‘அன்பில் அவன்’ – திரை விமர்சனம்

மதிப்பீடு: 4/5

அசோக் செல்வன்–ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகியுள்ள “அன்பில் அவன்” படத்தின் மையக்கதை காதலுக்குப் பிறகு தொடங்கும் திருமண வாழ்க்கை எப்படி எதிர்பாராத ஆபத்தாக மாறுகிறது என்பதுதான்.

🎬 கதை சுருக்கம்

அசோக் செல்வன் சூர்யா என்ற கதாபாத்திரத்திலும், ப்ரீத்தி முகுந்தன் இயல் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். திருமணமான இந்த இளம் தம்பதி, கடந்த காலத்தை விட்டுவிட்டு அமைதியான மலைப்பகுதியில் புதிதாக வாழ்க்கையைத் தொடங்க செல்கிறார்கள்.

தன் காதல் மனைவி( இயல்) ஆசையை நிறைவேற்ற மலைப்பிரதேசங்களில் இயற்கை சூழ்ந்த இடத்தில் ஒரு வீடு வாங்க திட்டம் தீட்டி ஒரு அழகான வீட்டை புரோக்கர் மாணிக்கம் மூலம் தேர்வு செய்கிறார்.

மதுக்கூர் ராணி (ரேவதி) யிடம் பேசி தன் மனைவி எனக்காக தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து விட்டார்!! அவள் கனவை நிறைவேற்ற வேண்டும். என்று கெஞ்சி கேட்டு விலைக்கு வாங்கி இயலும், சூர்யாவும் பயனிக்க, ஆனால் அந்த புதிய இடத்தில் எதிர்பாராத பிரச்சினையும் ஆபத்தும் அவர்களைச் சுற்றிக்கொள்கிறது. அவர்கள் நினைத்திருந்த சாதாரண குடும்ப வாழ்க்கை, மெல்ல உயிர் பிழைப்புக்கான போராட்டமாக மாறுகிறது.

இதனால் படத்தின் முதல் பாதி காதல்–திருமண வாழ்க்கை சார்ந்ததாகவும், பின்னர் கதை ஆக்ஷன், சஸ்பென்ஸ், த்ريرலர் தளத்திற்குள் நகரும் கதையில் “காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி, தங்களுக்கான புதிய வாழ்க்கையைத் தேடி செல்லும்போது எதிர்கொள்ளும் எதிர்பாராத ஆபத்து—அந்த ஆபத்திலிருந்து அவர்கள் இருவரும் எப்படி மீள்கிறார்கள்.

அவர்களை மிரட்டும் மதுக்கூர் எம் எல் ஏ ராஜநாயஹத்துக்கு அந்த வீட்டின் மீது ஒரு கண் . அசோக் செல்வனுக்கு பல வகையான தொந்தரவு தருகிறார்.

அந்த ஊர் காவல் துறை அதிகாரி தவசிக்கு, பிரீத்தி முகுந்தன் மீது ஆசை, இதெல்லாம் பிரச்சினைகளாக பூகம்பம்பாக வெடிக்க, அந்த பிரச்சனையில் இருந்து கணவனும், மனைவியும் எப்படி தப்பித்தார் கள். என்பதே கதையின் மையம்.

🔥 அசோக் செல்வன்

படத்தில் அசோக் செல்வனின் நடிப்பு அவருடைய வழக்கமான காதல் ஹீரோ இமேஜைத் தாண்டி செல்லும் முயற்சியாக இருக்கிறது. படம் காதல்/உறவு கதையாக ஆரம்பித்து பின்னர் த்ரில்லர்–ஆக்ஷன் களத்துக்கு நகர்வதால், அவருக்கும் நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டி நடித்திருக்கிறார்.

காதல் காட்சிகளில்: இயல்பான, அதிகப்படியான ஹீரோயிசம் இல்லாத நடிப்பு.

கணவன் கதாபாத்திரத்தில்: மனைவியுடனான உறவு, கருத்து வேறுபாடு, அக்கறை போன்ற உணர்வுகளை நிதானமாக வெளிப்படுத்துகிறார்.

த்ரில்லர் பகுதியில்: கதாநாயகன் எதிர்கொள்ளும் ஆபத்து அதிகரிக்கும்போது, நடிப்பிலும் பதற்றத்தையும் அவசரத்தையும் கொண்டு வருகிறார்.

ஆக்ஷன்: இது அசோக் செல்வனுக்கு புதிய களம். அவர் 70 அடி உயரத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார. முக்கியமாக, இந்தப் படம் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக அசத்தியிருக்கிறார்.

“அன்பில் அவன்” அசோக் செல்வனுக்கு காதல் உணர்வுகளை மட்டும் காட்டும் படம் அல்ல; கணவன், காதலன், ஆபத்தில் சிக்கிய மனிதன் என மூன்று வெவ்வேறு மனநிலைகளில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ப்ரீத்தி முகுந்தனுடன் அவருடைய கெமிஸ்ட்ரியும் படத்தின் முக்கிய பலமாக உள்ளது.

