லெனின் பாண்டியன் –விமர்சனம்

மதிப்பீடு 4-/5

☘️சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்க, T.G. தியாகராஜன் வழங்குகிறார்.

🎬 லெனின் பாண்டியன் –மறவன் பாண்டியனுக்கு கருணை அடிப்படையில் அப்பா ,செய்த போலீஸ் வேலை கிடைக்கிறது. பயந்த சுபாவம் கொண்ட அவர் ரவுடிகள் சிலரால், சாக்கடையில் தள்ளி விட ப்பட அதுவே அவருக்கு மைனஸாக அமைகிறது.அவரது மேலதிகாரி மறவன் பாண்டியனை, கடைசி வரை நீ சல்யூட் அடித்து கொண்டே இரு. துப்பாக்கியை உன் கையில் தொடக்கூட முடியாது .என்று சொல்லி அவமானபடுத்துகிறார்.

அதே சமயம் மணல் கொள்ளை பின்னணியில், மண்ணையும் மக்களின் உரிமையையும் அதிகார கோரபற்களால் நசுக்கி வரும் ரவி,ராஜ ரத்னம், அமைச்சர் பெரிய கருப்பன்.

இவர்கள் கடத்தும் மணல் லாரியில் அடிபட்டு இறந்து போகும், துரை ராசாவின் ஆட்டுகுட்டி, மீனாட்சி க்காக நீதிகேட்டு காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்.அவரை அலட்சியமாக அடித்து, உதைத்து வெளியே தள்ளும் போஸ் வெங்கட் . அவரை கூண்டில் ஏற்றப்பட்டு நீதி கேட்கிறார்.துரைராசா? அவருக்கு நீதி கிடைத்ததா? துப்பாக்கியை தொடக்கூடாது என்ற மேலதிகாரி அதையும் மீறி நாயகனுக்கு துப்பாக்கி கிடைத்ததா? இப்படி மாறவர்மன் சந்திக்கும் அவலங்களும் 75 வயது முதியவர் துரை ராசா,சந்திக்கும் மிரட்டல்களும். மணல் மாஃபியா கும்பலின் கோர தாண்டவம்,

அதிகார வர்க்கம் போடும் ஆட்டம். கண்ணீரை துடைக்கும் கை யாக நீதிபதி ஜார்ஜ் மரியம் , தர்ஷன் கணேசனின் பயந்த சுபாவம் , தடுமாற்றம் அவமானம் இவைகள் உடன் துரை ராசா, மனைவி சந்தனம் இருவர் நடிப்பும், முதுமை காதலும், படத்திற்கு மிகப்பெரிய பலமே லெனின் பாண்டியன் படத்தின் கதை.

☘️தர்ஷன் கணேசன் – காவல் அதிகாரியாக நடித்துள்ளார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆரம்பப் காட்சிகளில் ,அவர் படும் அவமானம் . அதனால் அவர்முகத்தில் தெரிகின்ற பாவங்கள். துரை ராசா உடன், பயனிக்கும் போது வரும் கம்பீரம்.

பிரியா உடன் ஊடல், மணல் மாஃபியா கும்பலின் தலைவன் உடன் மோதல், என்று நவரசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறப்பாக இருக்கிறது.

பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் இந்த இளம் அதிகாரி, அந்த முதியவரைச் சுற்றியுள்ள மர்மத்தையும் பின்னணியையும் எதிர்கொள்ளும் விதம்தான் கதையில் முக்கியத்துவம் பெறுகிறது.

☘️துரை ராசா வாக கங்கை அமரன்.

பண்ணைபுரத்திலிருந்து, சென்னை வந்து 180 படங்களுக்கு மேல் இசையமைத்து, 1500 பாடல்கள் எழுதி ,பல படங்களை இயக்கியவர். கங்கை அமரன்.

வெள்ளி திரையில் உச்சம் தொட்டவர். இந்த படத்தில் துரை ராசா வாக வாழ்ந்து இருக்கிறார். எதிர்பாராத நடிப்பு இசையமைப்பாளர், இயக்குநர் எனப் பல முகங்களைக் கொண்ட கங்கை அமரன், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது. தன் மனைவி சந்தனம் புண்ணாக்கு கூட வாங்க தெரியவில்லை என்று என்னை திருமணம் செய்து கொண்டார். என்றும்.

மனைவி க்குசேலை துவைத்து கொடுத்து ரோஜாவிடம் முத்தம் கேட்கும் காட்சி ,ஆட்டுக்குட்டி மீனாட்சி இறந்து விட ,கதறி அழும் காட்சி ,காவல் நிலையத்தில் போஸ் வெங்கட் இடம் அடி வாங்கி துடிக்கும் காட்சி மனைவிக்கு மீன் குழம்பு செய்து பாசம் காட்டுவது. தனது இடத்தை கொடுக்க மறுப்பது. இப்படி பல காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார் சிறப்பாக இருக்கிறது நடிப்பு.

