🔥நாயகன் & இசை& இயக்குநர்: ஹிப் ஹாப் தமிழா ஆதி.
🔥தயாரிப்பு: குஷ்பு சுந்தர் மற்றும் ACS அருண் குமார் — Avni Movies, Benzz Media.
கதையின் மையம்
தாஸ். டைகர் சிவா, இவர்கள் சாதிக்க முடியாததை ஜீவா சாதிக்கிறார்.
கோயிலுக்கு ஒரு மோளம், சாவுக்கு ஒரு மோளம் என்று யார் இங்கு வகுத்தது ,என்ற கேள்வி எழுப்பி அதற்கு விடை காணுகிறார் .
கானா கலைஞர்களுக்கு பெருமை சேர்த்து உலகமெங்கும் அதன் வலிமையை சொல்லி இருக்கிறார். இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது
கானா கலைஞர்கள் அம்சங்களில் ஒன்றாக கானா கலைஞர்களின் உலகமும் அவர்களது வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது. தங்களது வாழ்வில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் போராட்டங்களையும் பாடல்களின் வழியாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் உலகத்தை இப்படம் பதிவு செய்திருக்கிறது
மூன்று காலகட்ட/கதாபாத்திர அமைப்பு: மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் வரும் கதாபாத்திரங்களை வைத்து படம் உருவாக்கியுள்ளார் ஆதி அவற்றுக்கான படப்பிடிப்புகளும் வெவ்வேறு காலங்களில் நடைபெற்றுள்ளது
இதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய வித்தியாசம்.
1980-களில் கர்நாடக சங்கீதம் அனைத்து இடங்களிலும் ஆட்சி செய்ய, ஆதி தன் கானா மூலம் மிகப்பெரிய கலைஞன் ஆக போராட, ஆனால் அனைத்து இடங்களிலும் கானாவை ஒதுக்குகின்றனர்.
அங்கிருந்த கதை தற்போது, இருக்கும் கால கட்டதிற்கு வர, ஆதி, ஹர்ஷத் கான் DJ மற்றும் துணை நடிகர்களாக தங்களுக்கான அங்கீகாரத்துகாக போராடி வருகின்றனர்.
அந்த போராட்டத்தின் போது ஒரு பெரிய தயாரிப்பாளர் மகனிடம் மோதும் நிலை உருவாகிறது, இருவரும் ஒரே பெண்ணை காதலிக்க, அப்போது இருவரும் அடிதடி வரை சென்று போலிஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது.
அங்கிருந்து கதை 1990-க்கு செல்ல இந்த மூன்று ஜெனரேஷனிலும் ஆதிக்கு என்ன ஆனது, அவர் தடைகளை தாண்டி சாதித்தாரா? என்பதை இன்றைய ஜென் சி-க்கு ஏற்றவாறு சொல்லியிருப்பதே இந்த மீசைய முறுக்கு 2
❤️நாயகன் ஆதி
தாஸ், டைகர் சிவா, ஜீவா என 3 காலகட்டங்களில் அவரின் ரோல் கச்சிதமாக கலக்கியுள்ளார், அதிலும் தாத்தாவாக கருணாஸ், பாபா பாஸ்கர் மாஸ்டரை அப்பாவாக கொண்டு வந்த ஐடியா சூப்பர்.
இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத புதுமை!!
முதல் பாதி முழுவதும் இன்றைய ட்ரெண்ட் இன்றைய ஜென் சி-யை கவரும் அத்தனை அம்சமும் நிரம்பி வழிகிறது, டிஜே டாலியுடன் கலாய்ப்பு, லைலா உடன் காதல், காதலர் தினத்தன்று ஏமாற்றம், யோகி பாபு சலூன் கடையை ஸ்டுடியோவாக மாற்றும் ஐடியா, பக்ஸ் மகன் சஞ்சயிடம், அடிக்கடி மோதும் கலாட்டா, என்று படம் ரெக்க கட்டி பறக்கிறது.
தாஸ் ,லட்சுமி இருவரின் கெமிஸ்ட்ரி அழகாக இருக்கிறது ..அந்த கடற்கரை ஓரத்தில் இருவரும் அமர்ந்து எதிர்காலத்தைப் பற்றி பேசும் காட்சி வெகு சிறப்பு.
சேஷாத்ரி இடம் தாஸ் பேசும் காட்சிகள் இளைய தலைமுறைக்கு ஒரு மோட்டிவேஷனாக இருக்கும்.
இப்படி முதல் பாதியில் தாஸ் கதாபாத்திரமும், ஜீவா கதாபாத்திரமும்,
2 லட்டு” சாப்பிட்ட மாதிரி ஆதி கலக்கியிருக்கிறார்அதிலும் விஜய் வரதராஜ், ஷாரா, ஹர்ஷத் கான், யோகிபாபு என அனைவருமே தங்கள் ஒன் லைன் மேனரிசம் என கலக்கியுள்ளனர், அதிலும் ஆங்காங்கே வரும் மீசைய முறுக்கு பர்ஸ்ட் பார்ச் ரெபரன்ஸ் சூப்பர்.
