பாய்மரப் படகுப் பந்தய கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்ஷன் டிராமா ‘மண்டாடி இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள்.
🔥கதை களம்
சூரி சென்னையில் ஒரு தீம் பார்க்கில் வேலை பார்த்து வருகிறார். 20 வருடங்களாக அவரின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரவில்லை காரணம் என்ன?
படகு போட்டி சண்டையால் சாட்டைபுலி(சுஹாஸ்) மகனை, மாரி என்பவர் கொல்ல முயற்சிக்கிறார். இதனால் மாரியை கொல்ல சாட்டைபுலி துணிய, மாரியை சூரியிடம் தஞ்சம் போக அங்குதான் படம் அடுத்த கட்டத்திற்கு பாய்ச்சலாக பாய்கிறது.
பல வருடம் கழித்து தன் ஊருக்கு வந்த சூரிக்கு மாரி, தன் முன்னாள் காதலி மகன் என்பதை தெரிந்து மாரி உயிருக்கு எந்த ஆபத்தும் வரகூடாது என பஞ்சாயத்து பேசுகிறார்.
அப்போது சாட்டைபுலி அப்படியென்றால் நம்ம இரண்டு வகையறாவும் படகு போட்டி வைத்துகொள்வோம், அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, தோற்றவர்கள் இனி போட்டியில் இறங்ககூடாது
கண்டிஷன் போடுகிறார். சூரிக்கும், சாட்டைபுலிக்கும் என்ன பிரச்சனை? ஏன் இவ்வளவு கோபத்துடன் ஒருவர் மீது ஒருவர் இருக்கிறார்!! என்பதுடன் , நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ மக்கள் மற்றும் அவர்களின் பாரம்பரிய கடலோரப் படகுப் போட்டிகளை (Sea Boat Racing) மையமாகக் கொண்டு , இப்படம் இதுவரை பெரிதும் திரையில் பதிவு செய்யப்படாத ஒரு விளையாட்டு உலகத்தை இப்படம் விழிகளை விரியச் செய்கிறது.
கடலோரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், நாயகன் விடாமுயற்சி, மன உறுதி, போட்டி மற்றும் கடலோடு தனது வாழ்க்கையைப் பின்னிப் பிணைத்துக் கொண்ட சூரியின் தளராத போராட்ட குணம் ஆகியவற்றைக் காட்டுகிறது
விளையாட்டு, ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் உறவுகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையுடன் ஆழமாகப் பயணிக்கிறது. கதையிலும் காட்சியமைப்பிலும் கடல் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான மற்றும் ஆழமான உணர்வு ஏற்படுகிறது:
கடலோடிகளின் வாழ்வியல்களில் ஒன்றான பாய்மரப்படகுப் பந்தயம் என்பது வெறும் கடலுக்குச் சென்று வரும் சாதாரண விளையாட்டு அல்ல; மாறாக, காற்றையும் நீரின் திசையையும் துல்லியமாக உணர்ந்து இயற்கையுடனான அறிவை வளர்ப்பது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்ல அதனைச் சுற்றி கதாபாத்திரங்களை எழுதியிருக்கிறார்.இயக்குனர். சூரி ஊருக்குள் வந்ததும் கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. சூரி – சுஹாஸ் இடையே புகைந்துகொண்டிருக்கிற பகை , இடைவேளை சண்டைக்காட்சி , இடைவேளைக்குப் பின் பிளாஷ்பேக், சூரியும் சுஹாஸும் ஏன் எதிரிகளாகின்றனர் . கூடுதல் காட்சிகளால் கிளைமேக்ஸ் படகுப்போட்டியின் மீதான அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் .
கடைசி 20 நிமிடம் சீட்டு நுனிக்கு கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர்.
யானை சூழியில் இருந்து சூரியும் அவரது டீம் மேலே வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.
