MGR ன் உலகம் சுற்றும் வாலிபன் படம் அன்றைய ஆட்சியாளன் குள்ளநரித்தனத்தையும் தாண்டி எப்படி ரிலீஸ் ஆனது தெரியுங்களா….
அந்த படத்தை MGR தனது டைரக்ஷனில், தனது தயாரிப்பில், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக எடுத்தார் என்பது தான் அனைவருக்கும் தெரியும்….
ஆனால் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி இந்த படத்தின் கதை அமைப்பை உரிய ஆட்கள் மூலம் மோப்பம் பிடித்து , இந்த படம் வெளியானால் MGR இன்னும் சுலபமாக முதல்வராகி விடுவார், என்று கணக்கிட்டு இந்த படத்தை வெளிவராமல் தடுக்க அனைத்து உத்திகளையும் தயாராக வைத்து இருந்தார்.
இந்த விசயம் படத்தின் financial ஐ கவனிக்கும் இராம வீரப்பன் மூலம் இறுதிகட்ட படப்பிடிப்பில் ஜப்பானில் இருக்கும் MGR அறிகிறார்….
சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று படத்தின் எடிட்டர் குழுவை நேரே பம்பாய்க்கு வரச்சொல்லி படச்சுருள்களும் நேரே அங்கு கொண்டுசெல்லப்பட்டு அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது….
தியேட்டர் ஓனர்கள் கருணாநிதியின் மிரட்டலுக்கு இடையே நாங்கள் வெளியிடுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்து 1.5.1973. தொழிலாளர் தினத்தன்று வெளியிட தேதியும் முடிவாகிறது. ஆனால் ரகசியம் காக்கப்படுகிறது MGR வேண்டுகோளின்படி.
இப்பொழுது தான் ஒரு வரலாற்று முக்கிய நிகழ்வை MGR செய்கிறார். இந்த படத்தில் பணியாற்றாத கவிஞர் வேதாவை மும்பைக்கு அழைத்து, சூழ்நிலையை விளக்கி அவரே ஒரு சில வாக்கியங்களை ( நீதிக்கு இது ஒரு போரட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்,…நமை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் இருந்திடும் என்னும் கதை மாறும் போன்ற வரிகளை எடுத்து) சொல்லி, ஒரு பாடல் எழுதுங்கள் அவசரமாக எழுதுங்கள் என்கிறார்….
இதனிடையே இராம வீரப்பன் மூலம் M.S.விஸ்வநாதனையும், சீர்காழி கோவிந்தராஜனையும் (இவரத்து குரல் T.M.S. குரலைவிட High pitch ல் ஜொலிக்கும் என்பதால்), மும்பைக்கு வரவழைத்து இந்த பாடலுக்கு இசை போடச்சொல்கிறார்.MSV க்கு சொல்லியா தரணும் ஒரு சரித்திர பாடல் உருவாகிறது….
எடிட்டர் உமாநாத் இந்த பாடலை படத்தில் எங்கு எப்படி இணைப்பது என்று குழம்புகிறார். அதையும் எம்.ஜி.ஆரே தீர்த்து, எடுத்தவுடனே எழுத்து ரீல் ஓடாம கொஞ்சம் படத்தை ஓட விட்டு பிறகு இணைக்கிறார்.
படம் பார்த்தவங்களுக்கும், இப்பொழுது பார்க்க நினைப்பவர்களுக்கும் ஒரு விசயம் தெளிவாக புரியும், அதாவது இந்த பாட்டு படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் தெரியும்,ஒரே ஒரு போட்டோவின்மீது தான் மொத்த பாடலும் நகரும்….
அந்த பாடல் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று ஆரம்பிப்பதாக இருந்தது அதையும் நமது என்பதை நீக்கி #வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்று கடைசிநேர ரிகர்சலுக்குப் பிறகு சீர்காழியிடம் சொல்லி பாடவைக்கிறார்….
இந்த விசயமும் கருணாநிதியின் உளவுத்துறைக்கு தெரியாமல் காக்கப்படுகிறது,
இதனிடையே தி.மு.க.வினரை அந்த அந்த தியேட்டர் முன்பு நிறுத்தி மே 1 அன்று படம் திரையிடப்படாமல் பார்த்து கொள்ளும் வேலைகள் கன கச்சிதமாக கருணாநிதியால் ஏற்பாடாகிறது.
இந்த விசயமும் மும்பையில் உள்ள M.G.R.க்கு போகிறது ,கருணாநிதியின் நரித்தனந்தை நண்பராக இருந்த காலத்தில் பலமுறை அறிந்தபடியால் M.G.R. ஏற்கெனவே பெரிய சைசில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியதின் மேல் சிறிய அளவு போஸ்ட்டரை 11.5.1973 அன்று ரிலீஸ் என்று ஒட்டச்சொல்கிறார்….