🌹 ரோஜா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜாவுக்கு ‘லெனின் பாண்டியன்’ ஒரு முக்கியமான தமிழ் சினிமா ரீ-என்ட்ரி. அவருடைய முதல் படம் செம்பருத்திக்கு இசையமைத்த இளையராஜாவே இந்த ரீ-என்ட்ரி படத்திற்கும் இசையமைத்திருப்பது ஒரு அழகான சினிமா இணைப்பு.
சந்தனம் “என்ற கதாபாத்திரத்தில் பாசமுள்ள மனைவியாக, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் ,முட்டை காளான் குழம்பு வைத்து ராசாவுக்காக காத்திருக்கும், காட்சி கண் கலங்க வைத்து விடுகிறார்.

மாற வர்மன், பிரியா வுக்கும திருமண விருந்து வைப்பது, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது ,என்று தெரிந்த பிறகும் தன்னை திருமணம் செய்து கொண்டார் ராசா என்று நெகிழ்ச்சியாக சொல்லும் போது மனம் கனக்கிறது. இனி நிறைய படங்களில் இவரை காணலாம்.

❤️ ஸ்ரிதா ராவ் – பிரியா

என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்ஷனுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல், கதையின் போக்கில் முக்கியமான பாத்திரமாக அவர் இருக்கிறார். தன்னம்பிக்கை பெண்மணியாக , மேக்கப் இல்லாமல் இளமை துள்ளும் வகை யில், அழகான நடிப்பை வழங்கி இருக்கிறார். கணவனை அவமானபடுத்தும் மேலதிகாரியிடம், பொங்கி எழுவது, ஆஸ்பத்திரியில் அழுது புலம்புவதும், என்று ப்ரியா வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

☘️சில காட்சிகளில் வந்தாலும், நீதிக்காக உயிரை கொடுக்கும் VO அர்ச்சனா ரவிச்சந்திரன் , சாமானியனை சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து காலில் போட்டு மிதிக்கும் போஸ் வெங்கட் , மணல் மாஃபியா கும்பலின் தலைவன் யுவகேந்திரா, முக்கிய அம்சமாக கோர்ட் சீன் காட்சி அதில் நீதிபதி பீமா ராவ் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியம் , வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. ராஜரத்தினம் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன். அமைச்சர் பெரிய கருப்பன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் டி. சிவா, ஜோசப் வேடத்தில் ஜெயபிரகாஷ், சி. பி . ஐ கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார்

சுப்பு பஞ்சு , சரவண சுப்பையா தனக்கு கீழுள்ள காவலர் மீது காட்டும் வன்மம். இப்படி எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.நடிகர்கள் தேர்வு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

🎼 இளையராஜா – இன்னொரு பெரிய சிறப்பு

இந்தப் படத்தின் மற்றொரு மிகப்பெரிய ஈர்ப்பு இளையராஜாவின் இசை. சத்யஜோதி பிலிம்ஸ் – இளையராஜா கூட்டணி சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. மேலும் ‘பாண்டி முனி கேக்குது’ பாடலை இளையராஜாவே எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார்.

ஒன்று. அவரின் பிரமாண்டமான இசையில் நம்மை கிராமத்துக்கே நம்மை கூட்டி சென்றுள்ளார் இளையராஜா –பின்னணி இன்னொரு பெரிய சிறப்பு

☘️A.M. எட்வின் சகாய் அவர்கள் – ஒளிப்பதிவு, அருமையாக இருக்கிறது. இயக்குனர் பாரதிராஜா சார் படங்களில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

☘️நாகூர் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது . மணல் மாஃபியா கும்பல், கங்கை அமரன், ரோஜா வீடு, தர்ஷன் அவமானம் இப்படி எல்லாம் கச்சிதமாக படத்தொகுப்பு செய்து இருக்கிறார்.

☘️அதூரி ஜெய் குமார ஆர்ட் டைரக்டராக பணி புரிந்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன்.துரைராசா வீடு,வாணியங்குடி கிராமம் ,பாண்டிமுனி கோயில் ,கோர்ட் என்று சிறப்பாக அரங்கம் அமைத்து இருக்கிறார்.

🔥 தளபதி தினேஷ் –அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் இயல்பான முறையில் எதார்த்தமாக வந்து இருக்கிறது.

🔥டி.டி. பாலச்சந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படம் அவருக்கும் இயக்குநராக அறிமுகப் படமாகும்.

கதையின் முக்கியப் பின்னணி மணல் கொள்ளை. அதனால் மண், மக்களின் வாழ்வியல், உரிமைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதையாக படம் உருவாக்கியுள்ளார் இதில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

ஷ்ரத்தா தன்னம்பிக்கை பெண்மணியாக காட்சி படுத்தி இருக்கிறார்.நீதிக்காக உயிரை கொடுக்கும் VO அர்ச்சனா ரவிச்சந்திரன் கதாபாத்திரம். சாமானியன் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்க வரும் போது காலில் போட்டு மிதிக்கும்
போஸ் வெங்கட் . மற்ற போலீசாரும் மணல் மாஃபியா விடம் கையூட்டு வாங்கி ஏழைகளுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை எதார்த்தமாக சித்தரிக்கப்படுகிறார்.

