🔥 நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில், முருகா பட புகழ் அசோக், முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் சார்ந்த இன்வெஸ்டிகேஷன் திரைப்படம் “கிட் டி” வெற்றி பட்டியலில், இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள். கிளாசிக் சினிமா ☘️
இப்படத்தை” ரியா ஸ்ரீ கிரிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் திருமாறன் தயாரிததுள்ளார்.
🔥ஆரம்பத்தில் கடலூர், கடற்கரையில் ரவுடி சிவா கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இதை ராஜபாண்டியன் துப்பு துலக்க (யுகன்)
வருகிறார். அப்பொழுது எதிர்பாராமல் இன்னொரு கொலையாக பிரியா, அவரது பெட்ரூமில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த இரண்டு கொலையும் செய்தது யார்? என்று கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பில் ராஜபாண்டியன் விசாரணை நடத்துகிறார்.
தன்னுடைய காவல்துறை அதிகாரிகளை மூலை, முடுக்கெல்லாம் கண்டுபிடிக்க ஏவுகிறார்.
பொதுவாக குற்ற பின்னணி கதைகளில் குற்றவாளியை தேடும் வழக்கமான பாணியை விடுத்து கதாநாயகனே வந்து இந்த இரண்டு கொலையை நான் தான் செய்தேன்.
என்று சரண்டர் ஆகிறார். அங்கே தான் கதையில், ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.
ஆனால் போலீஸ் கொலை நடந்த பகுதியில் கேமராக்களை ஆய்வு செய்ததில் நாயகன் மட்டுமல்ல மேலும் இரண்டு நபர்கள் அதில் சம்பந்தப்பட்டிருப்பதை,கண்டு பிடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரபரப்பான, புத்திசாலித்தனமான துப்பறியும் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர்.நெடுமாறன்.
.
பொதுவாக தொடர்கொலைகளை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் படங்களில் அடுத்தடுத்து ட்விஸ்ட்களாக அடுக்குவார்கள். ஆனால், இதில் முதல் பாதியின் பெரும்பகுதி காவல்துறை விசாரணை நடைமுறைகள் சார்ந்த, திரையில் இதுவரை சொல்லப்படாத விஷயங்களைக் கையாண்டிருப்பது புத்துணர்வு அளிக்கிறது. திறமையும் துடிப்புமிக்க இளைஞர் ராஜ
பாண்டியன், இந்தக் குழப்பமான வழக்கின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பது, சுவாரசியத்துடனும் நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
முதல் பாதியின் (அசோக் ) குற்றவாளி சிக்கியது போன்ற உணர்வைத் தந்து, இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்கிறது, இரண்டாம் பாதி. பிற்பகுதியில் நிகழும் ஒரு ட்விஸ்ட் திரைக்கதையின் ஒட்டத்துடன் இயல்பாகப் பொருந்தியிருக்கிறது. இந்த எதிர்பாராத திருப்பம் படத்தின் மையக் கதாபாத்திரங்களுக்கு அளிக்கும் அதிர்ச்சி, பார்வையாளர்களுக்கும் ஏற்படுவது, மேம்பட்ட திரைக்கதை ஆக்கத்தின் வெற்றி. கற்பனை கொலைகள் இணக்கமாகப் பரிணமிக்கும் விதம் அழகாக உள்ளது.
🔥படத்தின் நடிகர் , நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழு விபரம்
வித்தியாசமான முறையில் இதன் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர். குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் அசோக், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இது அவருடைய திரைப்படத்தில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
விஜய், என்றகதாபாத்திரத்தின் நுணுக்கங்களை உள்வாங்கி அவர் நடித்திருக்கிறார். , இது அவருடைய வழக்கமான கமர்ஷியல் ஹீரோ பாணியில் இருந்து மாறுபட்ட நடிப்பை எதிர்பார்க்க வைக்கும் படம்.
🔥2வது நாயகன்
ராஜபாண்டி யனாக- (யுகன்)
நடித்திருக்கிறார் இளமை துடிப்புள்ள ஒரு காவல் அதிகாரியாக வலம் வந்திருக்கிறார்.
கொலையும் கொலையும் சார்ந்த விஷயங்களையும் அவர் கண்டுபிடிக்கும் யுக்தி, தனக்கு கீழ் பணிபுரியும் அருண், கான்ஸ்டபிள் தேவிகா, ஆகியோரை முடுக்கி விட்டு, சினிமா தியேட்டர், மற்றும் ஜவுளிக்கடை, போன்ற இடங்களில் இன்வெஸ்டிகேஷன், நடத்தசொல்லும் இடம் ரசிக்க வைக்கிறது.
🔥நாயகிகள் –
சங்கவி – மஹா
என்ற வேடத்தில் நடித்திருக்கிறார்.
அவர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அழகும் இளமையும், அழகும் நிறைந்த இவருக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.
🔥நிஷா – பூஜா
என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். வடநாட்டு பின்னணி குடும்பத்தில் பிறந்த, இவர் அசோக்கை காதலிப்பதாக காட்டி, இந்த திரைக்கதையில் மாயாஜாலம் செய்திருக்கிறார் இயக்குனர். இவரும் ரசிக்க வைக்கிறார்.
