இறைவன் திரை விமர்சனம்

இறைவன் யார்? காப்பாற்றுபவனா அழிப்பவனா அழிக்க நினைப்பவனுக்கு பெயர் பிரம்மா

காப்பாற்ற நினைப்பவர்க்கு பெயர் அர்ஜுன்

இந்த பிரம்மாவுக்கும் அர்ஜுனுக்கும் நடக்கும் யுத்தம் தான் இறைவன்

ஜெயம்ரவி நீதிக்காக உழைக்கும் பயமில்லாத போலீஸ் அதிகாரி. தன் வேலைக்கே பிரச்சனை வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் குற்றவாளிகளை எதிர்கொள்பவர் அவரின் நெருங்கிய நண்பர் ஆண்ட்ரூ(நரேன்).
ஜெயம் ரவிக்கு ஆபத்து வரும் போதெல்லாம் உடன் இருந்து காப்பவர் நரேன் இந்த இருவரின் நட்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்

நரேன் ஜெயம் ரவியிடம்
உன் கோபத்தை குறைத்துக்கொள் என கூறுகிறார் குற்றவாளிகளை அர்ஜுன் கையாளும் விதத்தால் தங்கள் இருவருக்கும் பிரச்சனை வருமோ என நினைக்கிறார் நண்பரும், சக காவலருமான ஆண்ட்ரூ. தன் மனைவி ஜாஸ்மின்(விஜயலட்சுமி), தங்கை ப்ரியா (நயன்தாரா) மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஆண்ட்ரூ.
ஆனால் ஜெயம் ரவி அப்படிப்பட்ட கேரக்டர் அல்ல

சைக்கோ கொலையாளியான பிரம்மா(ராகுல் போஸ்) இரவில் சிறுமிகளை கடத்தி, கொடூரமான முறையில் கொலை செய்வதால் அர்ஜுன், ஆண்ட்ரூவின் வாழ்க்கை மாறுகிறது. பிரம்மாவால் கொலை செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆண்ட்ரூ மற்றும் அவரின் குழுவினர் அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்து, கைது செய்கிறார்கள். அப்பொழுது ஆண்ட்ரூ இறந்துவிடுகிறார்.
அதன் பிறகு ஜெயம் ரவி இன்னும் மிகவும் கடுமையான மனிதராக மாறுகிறார்

தன் ஆரூயிர் நண்பன் ஆண்ட்ரூவின் மரணத்தால் வேதனை அடைகிறார் இதையடுத்து காவல் துறையை விட்டு விலகி ஆண்ட்ரூவின் குடும்பத்தை காப்பாற்ற நினைக்கிறார் ஆண்ட்ரூவின் தங்கையுடன் சேர்ந்து காபி கடையை திறக்கிறார்.
அப்போதும் ஜெயம் ரவி கொலையாளி சைக்கோ பற்றிய நினைத்துக் கொண்டிருக்கிறார் இது நயன்தாராவுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது

. ஆனால் போலீசாரின் பிடியில் இருந்து பிரம்மா தப்பியோடி மீண்டும் கொலை செய்யத் துவங்குவதால் அர்ஜுனின் நிம்மதியான வாழ்க்கையில் புயல் வீசுகிறது.
நயன்தாரா குடும்பத்திலிருந்து விலகப் பார்க்கிறார் ஜெயம் ரவி
அதன் பிறகு
பிரம்மாவை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்தாரா
ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் கதாபாத்திரம் நல்லவங்கள் தவறு செய்யும் போது போலீஸ் ஏன் தவறு செய்யக்கூடாது என்று கேட்க வைக்கிறது

பிரம்மாவை அறிமுகம் செய்து வைக்கும் காட்சி சுவாரஸ்யமாக இருக்கிறது. முதல் பாதியில் இருக்கையின் நுனிக்கு நம்மை வரவைக்கிறார் இயக்குநர். திரைக்கதை நம்மை கவர்கிறது. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்கிறார்கள். வழக்கமாக கிளைமாக்ஸில் நடப்பது ஆரம்பத்திலேயே நடக்கிறதே என சந்தோஷப்படுகிறோம். அது படத்தில் கிடைத்த மிகப்பெரிய டிவிஸ்ட்
அடுத்து என்ன நடக்கும் என்பதற்கு இந்த பரபரப்பான காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ஆனால் இடைவேளையின்போது படத்தின் மீதான ட்விஸ்ட் அடடா என சொல்ல வைக்கிறது
அடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடிகிறது. ஆனாலும் சுவராஸ்யமான திரைக்கதை
, ஜெயம் ரவி மிரட்டல், நயன்தாரா கெமிஸ்ட்ரி சூப்பர்

சரி படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

குற்றவாளிகளைத் தண்டிக்கும் (கொல்லும்) அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கிறார் அர்ஜுன்
. அவரது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறார் உடன் பணிபுரியும் நண்பரான ஆண்ட்ரூ இந்நிலையில் சென்னை யை சுற்றி மிக மிகக் கொடூரமான முறையில் இளம் பெண்கள் நிர்வாணப்படுத்திக் கொல்லப்படுகிறார்கள்.
அந்த கொலைகாரன் யார் அவன் ஏன் அப்படி செய்கிறான் அவன் ஏன் இளம் பெண்களை மட்டும் கடத்துகிறான் இதை போலீஸ் துறை எப்படி கண்டு பிடிக்கிறது போலீஸ் சீரியஸாக எடுத்துக் கொண்டார்களா? காமெடியாக சொன்னார்களா . ஒருகட்டத்துக்கு மேல் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க, கொலையாளியைக் கண்டுபிடிக்க அர்ஜுனும், ஆண்ட்ரூவும் களமிறங்குகிறார்கள். அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடித்தார்களா, அவனால் இவர்கள் வாழ்க்கை என்னவானது என்பதுதான் ‘இறைவன்’ படத்தின் கதை
இதற்கிடையில் நயன்தாரா ஜெயம் ரவியின் காதல் நரேன் விஜயலட்சுமியின் காதல்
சார்லி தன் மகள் மீது வைத்திருக்கும் அன்பு

