சமீப காலமாகவே நாவல்களை படமாக்கும் முயற்சிகள் பலரால் எடுக்கப்பட்டு வருகின்றனர். இயக்குநர் வெற்றி மாறன் வெக்கை நாவலை தழுவி அசுரன் படத்தையும், லாக்கப் என்ற நாவலை தழுவி விசாரணை படத்தையும் எடுத்திருப்பார். தமிழ் சினிமா வரலாற்றில் பலரும் நாவலை தழுவி படங்களை எடுத்திருப்பார்கள். புதுமைப்பித்தனின் சிற்றன்னை கதையை கொண்டு உதிரிப்பூக்கள் என்ற காவியத்தை கொடுத்தார் இயக்குநர் மகேந்திரன். அதேபோல், உமா சந்திரனின் முள்ளும் மலரும் நாவலை மையமாக கொண்டே ரஜினியை வைத்து முள்ளும் படத்தை கொடுத்தார் மகேந்திரன்.
அது எல்லாம் இன்று வரை பேசப்படும் காவியமாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது
அதை போலவே
: தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான எழுத்தாளரான சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே நாவலும் திரைப்படமாக வெளியானது
தமிழ் சினிமாவில் நாவலை தழுவி திரைப்படங்களை உருவாக்கும் போக்கும் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஊருக்குள் ஒரு புரட்சி, வேரில் பழுத்த பலா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் தமிழ் உலகிற்கு அளித்த எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே நாவலை தழுவி புதிய திரைப்படம் உருவாகியுள்ளது
நாவலின் மையான பெண் கதாபாத்திரமான ’உலகம்மை’ என்ற பெயரிலே இந்தப் படம் உருவாகிறது.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்
. ’காதல் FM’, ‘குச்சி ஐஸ்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஜெய் பிரகாஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். ’96’, ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கெளரி கிஷன் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்து உள்ளார்.
இப்படத்தில் ஹீரோவாக மித்ரன் நடிக்கிறார்.
சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே நாவல், தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு படைப்பாகும். உலகம்மை என்ற பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உணர்வுபூர்வான கதையான எழுதியிருப்பார் சமுத்திரம். “ஒரு கோட்டுக்கு வெளியே” என்ற தலைப்புக்கு ஏற்றார்போல் அந்த காலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சிக்கலில் வட்டமான ஒரு கோட்டுக்குள் கடன்பட்டவர்களை நிறுத்தி அவமானப்படுத்தும் ஒரு வழக்கம் இருந்தது. இது பிற்காலத்தில் தடை செய்யப்பட்டாலும் அதனை மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நாவலில் சித்தரித்திருப்பார் சமுத்திரம். சாதிய ரீதியாகவும் எல்லா சமுதாயத்திலும் உள்ள கஷ்டப்படுகின்ற ஏழை, எளிய மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டிருக்கும். ஒரே சாதிக்குள் இருந்தாலும் எப்படி ஏழைகள் அதே சாதிக்குள் இருப்பவர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை மிகவும் காட்டமாக பேசியிருக்கும் ஒரு கோட்டுக்கு வெளியே நாவல்.
அந்த நாவலை எடுத்து இயக்குனர் கொஞ்சம் மாற்றி திரைக்கதை எழுதி உலகமை என்ற படத்தை இயக்கி உள்ளார் உலகம்மை யாககௌரி ஜி கிஷன் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் அவரின் முகபாவம் உடல் மொழி அநியாயங்களை எதிர்த்து போராடும் அந்த துணிச்சல் கிராமத்து பெண்ணுக்கு உரிய வெகுளித்தனம் கோபம் தந்தையின் மீது பாசம் உங்க ஜாதியில் தீயை வைக்க என்று பொங்கும் அந்த சினம் எல்லாமே அற்புதமான நடிப்பு விருது காத்திருக்கிறது
1970 இல் நடக்கும் கதை ஒரு சின்ன கிராமம் மாரிமுத்து அங்கு பஞ்சாயத்து தலைவர் ஊருக்கு நாட்டாமை அவர்தான் அவர் தன் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று உலகம்மைதோழியாக அனுப்புகிறார் ஆனால் அந்த மாப்பிள்ளைக்கு உலகம்மையை பிடித்து போக
திருமணம் என்று போகிறது தன் மகள் திருமணம் என்று போனதற்கு உலகம்மை தான் காரணம் என்று அந்த சின்ன பெண்ணை பழிவாங்க சினம் கொண்டு சூது செய்து அக்கிரமாய் சிந்திக்கிறார் மாரிமுத்து ஆனால் அதை எல்லாம் தாண்டி தடைகளை தாண்டி உடைத்து அந்த ஊரில் இருக்கும் பட்டியல் இன மக்களுடன் சேர்ந்து உலகம்மை என்ன செய்தார் என்பதே கிளைமாக்ஸ்
முள்ளும் மலரும் 16 வயதினிலே கிழக்கே போகும் ரயில் போன்ற அற்புதமான படைப்பு போல இந்த படத்தின் இருக்கிறது எந்த இடத்திலும் சினிமா பூச்சு இல்லாமல் ஜோடனை இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எல்லா ஜாதிகளும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது ஏழை பணக்காரன் என்ற பிரிவு இருக்கிறது நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடு இருக்கிறது ஈகோ இருக்கிறது அதை உடை தெரிய வேண்டும் என்பதே இயக்குனரின் பார்வை இந்த படத்தில் பட்டியலின மக்களை மனித நேயத்தின் உச்சமாக காட்டி இருப்பது சிறப்பு
இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இசைஞானி இளையராஜா அவர்களின் பின்னணி இசை தென்றலாய் வருடும் பாடல்களும்
மனசுக்குள் மத்தளம் அடிக்கிறது
பலவேசம் என்ற கதாபாத்திரத்தில் வரும் குமார் நல்லவராக வரும் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மாரிமுத்துவின் மகள் மனைவி என எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்
இயக்குனர் உலகம் மைஅப்பாவாக பனையேறியாக கீழே விழுந்து கால் நடத்த முடியாதவராக இயலாதவராக அருமையாக நடித்தி இருக்கிறார் அவருக்கு நிச்சயம் இருந்து காத்திருக்கிறது பச்சை பசேல் என்ற அந்த கிராமத்து அழகும் ஒளிப்பதிவு அள்ளிக் கொண்டு வந்துள்ளது படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எழுத்து அனைவரும் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது உலகம்மைகாண வேண்டிய படம் வெறும் அடிதடி சண்டை காட்சி என நிரம்பிய சினிமா உலகில் ஒரு எதார்த்தமான ஒரு நல்ல தரமான படம் இயக்குநருக்கு வாழ்த்துக்கள்
