’ஜோ,‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படங்களின் மூலம் கவனம் பெற்ற ஏகன் நடிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ள இந்தப் படம், வழக்கமான கல்லூரிக் காதல் கதையிலிருந்து மாறுபட்ட ஒரு சூழலை. ஒரு சூழ்நிலையால் பெண்கள் கல்லூரியில் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் ஒரே ஆண் மாணவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள்
அந்தக் கல்லூரியில் அவனுக்கு ஏற்படும் நட்பு, பவளக்கொடி மீது ஏற்படும் காதல், நாயகி அப்பா காட்டும் சாதிய வன்மம் , அதன் பிறகு கோவையில் இருந்து நாயகன் சென்னைக்கு வேலை தேடி புறப்படும் பயணம் .
ஐடி கம்பெனியில் பவள கொடியின் காதலுக்கும், மனோவின் காதலுக்கும், இடையில் வரும் நிவேதாவின் முன்னாள் காதலன் அருள். இவர்கள் இடையே எந்த காதல் ஜெயித்தது? என்ன நடந்தது? எனக் கதை நகர்கிறது.
சென்னை வந்த பிறகு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் நிவேதா எப்படி மனோவின் வாழ்க்கைக்குள் நுழைகிறார்! நிவேதாவின் கடந்த கால வாழ்க்கை என்ன? மனோவின் கடந்த கால வாழ்க்கை என்ன ?இது எல்லாம் அலசுகிறது இந்த படம்.
இன்றைய இளம் தலைமுறை காதலர்கள் குடித்துவிட்டு காதலியுடன் கடலை போடலாம் என்று நினைத்து போன் பேசுகிறார்கள். அதுவே அந்த காதலுக்கு தடையாக ஏற்பட்டு, சொல்ல கூடாத வார்த்தைகளை சொல்லி, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
என்பதை எதார்த்தமாக சொல்லி இருக்கிறது இந்த படம்.
இரண்டு பெண்கள் மீது காதல் ஏற்படும் சூழலும் ,கதையில் இடம்பெறுகிறது. இதனால் காதலில் யாரைத் தேர்ந்தெடுப்பது, உறவுகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை எதார்த்தமாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர்.
முக்கியமான விஷயம்: இது வழக்கமான மகிழ்ச்சியான காதல் கதை மட்டும் அல்ல. சோகத்தையும் , காதல் வலியை முன்னிலைப்படுத்தும் காதல் திரைப்படம்.
நாயகன் ஏகன்
காதல், பாசம், மனவேதனை ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் ஏகனின் நடிப்பு கவனிக்கத்தக்கது. பவளக்கொடி, நிவேதா உடன் இணைந்து வரும் காட்சிகள் படத்தின் உணர்ச்சிப் பகுதிகளுக்கு வலுசேர்க்கின்றன.
தனது கதாபாத்திரத்துக்குத் தேவையான காதல் உணர்வுகளையும் அழகான திரைத் தோற்றத்தையும் வெளிப்படுத்துகிறார்.ஏகன் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் இயல்பான நடிப்பால் கவனம் பெற்ற ஏகன், இதில் இளமைத் துடிப்பும் அப்பாவித்தனமும் கொண்ட இளைஞனாகத் தோன்றுகிறார். பெண்கள் கல்லூரியில் ஒரே ஆணாக இருக்கும் கதாபாத்திரம் அவருக்கு வித்தியாசமான நடிப்புச் சவாலான காட்சிகள்.
குடித்துவிட்டு கொடியுடன், பேசும்பொழுது நிவேதாவுடன் பேசும் பொழுதும், இயல்பாக நடித்திருக்கிறார்.
96 “படம் பார்க்கும் பொழுது இணையும் காதல், கிளைமாக்ஸ்சில் மீண்டும் அதே போல இணைவது சிறப்பு.
படம் முழுக்க எதார்த்தமாக ஒரு காதல் நாயகனாக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
கல்லூரி மாணவனாக ,ஐடி ஊழியராக, நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.
நண்பன் நாகார்ஜுனா நிவேதா பேசியதை கேட்டு நாயகனை விட்டு பிரியும் காட்சி, நண்பனை கட்டி பிடித்து அழும்போது உருக வைத்து விடுகிறார்.
நாயகி நிவேதாவை தேடி கோவை செல்லும் நாயகன் கிளைமாக்ஸ் காட்சியில் மழையில் நனைந்த பிறகு, கதாபாத்திரத்திற்கு உண்டான பரிதாபத்தை வெளிப்படுத்தி கைதட்டல் வாங்கிக் கொள்கிறார்.
