🎬 டோரதி – கதை என்ன?
கதை 1990களின் தொடக்க கால கிராமப்புறத் தமிழ்நாட்டில் நடக்கிறது. கார்த்தி, சுப்பு என்ற இரு சிறுவயது நண்பர்கள் சிறு வயது முதலே பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமானவர்கள். ஆனால் அவர்கள் வாழும் சமூகச் சூழல் சாதிப் பிரிவினை, வன்முறை, ஆணாதிக்கம் போன்றவற்றால் நிரம்பியிருக்கிறது. கெளரவம் தான் முக்கியம் என தனது மனைவியையும் மகளையும் கொன்று விட்டு தனது 3 மகன்களுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வீரய்யாவ்வின் (முத்துகுமார்) கடைக்குட்டி மகன் தான் சுப்பு (சனந்த்). பள்ளி தோழன் (ரிஷிகாந்த்) சில மாணவர்கள் அடிக்க பள்ளிக் கூடத்திலேயே புரூஸ் லீ போல சண்டைப் போட்டுக் காப்பாற்றி நட்பாகிறான்.
அடி ,தடி ,வெட்டு குத்து ஈசியாக கொலை செய்வது என்று வீரய்யாவின் குடும்பம் ஒரு அடாவடி குடும்பம். அந்த குடும்பத்தில் வளரும் சுப்பு, கார்த்தி இருவருக்கும் வழிகாட்டியாக, ராமச்சந்திரன் இருக்கிறார்.
சௌந்தரராஜன் 2வது அண்ணன் திடீரென டோரதியை (கீர்த்தி சுரேஷ்) திருமணம் செய்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு மலையாளி அவருடன் சனந்த் நெருக்கமாக பழக அதை “வீரய்யா எதிர்க்கிறார். கார்த்தி ,தனலட்சுமி என்ற பெண்ணை விரும்ப சாதி, இனம் பார்த்து வீரையா அவர்கள் காதலை பிரிக்கிறார்.
மலையாளியான கீர்த்தி சுரேஷை விடுவாரா? இடைவேளைக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்கிறது. அது “சனந்த்க்கு பேரதிர்ச்சி யாக அமைய, காலம் கார்த்தியையும் சுப்புவையும் பிரிக்கிறது .அது ஏன்? மீண்டும் ஒன்று சேர்க்கும் ஒரு பயணம் வருகிறது. அந்தப் பயணத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா?
ஒருகாலத்தில் உயிர் நண்பர்களாக இருந்த, இருவரின் உறவு மிகப்பெரிய சோதனைக்கு உள்ளாகிறது. அது என்ன ?என்பதை அற்புதமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நடிகர் & நடிகைகள்
🎭 சனந்த் – ‘சுப்பு’ கதாபாத்திரம் மிகவும் உணர்வுப்பூர்வமான பாத்திரம். ஆரம்பத்தில் நண்பனுக்காக நிற்கும் சிறுவனாகவும், பின்னர் சூழல் அவனை மாற்றும்போதும் அவருடைய நடிப்பில் அந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக பயம், பாசம், குழப்பம், குற்றவுணர்வு போன்ற உணர்வுகளை அதிகப்படியான வசனங்கள் இல்லாமல் முகபாவனைகளில் வெளிப்படுத்துவது அவரது நடிப்பின் சிறப்பு .
மேலும், சனந்த் ஒரே மாதிரியான உடல் மொழியில் கதாபாத்திரத்தை நகர்த்தாமல், கதையின் வெவ்வேறு கட்டங்களில் மாறுபட்ட நிழல்களை காட்டியிருக்கிறார் கார்த்தியின் அம்மா, மடியில் தலை சாய்த்து ஆறுதல் கொள்வது.
