🎬 சர்தார் 2 – விமர்சனம்

மதிப்பீடு 4--/5

🥅கதை:

முதல் பாகத்தில் உருவான உளவு உலகத்தைத் தொடர்ந்து, புதிய சர்வதேச அச்சுறுத்தலைச் சுற்றி கதை நகர்கிறது. தந்தை–மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி மீண்டும் களமிறங்குகிறார். சமூகப் பிரச்சினையான ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பற்றிய கருத்தையும் கதை பேசுகிறது.

ரா. ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்கூடிய ‘Doku’ என்ற உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார் ‘Black Dagger’ (எஸ்.ஜே.சூர்யா). பல ஆண்டுகளுக்கு முன்பு இதே Doku தொடர்பான மிஷனில் சர்தார் செய்தது என்ன, அப்பா – மகன் இருவரும் வரவிருக்கும் புதிய பேராபத்தைத் தடுத்தார்களா என்பதே ‘சர்தார் 2’.

🥅முதல் பாகத்தைப் போலவே ஒரு சமூகப் பிரச்னையை ஸ்பை த்ரில்லர் கதைக்குள் கொண்டு வந்து வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இந்த முறை அவர் கையில் எடுத்திருப்பது ‘ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்’. தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அந்த மருந்துகளுக்கு எதிராகப் பாக்டீரியாக்கள் உருவாக்கிக்கொள்ளும் எதிர்ப்புத்தன்மை ஆகியவற்றைப் பற்றிப் படம் பேசுகிறது.

ஆனால் படம் முழுக்க இது மட்டும் பேசியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். உலகையே அச்சுறுத்தும் உயிரியல் ஆயுதம், சர்வதேச சதி, ரா உளவாளிகள் எனக் கதையின் ஆபத்து பெரிதாக இருந்தாலும், ஒரு ஸ்பை த்ரில்லருக்குத் தேவையான விறுவிறுப்பு, எதிர்பாராத ட்விஸ்ட்கள், ‘அடுத்து என்ன?’ என்று எதையும் பேசவில்லை.

கோழிக்கறி சாப்பிடுவதால் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்து போகிறது!! என்ற காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.

ஜப்பானிலிருந்து டோக்கோ வுக்கு மாற்று மருந்து கொண்டு வரும் காட்சிகள், விமானத்தில் போடும் சண்டை காட்சிகள், மெய் சிலிர்க்க வைக்கிறது.

எஸ் ஜே ,சூர்யா பேசும் கிளைமாக்ஸ் காட்சி வசனம் நீளமாக இருந்தாலும் தேவையான விழிப்புணர்வை யோகி பாபு உடன் சேர்ந்து கலந்து கட்டி பேசியிருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத வண்ணம் இயக்குனர் முடித்திருக்கிறார் நாட்டுக்காக நாயகன் செய்யும் தியாகம் மனதில் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது. திரைக்கதை இந்த சர்தாருக்கு நம்மைச் சலாம் போடவிட வைக்கிறது

ஹாலிவுட் லெவலில் மிரட்டும் விசுவல் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஹாலிவுட் படங்களில் பார்த்த பிரமிப்பு இந்த படங்களில் விசுவலாக மிரட்டுகிறது.

🥅கார்த்தி:
⭐⭐⭐⭐

படத்தின் மிகப்பெரிய பலம் குறிப்பாக மூத்த சர்தார் கதாபாத்திரத்தில் அவரது உடல்மொழியும், உணர்ச்சிகரமான நடிப்பும் பாராட்டைப் பெறுகின்றன. ஆக்‌ஷன் காட்சிகளிலும் நன்றாக ஸ்கோர் செய்கிறார்

