🎬 Cold Call – REVIEW

கதை களம்:

இது வழக்கமான ஹீரோ–ஹீரோயின் காதல் அல்லது ஆக்ஷன் கதையை மட்டும் மையமாகக் கொண்ட படம் அல்ல. Sales Representative-களின் அன்றாட வாழ்க்கைதான் கதையின் முக்கிய பின்னணி. வாடிக்கையாளர்களைச் சந்திப்பது, இலக்கை அடைய வேண்டிய அழுத்தம், பயணங்கள், வேலைக்குள் உருவாகும் நட்பு மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் ஆகியவற்றை நகைச்சுவை கலந்த டிராமா பாணியில் சொல்லும் முயற்சியாக படம் உருவாகியுள்ளது.

👥 நான்கு கதாபாத்திரங்கள் – நான்கு விதமான உலகம் படத்தின் முக்கிய சுவாரஸ்யங்களில் ஒன்று நான்கு புதுமுகங்களை மையமாகக் கொண்டிருப்பது. Siddu Moolimani, Sri Vaishnav, Santhosh, Krishna Vijay ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மணி, மைக்கேல், கௌதம் ,பாலாஜி என நான்கு பேரும் படம் முழுக்க அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. மணி, முதன் முதல் ஒரு ஆர்டர் பிடிப்பது சுவாரசியமான காட்சி. அதேபோல கௌதம் செய்யும் குறும்பு ரசிக்க வைக்கிறது.

தெலுங்கு இளைஞராக வரும் பாலாஜி, சதாசிவம் அவர்களுக்கு சோசியம் பார்க்கிறேன் என்று ஏமாற்றுவது கலகலப்பு.

இப்படி படம் முழுக்க நாம் எதிர்பாராத காட்சிகள் மூலம் சந்தோஷத்தையும் பரவசத்தையும் அள்ளித் தெளித்து இருக்கிறது இந்த படம்.

அவ்வப்போது வரும் பாடல் காட்சிகள் மனதுக்கு இசை தென்றலாக இருக்கிறது.

❤️பெண் கதாபாத்திரங்களில் Amitha Ranganatha, Nisha Hegde, Keerthana ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் — “Cold Call” என்ற தலைப்புக்கு Sales Representative வேலையுடன் இருக்கும் நேரடி தொடர்பு. வாடிக்கையாளர் முன் அறிமுகமே இல்லாமல் தொலைபேசியில் விற்பனைக்காக அணுகுவது “cold call” என்று அழைக்கப்படுகிறது. அதனால் தலைப்பே கதையின் தொழில் உலகத்தைச் சுட்டிக்காட்டுகிறது

கோல்ட் கால் – நடிகர்கள் & தொழில்நுட்பக் குழு*

சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி.
என படத்தில் நடித்த அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் குழு

🎥 இயக்குநரின் முயற்சி

தம்பிதுரை ஈதுராஜ் இயக்கும் இந்தப் படம் அவருடைய இயக்குநர் அறிமுகமாகும். பெரிய நட்சத்திரங்களை வைத்து உருவாக்காமல், வேலைக்குச் செல்லும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை சொல்ல முயன்றிருப்பது படத்தின் தனித்துவமான அம்சம். இயக்குனரின் இந்த புதிய முயற்சி பாராட்டியாக வேண்டும் ஒரு சின்ன பட்ஜெட்டில் சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்.

🎵 தொழில்நுட்பக் குழு

இசை – பிரணவ் கிரிதரன் ஆறு பாடல்களை அற்புதமாக வழங்கி பின்னணி இசையை ரசிக்க வைத்திருக்கிறார்.

தயாரிப்பை Walkthrough Entertainment மேற்கொண்டு ள்ளனர் :-

☘️ஒளிப்பதிவு : சரவணன்

இவரின் ஒளிப்பதிவில் காட்சிகள் நன்றாக இருக்கிறது அலுவலகம் வீடு, டிஸ்கோ பார், என்று எல்லா இடங்களிலும் ஒளிப்பதிவு புகுந்து விளையாடி இருக்கிறது.

படத்தொகுப்பு: சுரேஷ் ஆறுமுகம்

சண்டைப் பயிற்சி: ஜாகுவார் சன்னப்பா

பாடல்கள்: பா. அரவிந்தன், ஆர்மியஸ்

வசனம்: பாலாஜி ராஜசேகர், தம்பிதுரை, நுதன், நிதின் சாம் ரெஜினோல்ட்.

ஒப்பனை: கவுதம்

DI: வேல்ஸ் D ஸ்டுடியோ

ஒலி வடிவமைப்பு: Covai Film Studio

கலரிஸ்ட்: கார்த்திகேஷ் சுப்புராஜன்

ஸ்டில்ஸ் & விளம்பர வடிவமைப்பு: JD

விநியோகம்: Action Reaction

எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்: வரதராஜ்

இணை தயாரிப்பு: தம்பிதுரை, சந்தோஷ் குமார்.

தயாரிப்பாளர்: கேசவ மூர்த்தி

விநியோகஸ்தர்: ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஷ்.

PRO: திரு

மொத்தத்தில் இந்த படம், வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா ❤️