பிறகு படப்பெட்டிகளுடன் சென்னை வருகிறார், கருணாநிதியும் விடாது வழக்கம்போல் அன்றைய தேதியில் தன் கட்சிக்காரர்களை என்ன செய்ய வேண்டுமோ அந்த ஏற்பாடுகளுடன் அங்கங்கு செல்ல பணிக்கிறார். 10 ம் தேதி இரவு படபெட்டிகள் அனைத்து ஊர்களுக்கும் போய் சேர்ந்தன….
சென்னை மவுண்ட் ரோடு தேவி பாரடைஸும் படம் ரிலீசாகும் தியேட்டர்களில் ஒன்று. தியேட்டரின் வெளி வாசலில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆவலோடு கூடி எப்பொழுது விடியும் என்று காத்து இருக்கிறார்கள், தி.மு.க.வினரும் அப்படியே கூடுகிறார்கள்….
அலங்கார் தியேட்டரும் அதே மவுண்ட் ரோடில் 5 அல்லது 6 பில்டிங் மேற்காக தள்ளி உள்ளது. இந்த தியேட்டரில் வேறு ஒரு படம் ஓடுக்கொண்டிருக்கிறது, ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை, இரவு இரண்டாம் காட்சிக்கு டிக்கட் எடுத்து உள்ளே போனவர்களுக்கு எடுத்த எடுப்பிலே சம்பந்தமே இல்லாமல் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்ற பாடலோடு படம் ஆரம்பிக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை , பிறகு தான் புரிந்தது நாம் பார்ப்பது நாளை ரிலீசாக வேண்டிய “உலகம் சுற்றும் வாலிபன்” படம் என்று….
பார்த்த சினிமா ரசிகர்களுக்கும் ,நீண்ட தொலைவில் இருந்து வந்து நாளைய ரிலீசுக்கு தேவி பாரடைஸ் வாசலில் காத்திருக்க முடியாது நேரத்தை செலவழிக்க இந்த தியேட்டர் இரண்டாம் காட்சிக்கு வந்த M.G.R. ரசிகர்களது சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும்,வெளிவந்த பிறகு விசயம் கேள்விபட்ட மக்களது ரசிகர்களோடு கூடிய ஆரவாரத்தையும் என்பதால் அதை கடக்கிறேன்…
11.5.73 அன்று குறிப்பிட்ட அனைத்து தியேட்டர்களிலும் முறைப்படி ரிலீஸ் செய்யப்பட்டு சிறந்த படம்,சிறந்த டைரக்ஷன்,சிறந்த தயாரிப்பு என 3 விருதுகளை வாங்கியது
சென்னை தேவி பாரடைஸ்….182 நாட்கள்
சென்னை அகஸ்தியா………….176 நாட்கள்
மதுரை மீனாட்சி……………………217 நாட்கள்
திருச்சி பேலஸ்……………………..203 நாட்கள்
கோவை ராஜா………………………150 நாட்கள்
கொழும்புவில்……………………….203நாட்கள்
என ஓடி சரித்திரம் படைத்தது.
கருணாநிதியின் சூழ்ச்சியை வீழ்த்தி எப்படி தனது படத்தை எம்.ஜி.ஆர். வெளியிட்டார் என்பதற்காக மட்டும் நான் இந்த பதிவை எழுதவில்லை….
.
காரணம் அன்று அடையார் கேன்சர் ஆஸ்பிடலில் அண்ணா இறந்தவுடன் யார் முதல்வர் என்ற சர்ச்சையின் போது, எம்.ஜி.ஆரிடம் சென்று, என்னை ஆதரிப்பதாக நீங்கள் ஒருவர் சொன்னால்போதும், மற்றவர்களை நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று வேண்டிய கருணாநிதி தான்….
தனது எதேச்சதிகாரத்தை எம்ஜி.ஆர். எதிர்க்கிறார் என்றவுடன் நன்றி மறந்து எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கியதோடு அவரை அனைத்து விதத்திலும் அழிக்க முயன்றார்….
ஆனால்M.G.R.ரோ அனைத்தையும் தரையில் அடிக்கப்பட்ட பந்து போலவும்,நீரில் அமுக்கப்பட்ட பந்து போலவும்,சுவரில் மோதப்பட்ட பந்து போலவும் எதிர்கொண்டு எழுச்சி கண்டார் என்பதை நாடறிந்ததே….
அதனால் தான் தலைமுறை கடந்து இன்றும் சரித்திர நாயகனாக மக்கள் மனதில் வாழ்கிறார்…🙏
