🧶அருவி மதன் ,ஒரு விவசாயி அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது . ஒரு படி நெல் கிடைக்காதா? என்று ஏங்கி கொண்டு இருக்கும் போது ஒருவர் சைத்தானிடம் அனுப்பி வைக்கிறார் .
சைத்தான் ,மதன் பசியை போக்க,
பேராசையால் மதன் தங்கம் கேட்க சைத்தான் நான் தங்கம் கொடுத்தால் நீ எனக்கு என்ன கொடுப்பாய்? என்று கேட்கிறது!! என்ன வேண்டும் என்று மதன் கேட்க?
உன்னுடைய வாரிசு கருவிலிருந்து, அதை எடுத்து எனக்கு தர வேண்டும் என்று உத்தரவிடுகிறது. சைத்தான் .
பேராசை பிடித்த மதன்
தன் மனைவி சோனியா அகர்வாலிடம் வளரும் குழந்தையை சைத்தானுக்கு படைக்க முயற்சி செய்ய, அவரை கொன்றுவிட்டு சோனியா தப்பி விடுகிறார்.
இப்பொழுது சோனியாவின் குழந்தை கார்த்தி அவனின் தங்கை தீப்தி, இருவரும் சென்னையில் வாழ்கிறார்கள் கார்த்தியின் மனைவி கீர்த்தனா, இந்த மூவரும் கடன் பிரச்சனையால் சென்னையிலிருந்து அதே கிராமத்துக்கு வருகிறார்கள் அங்கு அவர்கள் சைத்தானிடம் மாட்டிக் கொண்டு என்ன பாடுபடுகிறார்கள்?
சைத்தானிடமிருந்து மீண்டார்களா? கார்த்தியின் மனைவி, மனைவி கீர்த்தனா வயிற்றில் வளரும் குழந்தையை சைத்தான் எடுத்துக் கொண்டதா? என்பதுதான் இந்த படத்தின் கதை களம்.
இது ஒரு தமிழ் ஹாரர் – சஸ்பென்ஸ் – சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படம்.
படத்தை கே.எஸ். கிஷான் எழுதி இயக்கியுள்ளார். நிறைய இடங்களில் பயப்படுத்தி இருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரங்களில் சோனியா அகர்வால், கே. பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜோவிதா லிவிங்ஸ்டன் மற்றும் அமுதவாணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனைவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
பேராசை, குற்ற உணர்வு மற்றும் தலைமுறைகளாக தொடரும் சாபம் ஆகியவற்றைச் சுற்றி நகரும் உளவியல் மர்மத் த்ரில்லராக அமைந்துள்ளது.
திரைப்படத்தின் ஓட்ட நேரம் சுமார் 2 மணி 16 நிமிடங்கள் என்றும், UA16+ சான்றிதழ் பெற்றுள்ளது.
🧶டார்க் ஜெயன்ட் – சுவாரஸ்யமான தகவல்கள்
ஹாரர் + உளவியல் கலவை
இந்த படம் சாதாரண பேய் கதையாக இல்லாமல், குடும்பம், பேராசை, குற்ற உணர்வு உளவியல் ஹாரர் கதையாக உருவாகியுள்ளது.
🧶புதிய இயக்குநரின் வித்தியாசமான முயற்சி
எழுத்து மற்றும் இயக்கம் இரண்டையும் கே.எஸ். கிஷான் மேற்கொண்டுள்ளார். மர்மம் மற்றும் உணர்ச்சி இரண்டையும் சமநிலைப்படுத்தி
இருக்கிறார்.
🧶குடும்பத்திலிருந்தே தொடங்கும் பயம்
வெளியிலிருந்து வரும் தீய சக்தியை விட, குடும்பத்துக்குள் மறைந்திருக்கும் ரகசியங்களே பெரிய ஆபத்தை உருவாக்குகின்றன
🧶 சூப்பர்நேச்சுரல் அம்சங்கள்
சாபம், மர்ம சக்தி மற்றும் மனநிலை பாதிப்பு ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த கதை அமைப்பாக படம் நகர்கிறது.
செம விறுவிறுப்பாக போகிறது படம்.
🧶படத்தின் பரபரப்பான திரைக்கதை வசனம்
படத்திற்கு பெரிதும் உதவுகிறது.
🧶ஒளிப்பதிவு
சங்கீத் மணிகோபால்,
நிறைய இடங்களில் மிரட்டி இருக்கிறார்.
🧶 இசை, விக்னேஷ்
மூன்று பாடல்கள் ரசிக்க வைத்தது.
🧶படத்தொகுப்பை
ராஜா கச்சிதமாக செதுக்கி உள்ளார்.
🧶இந்த படம் Biovan Creationism நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது
🧶இருண்ட காட்சியமைப்பு, பின்னணி இசை மற்றும் மர்மமான காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல படம் என்று பாராட்ட வைக்கும்.
🧶ஹாரர் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், குடும்ப மர்மக் கதைகளை விரும்புபவர்களுக்கும் இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை தரும்
மொத்தத்தில் சைத்தான் குழந்தை உருவத்தில் மறுபடியும் பிறந்து கர்ப்பமாய் இருக்கும் பெண்களை எல்லாம் கர்ப்பத்திலேயே குழந்தையை கரைத்து மனித சமுதாயம் இல்லாமல் ஆக்கிவிடும் என்ற பதட்டம் பயமும் படத்தில் தொற்றி கொள்ள கொள்கிறது
இந்த படத்துக்கு இரண்டாம் பாகம் வரும் என்று லீடு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
நிச்சயம் பார்க்கலாம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
