பரம் பொருள் விமர்சனம் பார்க்கலாம் வாங்க. இயக்குனர் அரவிந்த் ராஜின் பரம்பொருள் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் சரத்குமார், ஆனால் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது.அந்த டிவிஸ்ட் என்ன சரத் ஏன் இப்படி நடித்தார் என்பதை பரம் பொருள் விமர்சனம் மூலம் பார்க்கலாம் வாங்க
நேர்மையானவராக, அன்பானவராக நடிக்கும் சரத்குமார் இம்முறை பேராசை பிடித்த முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.அவரின் கம்பீரம் மிடுக்காக நடப்பது பேசுவது ரசிக்க வைக்கிறது நம்ம நாட்டாமை யா இது என்று கேட்க வைக்கிறது
சட்டவிரோதமாக சிலைகள் கடத்துவது குறித்து காட்டுகிறார்கள். அந்த உலகிற்கு நம்மை எளிதில் அழைத்துச் செல்கிறது படம். முடிந்த அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டு ஓய்வு பெற்ற பிறகு சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருக்கும் போலீஸ் அதிகாரி மைத்ரேயன்(சரத்குமார்). அவரின் இந்த மோசமான குறிக்கோளால் திருமண வாழ்க்கை முறிந்துவிடுவதுடன், சிலை வியாபாரத்திலும் ஈடுபடுகிறார். அவருக்கு ஃப்ளாஷ் பேக் இல்லாததால் நிம்மதி
கலை பொருட்கள் விற்பனை செய்யும் கூடத்தின் உரிமையாளுடனான தொடர்பால் ஆதி(அமிதாஷ் பிரதான்) சிலை வியாபாரத்தில் ஈடுபடுகிறார். அந்த உரிமையாளருக்கு சிலை வியாபாரம் செய்யும் பல பெரிய ஆட்களை தெரியும். மேலும் ஆதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். விதிப்படி மைத்ரேயனை ஆதி சந்திக்கிறார்.இருவரும்சந்திக்கும்இடம் சுவராஸ்யமான சம்பவம் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது
உயிருக்கு போராடும் தன் சகோதரியை காப்பாற்ற பணம் கிடைத்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறார் ஆதி. சகோதரியை காப்பாற்ற மைத்ரேயனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக சிலை கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட ஆதி முடிவு செய்கிறார்.இதுசரியான திட்டமிடல் என்பது கிளைமாக்ஸ் காட்சியில் தெரிகிறது
ஆதி பழமையான ஒரு புத்தர் சிலையை விற்பனை செய்ய மைத்ரேயனுக்கு உதவி செய்கிறார். ஆனால் அந்த சிலை விற்பனை அவர்கள் நினைப்பது போன்று அவ்வளவு எளிது அல்ல. அவர்கள் தங்கள் செயலில் வெற்றி பெறுவார்களா இல்லை இதனால் பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்ட பெரிய உண்மையை கண்டுபிடித்தார்களாஇல்லையா அதன் பிறகு என்ன நடந்தது என்பதை சுவராஸ்யமான சொல்லி இருக்கிறார் இயக்குனர்
சிலை கடத்தலை மையமாக வைத்து பல தமிழ் படங்கள் வந்துவிட்டன. ஆனால் அந்த கதையை படமாக்கிய விதம் மூலம் பரம்பொருள் தனித்து தெரிகிறது. வழக்கமான கேங் சண்டை, கொலைகளை விட்டுவிட்டு சிலை கடத்தல் வியாபாரத்தின் நுணுக்கங்களையும், பிரச்சனைகளையும் காட்டியிருக்கிறார் இயக்குநர். படம் முழுக்க காமெடி இல்லை அது கதை க்கு தேவை இல்லை
கிளைமாக்ஸ் சீக்வென்ஸில் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த டுவிஸ்ட்டும் படத்தில் ப்ளஸ் அண்ட் ப்ளஸ்.
சரத்குமாரும் சரி, அமிதாஷ் பிரதானும் சரி அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அமிதாஷின் காதலியாக வந்திருக்கும் காஷ்மிரா தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
நம்பும்படி அமைப்பு
யுவன் ஷங்கர் ராஜாவின் பி.ஜி.எம். படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவு இருட்டு அறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. திருட்டு வேலை செய்பவர்களுக்கு இருட்டு தான் சரி என்று ஒளிப்பதிவு நிரூபித்துள்ளது படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் லேக் ஆகவில்லை காதல் காட்சியும் கண்ணியமாக படமாக்கப்பட்டு இருக்கிறது ஆதி தனக்காக ரிஸ்க் எடுத்து செய்யும் அந்த காட்சிகள் பாராட்டுக்குரியது படத்திற்கு மிகவும் தேவையானது இயக்குனர் அரவிந்த் இவரின் கடுமையான உழைப்பு படம் முழுக்க நன்றாக தெரிகிறது ஒரு சீரான கதையை சீரான திரை கதையில் எப்படி கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து படம் எடுத்திருக்கிறார் அடுத்து என்ன நடக்கும் என்ற பாணியில் கதை சொல்வதால் ரசிக்க வைக்கிறது ருசிக்க வைக்கிறது மொத்தத்தில் இந்த பரம்பொருள் எல்லாம் அறிந்தவன் விவரம் புரிந்தவன் எல்லாரையும் கவர்ந்தவன் படத்தில் பாலாஜி சக்திவேல் வரும் காட்சிகள் அருமை. வின்சென்ட் அசோகன் நடிப்பு நன்றாக இருக்கிறது மொத்தத்தில் பரம் பொருள் படைப்புக்கு கிடைத வெற்றி