சிமுஅத்வானி- தீப்தி,
என்ற வேடத்தில் நடித்திருக்கிறார்.
தவறே செய்யாமல் தண்டனை அனுபவித்து கொலை செய்யப்பட்டு, தோழியை காப்பாற்ற சென்று இவர் பலியாவது, அனுதாபத்தை வரவைக்கிறது.
மூன்று கதாநாயகிகள் மூன்று பேருமே கதைக்கு தேவையான ஆடல், பாடல் ,காட்சிகள் மற்றும் கதையோடு ஒன்றிப் போகிறார்கள்.
🔥டாக்டர் – (அரவிந்த் ராஜ் ) இவருக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவ வேடம் .
எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. இவரது கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. சிறப்பாக நடித்திருக்கிறார்
ஜட்ஜ் வாக, -(ஓய்.ஜி.மகேந்திரன்) அவர் ஓரிரு காட்சிகள் வந்தாலும், சிறப்பாக இருக்கிறது.
🔥 தயாரிப்பாளர் திருமாறன் இதில் காவல்துறை அதிகாரியாக களமிறங்கி உள்ளார் .
அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது இனி நிறைய படங்களில் இவரை காணலாம் வாழ்த்துக்கள் சார்.
🔥இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் கூடலூர் தரங்கம்பாடி சென்னை ஆகிய இடங்களில் சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறார்கள் .
காட்சிகளில் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட நிஜமான இடங்களில் செட் போடாமல் காட்டி இருப்பது சிறப்பான முறையில் இருக்கிறது.
🔥தொழில்நுட்ப கலைஞர்கள்
காதர் இசையில் பின்னணி, மிரட்டுகிறது. காட்சிக்கு காட்சி உயிரோட்டமாக இசையமைத்திருக்கிறார். பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்பதற்கு இனிமையாக ரசிக்க வைக்கிறது .
மாறா” என்ற பாடலை சீர்காழி சிற்பி எழுத, ஒ ஜி மகேந்திரன் பேரன் ரித்விக் பாடி இருக்கிறார். மிக இனிமையாக இருக்கிறது .
மற்ற பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
இந்த படத்தின் பாடல்களை தமிழ் மகன், சீர்காழி சிற்பி, பிரியன் எழுதி இருக்கிறார்கள் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது
🔥ஒளிப்பதிவு வி. எஸ் வேலன் சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறார்.
சினிமா தியேட்டர், ஜவுளிக்கடை, கும்பகோணம் பகுதி, கடலூர் கடற்கரை, என எல்லா இடங்களிலும் கேமரா ஒர்க் நன்றாக இருக்கிறது.
🔥படத்தொகுப்பு கார்த்திக் பாண்டியன். விறுவிறுப்பாக படத்தொகுப்பில் கச்சிதமாக செய்திருக்கிறார்
🔥ராக் சங்கரின், நடனம் ரசிக்க வைக்கிறது
🔥பாப்புலர் பாபு சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார். சண்டை காட்சிகள் விறுவிறுப்பாகவும் தெறிக்கும் படியாக இருக்கிறது .
🔥ஆர்ட் டைரக்டராக வாலி பணி புரிந்து இருக்கிறார் .காவல் நிலையம், மற்றும் வீடு, டாக்டரின் அலுவலகம், போன்ற எல்லாமே கச்சிதமாக இருக்கிறது .
🔥மக்கள் தொடர்பாளர் சரண்
படத்தை ,மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்த்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.
🔥கதை, திரைக்கதை, வசனம் ,எழுதி, இயக்கி இருக்கிறார் நெடுமாறன் மோகன்தாஸ் .
ஒரு துப்பறியும் கதையை, இந்த கோணத்திலும் சொல்லலாம் ,என்று வித்தியாசமாக சொல்லி இருக்கிறார். இன்வெஸ்டிகேஷன் பிரியர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்
படத்தின் கதை, ஒரு குற்றம் நடந்ததும் போலீஸ் விசாரணை என்ற வழக்கமான பாதையில் மட்டும் செல்லாமல், கதாநாயகனைச் சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டிருப்பது. இதுதான் ‘கிட்டி’யின் முக்கியமான திரைக்கதை அம்சம்
இது வழக்கமான க்ரைம் த்ரில்லர் அல்ல; சைக்காலஜிக்கல் த்ரில்லர் பின்னணியில் உருவாகியிருக்கும் படம்.
இந்த படத்தை தயாரித்திருக்கிறார் திருமாறன் அவருக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்பது நம்பலாம். படம் 2026 அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று உலகம் முழுவதும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் ,: மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் + குற்றப் பின்னணி + மூன்று கதாநாயகிகள் + கதாநாயகனை மையமாகக் கொண்ட சைக்காலஜிக்கல் த்ரில்லர் — இதுதான் ‘கிட்டி’யின் பெரிய ஸ்பெஷல்.
படம் வெற்றி அடைய கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது 🙏
