சித்தா – விமர்சனம்

சித்தார்த்தின் “சித்தா* படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

நடிகர் சித்தார்த், தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் படம் சித்தா

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி உள்ளார்

“சித்தப்பா என்பதன் சுருக்கம்தான் சித்தா. ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு, உணர்வுகள்தான் கதை.
மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் கதை நடக்ககிறது

தமிழ் சினிமாவில் அம்மா, அப்பா, தாய்மாமன், தாத்தா, பாட்டி பெருமைகளை நிறைய பேசிவிட்டார்கள். சித்தப்பாவின்பாசம் பேசும் அருமையான கதை களம்

: இந்தப் படத்துக்கு முதலில் வேறு ஒரு பெயரைத்தான் சூட்டியிருந்தார்களாம். ஒரு சிறுமிக்கும் அவளுடைய சித்தப்பாவுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. கதைப்படி அந்தக் குழந்தை சித்தப்பாவை ‘சித்தா’ என்றுதான் கூப்பிடும். அதையே படத்துக்குப் பெயராக வைக்கலாம் என்று
வைத்து இருக்கிறார் கள் வெகு பொருத்தம்.

“, உறவுமுறைகளைச் செல்லமாக அழைப்பது போன்ற பெயர்களுக்கு ஒரு பலம் இருக்கும். அது படம் பார்த்து முடித்த பிறகும் தெரிகிறது

சித்தார்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆனபிறகு இது அவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.

‘சித்தா’ படத்தில் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நிமிஷா கதாநாயகியாக நடித்துள்ளார் .
அவர் நடிப்பு
இயல்பாக இருக்கிறது
ஆரம்பக் காட்சிகளில் பப்ளிக் டாய்லெட் க்கு சென்று அங்கு தண்ணீர் ஊற்றாமல் செல்லும் பெண ஒருவரைகண்டிக்கும் போது இவர் கதாபாத்திரம் எவ்வளவு போல்டாக அமையப்போகிறது என்பது புரிகிறது அதன் பிறகு ப்ளஸ் டூ ரிசல்ட் கேட்டு காதலன் வருவான் அவனுடன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று காத்திருந்து ஏமாந்து போன அந்த காதலியின் உணர்வுகளை சித்தார்த்தின் மீது கோபமாக காட்டும் போது அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
நாயாட்டு என்ற மலையாளப்படத்தில்
நல்ல நடிப்பை வழங்கிய நிமிஷா இந்த படத்திற்கு பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறார்.

அஞ்சலி நாயர் சித்தார்த்தின் அண்ணியாக வருகிறார் இயல்பான நடிப்பு சித்தார்த் குழந்தை மீது பாசம் காட்டுவதைக் கண்டு உருகி போவதாகட்டும் பிறகு குழந்தை சித்தா பக்கத்தில் விடக்கூடாது என்று கண்டிப்பு ஆகட்டும் அந்த குழந்தைக்கு குட் டச் பேட்டச் சொல்லிக் கொடுப்பதாகட்டும் அஞ்சலி நாயர் அசத்தியிருக்கிறார்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய S.U.அருண் குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சினிமாவுக்கான எந்த பில்டப்பும் இல்லாமல் சராசரி நடுத்தர வர்க்கத்தின் குடியிருப்புகளுக்குள் புகுந்து அவர்களைப் போலவே சராசரி மனிதனின் உணர்வுகளைப் பிரதிபடுத்தி இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறார். ஒரு பாடலும் எழுதி உள்ளார்
.
சித்தார்த் அடி வாங்கும் போதும் குற்றவாளியை கொல்ல நினைக்கும் பொழுதும் காதலியிடம் மன்னிப்பு கேட்கும் போதும் குழந்தையிடம் பாசத்தை காட்டும் போதும் நமது பக்கத்து வீட்டில் என்ன நடக்குமோ அதை அப்படியே உணர்ந்து கதை வடிவத்தில் கொண்டு வந்து சித்தார்த்தை பொருத்திஇருக்கிறார்

நமது சராசரி வாழ்க்கையில் வில்லன்கள் என்று தனியாக யாரும் வருவதில்லை சந்தர்ப்பம் சூழ்நிலையும் தான்வில்லன்கள். என்பதைஅருமையாக சொல்லி உள்ளார் அதனால் நாம் ஒவ்வொரு கவனமும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறார்

சுந்தரியை சித்தா தனியாக ஏன் விட்டு விட்டு சென்றார் அந்த கேள்வியில் தொக்கி நிற்கிறது கதை அதை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம் இரண்டு குழந்தைகளையும் சித்தார்த் பைக்கில் கொண்டு செல்வதற்கு எது தடையாக இருந்தது என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்க வேண்டாமா?

