🎬 நல்ல படம் – விமர்சனம்

“குடி ஒரு மனிதனை மட்டும் பாதிப்பதில்லை… அவனைச் சுற்றியிருக்கும் உறவுகளையும் பாதிக்கிறது” என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான்” நல்ல படம்.

குடிப்பழக்கத்தில் சிக்கிய இளைஞன் குமரன் வாழ்க்கை, காதல், குடும்பம் ஆகியவற்றை காமெடி, சென்டிமென்ட், சமூகக் கருத்துடன் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் C. பிரபுராம்.… ஒரு வரியில் சொன்னால்!

“சிரிக்க வைக்கும் சம்பவங்களுக்குள் ஒரு சமூகக் கருத்தை வைத்து, குடிப்பழக்கத்தின் இன்னொரு முகத்தை காட்ட முயலும் படம் – நல்ல படம்.

“☘️நல்ல படம்” என்பதன் மையம், மதுப்பழக்கத்தில் சிக்கிய இளைஞனின் வாழ்க்கையையும், அந்தப் பழக்கம் அவனைச் சுற்றியுள்ள குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மையமாகக் கொண்டது .

ஆனால் படத்தை வெறும் “குடிக்கு எதிரான பிரசாரப் படம்” போல இல்லாமல், காமெடி + காதல் + குடும்ப சென்டிமென்ட் + சமூகக் கருத்து கலந்து சொல்ல முயற்சி செய்திருப்பது இதன் சுவாரஸ்யமான அம்சம்.

அரசாங்கம் மதுவிலக்கு கொண்டு வந்தால் நாடு எப்படி இருக்கும். என்று கற்பனை செய்து எடுக்கப்பட்ட படம் இந்த “நல்ல படம்” இடைவேளை வரை குமரன், மற்றும் பரமக்குடி ,தீர்த்த குடி ,என்ற மூன்று பேரும் மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம் என்று ஆரம்பித்து குடிகாரர்களை ஊக்குவித்து வருகிறார்கள் .

திடீரென அரசாங்கம் மதுவிலக்கு கொண்டு வந்ததால் இவர்கள் தடுமாறுவதும், அதற்கு பின் திருந்துவதும், கொண்டியூர் ஒன்டியப்பனான மொட்டை ராஜேந்திரனிடம் சென்று, கள்ளச்சாராயம் காட்சி கொடுக்க சொல்லி கேட்பது, பிறகு ஒயின் தயாரிப்பது ,என்று படம் முழுக்க வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் போல ஜாலியாகவந்திருக்கிறது இந்த படம்.

குடிகாரர்களால் இன்று நாடு படும் அவஸ்தை, ஒவ்வொரு குடும்பமும், அந்த குடியினால் படும் துன்பம், துயரம், வலி இவைகளை பட்டியலிட்டு அந்த குடிகாரர்கள் திருந்தினால் அவர்களை சுற்றி எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது என்பதையும் இந்த படம் சொல்லி இருக்கிறது. தேவையான படம் இப்போது நாட்டுக்கு மிக அவசியமான படம் .

☘️குடி அதிகரிக்க:

குடும்பத்தின் மீது அக்கறை குறைகிறது. ஊரில் இருந்த மரியாதை போய்விடுகிறது. சம்பாதிக்கும் பணம் முழுவதும் குடிக்கச் செல்கிறது. கடைசியில் அடுத்த வேளை சமைப்பதற்காக வைத்திருந்த அரிசியைக்கூட விற்றுக் குடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது.

இதனால் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பம் சந்திக்கும் துயரங்கள்தான் படத்தின் முக்கியமான உணர்ச்சிப் பகுதி அதாவது, “குடிப்பது ஒரு தனிமனிதனின் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தையே எப்படி அழிக்கிறது?” என்பதுதான் படத்தின் மையக் கருத்து.

⭐ ஹரிஷ் – கதையின் முதுகெலும்பு

நாயகன் ஹரிஷ்தான் படத்தின் மையம். ஆரம்பத்தில் மதுவில் மூழ்கிய இளைஞனாகவும், அதன் விளைவுகளை சந்திக்கும் மனிதனாகவும் அவரது கதாபாத்திரம் நகர்கிறது.

காமெடி காட்சிகளில் லைட்டாகவும், பிரச்சினைகள் தீவிரமாகும் தருணங்களில் உணர்ச்சியுடனும் நடிப்பது அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியம்.