☘️சூரி
மாறிய உடலமைப்பு, கம்பீரமான திரைத் தோற்றம் மற்றும் ஆற்றல்மிக்க நடிப்பு ஆகியவை ஏற்கனவே சூரிக்கு முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரம் ‘விடுதலை’, ‘கருடன்’ போன்ற படங்களுக்குப் பிறகு சூரி தேர்ந்தெடுத்துள்ள இன்னொரு வித்தியாசமான கதைக்களம் இது. கடலோர மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமாவ மீனவர்களின் வாழ்க்கையோடு போட்டி, கிராமத்து பகை, உறவுகள், உணர்ச்சிகள் என பல அடுக்குகளோடு சூரியின் காதல், தோல்வி படம் முழுக்க மெல்லிய சோகத்தோடு கனத்த இதயத்தோடு, அவர் வரும் காட்சிகள் மனதை தொடுகிறது.
தவறே செய்யாமல் தன் காதலியை பிரிந்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில், காதலியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் பொழுது, சூரி கதாபாத்திரம் இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கிறது, சத்யராஜ் கொலை செய்யப்பட்டார் என்றவுடன் நண்பனாக இருந்தாலும் அவனை வெட்டி சாய்க்க கொதித்து எழும் காட்சிகளில் சிறப்பாக நடித்தி ருக்கிறார்.
ஆக்சன் காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அனல் தெறிக்க சண்டை போட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் சூரி இந்த படத்தின் மூலம் டாப் 10 நடிகர்களில் ஒருவராக உயர்ந்து இருக்கிறார் என்பது உண்மை.
❤️மகிமா நம்பியார்,
கதையின் நாயகியாக, அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மகனிடம் எஏன் அம்மா காதல் செய்யக்கூடாதா? என்று கேட்கும் பொழுதும்.
சூரியை வெறுக்கும் பொழுதும் ,படகு பந்தயத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சூரி சொன்னதும் மகிமா சொல்லும் அந்த காட்சி, என பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
💥சத்யராஜ், முனி என்ற கதாபாத்திரத்தில் சூரியின் குருவாக மகிமாவின் அப்பாவாக, கம்பீரமான இளகியமனது படைத்த ,நல்ல கதாபாத்திரம் அவர் வரும் காட்சிகள் அவ்வளவு இதமாக இருக்கிறது.
🔥சுஹாஸ்
சாட்டை புலி,என்ற கதாபாத்திரத்தில் சூரி நண்பனாக வரும் பொழுது அவரை விட்டுக் கொடுக்காமலும், தன் மகனுக்காக மாரியை கொலை செய்ய துடிப்பதும், சூரியை கடலில் எதிர்கொள்ளும் போட்டியிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
🔥மிதுன் ஜெய் சங்கர்,
மாரி என்ற கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ரவீந்தர் விஜய் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் மகிமாவின் கணவராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பால சரவணன் கத்தார் ரவி என்ற கதாபாத்திரத்தில் இவர் வரும் இடங்களில் கலகலப்பை ஏற்படுத்துகிறார் காமெடிக்கு கேரண்டி
ஸ்டண்ட் சிவா வில்லன் அப்பாவாக வந்து கதையின் திருப்பத்தை ஏற்படுத்துகிறார் இவர் முதுகு தண்டு பாதித்து வீல்சேரில், உட்கார்ந்து கொண்டே கண்களால் மிரட்டி இருக்கிறார்.
மற்றும் தீக்கொழுத்தி என்ற கதாபாத்திரத்தில் ராம் சூரியின் நண்பனாக வருகிறார்.
பத்மன் ,வில்லனின் மச்சானாக ஞானம் என்ற கதாபாத்திரத்தில், சூது மனம் படைத்தவராக சகுனியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .
மற்றும் ஆடுகளம் முருகதாஸ்,
கிருத்திகா, பாகம் பிரியாள்என்ற கதாபாத்திரத்தில்
வில்லனின் மகனாக க்ரிஷ் ஹாசன் கிட்டான் என்ற கதாபாத்திரத்தில், ஆக்ரோசமாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரேகா குமணன் வில்லனின் மனைவியாக ,படம் முழுக்க ஒரு குடும்பத் தலைவியாக நடித்திருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்.