கீர்த்தி சுரேஷிடம் நிலையை சொல்லி ஆறுதல் தேடுவது .என் அம்மா ,அக்கா இந்த கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். என்று புலம்புவது , இப்படி பல காட்சிகளில் நம்மை நெகிழ வைக்கிறார். இடைவேளைக்கு பிறகு அவருடைய கதாபாத்திரம், அவர் நடிப்பு, எல்லாமே வேற லெவல் .தேசிய விருதுக்கான அத்தனை அம்சங்களும் மிகுந்து இருக்கிறது. வாழ்த்துக்கள்
🔥 ரிஷிகாந்த் – ‘கார்த்தி’ சுப்புவுக்கு நேர்மாறான ஆளுமையாக வளர்கிறான். கிராமத்து சூழல், ஆண்மை பற்றிய சமூகக் கட்டுப்பாடுகள், வன்முறை ஆகியவை அவரது குணம் சிறுவயதுக்கும், வாலிப வயதுக்கு ம்,எப்படி மாறுகிறது என்பதை அவரது உடல் மொழி மற்றும் பார்வை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரிஷிகாந்தின் நடிப்பில் அமைதியான தருணங்களிலும் ஒரு அழுத்தம் இருப்பது முக்கியமான அம்சம். குறிப்பாக சனந்துடன், வரும் காட்சிகளில் அவர்களுடைய நட்பு இயல்பாகத் தெரிகிறது; பின்னர் உறவில் ஏற்படும் மாற்றங்களும் அந்த chemistry காரணமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நண்பன் சுப்புவின் அப்பா வீரய்யாவால் அவமானப்படுத்தபபடும்பொழுதும்,
தன் காதலி தன்னை விட்டுப் போய் விட்டாளே என்று கலங்கும் பொழுது,
நண்பனுக்காக புழுதி காட்டில் சேகர் உடன் அனல் தெறிக்க சண்டை போடும்போதும் , சுப்புவின், அண்ணன்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல், நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தினால் அவர் தடுமாறும் காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் நடிகர் முரளி இருவரையும் கலந்த கலவையாக முள்ளும் மலரும் காளியை ஞாபகப்படுத்துகிறார்.
🤝 இருவரின் Chemistry – படத்தின் இதயத் துடிப்புநமக்கு மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றுவது, சனந்த்–ரிஷிகாந்த் இருவரையும் தனித்தனியாக மதிப்பிடுவதைவிட, இருவரும் சேர்ந்து வரும் காட்சிகளைப் பார்க்கும்போதுதான் அவர்களின் நடிப்பின் முழு பலமும் தெரிகிறது இருவருக்கும் இனி தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் அதிகம் வரும் என்பது உறுதி!
🌟 கீர்த்தி சுரேஷ் – ‘டோரதி’ கதாபாத்திரம் படத்தின் மனிதநேயமான மையப்புள்ளி என்று சொல்லலாம். மதுரையின் 90களின் ஆணாதிக்கம், வன்முறை நிறைந்த சூழலுக்குள் வரும் டோரதி, வன்முறை நிறைந்த வீரய்யா, வேலன், கலை, சுப்பு குடும்பத்தில் சௌந்தர்ராஜன் மனைவியாக வருகிறார். கீர்த்தி இந்தக் கதாபாத்திரத்தை அதிகமான வசனங்களால் அல்லாமல், அமைதியான உடல்மொழி மற்றும் முகபாவனைகளால் கொண்டு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதையின் மையம் இவர் . ‘Dorothy’ என்ற பெயருக்கு “Gift of God” என்ற பொருள் படத்தின்” கிஃப்ட் கீர்த்தி சுரேஷ் தான்
🔥 துணை நடிகர்கள். ராமச்சந்திரன் (வடிவு) என்ற கதாபாத்திரத்தில் சுப்பு ,கார்த்தி இருவருக்கும் இணைந்து குற்றம் புரிய வைக்கிறார். மற்றும் துரைராஜ், கஜராஜ், ஜீவா சுப்பிரமணியன், சௌந்தரராஜன் உள்ளிட்ட நடிகர்களும் படத்தின் மதுரைச் சூழலுக்கு இயல்பான தன்மையைச் சேர்க்கும் முக்கியமான வேடங்களில்நடித்திருக்கிறார்கள்.
முத்துக்குமார், வீரய்யா” என்று படம் முழுக்க , வில்லாதி வில்லனாக ,சாதி வெறி பிடித்த, மனிதராக சம்பவம் செய்யும் மனிதராக அற்புதமான நடிப்பு கொடுத்திருக்கிறார் அவருக்கு விருதுநிச்சயம்.
அதேபோல ஜீவா, திருநங்கைகளுக்கு குரல் கொடுக்கும் தைரியமான பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
🔥 தொழில் நுட்ப கலைஞர்கள் ☘️இசை ஞானிஇளையராஜா, இசையின் ஸ்பெஷல். பின்னணி இசைதான் மிகப்பெரிய பலம் படத்தின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது — நட்பு, குடும்ப உறவு, பதற்றம், வலி, வன்முறை என. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப இளையராஜாவின் BGM காட்சிகளின் உணர்ச்சியை மேலும் அழுத்தமாக்குகிறது குறிப்பாக இடைவேளைக்கு முன் வரும் சன்டை காட்சி களில் இசை தனி கதாபாத்திரம் போலவே செயல்படுகிறது.
