நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷ ன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் சேதுபதி தற்போது வெரைட்டியான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். மகாராஜா படமும் இவருக்கு ஒரு வெற்றி படமாக அமையும் ஜவான் படத்தில் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் சேதுபதி

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராகவும் இருக்கிறார்

இந்த படம் விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா’ திரைப்படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியானது. அதன்படி ‘மகாராஜா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்ட்டர் வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தார்.

இயக்குனர் நித்திலன் குரங்கு பொம்மை படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அற்புதமான படமாக அந்த படம் இருந்தது அவரின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் செம ட்ரீட்டாக இருக்கிறது போஸ்டரே கதை சொல்லும் அளவுக்கு அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது நிச்சயமாக ஒரு வெற்றி படத்தை எதிர்பார்க்கலாம் வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா