சண்டைக்காரி– விமர்சனம்

சண்டைக்காரி – என்ன கதை?

விமல் – ஸ்ரேயா சரண் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் ஒரு ரொமான்டிக் காமெடி + குடும்ப பொழுதுபோக்கு படம்

ஐ டி நிறுவனத்தில் வேலை செய்யும் வெற்றி (விமல்), தனது கண்டிப்பான பாஸ் (மாயா) ஸ்ரேயா உடன் எப்போதும் மோதல் போக்கைக் கொண்டிருக்கிறார் விசா பிரச்சனை வர, .இதிலிருந்து தப்பிக்க,விமலை தனது கணவர் என்று பொய் சொல்லி, விசா அதிகாரிகளை ஏமாற்ற மாயா திட்டமிடுகிறார்.

.விசா அதிகாரிகள் இவர்களைக் கண்காணிக்கத் தொடங்கும் போது, இருவரும் வெற்றியின் சொந்த கிராமத்திற்குச் சென்று கணவன்-மனைவியாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.அங்கு மாயா ஈகோ குணத்தால் ஏற்படும் கலகலப்பான சம்பவங்களும், இறுதியில் இருவருக்கும் இடையே மலரும் காதலும் தான் படத்தின் மீதிக்கதை. படத்தின் பிளஸ் பாயிண்டுகள்…. விமல் ஸ்ரேயா கெமிஸ்ட்ரி:

ஈகோ பிடித்தகதை லண்டனில் இயங்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தைச் சுற்றி அழகிய படபிடிப்பு .

இருவரும் குணத்திலும் உருவாகும் மோதல், ஈகோ, கோபம், காதல் மற்றும் காமெடி சம்பவங்களே படத்தின் முக்கிய சம்பவங்கள்.

கிராமத்து பசுமையான வயல்வெளி, அழகான குடும்பம், என்று அம்சமாக போகிறது .

,புன்னகை பூ கீதா அழகான தேவதையாக, மாயா வின் தோழியாக, வருவது படத்தில் சுவராஸ்யமான அம்சங்கள்.

. நடிகர் & நடிகைகள்

❤️விமலுக்கு இந்தப் படத்தில் வழக்கமான கிராமத்து இளைஞர் பாணியும் ,சற்று மாறுபட்ட சிட்டி சாப்ட்வேர் ஊழியர் தோற்றமும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.

ஆரம்பத்தில் தனது பாஸிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண ஊழியராகவும், பின்னர் சூழ்நிலைகளால் நகைச்சுவையான பிரச்சினைகளுக்குள் மாட்டிக்கொள்ளும் கதாபாத்திரமாகவும் அவரது பாத்திரம் நகர்கிறது.
குறிப்பாக விமல்–ஸ்ரேயா இடையிலான பாஸ்–ஊழியர் மோதல்தான் படத்தின் காமெடிக்கு முக்கிய அடித்தளம்.

உத்தமபாளையம் கிராமத்தில் ஸ்ரேயா வை மனைவி யாக,நடிக்க வைக்க அவர் படும்பாடு ரசிக்க வைக்கிறது

விமலின் மிகப்பெரிய பலம் காமெடி timing.

Boss-ஐ எதிர்கொள்ளும் காட்சிகளிலும், இருவரும் கட்டாயமாக கணவன்–மனைவி போல நடிக்க வேண்டிய சூழலிலும், விமல், தனது உடல்மொழி மற்றும் முகபாவனைகளால் நகைச்சுவையை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, ஸ்ரேயாவுடன் நடக்கும் verbal fights மற்றும் குடும்பத்தினருடன் வரும் காட்சிகளில் அவரது இயல்பான comedy திறமை நன்றாக வேலை செய்கிறது .

👑 ஸ்ரேயா – வித்தியாசமான வேடம்

கதாநாயகனுக்கு இணையான காதல் பாத்திரமாக மட்டுமல்லாமல், அதிகாரமும் தன்னம்பிக்கையும் கொண்ட நிறுவன உயர் அதிகாரியாக வருகிறார். விமலின் பாஸ் என்பதால், இருவருக்கும் இடையிலான காட்சிகளில் அவருடைய அதிகாரத் தோரணை செம மிடுக்கு. கிராமத்தில் அவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது.
கோபம் + காமெடி என ஸ்ரேயா கலந்து கட்டி ரசிக்க வைக்கிறார்.இளமைஅழகு நிறைய இருக்கிறது. கண்டிப்பான, வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் boss. லண்டனில் வளர்ந்தவர்; அலுவலகத்தில் மிகவும் strict.

இந்தக் கதாபாத்திரத்தின் சிறப்பு என்னவென்றால், ஆரம்பத்தில் கொஞ்சம் rude, arrogant boss போலத் தெரியும் மாயா பின்னர் குடும்பச் சூழலுக்குள் வரும்போது படிப்படியாக மாறுகிறார். மாயாவின்refined mannerisms மற்றும் English accent அந்தக் கதாபாத்திரத்திற்கு தனித்தன்மை கொடுக்கிறது

☘️பிரபு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

பெரிய வீட்டு நாட்டாமை பிரபாகரன் .என்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.

