ஆணவக் கொலை (Honour Killing) என்பது பெயரிலேயே ஒரு கொடூரமான முரண்பாடு கொண்ட சொல். “குடும்ப கௌரவம்” அல்லது “சமூக மரியாதை” காப்பாற்ற வேண்டும் என்ற பெயரில் ஒருவரை கொலை செய்வது அல்லது அவர்மீது கடுமையான வன்முறை செய்வது இதன் அடிப்படையில் உருவான படம் தான் “பாரீஸ் கஃபே–
கதையில் ‘பாரிஸ் கஃபே’ ஏன் முக்கியம்?
கதைப்படி டாக்டர் கௌதம் ராஜா – தாரா தம்பதிகள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அன்பை பரிமாறிக் கொள்ளும் அற்புதமான தம்பதியர்.
மருத்துவ துறையில் கௌதம் ராஜ் செய்த ஒரு மன்னிக்க முடியாத சம்பவம் .பின்னர் பெரிய பிரச்சினையாக மாறுகிறது.இருவரும்பிரிகிறார்கள். அவர்களின் மகள் ஒளிவிழியாள், பெற்றோரின் பிரிவுக்குப் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மையைத் தேடத் தொடங்குகிறார்.
அவர் காதலன் கவின் துணையோடு,ஒலி விழியாள், கதாபாத்திரத்தின் விசேஷம்
பிரிந்து போன அப்பா அம்மா சேர்த்து வைக்க தனது காதலன் கவின் இடம் ஆசையைச் சொல்கிறார்.
“அப்பாவையும் அம்மா வைசேர்த்து வைக்க வேண்டும்.” இதுதான் படத்தின் உணர்ச்சிகரமான மையம்.ஒலி, தாரவை தேடி கண்டுபிடித்து, இருவரையும் மீண்டும் சந்திக்க வைக்க முயற்சி செய்கிறார்.
🎬அர்ச்சனா குமார் நடிப்பில் என்ன ஸ்பெஷல்?
ஒலி ,கதாபாத்திரம் முழுக்க குஷியான இளம் பெண்ணிலிருந்து, தன் அப்பா, அம்மாவை மாற்றும் பெண்ணாக மாறும் பயணம் கொண்டது. குறிப்பாக தன் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவதைக் காட்டிலும் தாய் ,தந்தையின் வாழ்க்கை இனிமையாக்க வேண்டும் என்ற எண்ணம் முன்னிலைப்படுவது கதாபாத்திரத்திற்கு உணர்ச்சி வலிமை கொடுக்கிறது. அதனால்தான் இந்தப் படத்தில் “ஹீரோ யார்?” என்று பார்த்தால், வெளிப்படையாக குரு சோமசுந்தரம், அனு மோல்,ஆகியோர் முக்கியமானவர்கள் என்றாலும், கதையை உணர்ச்சிப்பூர்வமாக நகர்த்தும் முக்கியமான பாத்திரம்” ஒலி என்று சொல்லலாம்
அர்ச்சனா நடிப்பு நன்றாக இருக்கிறது வெல்ஷ்.
❤️ கௌதம்(குரு சோமசுந்தரம்) கதாபாத்திரத்தின் முக்கியத்துவம்
மருத்துவர் கௌதம் – சமூகப் பொறுப்புள்ள பின்னணியில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். தாராவின் கணவர் – கௌதம்–தாரா இருவரும் காதலித்து வாழும் தம்பதிகள்; ஆனால் கடந்த காலத்தில் புதைந்த ஒரு உண்மை அவர்களுடைய வாழ்க்கையைப் பிரிக்கின்றது. கதையின் தற்போதைய நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாமல், கடந்த காலத்தில் நடந்த சம்பவத்தின் தாக்கத்தையும் சுமந்து செல்லும் பாத்திரம் கௌதம்.
அவருக்கும் தாராவுக்கும் இடையிலான உறவு மூலமாக காதல், குடும்பம், சமூகக் கட்டுப்பாடுகள், உண்மையை மறைப்பதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை படத்தில் சிறப்பு
🔥 குரு சோமசுந்தரத்தின் அணுகுமுறை
குரு சோமசுந்தரம், இப்படத்தில் ஒரு வழக்கமான “ஹீரோ” பாணியில் இல்லாமல் கதையின் சமூகக் கருத்தோடு தொடர்புடைய மனிதராக நடித்திருக்கிறார் “பெண்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேறாது” என்று இந்தப் படம் மூலம் பேசியிருக்கிறார்.
