மால் திரைப்படத்தின் விமர்சனம்

ஆஹா ஓடி டியில் வெளியாகி இருக்கும் மால் திரைப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

மால் என்றால் ஒரு இரவு சோழன் என்று பொருள் இந்த படத்தை 29 வயதான தினேஷ்குமரன் இயக்கியிருக்கிறார் இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் இந்த இளம் வயதில் இப்படி ஒரு படத்தை இயக்கிய அவருக்கு நமது பாராட்டுக்கள் அவரை நம்பி படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் இதை வெளியிட்ட ஆஹாஓடிடி க்கும் பாராட்டுக்கள். சரி வாங்க இந்த படத்தின் கதை என்ன பார்ப்போம்

படத்தில் சாய்ராம். விஜே பப்பு. ஜெய். சாய் கார்த்தி. கௌரி நந்தா. தினேஷ்குமரன் கஜராஜா. மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்

கதை களம்

100 கோடி ரூபாய் மதிப்புமிக்க சோழன் சிலை கடத்தப்படுவதாக போலீஸ் துறைக்கு தெரியப்படுகிறது இதை பிடித்து விடுவோம் என்று ஆரம்பக் காட்சியிலேயே சொல்கிறார்கள்

அதன்பிறகு இந்த சிலையை கடத்த திட்டம் போடுகிறார் சேரா. அவரிடம் இரண்டு கேங் ஒருவர் கருணா இன்னொருவர் இன்பா

சேரா கருணாவிடும் பொறுப்பை ஒப்படைகிறார் கருணாவுக்கு அன்று திருமண நாள்
இன்று ஒரு நாள் மட்டும் லீவு எடுத்துக் கொண்டு நாளை செய்கிறேன் என்கிறார் கருணா ஆனால் சேரா மறுத்துவிட்டு இன்றேசெய்ய சொல்லி உத்தரவிடுகிறார். கருணா தனது மூன்று கூட்டாளிகளுடன் 100 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த திட்டுமிடுகிறான் அப்போது கர்ணாவிடம் இருக்கும் கூட்டாளிகள் நீ போ உன் மனைவியுடன் ஜாலியாக இரு நாங்கள் காரியத்தை கட்சிதமாக முடிக்கிறோம் என்கிறார்கள். அவர்களை நம்பி மனைவியுடன் உல்லாசமாக இருக்கும் கருணா இந்த மூன்று கூட்டாளிகள் கர்ணாவின் வாக்கை காப்பாற்ற தவறி தவறிவிடுகிறார்கள்

அந்த சிலை அவர்களிடமிருந்து அடுத்த கைக்கு போகிறது

லஞ்சம் வாங்குவது தொழிலாக கொண்ட போலீஸ் அதிகாரி கஜராஜ் அவரிடம் சிலை அவர் கைக்கு போகிறது. அதை அவர் எடுத்து பத்திரப்படுத்தும் போது அது மற்றொரு கைக்கு போகிறது அவர் யார் அந்த சிலை முடிவில் யாரிடம் போனது என்ன ஆனது இதுதான் பரபரப்பான திரைக்கதை

கர்ணாவிடம் இருந்து சிலை பரிபோனதை கண்டு சேரா கோபபடுகிறார் கருணாவை அழைத்து இன்று இரவுக்குள் சிலை என் கைக்குள் வரவில்லை என்றால் உன் மனைவியும் உன் குழந்தையும் நீயும் நாளை சூரிய உதயத்தை பார்க்க முடியாது என்கிறார்

அந்த சிலை இன்ஸ்பெக்டர் கஜராஜாவிடம் இருப்பதை அறிந்த கர்ணா இன்ஸ்பெக்டருக்கு சவால் விடுகிறார் இன்று இரவுக்குள் எனக்கு அந்த சிலை கிடைக்க வேண்டும் இல்லை என்றால் போலிஸ் என்று கூட பார்க்க மாட்டேன் என மிரட்டுகிறான்

இதற்கிடையில் இயக்குனர் தினேஷ் குமாரனும் அவரது நண்பர் அசுரப்பும் சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தவர்கள் பெரிய திருட்டுக்கு ஆசைப்பட்டு இன்ஸ்பெக்டர் கஜராஜாவிடம் மாட்டிக் கொள்கிறார்கள்
மீடியா வில்
வேலை செய்யும்
பப்புவும் அவரது காதலியும்
இந்த சிக்கலுக்குள் வந்து சிக்கி கொள்கிறார் கள் பெரிய சேனலுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்று பப்புவின் காதலி
சென்னை புறப்படும்போது அவர்களும் இந்த சிலை கடத்தல் கும்பலில் சிக்கிக் கொள்கிறார்கள்