கார்த்திக் சுப்பராஜ்–இளையராஜா கூட்டணி. கார்த்திக் சுப்பராஜ் இதுவரை தனது படங்களில் இளையராஜாவின் பாடல்கள் அல்லது இசையை முக்கியமான தருணங்களில் பயன்படுத்தி வந்தவர். ஆனால் டோரதியில், முழுப் படத்திற்கும் இளையராஜாவே இசையமைத்திருப்பது இதுவே முதல் முறை.
. “☘️கல்யாண விருந்து” பாடலுக்கு இளையராஜா இசையமைத்து, அவரே வரிகளும் எழுதிய பாடல் இது. யுகேந்திரன், அந்தோணி தாசன், பிரியா ஜெர்சன் பாடியுள்ள இந்தப் பாடல், படத்தின் வழக்கமான இருண்ட மனநிலைக்கு மாறாக உற்சாகமான இசைத் தன்மையுடன் மெஹா ஹிட் அடித்துள்ளது
☘️ “முத்துமணி” – புதுமையானபாடலில் , இளையராஜா தனது வழக்கமான ஆர்க்கெஸ்ட்ரா அணுகுமுறையுடன் மட்டும் நிற்காமல், எலக்ட்ரானிக் இசைத் தாக்கத்தையும் இணைத்திருக்கிறார். “முத்துமணி” பாடலில் Basel-ஐச் சேர்ந்த electronic duo Twerking Class Heroes உடனான கூட்டணியும் குறிப்பிடத்தக்கது.
☘️ இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் “பீட்சாவில் புதுமையைத் தேடிய கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டாவில் genre-ஐ விளையாடிய கார்த்திக் சுப்பராஜ், இப்போது டோரதியில் மனிதர்களுக்குள் இருக்கும் உணர்வுகளைத் தேடியிருக்கிறார். அதனால் இது அவருடைய 10-வது படம் மட்டுமல்ல… அவருடைய சினிமா பயணத்தை மீண்டும் உள்ளிருந்து பார்க்க வைத்த படம்!”
☘️சுப்பு ,கார்த்தி நட்பு இடையே ஆழமான அன்பு இருந்தாலும், சுப்பு வின் அப்பா பார்க்கும் சாதி வேற்றுமை, கிராமப்புறங்களில் நிலவும் இயல்பானதுதான். தங்க மலர், கார்த்தி இருவரின் காதலை, சாதி எப்படி காதலை பிரிக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் . சேகருடன், நண்பர்கள் இருவரும் செம்மன் புழுதியில் ,சன்டை போடும் காட்சி அனல் தெறிக்க, மண்மணம்மாறாத இயல்பான சன்டை. முத்து பாண்டி , சௌந்தரராஜன் இருவரும் அண்ணன் தம்பி யாக இருந்தாலும் அடித்து கொண்டு புரளும் காட்சிகள் சுப்பு அழும் போதெல்லாம்
ஆம்பளை அழகூடாதூடா” என்று கார்த்தி ஆறுதல் சொல்வது ‘
🔥கடும் நெடும்பயணமானநட்பு பற்றிய பயணம் என நண்பர்கள், சின்ன வயதில் இருந்தே நட்பு, விளையாட்டு, சன்டை, தியேட்டரில் படம் பார்ப்பது ,என்று கிராமத்து நண்பர்களை கண்முன் காட்டியிருக்கிறார் இயக்குனர் . முத்துகுமார் வில்லத்தனம் மிரட்டலாக இருக்கிறது .
வாடா கடைக்குட்டி என்ற டயலாக் இயல்பு . கிராமத்தில் சாதி பார்க்கும் சம்பிரதாயம் எப்படி வன்மங்களை விதைக்கிறது என்பதை இயக்குனர் கோடிட்டு காட்டி இருக்கிறார்.
கிணற்றில் விழுந்து தான் அம்மா, அக்கா இறந்தார்கள் .என்று சுப்பு சொல்லும் காட்சி அவர் மீது அனுதாபம் கொள்ள வைக்கிறது. அம்மாவாக நினைத்து கொள், என்று கார்த்தியின் அம்மா ,மடியில் தலை சாயவைப்பது பாசத்தின் பெருந்தகைப்பு. திரு நங்கையிடம் சாபம் வாங்க கூடாது என்பதையும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார் இயக்குனர்.
🎬 இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் – டோரதியில் என்ன ஸ்பெஷல்?