ஒரே நேரத்தில் இரண்டு வேடங்கள் முதல் பாகத்தில் இருந்த சர்தார் மற்றும் விஜய் ஆகிய இரு கதாபாத்திரங்களையும் கார்த்தி மீண்டும் ஏற்றுள்ளார். முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இரு கதாபாத்திரங்களும் படத்தின் கணிசமான பகுதியில் ஒரே நேரத்தில் கதைக்குள் பயணிக்கின்றன. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இதை மிகப்பெரிய சவாலாக இயக்கி இருக்கிறார கார்த்தியின் மிகப்பெரிய ஸ்பெஷல் “டபுள் ஆக்ஷன்” மட்டுமல்ல; ஒரே நடிகர் இரண்டு வேறுபட்ட மனிதர்களாகத் தோன்றும் அந்த contrast-ஐ நம்ப வைப்பதுதான் நடிப்பில் இரண்டு விதமான உடல்மொழி

சர்தார் கதாபாத்திரத்திற்கு வயது, அனுபவம், உளவாளிக்குரிய அமைதி; விஜய்க்கு இளமை, வேகம், நகைச்சுவை கலந்த போலீஸ் பாணி என உடல்மொழியிலும் குரல் பாணியிலும் வித்தியாசம் காட்ட வேண்டியிருக்கிறார்..

ஆக்ஷன் காட்சிகள் முக்கிய பலம் 🔥
இரண்டு கார்த்தி கதாபாத்திரங்களும் இணைந்து சண்டையிடும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்துள்ளது குறிப்பாக, இரண்டு கதாபாத்திரங்களையும் ஒரே ஃப்ரேமில் நம்பகமாகக் காட்டுவது படத்தில் சிறப்பு
கார்த்தியின் நடிப்பு வெறும் ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல், கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்

SJ சூர்யாவுடன் மோதல் கார்த்தி vs. எஸ்.ஜே.சூர்யா என்ற நடிப்பு மோதல் படத்தின் மற்றொரு பெரிய எதிர்பார்ப்பு. கார்த்தி 2 வேடங்களிலும் வித்தியாசம் காட்டி பிரம்மாதப்படுத்தி இருக்கிறார், கார்த்தி, விஜய்பிரகாஷ் ஒரு பக்கம் நடிப்பில் இயல்பு காட்டினாலும் ‘சர்தார்’ பாத்திரத்தின் நடிப்பிலும் உடல் மொழியிலும் இதுவரை பார்க்காத கார்த்தி, பளிச்சென்று தெரிகிறார். அவருக்காக திலீப் சுப்பராயன் அமைத்திருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் ஜில்லிட வைக்கின்றன.

🥅 ! Black Dagger-ஆக வரும் எஸ்.ஜே.சூர்யா வரும் காட்சிகளில் மிரட்டுகிறார் அவரது வழக்கமான மிகை நடிப்பு ஒரு சலாம். வில்லன் வேடத்தில் மிரட்டி இருக்கிறார்.

🥅மாளவிகா மோகனன்:

திரையில் நல்ல இருப்பை வெளிப்படுத்துகிறார். அவருடைய கதாபாத்திரம் படத்திற்கு ஓரளவு வலு சேர்க்கிறது தனது கடந்தகாலக் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்கள். யோகி பாபு, நிழல்கள் ரவியின் காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. நாசர் நடிப்பு கச்சிதமாக இருந்தது.

🥅தொழில் நுட்ப கலைஞர்கள்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளையும், செட்களை அதன் பிரமாண்டம் குறையாமல் காட்சிப்படுத்தவும் உதவியிருக்கிறது. , VFX அதற்கு ஈடுகொடுக்க பல இடங்களில் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது குறிப்பாக AI மூலம் சேர்க்கப்பட்ட சில விஷயங்கள் ரொம்பவே அசத்தல்

!🥅 விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பு ஸ்டைலாக இருக்கிறது கத்திரியை இன்னும் இறுக்கமாகப் பற்றியிருக்கலாம். ஒரு இருபது நிமிடம் குறைத்து இருந்தால் நச் என்று இருக்கும். படம் சுமார் 2 மணி 59 நிமிடங்கள் ஓடுகிறது

🥅சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை மிரட்டி இருக்கிறது.
அவரின் நூறாவது படம் என்பதால் படம் முழுக்க இசையில் ராஜங்கம் நடத்தியிருக்கிறார்.
.