☘️நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர்.விஜயா

விமலுக்கு அப்பத்தாவாக வருகிறார் சிறப்பு

☘️ மற்றும் புன்னகை பூ கீதா ஆலியா, என்று கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்திருக்கிறார் .அவர் வரும் காட்சிகளில் அம்சமாக பொருந்தி இருக்கிறார்.

❤️கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.

வேலைக்காரன் குஞ்சுமணி, என்ற கதாபாத்திரம் அவருக்கு 100% பொருந்தி இருக்கிறது. கலகலப்பாக இருக்கிறது.

☘️இவர்களுடன் ரேகா, ஸ்ரேயாவின் அம்மாவாகவும்

தேவ் கில், மேத்யூ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

☘️ உமா பத்மநாபன்,

பிரபுவின் மனைவியாக ஜானகி ,என்ற கதாபாத்திரத்தில் விமலுக்கு, பாசத்தை பொழியும் அம்மாவாக, கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தி இருக்கிறார்.
மகாநதி சங்கர் ஒரே காட்சியில் வந்தாலும் செம கலகலப்பு

☘️பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் ரசிக்க வைக்கிறது குத்துப்பாட்டு குத்தாட்டம் போட வைக்கிறது.

☘️கனல் கண்ணன் சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார்.
ஒரு சண்டை காமெடியாகவும், மேத்யூவுடன், விமல் போடும் சண்டைக்காட்சி அனல் தெறிக்க அமைத்திருக்கிறார் கனல் கண்ணன்

🎥 இயக்குநர் ஆர். மாதேஷ்

இப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்பு ‘மதுர’, ‘சாக்லேட்’, ‘மிரட்டல்’, ‘அரசாங்கம்’, ‘மோகினி’ போன்ற படங்களை இயக்கியவர்.
இந்தப் படத்தில் காதல், காமெடி, ஆக்ஷன், குடும்ப உணர்வு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படமாக கொடுத்து இருக்கிறார்.

இயக்குனர் எங்கே ஸ்கோர் செய்தார்?. எதிரெதிர் குணாதிசயங்களை வைத்து comedy உருவாக்கியது

ஒருபுறம் strict மாயா, மறுபுறம் கொஞ்சம் சாதாரணமான, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும்

வெற்றி இந்த contrast தான் படத்தின் comedy engine.

IT office-ல் ஆரம்பிக்கும் கதை, பின்னர்வெற்றியின் கிராமத்தில் குடும்பச் சூழலுக்குள் செல்கிறது. இந்த மாற்றம் கதைக்கு வேறு ஒரு emotional மற்றும் comic layer கொடுக்கிறது.

இருவரும் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் இருப்பது → fake marriage → குடும்பத்துடன் பழகுவது → உறவில் மாற்றம் என்ற progression-ஐ இயக்குனர் comedy மூலமாக நகர்த்துகிறார். குடும்பக் காட்சிகள்

வெற்றி யின்- குடும்பத்தினர், குறிப்பாக தந்தை மற்றும் மற்ற உறவினர்கள் கதைக்குள் வந்த பிறகு படத்தின் சூழல் office comedy-யிலிருந்து family entertainer-ஆக மாறுகிறது. பிரபுவின் தந்தை கதாபாத்திரமும் கவனம் பெறுகிறது.

🌍 ஒளிப்பதிவாளர் லண்டன் படப்பிடிப்பு – ஒரு ஸ்பெஷல்

‘சண்டைக்காரி’யின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று வெளிநாட்டு  லொகேஷன்கள்.

படப்பிடிப்பு லண்டன், நியூயார்க், வெனிஸ் உள்ளிட்ட இடங்களிலும், பின்னர் கிராமத்து பகுதிகளிலும் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
லண்டனில் உள்ள Stansted Airport பகுதியில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
ஆர்.பி.குருதேவ்க்கு வாழ்த்துக்கள்.

🎼 தொழில்நுட்பக் குழு

படத்தொகுப்பு: தினேஷ் பொன்ராஜ்
கலை: ஐயப்பன்
நடனம்: ஹபீப்
சண்டைப்பயிற்சி: கனல் கண்ணன்
பாடல்கள்: கபிலன் விவேக்
தயாரிப்பு: ஜெயபாலன் ஜெயக்குமார் / Production Corporati

🎬 .📝 சண்டை காரி– எந்தவொரு லாஜிக்கும் பார்க்காமல், குடும்பத்தோடு அமர்ந்து இரண்டு மணி நேரம் ஜாலியாகச் சிரித்து மகிழக்கூடிய ஒரு பக்காவானகாமெடி எண்டர்டெய்னர்.
தான் “சண்டை காரி”