யுவகேந்திரா வின் கதாபாத்திரம் அதை எழுதிய விதம் அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில், முக்கிய பங்கு வகிக்கிறது . பாண்டி முனி கோயிலில் ,என்ன நடக்கும்? என்ற பதை பதைப்பை ஏற்படுத்துகிறது. இப்படி பல விதமான கதாபாத்திரங்களை எல்லாம் இயல்பான சமூக விழிப்புணர்வு மிக்க கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் .

புதிய கதை ,களம் அமைத்து இருக்கிறார். படத்தில் ரசிக்க வைக்க,உருக வைக்கும் காட்சிகள் நிறைய இருக்கிறது. முக்கிய அம்சமாக கோர்ட் சீன் , மீனாட்சி சாகும் சீன், போதும் பொண்ணு கொலை செய்யப்படும் காட்சி , கங்கை அமரன் துப்பாக்கி தூக்கும் காட்சி , அல்போன்ஸ் விசாரிக்கும் சிபிஐ காட்சி , போஸ் வெங்கட் மன்னிப்பு கேட்கும் காட்சி , ரோஜாவுக்கு முள் குத்தியதால் சாப்பாடு ஊட்டி விடும் காட்சி, கடைவீதியில் போலீஸ் மனைவி திட்டும் காட்சி , ஆற்று மணலை அள்ளும் காட்சி , ஊருக்குள் கான்ஸ்டபிள் துப்பாக்கி தூக்கிட்டு வர வயதான பெண் மணி கிண்டல் செய்யும் காட்சி, இப்படி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஏழை மக்களுக்கு சோசியல் மெஸேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குனர்..

இதற்கு முன் பெரிய அளவில் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகாதவர் என்பதால், இந்தப் படம் அவருக்கு முக்கியமான தொடக்கமாக அமைந்துள்ளது.
படத்தின் கதை, திரைக்கதை, எழுத்து மற்றும் இயக்கம் ஆகிய பொறுப்புகளை பாலச்சந்திரனே கவனித்துள்ளார்

படத்தின் மையக் களம் மணல் கொள்ளை, கிராம மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களுடைய உரிமைப் போராட்டம் ஆகியவற்றைச் சுற்றி அமைத்துள்ளார்
பாலச்சந்திரனின் இயக்க அணுகுமுறையில் யதார்த்தமான கதாபாத்திரங்கள், இயல்பான நடிப்பு, அழுத்தமான வசனங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

குறிப்பாக இயக்குநர் கங்கை அமரனிடம் இருந்து இயல்பான நடிப்பை வெளிக்கொண்டு வந்ததற்காக பாராட்டலாம்

நடிகை ரோஜாவிடம் பாலச்சந்திரன் கதையை விவரித்த விதம், அந்த கதாபாத்திரத்தின் நடிப்பு மற்றும் உடல்மொழி குறித்து அவர் கொண்டிருந்த தெளிவு பாராட்டலாம்

⭐ இயக்குநரின் ஸ்பெஷல் இந்தப் படத்தின் மூலம் பாலச்சந்திரன் வெறுமனே ஒரு “அறிமுக இயக்குநர்” என்ற நிலையில் மட்டும் இல்லாமல், சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து கதாபாத்திரங்களின் வழியாக சொல்ல முயன்றுள்ள இயக்குநர் என்ற அடையாளத்துடன் வருகிறார்.

மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் தொடர்ந்து புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தும் மரபில், பாலச்சந்திரனுக்கும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது
சினிமா பாணியில் ஒரு வரியில் சொன்னால்:

“முதல் படத்திலேயே மண், மக்கள், போராட்டம் என்ற மூன்று விஷயங்களையும் கதையின் முதுகெலும்பாக வைத்துக்கொண்டு களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன்..

முதல் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து யார் இவர் !!என்று கவனிக்க வைத்து விடுகிறார். இயக்குநர் . காவல் துறையை பற்றிய நுணுக்கமான விஷயங்களை ஆடியன்ஸுக்கு எளிதில் புரியும் வகையில் பேசிய படங்கள் மிகக் குறைவு.

கீழ்நிலை காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சிக்கலான நடைமுறைகளை பேசிய விதம், இடையே மெல்லியதாக வரும்நாயகன், அவர் மனைவி இடையிலான காதல், என இயக்குநரும், திரைக்கதையில் ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். மிக முக்கியமாக மணல் மாஃபியா கும்பலை எதிர்கொள்ளும் பொது மக்கள் பிரச்சினைகளை இப்படம் பேசியிருக்கும் விதம் ,வெகுவாக பாரட்டத்தக்கது. குறிப்பாக ஒரு காட்சியில் ஜார்ஜ் மரியம் பேசும் வசனத்துக்கு அரங்கம் அதிர்கிறது. சமீபகாலங்களில் வெளியான மிக முக்கியமான காட்சி அது. அதற்காகவே இயக்குனர் பாராட்டுக்குரியவர். .

மக்கள் தொடர்பாளர் சதீஷ் &சிவா AIM