கடத்தல் விமர்சனம்

பி என் பி கிரியேஷன்ஸ் , பிரைம் அசோசியேட்ஸ் , சவுத் இண்டியன் புரடக்ஷன்ஸ் சார்பில், செங்கோடன் துரைசாமி, நிர்மலா தேவி, எம் ஆர் தாமோதரன் தயாரிப்பில்

எம் ஆர் தாமோதர், விதிஷா, ரியா, சுதா , நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஜெயச்சந்திரன், ரவிகாந்த் , ஆதி வெங்கடாச்சலம், சபாபதி , சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன், நடிப்பில் சலங்கை துரை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம்.

இந்தக் கடத்தல் ரசிகர்களை கடத்தியதா
யாரை கடத்தியது என்ன கடத்தியது வாங்க இந்த திரை விமர்சனம் பார்க்கலாம்

படத்தின் கதை என்

கொலைகாரனாக ஆகி குடும்பத்தை நிர்க்கதியாக்கி விட்டுப் போன கணவனைப் போல மகன் ( எம் ஆர் தாமோதர்) ஆகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஒரு தாய் ( சுதா). நியாயம் தானே

மகனின் நண்பர்கள் கூலிக்குக் கொலை செய்பவர்கள். அவர்களோடு சுற்றும் மகனை கண்ணீரால் திருத்தி வைக்கிறார் தாய். . ஆனால் நண்பர்கள் , மகனின் இருப்பிடத்தைப் பயன்படுத்தி ஒரு கொலை செய்ய, கொலை செய்யப்பட்டவருக்கு வேண்டிய தாதாவின் தம்பி, திருந்தி வாழும் நாயகனை கொல்ல வர , வேறு வழியின்றி அவனைக் கொன்று விடுகிறான் நாயகன்

விஷயம் தெரிந்த அம்மா இறக்கிறார் . நேசித்த பெண் , அத்தை மகள் ( விதிஷா , ரியா) இருவரும் பிரிகிறார்கள்.

நாயகனும் அவனது நல்ல நண்பன் ஒருவனும் பயணம் செய்யும் பொழுதில் மேற்படி தாதா பணத்துக்காக ஒரு தாயையும் மகனையும் கடத்த , அந்தக் குழந்தையை மட்டும் நாயகன் காப்பாற்ற நேர்கிறது .

குழந்தையை அதன் பெற்றோர் யார் எனக் கண்டுபிடித்து ஒப்படைக்க நாயகன் முயல, இதை அறிந்து மீண்டும் நாயகன் மற்றும் அவன் நண்பனுடன் தாதா மோத நடந்தது என்ன என்பதே படம்.
கமர்சியல் படமாகும் ஆக்ஷன் கலந்த படமாகும் சென்டிமென்ட் காதல் எதார்த்தம் என எல்லா அம்சங்களும் பொருந்தி போயிருக்கிறது இந்த கடத்தல் சாம்ராஜ்யத்தில்

உண்மை நட்பு, துரோக நட்பு, தாதாத்தனம், பண வெறி,, அம்மா மகன் பாசம், மனிதாபிமானம் இவற்றை வைத்து பயணிக்கும் திரைக்கதை.
திரைக்கதையில் ஜெட் வேகம் ஒவ்வொரு காட்சிகளும் விறுவிறுப்பு அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு இயக்குனருக்கு பாராட்டுக்கள்

ராஜ் செல்வா ஒளிப்பதிவில் பொள்ளாச்சி லொக்கேஷன்கள் அருமை காதல் காட்சியாகட்டும் ஆக்சன் காட்சி ஆகட்டும் ஒளிப்பதிவாளர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்

ஸ்ரீகாந்த் இசையில் தீம் மியூசிக் கவனிக்க வைக்கிறது.
மெலோடி கானா பாடல்கள் ரசிக்க வைக்கிறது

குங்ஃபூ சந்துருவின் சண்டைப் பயிற்சி சிறப்பு . நாயகனுக்கு ஆக்சன் காட்சிகள் நன்றாக புரிந்து போகிறது வரும் காலத்தில் ஆக்சன் ஹீரோவா வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது

சிங்கம் புலியின் காமெடிக் காட்சிகள், கல கலக்க வைக்கிறது.

மினிமம் கேரண்டிக்கு ஏற்ற திரைக்கதை குறைவான பட்ஜெட் தரமான படமாக வந்திருக்கிறது இந்த பட்ஜெட்டுக்குள் விறுவிறுப்பான ஒரு நல்ல படத்தை கொடுத்தது இயக்குனரின் அனுபவத்தை காட்டுகிறது

மொத்தத்தில் இந்த கடத்தல் ரசிகர்கள் இதயத்தை கடத்தி இருக்கிறது இயக்குனர் சலங்கை துறைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்கள் சின்ன பட்ஜெட்டில் தரமான படம் எடுப்பது எப்படி என்று இவரிடம் தெரிந்து கொள்ளலாம் தியேட்டருக்கு சென்று அவசியம் காண வேண்டிய படம் கடத்தல்