❤️ ப்ரீத்தி முகுந்தன் நடிப்பு எப்படி?

காதல் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அசோக் செல்வனுடன் அவருடைய கெமிஸ்ட்ரி படத்தின் முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கதையின் திரில்லர் பகுதி தொடங்கிய பிறகு, அவரது கதாபாத்திரத்தில் இருக்கும் மர்மமும் பதற்றமும் நடிப்புக்கு கூடுதல் பரிமாணம் கொடுக்கிறது.

குறிப்பாக வெளிப்படையாக வலிமையான பெண்ணாகவும், அதே நேரத்தில் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் மென்மையாகவும் நடிக்க வேண்டிய சூழல்கள் அவருக்கு இருக்கின்றன.

ப்ரீத்தி முகுந்தனுக்கு “அன்பில் அவன்” வெறும் ஹீரோவுக்கு ஜோடியாக வரும் பாத்திரம் அல்ல; கதையின் உணர்ச்சிப் பகுதியையும் மர்மப் பகுதியையும் தாங்கிச் செல்லும் முக்கியமான கதாபாத்திரம். அதனால் அவருடைய நடிப்பில் முந்தைய படங்களை விட இன்னும் கொஞ்சம்.

காதல் கதையாகத் தொடங்கும் படம் எந்தச் சூழ்நிலையில் ஆக்ஷன் பாதைக்குள் செல்கிறது அதற்கு காரணம் நாயகி இயல் தான். கதையின் முக்கியமான பிரச்சனை என்ன? காதலர்களுக்கு என்ன நடக்கிறது? அவர்கள் எதிர்கொள்ளும் சவால் என்ன?

இளம் ரசிகர்களை கவரும் வகையில் காதல், அழகான உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஆக்ஷனும் முக்கிய பங்கு வகிக்கிறது இதனால் ‘அன்பில் அவன்’ ஒரு வழக்கமான காதல் திரைப்படமாக மட்டும் இல்லாமல், காதலுக்குள் எதிர்பாராத திருப்பங்களையும் கொணட படமாக அமைந்தது என்று சொல்லும் அளவிற்கு படம் வெற்றி பட்டியலில்.

🎭 துணை கதாபாத்திரங்கள்

🔥 சபு மோன், அப்துல் சமத், மற்றும் கதிர் பாலு: எம். எல். ஏ ராஜநாயகமாக மிரட்டி இருக்கிறார் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு அசோக் செல்வனை மிரட்டுவது சரியான நடிப்பு.

🔥 மஹா டெல்லி கணேஷ்: போலீஸ் அதிகாரி தவசியாக காமக்கொடூரனாக, நடித்திருக்கிறார் செம நடிப்பு.

🎥 தொழில்நுட்பக் கலைஞர்கள் & தயாரிப்பு

🔥 கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு: அருமை. குறிப்பாக மலைப் பிரதேசப் பின்னணியைப் பயன்படுத்தியிருக்கும் விதம் படத்திற்கு அழகையும், அதே நேரத்தில் ஒரு மர்மமான சூழலையும் உருவாக்குகிறது. பங்களாவைச் சுற்றிய காட்சிகளிலும் அந்தச் சூழல் கதையின் த்ரில்லர் தன்மையை அதிகரிக்கிறது.

🔥 ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு: படத்தொகுப்பையும் கவனித்துள்ளார். இடைவேளைக்கு முன்பு, கணவன், மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் அந்த பத்து நிமிடத்தை அப்படியே கட் பண்ணி இருந்திருந்தால் இன்னும் படம் வேகமாக இருந்திருக்கும். ஒரு பிரச்சனை வந்த பிறகு, அடுத்த கட்டம் தான் யோசிக்க வேண்டும் தவிர, அசோக் செல்வனும், ப்ரீத்தி முகுந்தன் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது பின் அந்த திருமண பாடல் என அந்த இடத்தில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைகிறது. மற்றபடி இரண்டாவது பாதி முழுவதும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர், ஆக்சன் காட்சிகளால் படத்தொகுப்பாளர் மிரட்டி இருக்கிறார்.

🌸 மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கம்: கலை இயக்கத்தை கவனித்துள்ளனர். மதுக்கூர் ராணியின் வீடு, அழகாக ஆர்ட் டைரக்டர் வடிவமைத்திருக்கிறார் .வீட்டுக்குள் ஒரு சுரங்க பாதை கொண்ட ரூம் படத்தின் சிறப்பு. அவ்வளவு அழகாக ஆர்ட் டைரக்டர் பணிபுரிந்து இருக்கிறார்.

🔥 தயாரிப்பு: ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படம் இவர்களுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் பாக்ஸ் ஆபீஸில்,வசூலும் ஹிட் அடிக்கும் என்பது உறுதி.