குடிப்பழக்கத்தால் வாழ்க்கையைத் தொலைக்கும் இளைஞனாக அவரது கதாபாத்திரம் எப்படி மாறுகிறது என்பதுதான் நடிப்புக்கு முக்கிய சவால்.

குறிப்பாக காமெடி காட்சிகளில் இருந்து உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவர் எப்படி மாறுகிறார் .என்பது படத்தின் வெற்றி.

குமரன் என்ற கதாபாத்திரத்தில் கலகலப்பாக நடித்திருக்கிறார். இடைவேளை வரை குடியும், கும்மாளமாக சுற்றி திரியும் அவர் அதற்கு பிறகு எப்படி திருந்துகிறார்? அதனால் அவரது அம்மா எவ்வளவு சந்தோஷப்படுகிறார் .அவருடைய டாக்டர் காதலி எவ்வளவு சந்தோஷப்படுகிறார் .தங்கை அமுதா எந்த அளவு சந்தோஷப்படுகிறார். என்பதை கண்டு இனிமேல் குடிக்கப் போவதில்லை என்று சபதம் எடுக்கும் அந்த நடிப்பு நன்றாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

💕 தனலட்சுமியின் கதாபாத்திரம் “மது என்ற கதாபாத்திரத்தில் காதல் கோணத்தை மட்டும் நிரப்பாமல், நாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு உணர்ச்சிப் பின்னணியாக அமைந்திருக்கிறது. அவரது நடிப்பு அவரது கதாபாத்திரம் கதையின் உணர்ச்சிப் பகுதியை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது

நாயகன் குடிப்பதை கண்டிப்பதும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரிடம் நான் நாயகனை திருத்தி விடுவேன் என்று சவால் விடுவதும், ஒரு ஜீவன் உள்ள கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் தனலட்சுமி.

☘️மொட்டை ராஜேந்திரன் – காமெடி டச்

படத்தின் சீரியஸ் கருத்தை அதிகமாக கனமாக்காமல் எடுத்துச் செல்கிறது.
கொண்டியூர் ஒன்டியப்பன், என்ற வேடத்தில் அவர் வரும் காட்சிகள் கலகலப்பாகவும் சண்டைக் காட்சிகளில் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரனின் காமெடி படத்தில் பலம். அவரது வழக்கமான உடல் மொழியும் டைமிங்கும் ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைக்கக்கூடிய பகுதி.

மேலும் கல்கி ராஜா, நாயகனின் நண்பனாக படம் முழுக்க குடியும் கும்மாளமாக கலகலப்பான பகுதியில் இவர் கதாபாத்திரம் செம ஜாலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரமா, நாயகனின் அம்மாவாக பொறுப்பான வேடத்தில் நடித்திருக்கிறார். மகன் குடியால் பாதிக்கப்படுவதை கண்டு வருத்தப்படும் பொழுதும், திருந்தி விட்டதைக் கண்டு அகம் மலர சந்தோசப்படுவதும் இவர் கதாபாத்திரத்தின் சிறப்பு. பிரியதர்ஷினி ரீல்ஸ் மோகம் கொண்ட நாயகியின் அம்மாவாக கலகலப்பாக வந்து போகிறார் .

கிருத்திகா நாயகனின் தங்கை அமுதா, என்ற கதாபாத்திரத்தில் அம்சமாக வந்து போகிறார் .இவர் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.

நாயகனின் இன்னொரு நண்பனாக ஆனந்த் குமார் பரமக்குடி ,என்ற கதாபாத்திரத்தில் 24 மணி நேரம் குடித்துவிட்டு தனது மனைவி புஷ்பாவிடம், வம்பு செய்வது, பணத்தை வாங்கி கந்துவட்டி காரனிடம் ஏமாற்றி, தன் மனைவியை இழப்பது, என்று ஒரு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆனந்தகுமார்.

🎥 தொழில்நுட்பம்

ஒளிப்பதிவு – இனியன் J. ஹாரிஸ்

கதாபாத்திரங்களின் மனநிலைக்கு ஏற்ப காட்சிகளை உருவாக்கி பாடல் காட்சிகளில் ராஜபாளையத்தில் கிராமப்புற அழகை அற்புதமாக படமாக்கி இருக்கிறார்.

☘️எடிட்டிங் – B.R. பிரகாஷ்

காமெடி, காதல், சென்டிமென்ட் என்று பல அடுக்குகளில் செல்லும் கதைக்கு வேகம் குறையாமல் இருப்பது எடிட்டிங்கின் முக்கிய சவால்.

அந்த வகையில் இரண்டு மணி நேர படம் விறுவிறுப்பாக போகிறது.