மேலும், குரு–அனுமோல் இருவரும் ஏற்கனவே மலையாளப் படத்தில் இணைந்து நடித்தவர்கள். “பாரீஸ் கஃபே”வில் மீண்டும் கணவன்–மனைவியாக இணைந்திருக்கிறார்கள். ஜோடி பொருத்தம் சூப்பர் ஒரு வரியில் சொன்னால் பாஸ்:
கௌதம் என்பது வெறும் காதல் நாயகன் அல்ல; கடந்த காலத்தின் ஒரு மறைக்கப்பட்ட உண்மை காரணமாக தனது குடும்ப வாழ்க்கையே சோதனைக்குள்ளாகும் ஒரு மருத்துவர். அந்த உள்மனப் போராட்டம்தான் குரு சோமசுந்தரத்தின் கதாபாத்திரத்திற்கு முக்கியமான பலம்.
மேலும், கௌதம்–தாரா ஏன் பிரிகிறார்கள், அந்த 7 வருட ரகசியம் என்ன, ஒலிவிழியாள் எப்படி உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது
❤️இந்தபடத்தில் அனுமோல் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் தாரா (Tara).
🌟 அனுமோலின் தாரா — தன்னம்பிக்கை நிறைந்த பெண்
தாரா கதாபாத்திரம் வெறும் காதல்/குடும்பப் பெண் பாத்திரமாக இல்லாமல், தனது எண்ணங்களையும் சமூகப் பார்வையையும் தைரியமாக வெளிப்படுத்தும் பெண்ணாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதனால் தாராவின் தன்னம்பிக்கை என்பது வெறும் “வீர வசனம் பேசும்” தன்மை அல்ல. தவறு என்று நினைப்பதை எதிர்த்து நிற்கும் மனநிலை, தனது வாழ்க்கை குறித்து தானே முடிவு எடுக்கும் உரிமை, சமூகத்தில் நடக்கும் அநீதியை கேள்வி கேட்கும் துணிவு ஆகியவை கதாபாத்திரத்தின் அடிப்படையாக இருக்கின்றன.
மேலும், இப்படம் ஆணவக் கொலையை மீண்டும் ரீ ஓப்பன் செய்து புரட்சி செய்யும் கதாபாத்திரம் சமூக அக்கறை கொண்ட பாத்திரத்தை அவர் ஏற்றுக்கொண்டதற்காக ஒரு சல்யூட்.
அதனால் தாராவை “கதாநாயகனின் மனைவி” என்று மட்டும் பார்க்க முடியாது. கதையின் சமூகக் கருத்தைத் தாங்கிச் செல்லும் பெண் கதாபாத்திரங்களில் அவருக்கும் முக்கியமான இடம் இருக்கிறது.
அனுமோல்–குரு சோமசுந்தரம் இருவரும் ஏற்கனவே மலையாளப் படமான “ராணி: தி ரியல் ஸ்டோரி”யில் இணைந்து நடித்தவர்கள். இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
☘️விஜய் விஷ்வா, அமெரிக்காவில் இருக்கும் கவின் என்ற ஆய்வாளராக நடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு சம்பவத்துக்காக அவர் அமெரிக்காவிலிருந்து வருகிறார்
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது நடனம் நன்றாக இருக்கிறது.
🔎 சாய் விக்கி, ராஜேஷ் குமார் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். நயனா சாய், சியாமளா வேடத்தில் நடித்துள்ளார் இருவரும் இணைந்து பல காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்.
பிபின் ஜே .சி பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார்.
🎬 இயக்கம் / கதை / திரைக்கதை / வசனம்: சரஜ் சீலன்
படத்தின் விசேஷமான விஷயம் இயக்குநர் சரஜ் சீலன், காதல் கொலைகளை வழக்கமான கோணத்தில் மட்டும் சொல்லாமல், வேறு சில அம்சங்களையும் இணைத்து பேச முயன்றிருப்ப அதனால் இது வெறும் காதல்–குடும்பக் கதையாக இல்லாமல், சமூகக் கருத்தையும் முன்வைக்கும் படமாக உருவாகியுள்ளது பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம் ஆனா ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் இருக்கு நம்ம சமுதாயத்தில் நடக்குற முக்கியமான விஷயம் பத்தி பேசுற படம். குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் கதாபாத்திரம் மூலம்நீதிக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர். .