கர்ணாவின் மனைவியை தேடிச்சென்று இன்பா உல்லாசம் அடைய நினைக்கிறான் . அப்போது கருணா சேராவின் தலையில் புல்லட்டை வைத்து மிரட்டி இன்பா விடம் இருந்து மனைவியை காப்பாற்றும்காட்சி சூப்பர்

அஷ்ரப்பும் தினேஷ்குமரனும் செய்யாத கொலைக்காக சிக்கிக் கொண்டு விழிப்புதுங்க தடுமாறும் காட்சிகள் ஆகட்டும் அந்த சிலை அவர்கள் கண்ணில் பட இதை வைத்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று எண்ணும் காட்சிகள் ஆகட்டும் ரசிக்க வைக்கிறது. அவர்களை சிக்கலான முடிவுகள் எடுக்க வைக்கிறது

பப்புவும் அவர் காதலியும் நடத்தும் ஊடலும் கூடலும் ரசிக்க வைக்கிறது

இன்பாவாக வருபவர் நடிப்பு நன்றாக இருக்கிறது கர்ணாவின் மனைவியை அடைய
அவர் காமப் பார்வை வீசி போதை கொள்வது இயல்பாக இருக்கிறது

கஜராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து
கெட்ட போலீஸ் இப்படித்தான் இருப்பார் என்பதை ஞாபகப்படுத்துகிறார் பேராசை பெரும் நஷ்டம் என்பது இவர் கதாபாத்திரத்தில் தெரிகிறது கடமையை ஒழுங்காக செய்யாமல் காசுக்காக தவறு மேல் தவறு செய்து முடிவில் இவர் நிலை என்ன ஆகிறது என்பது நன்றாக இருக்கிறது இந்த வயதிலும் மனிதர் ஓடுகிறார் துடிப்புடன் நடித்திருக்கிறார் படத்தின் பக்க பலமே கஜராஜ் தான்

நக்கலைட்ஸ் போலீஸ் அதிகாரி நன்றாகவே நடிந்திருக்கிறார்

கர்ணாவின் மனைவியாக வரும்
கௌரி நந்தா பார்ப்பதற்கே புதுமையாக அழகாக இருக்கிறார் போதையூட்டும் கண்கள் ரசிக்க வைக்கிறார் கிறங்க வைக்கிறார்.

கர்ணாவாக வரும் சாய்ராம் நடிப்பு நன்றாக இருக்கிறது கம்பீரமாக இருக்கிறது அவர்தான் படத்தின் முக்கிய பலமாக இருக்கிறார்
படத்தின் திரைக்கதை தான் மிகவும் பாராட்டுக்குரியது நான்கு கதைகள் எல்லாம் ஒரே இரவில் நடப்பது 100 கோடி மதிப்புள்ள சிலை இது யார் கையில் என்ற பரபரப்பு போலீஸ் அதிகாரியே தவறு செய்கிறார் அப்படி என்றால் யார்சிலையை மீட்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லாம் திரைக்கதையின் மாயாஜாலம்

மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்முலாவில் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார் இயக்குனர் தினேஷ் குமரன் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் சற்றும் குறையாத அருமையான திரைக்கதை
நான்கு வருட போராட்டம் நண்பர்களின் உதவி மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தை எடுத்தேன் என்கிறார் இயக்குனர் அவரின்நம்பிக்கை வீண் போகாது நிச்சயம் ஒரு நாள் தமிழ் சினிமாவில் பேசப்படுவார். ஆஹா ஓ டி டி இந்த படத்தை வாங்கி வெளியிடுவது படத்தை வாங்கி வெளியிடுவது இன்னமும் சிறப்பு

படத்தின் இசை மிரட்டலாக இருக்கிறது பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்

ஒளிப்பதிவு இரவு நேர காட்சிகளை திகில் ஊட்டும் வண்ணம் படமாக்கி இருக்கிறார்கள்

படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது

மொத்தத்தில் இந்த மால் திரைப்படம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான படமாக அமைந்திருக்கிறது குறைந்த பட்ஜெட்டில் தரமான இருவருப்பான படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம் மிஸ் பண்ணாம ஆகா ஓட்டுநர் பாருங்க ஒரு அருமையான கதைக்களம் கொண்ட மால் திரைப்படம் நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும் நண்பர்களிடம் ஜெய்லர் திரைப்படமும் சிலை கடத்தல் பற்றிய படம் தான் மால் திரைப்படமும் சிலை கடத்தல் பற்றிய படம் தான் சொல்லுங்கள் ஒரு நல்ல திரைப்படத்தை கொண்டாடுங்கள். மால் படம் நிச்சயம் உங்களை வியப்புக்குரிய படமாக மாற்றும் அஸ்தலான திரைக்கதை அருமையான இயக்கம் வெற்றிக்கு வாழ்த்துக்கள்