ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் தவசி முத்துவை மையமாகக் கொண்டது.என்ன விலை திரைப்படம்.
பக்தர்கள் கடலில் நாணயங்களை வீசும் வழக்கம் . அந்த நாணயங்களைத் தேடி எடுப்பவர்கள் பொதுவாக கடலோரப் பகுதியை நன்கு அறிந்த உள்ளூர் நபர்களாக இருப்பார்கள் .
தவசி முத்து இப்படித்தான்:
கடலுக்குள் செல்கிறார். தண்ணீரில் மூழ்குகிறார். கடலடியில் கைகளால் மணலைத் தேடுகிறார். கிடைக்கும் நாணயங்களைச் சேகரிக்கிறார் .
இதுதான் அவரது வாழ்வியல் களம். அழகான அவர் குடும்பம்.
மனைவி, தங்கை, இரண்டு குழந்தைகள். என அன்பாக வாழும் தவசிமுத்துவுக்கு கடலில் மூழ்கி ,காசு எடுக்கும் பொழுது ஒரு தங்கப்பதக்கம் கிடைக்கிறது .அது விலை உயர்ந்த பல கற்கள் பதித்த பதக்கத்தை நேர்மையாக காவல்துறையிடம் ஒப்படைக்க, செல்லும் பொழுது வரதராஜ் என்ற, தவறான போலீஸ் அதிகாரியால் தவசிமுத்து சிறைக்குச் செல்ல நேரிடுகிறது.
அவரைக் காப்பாற்ற வழக்கறிஞர் காஞ்சனா வருகிறார். சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க போலீசாரும், வழக்கறிஞர்களும் தீவிரமாக இருக்க , திடீரென அந்த தங்கப்பதக்கம் அவர் திருடவில்லை!! என்று தெரிய வர, அப்படி என்றால் என்னை திருடன் என்று சொல்லிய இந்த சமூகத்தின் முன் ,நான் மீண்டும் நிரபராதியாக வாழ என் மானத்துக்கு என்ன விலை? என்று கேட்கிறார்!!! கண்ணியத்துடன்,வாழ, வாழ்வாதாரத்துக்காகவும், அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது.
அவரின் காணாமல் போன மானத்துக்கு நீதி கிடைத்ததா?
அவருக்காக வாதாடிய காஞ்சனாவுக்கு நீதி கை கொடுத்ததா?
இப்படி பல உணர்ச்சி போராட்டங்களுக்கு பதில் சொல்லி இருக்கிறது இந்த படம். ராமேஸ்வரம் ஏழை மீனவர்கள் வாழ்வியலை அற்புதமாக சொல்லி இருக்கிறது. இந்த என்ன விலை?
அதிர்ச்சிக்கதை இது. அவசியமானகதை
“சாதாரண மக்கள் நீதித்துறையின் ரால்எப்படி? அலைக்கழிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கான மதிப்பும், மரியாதையும் என்ன? என்பதை உள்ளது உள்ளபடியே…. காட்டியிருக்கிறார் இயக்குநர்.
வாழ்த்துக்கள் சார்.
நடிகர் &நடிகைகள்
⭐ கருணாஸின் நடிப்பு – இந்தப் படத்தின் முக்கிய பிளஸ் இதுவரை கருணாஸை நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் அதிகம் பார்த்திருக்கிறோம்.ஆனால் “என்ன விலை” அவருடைய நடிப்பின் சீரியஸ் பரிமாணத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கிறது.
ஒரு அழுக்கு லுங்கி, சட்டை, முகத்தில் தாடி, திருடன் !!என்ற பட்டத்துடன் நிறைய சோகம்என பல காட்சிகளில் நெகிழ வைக்கிறார் கருணாஸ். ஒரு ஏழை அன்புக் கணவனாக, ஒரு அண்ணனாக பாசப் போராட்டத்தை காட்சிக்குக் காட்சி இயல்பாய் நடித்து உணர்த்துகிறார். காவல் துறையின் கட்டுப்பாட்டிற்கும் மிரட்டலுக்கும் முன்னால் ஒரு சாமானியன் எதுவுமே செய்ய முடியாது என்பது கருணாஸ் கதாபாத்திரத்தைப் பார்த்து படம் பார்க்கும் போது ‘தூத்துக்குடி காவல் நிலைய மரணங்கள்’ ஞாபகம் வருகிறது கருணாஸை மீண்டும் ஒரு சீரியஸ், இயல்பான நடிப்புத் தளத்தில் பார்க்க வைக்கும் படமாக இருக்கிறது. தவசிமுத்துவாக வாழ்ந்து இருக்கிறார்
மனைவி மீதான பாசம், திடீர் , பயம், ஆற்றாமை எனப் பல உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். முக்கியமாக இறுதிக்காட்சியில் என் மானத்துக்கு என்ன விலை?? என்று வழக்கறிஞர் காஞ்சனாவிடம், கதறி அழும் பொழுது,
மனதைக் கனக்க வைக்கிறார் . மீனவராக, உடல்மொழியையும், அப்பாவி மனிதனாகப் படமெங்கிலும் உலாவும் கருணாஸ், அழும்போதும் வேறொரு அவதாரம் எடுத்து சபாஷ் போட வைக்கிறார். படத்தின் ஆன்மாவைச் சுமக்கும் பணியில் வெற்றிபெறுகிறார் தன் ‘டெம்ப்ளேட்டான’ அழுகையும், கத்தலுமாக வந்து மனதில் நிற்கிறார். வெல்டன்.
☘️ நிமிஷா சஜயன் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கதையின் முக்கிய சட்டப் பிரச்சினையை எழுப்பும் அவரது கதாபாத்திரம் அற்புதமாக இருக்கிறது. அவருடைய பாத்திரம் வெறும் கதாநாயகி, என்ற அளவில் இல்லாமல் கதையை நகர்த்தும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறது.
வழக்கறிஞரின் கம்பீரம் – நீதிமன்றக் காட்சிகளில் வசனத்தை வெறுமனே பேசாமல், ஒரு வழக்கறிஞருக்குரிய நம்பிக்கையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தி ,. கதாபாத்திரத்தின் தனிப்பட்ட வலி – அழுத்தமாகக் கொண்டு வந்திருக்கிறார்.
ஒரு வழக்கறிஞர் போராட்டம் – காவல் துறைக்கு எதிராக ஒரு பெண் சட்டத்தின் மூலம் போராடும் கதாபாத்திரமாக நிமிஷாநடித்தது தாக்கத்தை ஏற்படுத்தியது.
நிமிஷா நடிப்பை வெறும் துணை நடிகை நடிப்பு என்று சொல்ல முடியாது. இந்தப் படத்தின் கருத்தையும் நீதிமன்றப் போராட்டத்தையும் பார்வையாளர்களிடம் கொண்டு சென்ற முக்கியமான நடிப்பு அது. குறிப்பாக கோர்ட் காட்சிகளில் அவரது குரல், முகபாவனை, வசன உச்சரிப்பு — இவைதான் அவரது நடிப்பின் பெரிய பலம். வெல்டன் மேம்.
☘️நடிகை விஜயலட்சுமி வீரமணி , பாலம்மா கதாபாத்திரத்தில் தவசி முத்து மனைவியாக , மிகவும் எளிமையான , உணர்வுகள் மூலம் வலுவான பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இல்லை ..வாழ்ந்து இருக்கிறார். என்று சொல்லலாம்.
ஒரு மீனவர் கிராமத்து பெண் எப்படி இருப்பாரோ! அதேபோன்று படம் முழுக்க பார்வைகளால் நம்மை பிரமிக்க வைக்கிறார். இவரை தவிர இந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இவருடைய இயல்பான நடிப்புக்கு நிச்சயம் விருது கிடைக்கும்.
☘️சாஜா சிவகுமார்
மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் தங்கையாக உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டு ,தன் அண்ணனின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்கும் சிறப்பான கதாபாத்திரம். ஒரு கிராமப்புறப் பெண்ணாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை நன்றாகப் புரிந்துகொண்டு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தோடு அற்புதமாக நடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் சாஜா மேம்.
☘️ சித்தா தர்ஷன், காவல் நிலையத்தில் சாமானியனை ஏமாற்றும் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் சிறப்பாக நடித்திருக்கிறார்.
☘️ முதல் அமைச்சராக “பிரபு நடித்திருக்கிறார். அவ்வளவு கச்சிதமாக இருக்கிறது.
அதே போல்” தீபா சங்கர் “கல்கி அம்மாவாக கலக்கி இருக்கிறார்.
☘️ பூர்ணிமா பாக்யராஜ், நீதிபதியாக ஒரு காட்சியில் வந்தாலும், இவரது நடிப்பு கம்பீரமாக இருக்கிறது.
☘️ஒய்.ஜி. மகேந்திரன், அட்வகேட் ஜெனரலாக முதலமைச்சரின் ஆணையை நிறைவேற்றி நியாயம் வழங்கும் ஒரு அற்புதமான வேடம் இவருக்கு. மொட்ட ராஜேந்திரன்,
சிறைச்சாலையில் கருணாசை மூளை சலவை செய்து வெளியே சென்று திருடலாம் என்று அழைப்பது காமெடி நிழல்கள் ரவி, நீதிபதியாக கம்பீரமாக நடித்திருக்கிறார்.
