சந்தானம் கிக் ஏற்றுகிறாரா தான்யா ஹோப் கிக் ஏற்றுகிறாரா வாங்க பார்க்கலாம்
விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலை பார்க்கிறார் சந்தோஷ் என்கிற சந்தானம். விளம்பர ஆர்டர்கள் வாங்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லுமளவுக்கு மோசமான ஒரு நபர் சந்தோஷ். இன்னொரு பக்கம் நீதி, நேர்மை , நியாயம் என மனோபாலாவின் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் டான்யா ஹோப். கார் விளம்பரம் ஒன்றிற்காக அதன் மார்க்கெட்டிங் ஹெட் செந்திலுக்கு ‘ஐட்டம் டான்ஸ்’ பாடல் ஒன்றை தயார் செய்கிறார் சந்தானம். பிறகு, அந்தப் பாடலுக்கு ஆடிய பெண் சண்டைக்கு வர அவரை வைத்தே போலியாக விளம்பரங்கள் தயாரிக்கிறார். பிறகு அதில் சில பிரச்னைகள் இதற்கு இடையே தம்பி ராமையாவின் அலப்பறை காமெடி இவரின் அப்பா ஒய் ஜி மகேந்திரன் அந்த விளம்பர மாடல் கம்பெனிக்கு சந்தானத்தை எம்.டி யாக்கி விட அது எகிறி குதிக்கிறார் தம்பி ராமையா இதில் அவருக்கு முதலிரவு நடக்கவில்லை என்ற சோகம் இரண்டு மணி நேரத்தில் சாதித்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ராஜ
டான்யா ஹோப்ஒரு பக்கம் , மனோபாலாவின் தங்கையாக கோவை சரளா. அவரும் ரீல்ஸ் எடுக்கிறேன் என ஒருபக்கம் இது போதாது என நினைத்தவர் சந்தானம் டீமில் தம்பி ராமையாவை சேர்த்திருக்கிறார். சந்தானம் ஜாலியாக கவுண்ட்டர் வசனங்கள் பேசவே ஒரு குழுவை வைத்திருப்பார். லொள்ளு சபா மாறன், மனோகர், சுவாமிநாதன், மொட்டை ராஜேந்திரன், ஈஸ்ட் என ஏகப்பட்ட நடிகர்கள் அதில் அடக்கம். ஆனால், இவர்கள் எல்லாம் எங்கே என கேட்க வைக்கிறது
தம்பி ராமையாவின் தந்தையாக YG மகேந்திரன். அந்த விளம்பர கம்பெனி சந்தானத்திற்கு எப்படி வந்தது என்பதற்காக ஒருபிளாஷ் பேக்
. தம்பி ராமையாவிற்கு வயதாகிவிட்டது , ஆனாலும் இன்னும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கவில்லை. டான்யா ஹோப்பிற்கு சந்தோஷ் யார் என்றே தெரியாது என்பதால், சந்தானம் வேறு பெயரில் சுற்றிக்கொள்ளலாம் என தமிழ் சினிமாவின் க்ளேஷேக்களில் சிலவற்றைத் தூவினால் போதாதா என்ன நினைத்திருக்கிறார். இதோடு பிரம்மானந்தம், அடல்ட் மாத்திரை, அதை வைத்து சில பல காமெடி என நினைத்து சிலவற்றைக் கிண்டியது ஒரு வழியாக சுபம்
கோவை சரளா ரீல்ஸ் என்ற பெயரில் கிளுகிளுப்பு ஏற்ற தானியாகவும் விதவிதமான கவர்ச்சி காட்சிகளில் கிளுகிளுப்பை ஏற்ற ஒரே கிக்கு தான் போங்க
படத்தின் பலம் அர்ஜுன் ஜன்யாவின் இசை. பின்னணி இசை பெப்பியாகவே இருக்கிறது.
‘ எதுக்கு வாழ்றோம்னு தெரியாமக்கூட வாழலாம் . ஆனா எதுக்கு குடிக்கறோம்னு தெரியாம குடிக்கக்கூடாது’ என படத்தில் சந்தானம் ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொல்கிறார். நமக்கும் அதுதான் கிக் பார்த்ததும் தோன்றுகிறது.
உண்மையிலேயே ஒரு காமெடி படம் இரண்டு மணி நேரம் போர் அடிக்காமல் நம்மை மகிழ்விப்பது என்றால் அதற்கு இதுதான் எடுத்துக் கொண்ட கதையை சீராக சொல்லி இருப்பது பாங்காங் காட்சிகள் அங்கு நடக்கும் சண்டை காட்சிகள் அலர்ட்ல தான் சந்தானத்தின் நடிப்பு வித்தியாசமான தம்பி ராமையாவின் நடிப்பு தான் கவர்ச்சி கோவை சரளாவின் கவர்ச்சி என படம் முழுக்க நம்மை கவர்ந்து இழுக்கிறது கடைசி கட்சியில் பிரமானந்தாவும் கோவை சரளாவும் கலகலப்பு ஏற்றுகிறார்கள் செம காமெடியான சீன் படத்தின் வெற்றிக்கு இந்த காட்சிகள் கிக் ஏற்றுகிறதுகூல் சுரேஷ் போதாக்குறைக்கு கலகலப்பு ஏற்றுகிறார் மன்சூர் அலிகான் வரும் காட்சிகளில் சண்டை காட்சியோடு சிரிக்கவும் வைத்து ரசிக்க வைக்கிறார் போட்ட முதலீடு குறையாமல் பார்த்துக் கொள்ளும் இந்த கிக் ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது நிச்சயம் ரசிகர்கள் ரசிப்பார்கள் எது மாதிரி இல்லாத இது மாதிரியான படம் சந்தானத்திற்கு மீண்டும் ஒரு வெற்றி படம்
லாஜிக் இல்லாத மேஜிக்