ஏகன் இந்த படத்தில் பல பாவங்களை, காட்சி படுத்தி நவரச நாயகனாக நடித்துள்ளார்
நாயகி ஸ்ரீதேவி அப்பல்லா
இந்த படத்தில் பவளக்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் ஏற்கனவே மலையாளத்தில் ‘கோர்ட் – ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகை. இந்தப் படத்தில் ஏகனுடன் காதல் காட்சிகளில் இணைந்து நடித்துள்ளார். காதல் பிரிவு” சேர முடியாத ஏக்கம், நாயகனின் கேள்விக்கணைகளை தாங்க முடியாமல் அழுது புலம்பும் சோகம். என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார் .இளமை ததும்பும் கதாநாயகி தமிழுக்கு நல்ல வரவு நிவேதா சந்தித்து எந்த காரணத்திற்காக காதலை” பிரேக் அப் செய்தாய்? என்று கேட்கும் பொழுது அவர் கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? என்று நாயகன் குடித்துவிட்டு செய்த ரகளையை சொல்லும் பொழுது அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. தமிழுக்கு நல்ல வரவு ஸ்ரீதேவி அப்பல்லா
ஃபெமினா ஜார்ஜ் இவர் படத்தில் நிவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பழைய காதலன் செய்யும் வன்முறை செயலால் பாதிக்கப்பட்டு நாயகன் மனோவிடம் மனதை பறிகொடுக்கிறார். இவர்கள் இருவரும் இணைவதற்கு ஏது தடை!! என்று நினைக்கும் பொழுது ,நாயகன் மனோவால் மீண்டும் சஞ்சலத்துக்கு ஆட்படும் கதாபாத்திரம். மனக்குழப்பத்தில் சிக்கி தவிக்கும் கதாபாத்திரம் நன்றாக நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே
‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படங்களில் நடித்தவர். படத்தின் காதல் கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். இரண்டு கதாநாயகிகள் இருப்பது படத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று.
இவர் கதாபாத்திரம் கவனம் பெறுகிறது. கசக்கும் மருந்து தான் கடுநோயை போக்கும்” என்று நாயகன் கடந்த கால வாழ்க்கையை நினைத்துக் கொண்டிருந்தால் நிகழ்காலத்தில் வாழ முடியாது என்ற உண்மையை புரிய வைக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் அருமை
: மற்ற நடிகர்கள்: மைம் கோபி, நாயகனின் அப்பாவாக தங்கராசு என்ற கதாபாத்திரத்தில் ஒரு சில காட்சிகள் வந்தாலும் சிறப்பு. மற்றும் சுப்ரமணிய சேது, அதியமான், இந்துமதி மணிகண்டன்
அதிர்ச்சி அருண் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
தொழில் நுட்ப கலைஞர்கள்
கதை, எழுதி, இயக்கி இருக்கிறார்
யுவராஜ் சின்னசாமி இயக்குநராக மட்டுமல்லாமல், திரைக்கதை எழுதியிருக்கிறார். இவர் இயக்கிய படைப்புகளில் தொலைக்காட்சித் தொடரான ‘ஆஹா கல்யாணம்’ குறிப்பிடத்தக்கது.
அவரது படைப்புப் பயணத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவை:
ஆஹா கல்யாணம் (2019–2020): தொலைக்காட்சித் தொடரில் இயக்கம் மற்றும் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டார்.
பார்த்த ஞாபகம் இல்லையோ (2019): குறும்படம்.
ஃபர்ஸ்ட் இயர் vs ஃபைனல் இயர் (2019): குறும்பட இயக்கப் பணி.
என சிறப்பாக பெயர் பெற்றவர் இதனால் தயாரிப்பாளர் இயக்குனரை ஒரு நல்ல தரமான படமாக எடுத்துக் கொடுக்க சொல்லி, அதை வெற்றி படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
கல்லூரியில் ஆரம்பித்து, ஐடி கம்பெனி வரை காதல் எப்படி? காலத்திற்கு ஏற்ப மாறுகிறது என்பதை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார்.
இன்றைய இளைஞர்கள் மது போதையில் காதலியிடம், என்ன பேசக்கூடாதோ! அது எல்லாம் பேசி தங்கள் வாழ்க்கையை தாங்களே தொலைத்துக் கொள்கிறார்கள். என்ற எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
சீரான திரைக்கதை அதற்கேற்ற நடிகர்கள். முக்கோண காதல். என்றாலும் , இந்த காதலும் காலத்துக்கு ஏற்ப, பேசும் வகையில் இயக்கி இருக்கிறார்.
இயக்குனர் பார்வையில்….