‘சித்தா’. பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும், படத்திற்கான பாடல்களை திபு நிணன் தாமஸும் அமைத்துள்ளனர் இப்படத்தில் கண்கள் ஏதோ’ என்ற பாடல் ரசிக்க வைக்கிறது
யுகபாரதி பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது
.
பின்னணி இசை குறிப்பிட்டு சொல்லி ஆக வேண்டும் குழந்தையை தேடும் அந்த காட்சிகளும் கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசை மிரட்டி இருக்கிறார் விஷால் சந்திரசேகர்

படத்தில் ஆரம்பக் காட்சிகள் வெகு இயல்பாகவும் அண்ணன் மகளுடன் சித்தார்த் நடந்து கொள்ளும் பாசக் காட்சிகளும் அதை ரசிக்கும் அண்ணியும் தன்னை விட்டு பிரிந்து போன (சக்தி) நாயகி திரும்பி வந்ததை கண்டு சித்தார்த் மகிழ்ச்சி அடைந்து தன் நண்பனுடன் சேர்ந்து மீண்டும் சக்தியை பார்க்க நினைக்கும் காட்சிகளாகட்டும் அவர் அண்ணன் மகள் பள்ளியில் முட்டி போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கலங்கி வேறொரு பள்ளிக்கு மாற்ற நினைப்பது அருமையான காட்சிகள்

அவரது நண்பராக வரும் அந்த இன்டலிஜென்ட் போலீஸ் மனதில் ஜம் என்று இடம் பிடித்து உட்கார்ந்து கொள்கிறார். நண்பனுக்காக சித்தார்த்தின் காதலியிடம் தூது செல்லும் வடிவேலு கதாபாத்திரம் இந்த படத்தில் மற்றும் ஒரு நாயகன் என்றால் அதில் சந்தேகம் இல்லை தன் அக்காள் மகள் சித்தார்த் இருவரையும் இணைத்து ஊர் பழி சொல்லும் போதும் சித்தார்த்துக்காக காவல் நிலையம் வரை சென்று வாதாடி வெளியே கூட்டி வந்துவிட்டு ஏன்டா இப்படி செஞ்ச சுந்தரி ஏண்டா தனியே விட்டுவிட்டு வந்த என்று பொங்கி எழுந்து சித்தார்த்தை புரட்டி எடுக்கும்போது அட டா அருமையாக நடித்திருக்கிறார் அதன் பின் உண்மையை உணர்ந்து சித்தார்த்தின் அண்ணன் மகளை தேடி செல்லும் பொழுது அங்கு ஒரு போலீஸ்காரராக இல்லாமல் நண்பனாக உதவி செய்கிறார் அவரின் கதாபாத்திரம் மிக அருமை

படத்தில் குழந்தையை கடத்தும் அந்த வில்லன் அமைதியாக வந்தாலும் குரூரமாக இருக்கிறார் அடப்பாவி இவன் கையில் குழந்தைக்கு இருக்கே என்ன பாடுபடும் என்று மனம் பதைக்க வைக்கிறது அதுவே அவர் நடிப்புக்கு கிடைத்த வெற்றி

சித்தார்த்தின் அன்னான் மகள் படிக்கும் கல்லூரியின் தலைமை ஆசிரியையும் அந்த மகளிர் காவல் நிலையத்தில் மேலதிகாரியா வரும் அந்த போலீஸ் கதாபாத்திரம் சரி மிகவும் இயல்பாக இருக்கிறது தீபாவளி நாளில் வந்து உயிரை எடுக்குறீங்க நீங்க எல்லாம் நல்லா இருங்க என்று அந்த பெண் போலீஸ் அதிகாரி சித்தார்த்தை திட்டிவிட்டு சொல்வது மிக இயல்பு இன்றைய நாட்டு நடப்பு

