை பின்னணி இசை வழியாக வலுப்படுத்தும் பொறுப்பு இவருடையது.
☘️ஒலிப்பதிவு (Sound Recording) – ஜெய்கார் ஹரிநாத்
சவுண்ட் மிக்சிங் – ஆனந்த் ராமச்சந்திரன்.
☘️கலை இயக்கம் (Art Direction) – கே.கே. சுரேந்தரன்
குறிப்பாக கதாபாத்திரங்களின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் வகையில் வீடுகள், அறைகள் உள்ளிட்ட செட்களை வடிவமைத்து இருக்கிறார்
☘️நிர்வாகத் தயாரிப்பாளர்கள் – ஹரிஹரன் & சந்தோஷ்.
🎧 ஒரு சுவாரஸ்யமான தொழில்நுட்ப விஷயம் பாஸ்!
இந்தப் படத்தின் மிக முக்கியமான தனிச்சிறப்புகளில் ஒன்று முழுப் படமும் லைவ் சவுண்ட் முறையில் உருவாக்கப்பட்டிருப்பது அதனால் நடிகர்களின் உரையாடல்கள் மற்றும் காட்சிகளின் இயல்பான ஒலி, பார்வையாளர்களை கதாபாத்திரங்களுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டு செல்கிறது
“⚡ஏன் என்னை ஏதோ செய்தாய்” என்பது பிரம்மாண்டமான காதல் படமாக இல்லாமல், மனிதர்களின் உணர்வுகளையும் உறவுகளையும் நெருக்கமாகப் பேச முயற்சிக்கும் படம். புதுமுகங்கள் என்பதால் மிகப்பெரிய நட்சத்திர ஈர்ப்பு இல்லாவிட்டாலும், வித்தியாசமான காதல் கதைகளை விரும்புபவர்களுக்கு படம் ஒரு நல்ல அனுபவமாக அமையும்.
⭐ படத்தின்
பிளஸ்:
கதையின் உணர்வுப்பூர்வமான அணுகுமுறை, மதுமிதா தாஸின் வித்தியாசமான கதாபாத்திரம், இசை, ஒளிப்பதிவு.
மைனஸ்: புதுமுகக் குழுவின் காரணமாக திரைக்கதையின் வேகம்
ஒரு வரியில்: “காதல் ஏன் வந்தது என்று புரியாமல் தவிக்கும் இரு மனங்களின் பயணம்தான் — ஏன் என்னை ஏதோ செய்தாய்!” ❤️
இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கிய, தப்பு தாளங்கள். இயக்குனர் ருத்திரையா இயக்கிய, அவள் அப்படித்தான்” படங்களின் வரிசையில் “ஏன் என்னை ஏதோ செய்தாய் “படமும் சேரும். படம் நின்று பேசும் .வென்று காட்டும்.🤞☘️