ஒரே ஆண் மாணவன் பெண்கள் கல்லூரியில் படிக்கிறான் என்ற கருத்தை மட்டும் வைத்து நகைச்சுவை உருவாக்குவது எளிது. ஆனால் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் காதலின் நுட்பங்களையும் இயல்பாக வெளிப்படுத்தியது
ரசிக்க வைத்தது.
கூடுதல் திரைக்கதை ஹரிஹரன் ராம்
எழுதி இருக்கிறார் ரசிக்க வைக்கிறது.
இசை சித்து குமார்
தூரி தூரி” பாடல் மற்றும் அனைத்து பாடல்களும் ரசிக்க வைத்தது. இசை காதல் மூடுக்கு ஏற்ப உருக வைத்தது.
இந்தப் படத்தில் பாடல்களின் இனிமைதான் படத்தை நினைவில் வைத்திருக்கச் செய்யும் முக்கியக் காரணங்களில் ஒன்று.
இசையையும் காதல் உணர்வுகளையும் இணைத்த விதம் மனோ கதாபாத்திரத்துக்கு ஏற்ற திரை அமைப்பு.
பாடல் காட்சிகளின் காட்சியமைப்பு.
காதல் தோல்வியால் ஏற்படும் மன உளைச்சலை மையப்படுத்திய அணுகுமுறை.
எல்லாம் ரசிக்க வைத்தது.
இளமையான காதல் கதைக்கு இசை முக்கியப் பலமாக அமைந்துள்ளது
கருவிழி’ பாடல்
படத்தின் முதல் பாடலான ‘கருவிழி’ பாடலை மோகன்ராஜன் எழுதியிருக்கிறார்; அர்மான் மாலிக் பாடியிருக்கிறார். .
படத்தில் சிறப்பான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ரசிக்க வைத்தது.
ஒளிப்பதிவு பிரியேஷ் குருசாமி
கல்லூரி காட்சிகளையும், ஐ.டி அலுவலக காட்சிகளையும், அருமையாக படம் பிடித்திருக்கிறார். நிவேதா தோழியுடன், பேசும் கடற்கரை காட்சி, நாயகன் கொடியுடன் பேசும் கல்லூரி காட்சிகள். எல்லா ரம்யமாக இருக்கிறது.
படத்தை கேரளா, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கி இருக்கிறார்கள் . பல கட்டங்களாக நடத்தப்பட்ட படப்பிடிப்பு பார்ப்பது இதமாக இருக்கிறது.
சக்தி பிரணேஷ்யின்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. காட்சிகள் தெளிவாக இருப்பதற்கும், எந்த இடத்திலும் லேக் இல்லாமல் இருப்பதற்கும் படத்தொகுப்பு சிறப்பான பணியை மேற்கொண்டு இருக்கிறார் சக்தி.
வெல்டன்.
பிரேம் கருந்தன்மலை அவரின்
கலை இயக்கம் .
மிகவும் நுட்பமாக இருக்கிறது. கல்லூரி, ஐ .டி அலுவலகம், நாயகனின் வீடு, நாயகியின் வீடு போன்ற இடங்களில் கலை இயக்குனர் சிறப்பாக செய்திருக்கிறார்.
இந்த வெற்றி படத்தை
டாக்டர் டி. அருளானந்து, மேத்யூ அருளானந்து
தயாரித்து இருக்கிறார். நிறுவனம் விஷன் சினிமா ஹவுஸ்
இப்படத்தின் திரையரங்குக்குப் பிந்தைய டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது
இப்படத்தின் வெற்றியை உறுதியாக்கி இருக்கிறது.
அதேபோல இந்த படத்தில் திரையரங்க வெளியீட்டை சக்திவேல் பிலிம்ஸ் சக்திவேலன்” திரை இடுகிறார். படத்திற்கு இன்னும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக கூடியிருக்கிறது .
மக்கள் தொடர்பாளர்கள். திரு, சுரேஷ் சந்திரா திரு. அப்துல் நாசர் அவர்கள் படத்தை மக்களிடம் சிறப்பாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள் .அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
முக்கோண காதல் கதையில்ஃ கல்யாண பரிசு, இளமை ஊஞ்சலாடுகிறது போன்ற படங்களின் வரிசையில் இந்த
ஹைக்கூ” திரைப்படமும் சேரும்.
காதலர்கள் கடந்த காலத்தை பற்றி இருவரும் பேசக்கூடாது. குடித்துவிட்டு காதலியிடம் கைபேசியில் பேசக்கூடாது. காதலர்கள் இருவரும் புரிந்து வாழ்க்கையை வாழ வேண்டும். அன்புக்கு எல்லை இல்லை .என்று அருமையான ஒரு படத்தை கொடுத்திருக்கிறது இந்த படக்குழு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