இரண்டாம் பாதியில் டைகர் சிவா கதாபாத்திரம் செம, எமோஷ்னலாக இரண்டாம் பாதியை தாங்கி பிடிக்கிறது. அதிலும் அப்பா-மகன் எமோஷ்னல் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம், அதே நேரத்தில் படத்தின் வசனங்கள், ரேஸை ஒன்றாக ஆரம்பித்தால் தான் அது பெயர் ரேஸ், ஒரு கிரவுண்ட் கட்டி அதுக்குள்ள அவுங்க மட்டும் விளையாட்றது என்ன ரேஸ்? போன்ற வசனங்கள் இன்றைய தலைமுறை கொண்டாடும்படி உள்ளது.
நீ ஜெயிச்சுட்டு வா யார் உன்னை தடுக்கிறேன்னு பார்க்கிறேன்! என்று ரம்யா சொல்லும் வசனம். இப்படி படம் முழுக்க, முத்து முத்தான வசனங்கள் கொட்டி கிடக்கிறது.
இசைதான் படத்தின் இன்னொரு ஹீரோ!
இந்தப் படத்தின் இசையையும் ஆதி தான் அமைத்துள்ளார். “Aura 10/10”, “Pappali Pazhamey”, “Goindhamma” போன்ற பாடல்கள் மிகவும் ரசிக்க வைக்கிறது.
நாயகன் & இசை & கதை, திரைக்கதை இயக்கம் ஹிப் ஹாப் ஆதி எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்துள்ளார் படத்தில் ரசிக்க வைக்க நிறைய காட்சிகள் இருக்கிறது .
காமெடியில் பார் சண்டை, ஷேசாத்ரியுடன் தாஸ் விடும் ஆரம்ப காலசவால் . லைலா வின் இளமை துள்ளும் நடனம். ரம்யா ரங்கநாதனின் பரதம் கலந்த குத்தாட்டம்.
காதலர் தினத்தன்று சஞ்சய், ஜீவா, அஸ்ரத் மூவருக்கும் அல்வா கொடுக்கும் லைலா. கருணாஸ் சொல்லும் பிளாஸ் பேக்கில், டைகர் சிவா என்ட்ரி இப்படி படம் முழுக்க இளைஞர்கள் விசில் அடித்துக் கொண்டாட நிறைய காட்சிகள் வந்து போகிறது.
பாடல்கள் செம வைப் தான், பின்னணி இசை கலக்கி இருக்கிறார் சகலகலாவல்லவன் ஆதி.
❤️வாணி யாக, ரம்யா ரங்கநாதன் வரும் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலம் படத்தை தூக்கி நிறுத்துகிறது. அவரது விழிகள் பேசுகிறது. அவரது நடிப்பு மிக அருமை .
பிறந்த வீட்டை விட்டு விட்டு, டைகர் சிவா உடன் அவர் பைக்கில் ஏறும் போது வெறும் சைகையால் போலாம் என்று சொல்லும் காட்சி.
கணவன் டிவியில் பாடப் போகிறார் என்று உற்சாகப்படுத்தி அனுப்பும் காட்சி.
கணவனுக்காக கோயிலில் அர்ச்சனை செய்துவிட்டு அவசரமாக பஸ்ஸில் ஏறும் பொழுது படிக்கட்டில் தவறி விழுந்து கீழே விழும் காட்சி.
மேடையில் கானா பாட்டு பாடும் டைகர் சிவாவுக்கு கீழே குத்தாட்டம் போடும் ரம்யாவின் ஆட்டம். என படம் முழுக்க ரம்யாவின் நடிப்பு, நடனம், முகம் பாவம் பட்டையை கிளப்புகிறது. மறக்க முடியாத இளம் தென்றலாக வசந்தத்தில் வரும் வண்ணத்தாரகையாக ரம்யா படம் முழுக்க நிறைந்து இருக்கிறார். படம் விட்டு வெளியே வந்த பிறகும் அவரது கதாபாத்திரம் கண்முன் நிழலாடுகிறது.
🥅சாமானியர்களை சாதாரணமாக எடை போடும் நரேன் கதாபாத்திரம் சிறப்பு அவர் நடிப்பு அருமை.
கருணாகரன் தாஸ் க்கு,உதவி செய்யும் அருமையான வேடம் காட்சிகள் குறைவு என்றாலும் அவர் வரும் காட்சிகள் நிறைவு.
சலூன் கடை நடத்தும் யோகி பாபு ,வரும் இடங்களில் கலகலப்பு.
அஷ்ரத் ஜீவாவின் நண்பனாக கலகலப்புக்கு கை கொடுக்கிறார்.