☘️இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
காதல் மெலடியான “உசுரே நீதான் புள்ள” ஆகிய பாடல்களிளும் பின்னணி இசையிலும் ராஜாங்கம் நடத்தி இருக்கிறார் படகு பந்தயம் போட்டியின் போது வரும் பாடல் காட்சிகளிலும் வீரம் தெரிக்கிறது.
பாடல்களை பா. விஜய், ஜெயஸ்ரீ
மதிமாறன்,
வகீசன்ராசய்யா,
எழுதி இருக்கிறார்
பாடல் வரிகள் படத்திற்கு பொருத்தமான வரிகள்.
☘️எடிட்டிங்: பிரதீப் ஈ. ராகவ்,
பந்தய போட்டி காட்சிகளை சிறப்பாக படத்தொகுப்பு செய்திருக்கிறோம் எந்த இடத்திலும் படம் இருவருக்கும் குறையாமல் செல்வதற்கு படத்தொகுப்பாளரின் பங்கு மகத்தானது.
☘️ஒளிப்பதிவாளர்
எஸ் .ஆர் .கதிர்,
கடலில் ஒளிப்பதிவு செய்வது மிகவும் சவாலானதாக
ஒளிப்பதிவாளருக்கு இருந்திருக்கும் அவ்வளவு அற்புதமான ஒளிப்பதிவு . கடல் அலைகளின் ஆக்ரோசத்தையும், பந்தயத்தையும் சண்டை காட்சிகளில், நிஜமான ஒரு தத்ரூபத்தையும் ஒளிப்பதிவாளர் தன் கேமரா மூலம் விளையாடி இருக்கிறார்.
🔥இயக்கம்: மதிமாறன் புகழேந்தி,
முகவையில்
வாழும் இரண்டு நண்பர்கள். சூரியன் கள்ளம் இல்லாத காதல், கொலை செய்ய துடிக்கும் வில்லனின் குருர எண்ணம்.
சூரி தன் அம்மாவின் முன்னாள் காதலன் என்று தெரிந்த பிறகு மகன் காட்டும் ஆவேசம். என எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. இயக்குனர் காதலை இவ்வளவு மென்மையாக அற்புதமாக சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது. சோகப் பாட்டு இல்லை, காதலுக்காக மது அருந்திக்கொண்டு குத்துப்பாட்டு இல்லை. 20 வருடம் தன் காதலி நன்றாக வாழ வேண்டும் என்று சென்னை சென்ற சூரியின் அந்த அன்பு தான் படம் முழுக்க பேசுகிறது. இயக்குனர் படத்திற்காக நிறைய மெனக்கெட்டு கடற்கரையில் இருந்து பதிவு செய்திருக்கிறார். நிச்சயம் பாராட்டுக்குரியது.
கடலில் சுமார் 20 கி.மீ. தூரம் நடைபெறும் சவாலான படகு துரத்தல் காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. கடலில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் கடினமான பணியாக இருந்திருக்கும்
சூரியின் முற்றிலும் மாறிய உடலமைப்பு, உடன் காட்டி இருக்கிறார்.கம்பீரமான திரைத் தோற்றம் மற்றும் ஆற்றல்மிக்க நடிப்பு இயக்குனர் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார்.
பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்ட பின்னணி மற்றும்
கடல் அலைகளின் ஆக்ரோஷம் மனிதர்களின் வன்மம் காதல் பிரிவு என கச்சிதமாக படத்தை கையாண்டு இருக்கிறார் வாழ்த்துக்கள்.