மீண்டும் தனது indie ரூட்ஸுக்குத் திரும்பியிருக்கிறார் மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ போன்ற பெரிய அளவிலான படங்களுக்குப் பிறகு, டோரதி மூலம் ஆரம்பகால கார்த்திக் சுப்பராஜை நினைவுபடுத்தும் வகையில் சிறிய அளவிலான, கதையை முன்னிலைப்படுத்தும் படத்துக்கு திரும்பியிருக்கிறார
☘️. மதுரை வாழ்க்கை அனுபவம் கதைக்குள் வந்திருக்கிறது
கார்த்திக் சுப்பராஜின் சொந்த மதுரை பின்னணி, அங்கு சிறுவயதில் பார்த்த மனிதர்கள் மற்றும் சமூகச் சூழல்கள் ஆகியவை டோரதியின் உலகத்தை உருவாக்குவதில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன
ரிஷிகாந்த்–சனந்த் மீது வைத்த நம்பிக்கை இருவரையும் தேர்வு செய்தது
🌟 கீர்த்தி சுரேஷை தேர்வு செய்த விதம்
🎥 டோரதி – தொழில்நுட்பக் குழு
இயக்கம் & திரைக்கதை: கார்த்திக் சுப்புராஜ் கூடுதல் திரைக்கதை: சரவணன் சந்திரன்
🔥தயாரிப்பாளர்கள்: ஜோதி தேஷ்பாண்டே, குணீத் மோங்கா கபூர், அச்சின் ஜெயின்
☘️ திருநாவுக்கரசு (Thiru)
ஒளிப்பதிவு கரிசல்காட்டு மண்ணையும்,
வித்தியாசமான கலர் கரெக்ஷனில் காட்டி இருப்பது சிறப்பான ஒளிப்பதிவு.
மதுரை கிராமத்து மண்ணை வெகு இயல்பாக படம் பிடித்திருக்கிறது கேமரா.
☘️கணேஷ் சிவா
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது குளத்தை அடுத்து என்ன நடக்கும் என்று வகையில் செதுக்கி இருக்கிறார்.
☘️தினேஷ் சுப்பராயன்
அமைத்திருக்கும் சண்டை காட்சிகள் கிராமத்து தெருக்களில் நாம் அருகே பார்ப்பது போல வெகு இயல்பாக இருக்கிறது. சினிமா தனம், ஜிகினாத்தனம் இல்லாத இயல்பான சண்டை காட்சிகள்.
🔥நடன அமைப்பு: ஷெரிஃப் M
கல்யாண விருந்து பாடலுக்கு நடன அமைப்பு அருமையாக இருக்கிறது.
☘️கலை இயக்கம் / Production Design: குமார் கங்கப்பன்
ஒவ்வொரு காட்சிக்கும் இயல்பான மொழியில் கலை இயக்குனர், எது நிஜம் ,இது நிழல்! என்று தெரியாத அளவுக்கு பணி புரிந்திருக்கிறார்.
🔥ஆடை வடிவமைப்பு: பிரவீன் ராஜா
கிராமத்தில், அங்கு வாழும் மனிதர்கள். திருநங்கைகள், என ஒவ்வொருவருக்கும் ஆடை வடிவமைப்பு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
🔥கார்த்திக் சுப்புராஜ் கேரியரில் இது தவிர்க்க முடியாத ஒரு முக்கிய படம். இளையராஜா விட்ட இடத்தை நிரப்பி இருக்கிறார். இந்தக் கதைக்கு இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலம். முதல் பாதி நண்பர்களின் கலாட்டா அவ்வப்போது காதல் ரவுடிசம் என்று சுப்பிரமணியபுரத்தை ஞாபகப்படுத்தினாலும் இரண்டாம் பாதியில் இயக்குனர் கதையின் போக்கையே எதிர்ப்பறாத விதமாக மாற்றிவிட்டார் . தமிழ் சினிமாவிற்கு இந்த கதை புதிதுதான். இசை தாலாட்டுகிறது கதை நம்மை உருக்குகிறது இந்த படத்திற்கு விருது நிச்சயம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
☘️Sync Sound: தாமஸ் குரியன்
☘️Sound Design: சுரேன் G, S. அழகியகூத்தன்
Sound Mix: சுரேன் G
Dialogue Edit & Mix: கிருஷ்ணன் சுப்ரமணியன், வருண் வெங்கடராமன்
Executive Producer: பவன் நரேந்திரா
Trailer Editing: கணேஷ் சிவா
Publicity Design:
:🔥மக்கள் தொடர்பாளர்கள் திரு.சுரேஷ் சந்திரா& திரு.அப்துல் நாசர் அவர்கள்
⭐ மொத்தத்தில், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு குறிஞ்சி மலர் “டோரதி 🌸