குழந்தைகள் இருவரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள் இருவருக்கும் திருஷ்டி சுத்தி போட வேண்டும் இரண்டு குழந்தைகளும் நீண்ட காலம் நெருங்கி பழகிய தோழிகளாக அருமையாக நடித்து இருக்கிறார்கள்

சித்தார்த்தின் அண்ணன் மகள் மழலை குறும்பு வெகுளித்தனம் செல்போனை கண்டால் எல்லாவற்றையும் மறந்து போகும் இன்றைய குழந்தைகளின் பிரதிபலிப்பாக அம்சமாக நடித்து இருக்கிறார். படம் பார்ப்பவர்களை பரிதாபட வைக்கிறது அந்த பரிதாபமே படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

அடுத்து நாயகன் சித்தார்த் ஈசன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் மனுஷன் பழனியை சுற்றிய அந்த சிறிய நகரத்தில் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் தன் அண்ணன் மகளுக்காக வாழும் அந்த ஜீவன் எப்படி இருப்பாரோ அதை அப்படியே பிரதிபலிக்கிறார் நகராட்சியில் வேலை செய்யும் காதலியை கண்டு உருகும் போதும் நீ தான் நல்லா படிச்சிருக்கியே வேற வேலையை பார்க்கலாமென்று அன்போடு கேட்கும் போதும். அதே சமயம் கவனமாக தொழிலை பற்றி நான் குறை சொல்லவில்லை என்று வார்த்தைகளை கவனமாக பேசி நடிக்கும் போதும் சித்தார்த் நடிப்பு கொடிகட்டி பறக்கிறது

இந்த சமூகம் ஒழுக்கமாக இருக்கும் ஒரு மனிதனை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமைந்துவிட்டால் எப்படி வேண்டுமென்றால் கதைக்கட்டி பேசும் உலகம் ஆயிரம் சொன்னாலும் உனக்கு நீ தான் நீதிபதி என்று மனசாட்சியோடு வாழும் சித்தா கதை கட்ட ஒருவன் வந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு என்று கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு ஏற்ப அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

மகாநதியில் கமல்ஹாசன் போல இந்த படத்தின் சித்தா தன் அண்ணன் மகளுக்காக ஒரு சித்தராக வாழ்ந்து இருக்கிறார் இனி எல்லா குழந்தைகளும் தங்கள் சித்தப்பாக்களை சித்தா என்று அழைப்பார்கள் என்று நம்புகிறோம்

குடும்ப பின்னணியில் ஆரம்பித்துபின் கொஞ்சம் கொஞ்சமாக பெண் குழந்தைகளின் இன்றைய பாலியல் செய்திகளை பற்றி சொல்லி இடைவேளை நேரத்தில் அருமையான ஒரு டுவிஸ்ட் எதிர்பாராத பிரேக் கொடுத்து நம்மை வெளியே அனுப்புகிறார்கள் அடுத்து என்ன நடக்குமோ என்று எல்லோரும் பேச ஆரம்பி க்கிறார்கள். அங்கு இந்த படத்திற்கு கிடைக்கிறது வெற்றி

அதன் பின் படம் விறுவிறுப்பாக கிரைம் திரில்லர் பாதையில் குற்றவாளியை தேடும் போது கதை ஜம் என்று உயர பறக்கிறது அது இந்த திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி

சரி இந்த படத்தின் கதை என்ன வாங்க பாக்கலாம்

பெண் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும். பள்ளியில் இருந்து பெண் குழந்தைகள் சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வருகிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் அவர்கள் கையில் செல்போனை கொடுக்க கூடாது அவர்களுக்கு குட் டச் பேட் டச் சொல்லி வளர்க்க வேண்டும் பாசம் என்ற பெயரில் தேவையில்லாத பொருட்களை வாங்கி அதுக்கு அவர்கள் அடிமையாகி விடக்கூடாது. ஆண்கள் இன்று குழந்தைகளுடன் அதுவும் பெண் குழந்தைகளுடன் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இந்த படம்

சராசரி வீட்டில் தனது அண்ணன் மகளுடன் பாசமாக இருக்கும் சித்தப்பா ஈஸ்வரன் தனது நண்பன் வீட்டுக்கு செல்லும்போது கூட அந்த குழந்தையை வேறொரு குழந்தையை தன் மடியில் வைத்து சாப்பிட வைக்கும் ஜீவன் உள்ள ஈஸ்வரன் ஒரு கட்டத்தில் பாசத்தின் பேரில் எப்படி அவனே வந்து சதிவளையில் மாட்டிக் கொள்கிறார் என்பதை சொல்லும் கதை
எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வது இந்த படம்.