🎬 இயக்கம், கதை & இசை

இப் படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.

ஆரம்பத்தில் கணவன் ,மனைவி இருவரும் பைவ் ஸ்டார் ஓட்டலில் வேலை செய்வது, அங்கு நெருக்கடிகளை சந்திப்பது, பிறகு இருவரும் தங்கள் கனவை நோக்கி, தன்னிடம் இருக்கும் கார், நகைகள் விற்று, நண்பரிடம் கடன் வாங்கி, மதுக் கூரை நோக்கி பயணிப்பது, போன்ற காட்சிகள் அம்சமாக இருந்தது. அந்த காட்சிகளை இன்னும் கொஞ்ச நேரம் வராதா? என்ற அளவுக்கு இயல்பாகவும் இருவரும் நடிப்பில் அம்சமாக இருந்தது.

அதிலிருந்து மதுக்கூரை நோக்கி அசோக் செல்வனும்,பிரீத்தி முகுந்தனும் வரும்போது இடைமறிக்கும் அரசியல்வாதிகள் கொடுக்கும் அந்த டெம்போ அதிகரிக்க, அதிகரிக்க கதையின் வேகமும் படம் பார்ப்பவர்கள் இதய துடிப்பு அதிகரிக்கிறது.

அடுத்து என்ன நடக்கும்!! அந்த எம்எல்ஏ கூட்டத்திடம் இருந்து இருவரும் தப்பிப்பார்களா? அல்லது படம் சோகமான முடிவை நோக்கி செல்கிறதா? என்பதை எல்லாம் அற்புதமாக எழுதியிருக்கிறார் விக்னேஷ் ராஜா .

அந்த எழுத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். முதல் படமே வெற்றி படமாக அமைந்திருக்கிறது வாழ்த்துக்கள்.

கோவிந்த் வசந்தாவின் இசையும், பின்னணி இசையும் ,படத்தின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கிறது. காதல் காட்சிகளுக்கு மென்மையான இசையும், பரபரப்பான தருணங்களுக்கு வேகமான பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பாடல்கள் படத்தின் காதல் மற்றும் மென்மையான உணர்வுகளை முன்னிலைப்படுத்தி யிருந்தார். இசை படத்தின் பலம்.

🎵 இசை பற்றி ஒரு சுவாரஸ்யம்: கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் ஆல்பத்தில் 9 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆசை வரமே, ஹபீபி, கள்ளா நிக்கிறியே, வாழ்க்கையே, பாஷா டா, Straight Outta Sarpetta, சிறுபறவை உள்ளிட்ட பாடல்கள் இதில் உள்ளன.

🔥 அன்பில் அவன் – தொழில்நுட்பக் கலைஞர்கள்

  • இயக்கம்: ஆர். கார்த்திகேயன்

  • கதை: விக்னேஷ் ராஜா

  • திரைக்கதை: விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன், அசோக் செல்வன்

  • கூடுதல் திரைக்கதை: ஆஷாமீரா ஐயப்பன்

  • ஒளிப்பதிவு: கௌதம் ராஜேந்திரன்

  • படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே.

  • இசை: கோவிந்த் வசந்தா

  • சண்டைக்காட்சிகள்: பீட்டர் ஹெய்ன்

  • கலை இயக்கம்: மணிகண்டன் ஸ்ரீனிவாசன்

  • நடன அமைப்பு: லீலாவதி குமார், அனுஷா விஸ்வநாதன்

  • ஆடை வடிவமைப்பு: பினிதா ராமநாதன்

  • ஒலி வடிவமைப்பு: விஜய் ரத்தினம்

  • ஆடியோ கிராஃபி: ஏ.எம். ரஹ்மத்துல்லா

  • மேக்கப்: செல்வம் மணி

  • VFX: Universal Lab, Renderhood, WeDuo

  • DI: GB Colors

  • கலரிஸ்ட்: ஜி. பாலாஜி

  • பப்ளிசிட்டி டிசைனர்: கோபி பிரசன்னா

  • ப்ரமோஷன்ஸ் இயக்குநர்: கவிதா பாண்டியன்

  • Executive Producer: எஸ். சேதுராமலிங்கம்

  • Creative Producer: நோவா ஆபிரகாம் பிரபு

💥 ஆக்ஷன் & மக்கள் தொடர்பு

🔥 குறிப்பாக பீட்டர் ஹெய்ன் போன்ற பிரபலமான ஆக்ஷன் மாஸ்டர் இந்தப் படத்தில் இணைந்திருப்பது படத்தின் ஆக்ஷன் பகுதிகளுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் கடைசி 30 நிமிடங்கள் ஆக்ஷன் ரீதியாக முக்கியமாக இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு அந்த இறுதி முப்பது நிமிடம் பெரிய பங்கு வகித்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

🔥 மக்கள்தொடர்பாளர் யுவராஜ் ,படத்தை மக்களிடம் நல்ல முறையில் சேர்த்து இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.