🥅இயக்குனர் பி.எஸ் மித்ரன்

படத்தின் பலம் கதை திரைக்கதை அதை இயக்கிய இயக்குனரின் சிறப்பான கைவண்ணம் காட்சிகளுக்காக பல லொகேஷங்களுக்கு சென்று சிறப்பாக படமாக்கி இருப்பது. கார்த்தியின் இரட்டை வேட நடிப்பில் சில ஆக்‌ஷன் காட்சிகள்
பெரிய அளவில் உருவாக்கியிருக்கிறார். ஆக்‌ஷன்/ஸ்பை உலகம்

சமூகக் கருத்தை முன்வைக்கும் முயற்சி இயக்குனர் வெற்றி பெற்றுள்ளார்.
கோட் நேம் ‘சர்தார்’ என்னும் சந்திரபோஸ்,

கம்பீரம் உள்ள மனிதநேயம் உள்ள கதாபாத்திரமாக வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

எந்த பாவமும் அறியாத மக்கள் இறந்து போவதை கண்டு குற்ற உணர்ச்சியால் ஒரு ரா” ஏஜென்ட் வருந்துவது தமிழ் சினிமாவுக்கு புதிது விஜய பிரகாஷ் என இருவேறு பரிமாணத்தில் உலவும் இரண்டு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், நம்மை ஈர்ப்பது என்னமோ வயதான கார்த்தி மட்டுமே. சர்தார் என்ற பெயரில் அந்த முதிர்ச்சிக்குரிய நடுக்கம், உடல்மொழி, அதே சமயம் பயிற்சிகள் பெற்ற ஓர் உளவாளிக்கான சாகச சண்டைக் காட்சிகள் என ஒரு நடிகராக அப்ளாஸ் பெறுகிறார். அதற்கு காரணம் இயக்குனர். வில்லனாக வரும் எஸ் ஜே சூர்யா யார் என்று ஒரு டிவிஸ்ட் வைத்து காட்டும் பொழுது சபாஷ் போட வைக்கிறது. மிரட்டலான வில்லனாக நம்பும்படி நடித்திருக்கிறார்.

🥅 திரைக்கதை: P. S. Mithran, Nambi, Rathna Kumar, Ashameera Aiyappan, Vignesh Muniyandi ஆகியோர் சிறப்பு

🥅ஒளிப்பதிவு (DOP): George C. Williams
Sardar படத்திலும் பணியாற்றியவர்; sequel-லும் ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.
படத்தின் வெற்றியில் ஒளிப்பதிவாளர் பங்கு மிக அதிகம் காட்சிகளை மிகவும் சிரமப்பட்டு படமாக்கி இருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் அண்டர் கிரவுண்டில் இருக்கும் டோகோ அதை எடுக்கும் அப்பா மகன் தடுக்கும் வில்லன் அந்த சண்டை காட்சிகள் மிகச் சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறார்.
அதேபோல விமானத்தில் நடக்கும் சண்டைக் காட்சி செம விறுவிறுப்பு
ரயிலில் நடக்கும் சண்டைக்காட்சி ஹாலிவுட் தரத்துக்கு படமாக்கி இருக்கிறார்.

🥅: Vijay Velukutty
முதல் பாகத்தில் பணியாற்றிய Antony L. Ruben-க்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் Vijay Velukutty எடிட்டராக உள்ளார்.
படத்தொகுப்பில் நீளத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

🥅சண்டைப் பயிற்சி: Dhilip Subbarayan, Chetan D’Souza
Studio Flicks
படத்தின் வெற்றிக்கு மிகவும் பலமாக இருப்பது சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

🥅Costume Designer: Poornima Ramaswamy
உடைகள் தேர்வு வித்தியாசமாக இருக்கிறது வில்லனுக்கு ஹாலிவுட் தரத்திலும் சரிதாருக்கு சிறந்த உளவாளி ஆடை தேர்வும் மிகக் கச்சிதமாக இருக்கிறது மாளவிகா மோகன் ஆடைதேர்வு சிறப்பு.