☘️ஒளிப்பதிவு: சதீஷ்G
பாடல் காட்சிகள் மற்றும் பாரீஸ் நகரில் நடக்கும் காட்சிகள் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியும் படத்திற்கு உயிர் ஓவியமாக இருக்கிறது.
☘️எடிட்டிங்: V.J. சாபு ஜோசப்
கவனித்துள்ளார். படம் இரண்டு மணி நேரம்தான். சிறப்பாக செதுக்கி விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்
இசை: K.
ஒரு வாழ்வியல் படத்துக்கு, என்ன இசை தேவைப்படுகிறதோ !அதை அற்புதமாக கொடுத்திருக்கிறார்.
பின்னணி இசையும், பாடல்களும், கதையோடு ஒட்டி செல்வதால் ரசிக்க வைக்கிறது.
இசையில் பாடல்களும். , பின்னணி இசையால் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆழம் சேர்த்திருக்கிறார்
☘️கலை: Dhamu MFA
ஆர்ட் டைரக்டரின் பணி அற்புதமாக இருக்கிறது குரு சோமசுந்தரத்தின் வீடு காட்சிகளிலும் பளிச்சென்று இருக்கிறது.
☘️சண்டைப்பயிற்சி: சுகன்.
அதிக சண்டைக் காட்சிகள் இல்லை என்றாலும் ஆணவ கொலை செய்யும் இடம் பகீர் என்று இருக்கிறது.
☘️நடன அமைப்பு: பிரசாந்த், ஸ்ரீ கிருஷ்.
ஆரம்பப் பாடலான விஜய் விஸ்வா அர்ச்சனா குமார் ஆடும் நடனம் ரசிக்க வைக்கிறது.
🔎 பாடல்கள் – விவேக், யுகி பிரவீன், சராஜ் சீலன்
மேக்கப் – கார்த்திக் குமார் மற்றும் குழுவினர்
ஆடை வடிவமைப்பு – கே. பராஹுல்
தயாரிப்பு வடிவமைப்பு – லட்சுமி கிருஷ்ணலட்சுமி & சுப்ரியா டெசிரா
ஸ்டில்ஸ் – சிவா
ஒலி வடிவமைப்பு – ஹரி ஹரன்
ஒலி கலவை – சிவ் டெக் மெடி
லைன் புரொட்யூசர் – பாலிக் பார்ட்னர்ஸ் ஸ்டுடியோ
எக்ஸிக்யூட்டிவ் மேனேஜர் – மனோபாலா கண்ணன்
பி.ஆர்.ஓ – ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
பப்ளிசிட்டி டிசைனர் – வி.எம். சிவக்குமார்
இணை இயக்குநர் – ஸ்வானி ராஜலிங்கம்
இணை இயக்குநர்கள் – என். சபீர், விக்னேஷ் விஜய ராஜ்
☘️தயாரிப்பாளர்கள்
தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து
இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள்
எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் – பி. சூர்யா பிரகாஷ்
கிரியேட்டிவ் புரொட்யூசர் – எழில் சத்யா
இணை தயாரிப்பாளர் – வெங்கல் எம். லிங்கேஸ்வரன்
தயாரிப்பாளர் – கண்மணி ரங்கநாதன்
: படத்திற்கு மதிப்பீடு4-/5
.:
☕ ஒரு கஃபே…
📸 ஒரு புகைப்படம்…
❤️ ஒரு காதல்…
👨👩👧 ஒரு குடும்பம்…
🔐 மறைக்கப்பட்ட ஒரு உண்மை…
இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது உருவாகும் மர்மம்தான் ‘பாரிஸ் கஃபே’ படத்தின் மைய சுவாரஸ்யம் ‘பாரிஸ் நகரம் தான் அதிர்ச்சியான கதை அவசியமான கதையும் கூட வெற்றிக்கு வாழ்த்துக்கள் ☘️