பெண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் எங்கும் நடக்கும் கதை அல்ல நம் வீட்டில் அக்கம் பக்கத்து வீட்டிலும் தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும் கதை தான் இது என்ற விழிப்புணர்வை யூட்டும் படம்

இது கமர்சியல் அடிதடி வன்முறை இவைகளுக்கு நடுவே மலர்ந்து இருக்கிறது இந்த குறிஞ்சி பூ

சித்தார்த் இனி எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் எந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதையும் அவருக்கு புரிய வைத்திருக்கிறது இந்த படம் பார்ப்பவர்கள் அனைவரும் சித்தார்த் என்ற நடிகனை மறந்து விட்டு ஈஸ்வரன் என்கிற அந்த மனிதநேயமிக்க மனிதனுக்கு வாழ்த்து சொல்வார்கள் பாராட்டு சொல்லுவார்கள்
இது போன்ற தரமான வித்தியாசமான நடுத்தர மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் இனி சித்தார்த் நடிக்க வேண்டும் என்பது நமது ஆசை

சித்தா தமிழ் சினிமாவில் தலை நிமிர வைக்கக்கூடிய நல்ல தரமான படம்

சித்தா இயல்பான நடிப்பு இயல்பான மனிதர்களின் கதை மனதை நெகிழ வைக்கும் தரமான படைப்பு

சித்தா உங்களை கேள்வி கேட்க வைக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண் குழந்தைகளை நாம் சரியாக கவனமாக பார்த்துக் கொள்கிறோமா என்று உங்களை தட்டி எழுப்பும்

சித்தா அண்ணன் மகளுடன் ஒரு சித்தப்பா எப்படி இருக்க வேண்டும் பாசத்தை எப்படி புரிய வைக்க வேண்டும் என்பதை உணர்த்தும்மீண்டும் ஒரு பாசமலர்.

சித்தார்த் இந்த படத்தை தயாரித்து நடித்த தற்காக பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ஒவ்வொரு பெண் குழந்தைகளும் அவரை பாராட்டும்

சுரேஷ் ஏ பிரசாத் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. பாலாஜி சுப்பிரமணி ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. பாலச்சந்தர் ஆர்ட் டைரக்டரின பணி பாராட்டுக்குரியது எது வீடு எது செட் என்று தெரியாத அளவுக்கு அசத்தி இருக்கிறார்

ஒப்பனை யே இல்லாத நடிகர்களுக கு கவிதா ஒப்பனை யாளராக பணி புரிந்து உள்ளார். பட
இயல்பான வசனம் இப்படி எல்லாமே பொருந்தி போயிருக்கிறது சித்தாவில் எதார்த்தத்தை மீறாமல் கதை சொல்லி இருப்பது இயக்குனருக்கு கிடைத்த வெற்றி எதார்த்தத்தை மீறாமல் சித்தார்த் நடித்திருப்பது சித்தார்த்க்கு கிடைத்த வெற்றி மொத்தத்தில் இந்த சித்தா எல்லோரையும் நெகிழ வைக்கும் தரமான படைப்பு

கிளைமாக்ஸ் காட்சியில் சித்தார்த் எடுக்கும் முடிவு சரியானது என்று நம்ப வைத்து அது தீர்வு அல்ல இதுதான் தீர்வு என்று இயக்குனர் சொன்னது கை தட்ட வைக்கிறது

கிளைமாக்ஸ் காட்சியில் ஆட்டோவில் செல்லும் ஒரு பெண் கூட கைதட்டல் பெறுகிறார்

மொத்தத்தில் இந்த சித்தா பாசத்தை காட்டும் முத்தானவன். பெண் குழந்தைகளுக்கு ஆதரவானவன். சமூக மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பவன்.

சினிமா என்பது வெறும் பொழுது போக்கல்ல மனித மனங்களில் புகுந்து பழுது பார்த்தல்

இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம் நிறைவான படம். தனி மனித ஒழுக்கம் சிறந்தது என்று புரிய வைக்கும் படம்