ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில்

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டும் டிரெய்லர் ஒரு வெற்றிப் படத்துக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது நயன்தாராவும் ஜெயம் ரவியும் இணைந்தாலே அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்பதற்கு தனி ஒருவன் நிரூபித்த வெற்றி அதேபோல இறைவன் திரைப்படமும் இந்த ஜோடி மூலம் மிகப்பெரிய வெற்றியடையும்

‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘இறைவன்’. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் முதல் போஸ்டர் ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ‘சைரன்’, ‘ஜெஆர்30’ உள்ளிட்ட படங்களில் ஜெயம் ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

சைக்கோ ஒருவனால் கடத்தப்படும் 12 சிறுமிகளின் நிலை என்ன ஆனது அதை மீட்க துடிக்கும் காவல்துறை அதிகாரிகள் கொலையாளி கொடூரமானவனாக இருக்கும் பொழுது காவல்துறை அதே போல நடந்து கொண்டால் தான் கொலையாளியை வீழ்த்த முடியும் என்ற தத்துவத்தின் மூலம் இப்படம் உருவாகியுள்ளது நிச்சயம் வெற்றி பட்டியலில் இறைவன் இடம் பிடிப்பார்