மோகன்ராம் ,தன்னை நம்பி வந்த கருணாசை ஏமாற்றும் வரதராஜன் என்னும் கான்ஸ்டபிள் ஆக சிறப்பாக நடித்தி ருக்கிறார். மற்றும் கோலி சோடா பாண்டி ,படம் முழுக்க கருணாஸுக்கு துணை நின்று சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
இவர்கள் உடன் பிரவீணா, சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர், கவி நக்கலைட்ஸ் என அனைவரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
🎥 இயக்குநர் சஜீவ் பழூர்
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் .தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர். மலையாள சினிமா பின்னணியிலிருந்து வரும் அவர், தமிழ் படத்தில் தனது கதையாடல் பாணியை கொண்டு வந்திருப்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பு.
உண்மையான நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்ப்பது போல்,
நீதிமன்றத்துக்குள் நாமும் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார். இயக்குனர்.
இப்படத்தின் பெரிய பலங்களில் ஒன்று கதை, நடக்கும் இடத்தை வெறும் பின்னணியாகப் பயன்படுத்தாமல், கதையின் சூழலோடு இணைத்திருப்பது. ராமேஸ்வரத்தின் நிலப்பரப்பு, கடல் சார்ந்த வாழ்க்கை, அங்குள்ள சமூகச் சூழல் ஆகியவை படத்தின் டிவிஸ்ட்,மற்றும் உணர்ச்சிக்கும் வலு சேர்க்கும் வகையில், இயக்குனர் இயக்கி இருக்கிறார் .
கருணாஸ் மூலம் யதார்த்தமான நடிப்பு உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.எளிய சாமானியர்களின் குரலற்ற வலிகளை இயக்குநர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.காவல்துறை, மற்றும் கார்ப்பரேட் கூட்டுக்கு இடையேயான அதிகார துஷ்பிரயோகத்தை நேர்மையாக விவரித்துள்ளார்.
வாழ்த்துக்கள் சார்.
☘️இந்தப் படத்தை கலாமயா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜிதேஷ் வி, அனு கோபால் வேணுகோபால் தயாரித்துள்ளார் கள் . ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிடுகிறார். வெற்றி படமாக வந்துள்ளது .
☘️ படத்தின் இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஒரு வாழ்வியல் படத்துக்கு, என்ன இசை தேவைப்படுகிறதோ !அதை அற்புதமாக கொடுத்திருக்கிறார்.
பின்னணி இசையும், பாடல்களும், கதையோடு ஒட்டி செல்வதால் ரசிக்க வைக்கிறது.
இசையில் பாடல்களும். , பின்னணி இசையால் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆழம் சேர்த்திருக்கிறார்.
☘️ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொண்டுள்ளார். கடலோரக் காட்சிகள், கண்ணுக்குள் நிற்கிறது. கோட்டுக்குள் நடக்கும் அந்த காட்சிகளும், கருணாஸ் வீடு, மற்றும் அந்த கிராமம் போராட்ட களம் .இப்படி எல்லா இடங்களிலும் கேமரா விளையாடி இருக்கிறது. ஒளிப்பதிவு ‘ரிச்சாக இருக்கிறது.
அக்னி தீர்த்தம் , ராமநாதசுவாமி, கோயிலுக்கு எதிரே உள்ள கடற்கரைப் பகுதி. அமைதியான கடற்பகுதி , ஏராளமான பக்தர்கள் புனித நீராடல், மணலில் புதைந்திருக்கும் நாணயங்களைத் தேடுதல் படலம், என்று கேமரா கவிதை பாடி இருக்கிறது.
ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் பெரிய ப்ளஸ்,கருனாஸ் குடும்பக்காட்சிகளின் ஒளிப்பதிவு அருமை.
☘️ படத்தொகுப்பை ஸ்ரீஜித் சாரங் கவனித்துள்ளார். படம் இரண்டு மணி நேரம்தான். சிறப்பாக செதுக்கி விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் படத்தொகுப்பாளர்.
☘️ சண்டைக் காட்சிகளை பி.சி ஸ்டன்ஸ்அமைத்துள்ளனர். சவுண்ட் டிசைன் மிக்ஸிங்: தபஸ் நாயக். ஆர்ட் டைரக்டர்: கே சிவ கிருஷ்ணா. அருமையான வடிவமைப்பு, நேர்த்தியாக இருக்கிறது.
☘️பாடல்களை கார்த்திக் நேத்தா, இளங்கோ கிருஷ்ணன் , லட்சுமி பிரியா ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். வாழ்வில் சார்ந்த பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.
☘️காஸ்ட்யூம் டிசைனர் ஆர். முருகானந்தம். நடன பயிற்சியாளர் அபிக்.
☘️ஒப்பனை: தினேஷ் குமார், மீனவ மக்களை அச்சுஅசலாக பிரதிபலிக்கிறது. ஒப்பனை.
☘️மக்கள் தொடர்பாளர்கள் :திரு .சுரேஷ் சந்திரா, அவர்கள் திரு. அப்துல் நாசர் அவர்கள்.