இந்த மாதிரியான காமெடி-டிராமா படங்களில் editing ரொம்ப முக்கியம். குறிப்பாக காமெடி காட்சியின் timing, emotional scene-களின் duration ஆகியவை படத்தின் வேகத்தை அதிகரிக்க வைக்கும்.

இசை – சகிஷ்ணா சேவியர்

பாடல்களுடன் பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சிப் பகுதிகளை வலுப்படுத்திஉள்ளது காதல் பாடல்கள் குடித்துவிட்டு ஆடும் அந்த நடன பாடலும் மிகவும் ரசிக்க வைக்கிறது

பின்னணி இசைக்கும் இவரது பங்களிப்பு முக்கியமானது. வெளியான பாடல்களில் “Nehla Nehla Nilavin Mahalaa” குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகள் – பொட்டுவில் அஸ்மின் படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்

🎯 இயக்குனர் பிரபுராம்

இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது இந்தப் படத்தின் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், “குடிக்காதே” என்று நேரடியாக அறிவுரை சொல்வதற்குப் பதிலாக, குடிப்பதால் ஒருவருடைய வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் உருவாகின்றன என்பதை பொழுதுபோக்கு வழியில் காட்ட முயற்சிப்பது.

அதுதான் படம் வெற்றி பெற செய்துள்ளது மிகப்பெரிய பொறுப்பு இயக்குநருக்குத்தான். மொத்தத்தில் “குடி நல்லதல்ல” என்று நேரடியாகச் சொல்லாமல், குடிப்பவன் → குடும்பம் → காதல் → நண்பர்கள் → சமூக பாதிப்பு
என்று ஒரு மனிதனின் வாழ்க்கையில் அந்தப் பழக்கம் எப்படி சங்கிலித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காமெடி மற்றும் சென்டிமென்ட் வழியாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் படத்தில் காமெடி, காதல் ,சண்டை, காட்சி சமூக நீதி, போதனை இப்படி எல்லா அம்சங்களும் கலந்து “இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தைப் போல ஜாலியாக இளைஞர்களுக்கு போதனை சொல்லாமல் வந்திருக்கும் படம் தான் இந்த “நல்ல படம்.

முக்கியமாக, “நல்ல படம்” என்ற தலைப்புக்கும் கதையின் சமூகக் கருத்துக்கும் ஒரு அழகான முரண்பாடு இருக்கிறது — பெயர் “நல்ல படம்”; ஆனால் கதாநாயகனின் வாழ்க்கை ஆரம்பத்தில் நல்ல பாதையில் இல்லை!

மதுவிலக்கு வந்த பிறகு அவர் பாதை நல்ல பாதையாக மாறுகிறது. அரசாங்கம் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். என்பது தயாரிப்பாளர், இயக்குனரின் விருப்பமாக இருக்கிறது. கஜானாவை நிரப்ப வேறு வழிகளில் பணத்தை திரட்டி கொள்ளலாம். இந்த நாடும், நாட்டில் வாழும் இளைஞர்களும், நன்றாக வாழ வேண்டும். பெண்கள் ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு, வரும் கணவனை கண்டு ,கண் கலங்கி நிற்காமல் இந்த படத்தில் மதுவிலக்கு அறிவித்தவுடன் பெண்கள் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செய்வதை போல் காட்டி இருக்கிறார் இயக்குனர். அதுபோல மதுவிலக்கு கொண்டு வந்தால் இன்று நாட்டில் இருக்கும் அத்தனை பெண்களும் அரசாங்கத்தை பார்த்து கையெடுத்து கும்பிடுவார்கள். இப்படி ஒரு நல்ல படிப்பினை உள்ள படமாக வந்திருக்கிறது நிச்சயம் குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய படம் நல்ல படம் .

☘️மக்கள் தொடர்பாளர்கள் திரு. சுரேஷ் சந்திரா திரு. அப்துல் நாசர் அவர்கள்

ஆர்ட் டைரக்டருக்கு பாராட்டுக்கள்

🍺 சாராயக்கடை காட்சிகள் – வழக்கமான “குடிகாரன்” காட்சிகளை மட்டும் காட்டாமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சாராயக்கடையின் சூழலை இயல்பாகக் காட்ட முயன்றது.

அங்கிருந்த வண்ண பிளாஸ்டிக் டம்ளர்கள், குடிப்பவர்களின் பேச்சு வழக்கு, சாராயக்கடை சூழல் போன்ற சிறு விஷயங்களையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த நல்ல படம் ,நிச்சயம் “நல்ல படம்” தான்