🔥Stunt Directors: Peter Hein, Dhilip Subbarayan, Mahesh Mathew
படத்தில் மூன்று சண்டை காட்சிகள், மூன்றும் அனல் தெறிக்க படமாக்கி இருக்கிறார் சண்டை பயிற்சி சூப்பரா இருக்கிறது. படத்திற்கு மேலும் பலம்.
☘️Dialogue: Ameer Jamal Khan, Mathimaran Pugazhendhi
படத்தில் வசனம் முத்து முத்தாக இருக்கிறது ஒவ்வொரு வசனமும் படத்தை தாங்கிப் பிடிக்கிறது ரசிக்க வைக்கிறது.
🔥Additional Editor : A. Nishar Sharef
படத்தொகுப்பில் உதவி செய்து இருக்கிறார்.
இவருக்கும் வாழ்த்துக்கள்.
☘️Sound Design: Prathap K
சவுண்ட் டிசைன் மிகவும் நன்றாக இருக்கிறது
🔥VFX Head: R Harihara Suthan
படத்தின் பலம் வி. எப் .எக்ஸ் காட்சிகள் ,கடலில் யானைசுழி காட்சிகளை பிரமாதமாக்கியிருக்கிறார். வி. எஃப் எக்ஸ் ஹரிஹரசுதன்
💥Additional Writing: Elred Kumar, R Mohanavasanthan, Thiral Sankar
படத்திற்கு உதவி இருக்கிறது இவர்களது வசன உதவி வசனம்.
💥Costume Designer: Dinesh Manoharan
☘️Dance Choreographer
பண்டிகையில் மகிமா ஆடும் நடனமும் சூரியாடும் நடனமும் ரசிக்க வைக்கிறது.
💥IMAX அனுபவம்
இப்படம் இந்தியாவில் IMAX ஃபார்மேட்டில் வெளியாகிறது . கடல், படகு பந்தயம் போன்ற பிரம்மாண்ட காட்சிகளுக்கு இது கூடுதல் பலமாக இருக்கலாம்.
🔥மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க பட்டுளது
RS INFOTAINMENT PVT LTD
MANDAADI
Banner: RS INFOTAINMENT PVT LTD
Executive Producer: G Mahesh
Production Executive: S P Chokkalingam
☘️Stills: G Anand Kumar
☘️DI: Infinity Media
☘️Colorist: Srinath B
☘️Makeup: N Sakthivel
☘️Costumer: Nagu
☘️publicity Design: Aesthetic Kunjamma
☘️PRO: Rekha
படம் ஆரம்பத்தில் இருந்து படத்தை மக்களிடம் ,நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார். மக்களிடம் நன்றாக ரீச் ஆகி இருக்கிறது. மக்கள் தொடர்பாளருக்கு வாழ்த்துக்கள்.
☘️Direction Team: Odam Ilavarasu, Prabhakar, Thozhar Sathish, Dharani Guru, Mahins David Prince, Karthick Kannan V, Surya Gandhimathi
☘️Cinematography Team: SR Santhosh Kumar, Karthick, Raja C Sekar, Jalendiravasan, Prabu Selvaraj, Karthik V, Nirmal G, Neeraj G
☘️Editing Team: Ajith Kumar M, Kavimani, M.S. Anbu Mathi
☘️Art Team: GK. Jagan, S. Bavi Dharani, Vasuki Velmurugan, Gnanavel angamuthu
🔥Production Managers Team: Dindigul V Sivaraman, K Veeramani, Hariharan, Santhosh.
☘️Dubbing Engineer: Rashid J, Venkat C balaram
என , இத்தனை தொழில் கலைஞர்களுக்கும், அவர்களின் உழைப்புக்கும், இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறதுமண் மணம் மாறாத, ஒரு கடலோர காதலையும், மனிதர்களின் சூது, வஞ்சனை, போட்டி பொறாமையையும், இப்படம் சொன்னதில் “மண்டாடி வகையறா” தலை நிமிர்ந்து நிற்கிறது
படம் நின்று பேசும்.☘️ வென்று காட்டும்.❤️