இளமை துள்ளும் லைலா கதாபாத்திரம், சஞ்சய் கேரக்டர் கலகலப்பு . அடாவடி
கருணாஸ் வரும் காட்சிகள் அவ்வளவு சிறப்பாக இருக்கிறது. அவரின் ஆலோசனை, அட்வைஸ், இளைஞர்களுக்கு ஒரு மோட்டிவேஷனாக இருக்கும்.
பாபா பாஸ்கர் கதாபாத்திரம் இடைவேளைக்குப் பிறகு அருமையாக இருக்கிறது. தன் கனவுகளை தொலைத்து விட்டு மகனுக்காக பஸ் டிரைவராக மாறும் இந்த கதாபாத்திரம் படத்தில் மிகச்சிறப்பான கதாபாத்திரம்.
கைத்திரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் மூவரும் அழகான தேவதைகளாக அசத்தியிருக்கிறார் கள்.
நாசர் சில காட்சிகளில் வந்தாலும், அதை சிறப்பாக செய்துள்ளார்.
சாரா இயக்குனராக பாலாஜி, என்ற வேடத்தில் ஆதியின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கொடுக்கிறார்.
🥅தொழில் நுட்ப கலைஞர்கள்.
🎬 முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள்
இயக்கம்: ஹிப்ஹாப் தமிழா ஆதி
கதை / திரைக்கதை: ஹிப்ஹாப் தமிழா ஆதி
கூடுதல் வசனங்கள்: கரண் கார்க்கி, நிதிஷ் D
ஒளிப்பதிவு: பாலாஜி சுப்பிரமணியம்
கூடுதல் ஒளிப்பதிவு: மதீஷ் மாணிக்கம்
படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர், திருமலை ராஜன் R
இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி
பாடல்கள்: ஹிப்ஹாப் தமிழா ஆதி
கலை இயக்கம்: V.S. தினேஷ் குமார்
ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி
நடன இயக்கம்: ரகு தாப்பா
சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்
DI: Mango Post
கலரிஸ்ட்: அருண் சங்கமேஸ்வர்
VFX: 85FX, Hocus Pocus
சவுண்ட் மிக்சிங்: கண்ணன் கணபத்
சவுண்ட் டிசைன்: A. சதீஷ் குமார்
தயாரிப்பு: குஷ்பு சுந்தர், ACS அருண்குமார்
நிறுவனங்கள்: Avni Movies, Benzz Media
⭐ . மூன்று தலைமுறைகளின் இசை உலகம் படத்தின் முக்கியமான சிறப்பு, கானா இசை மற்றும் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை வெவ்வேறு தலைமுறைகளின் வழியாகப் பார்க்கும் முயற்சி. இதனால் முதல் பாகத்தைக் காட்டிலும் கதை களம் விரிவடைந்துள்ள. ஆதிக்கு டபுள் ரோல்!
படத்தில் ஆதி இரண்டு காலகட்டங்களைச் சேர்ந்த கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். ஒரு கதாபாத்திரம் இசைக்கலைஞராகவும், குறிப்பாக இந்திய பாரம்பரிய இசை தொடர்பான கட்டுப்பாடுகளை கேள்வி கேட்கும் மனநிலையுடனும் வடிவமைக்கப்பட்டது
கெட்டிகா சர்மாவின் வித்தியாசமான பாத்திரம். கெட்டிகா சர்மா ‘லைலா சிங்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் நடனக் கலைஞராக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. ரம்யா ரங்கநாதன் படத்திற்கு மிகப்பெரிய பலம். பெரிய நடிகர் பட்டாளம்
🥅இசைதான் படத்தின் இன்னொரு கதாநாயகன்! 🎵
இயக்கம், நடிப்பு மட்டுமல்லாமல் இசையமைப்பையும் பாடல் வரிகளையும் ஆதி கவனித்திருக்கிறார். எனவே இசைக் கலைஞர்களின் உலகத்தைப் பற்றிய கதைக்கு இசை மிகவும் முக்கியமான தூணாக அமைந்துள்ளது.
🥅 தயாரிப்பில் மீண்டும் அவ்னி மூவீஸ்
முதல் பாகத்துடன் தொடர்புடைய Avni Movies நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. குஷ்பு சுந்தர் மற்றும் ACS அருண்குமார் தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது
மொத்தத்தில் பாஸ்: மீசைய முறுக்கு 2 என்பது முதல் பாகத்தின் காதல்/கல்லூரி அனுபவத்தை மட்டும் மீண்டும் சொல்லும் sequel போல இல்லாமல், “இசையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு மனிதனின் கனவு – அந்தக் கனவுக்காக அவன் சந்திக்கும் போராட்டம் – இசையின் தலைமுறைப் பயணம்”
வெற்றி பட்டியலில் இடம் பிடித்துள்ளது மீசைய முறுக்கு 2 இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள் .ரசிக்கிறார்கள்
மீசைய முறுக்கு பார்ட் 3 கண்டிப்பாக வரும் என்று எதிர்பார்க்கலாம்.
PRO: Riaz K Ahmed, Paras Riyaz, Sathish (S2 Media)