Makeup & Hair: Nellai V. Shanmugam,
இரண்டு கார்த்தி இருவருமே ஒரே நபர் என்று நம்ப முடியாத அளவுக்கு ஒப்பனை சிறப்பாக இருந்தது.

தயாரிப்பு: Prince Pictures மற்றும் IVY Entertainment; தயாரிப்பாளர்கள் S. Lakshman Kumar, Ishan Saksena.
தொடர்ந்து வெற்றி படங்களை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர் இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறது.

⭐ ஒரு சுவாரசியமான விஷயம்
முதல் Sardar படத்தின் முக்கிய தொழில்நுட்பக் குழுவில் இருந்த George C. Williams (ஒளிப்பதிவு) மற்றும் Dhilip Subbarayan (சண்டைப் பயிற்சி) ஆகியோர் Sardar 2-விலும் தொடர்ந்துள்ளனர். ஆனால் இசையிலும் படத்தொகுப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

🥅முதல் பாகத்தின் கூட்டணி தொடர்கிறது
இயக்குநர் பி. எஸ். மித்ரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஆகியோர் முதல் பாகத்திற்குப் பிறகும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்
இது சிறப்பாக அமைந்திருக்கிறது

🥅 சர்வதேச லொக்கேஷன்களுக்கு முக்கியத்துவம்
படத்தின் சுமார் 40% காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க ஆரம்பகட்ட திட்டம் இருந்தது. Azerbaijan மற்றும் Kazakhstan உள்ளிட்ட இடங்களில் location scouting நடைபெற்றுள்ளன காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்தது

🥅பல நகரங்களில் படப்பிடிப்பு
சென்னை, ஹைதராபாத், பாங்காக், லூட்டன், மதுரை, கொச்சி உள்ளிட்ட இடங்களில் வெவ்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு சிரமப்பட்டு படமாக்கி இருக்கிறார்கள்.

🥅பெரிய அளவிலான Production Design
ராஜீவன் நம்பியார் Production Design பணியை மேற்கொண்டுள்ளார். காட்சிகளுக்குத் தேவையான செட்கள் மற்றும் பின்னணி அமைப்பில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

🥅Art Department-ல் இருவர்
M.S.P. மாதவன் மற்றும் B. சேகர் ஆகியோர் Art பணியை கவனித்துள்ளனர்.
கிளைமாக்ஸ் காட்சி அந்த குகை போன்ற மிகவும் அற்புதம்.

🥅Action-க்கு தனி முக்கியத்துவம்
படத்தின் Stunt பணிகளில் Dhilip Subbarayan மற்றும் Chethan D’Souza இணைந்துள்ளனர்.
படத்தை ஹாலிவுட் தரத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.

.🥅எடிட்டிங்கில் மாற்றம்
முதல் Sardar படத்திலிருந்து வேறுபட்டு, Sardar 2-வின் Editing பணியை Vijay Velukutty மேற்கொண்டுள்ளார்.

🥅 Sound Design-க்கும் முக்கிய பங்கு
Tapas Nayak Sound Design பணியை மேற்கொண்டுள்ளார். Spy-thriller வகைப் படங்களில் ஒலி வடிவமைப்பு suspense-ஐ அதிகரிக்க உதவும் முக்கியமான தொழில்நுட்ப அம்சமாகும்.

🥅Makeup & Costume குழு
Poornima Ramaswamy Costume Designer ஆகவும், Nellai V. Shanmugam Makeup பணியிலும், Pattanam Rasheed Special Makeup பணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
⭐ மக்கள் தொடர்பாளர்
சதீஷ்குமார் .
S2 மீடியா
படம் ஆரம்பத்தில் இருந்து படத்தை நல்ல முறையில் மக்களிடம் விளம்பரம் செய்து படத்தை கொண்டு சேர்த்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்.💐
.