அழகம்பெருமாள் ஜெயம் ரவி சார்லி இவரின் நட்பு இப்படி பல கிளைக் கதைகள் வந்து போகிறது
பயம் என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரியாக ஜெயம் ரவி. கண்கள் விரியக் கோபப்படுவது, சாதாரணமாகக் கோபப்படுவது, கத்திக் கோபப்படுவது எனக் கோபப்படுவதில் பல வெரைட்டிகள் காட்டியுள்ளார். அவருக்கு இது மிகவும் பொருத்தமான வேடம்
. நாயகனை ஒரு தலையாகக் காதலிக்கும் வழக்கமான காதலியாக ஆங்காங்கே வந்து போகிறார் நயன்தாரா.
நரேன் கதாபாத்திரம் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தனக்கான பணியைச் செய்து படத்திலிருந்து காணாமல் போக சீரியல் கில்லர் வில்லனாக வரும் ராகுல் போஸ், தனது பணியைத் திறம்படச் செய்துள்ளார்

. அந்தக் கதாபாத்திரம் உருவாக்க வேண்டிய பயத்தை காமெடி காட்சிகளாக காட்டிஇருக்கிறார்கள்

மற்றொரு முக்கிய பாத்திரத்தில் வந்துள்ள வினோத் கிஷன் நடிப்பில் மிகைத் தன்மை
. இது தவிர ஆஷிஷ் வித்யார்த்தி, சார்லி, விஜயலட்சுமி எனப் பலர் படத்திலிருந்தாலும் எல்லோரும் தன் பங்குக்கு செய்து உள்ளனர்..
இளம் பெண் குழந்தைகள் ஒவ்வொரு முறையும் கொல்லப்படும் பொழுது படம் பார்ப்பவர்களுக்கு பகீர் என இருக்கிறது அதற்கு சரியான விளக்கம் அழுத்தமாக இயக்குனர் கொடுத்திருந்தால் ஒரு சோசியல் மெசேஜாக இருந்திருக்கும்

டிக் டாக் செய்பவர்கள் ரீல் செய்பவர்கள் இன்ஸ்டாகிராமில் பென்மையின் அங்கங்களை காட்டுபவர்கள் இதனால் பல வாலிபர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதனால் சைக்கோன கொல்கிறான். என ஏதாவது மெசேஜ் சொல்லி இருக்கலாம் அப்படிப்பட்ட பெண்கள் திருந்துவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்
அந்த கொலைகாரனை கண்டுபிடிக்க ஜெயம் ரவி முற்படும்போதெல்லாம் போலீஸ் தடை ஏற்படுத்துவது நியாயமானது அல்ல

யுவன் சங்கர் ராஜா இசையில் எந்தப் பாடலும் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் சில வித்தியாசமான இசையை தந்து ஆச்சரியப்படுத்துகிறார்.. ஒளிப்பதிவாளர் ஹரி.கே.வேதாந்த் தொடர் கொலையைப் பிரதிபலிக்கும் இருண்மையைத் தனது ஒளிப்பதிவில் சிறப்பாகக் கையாண்டுள்ளார். படத்தொகுப்பாளர் ஜெ.வி.மண்கண்ட பாலாஜி படத்தின் படத்தொகுப்பில் கச்சிதமாக இருக்கிறது
மனித உடல்களை அறுக்கும் இடம், இறந்த உடல்களைக் காட்சிப்படுத்துவது, போஸ்ட்மார்ட்டம் எனக் கலை இயக்குநர் ஜாக்கி அவர் மேல் குறை சொல்ல முடியாத உழைப்பைத் தந்திருக்கிறார்.

கொடூரமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஐ.அகமது. மேலும் குற்றவாளி யார் என்பதை வெளிப்படுத்தியதால் மீண்டும் இதே போன்ற கொடூரமான காட்சிகளை நம்பியே திரைக்கதை நகர்கிறது. விறுவிறுப்பாக இருக்கிறது

மாடல் பெண், போட்டோகிராபர் என ஆங்காங்கே வரும் துணை கதாபாத்திரங்களும் முகம் இளைஞர்கள் தியேட்டரில் ஆரவாரம்
இரண்டாம் பாதியில் கொலைகாரனின் பின்னணியை விளக்கும் காட்சிகள் அருமை இடைவேளைக்கு பிறகு கொலைகாரன் யார் கணேசா அல்லது பாதரா அல்லது போலீஸ் துறையை சேர்ந்த ஒருவரா அல்லது ஜெயம் ரவியா
என்ற சந்தேகத்தின் பேரில் கதையை பரபரப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் நயன்தாராவுக்கும் ஜெயம் ரவிக்கும் கூடல் கம்மியாக இருந்தாலும்
ஊடல் ரசிக்க வைக்கிறதுநரேன் ஜெயம் ரவி
வரும் காட்சிகள் நட்பு பலமாக இருக்கிறது நரேனை இடைவேளை வரை சாகடிக்காமல் வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் காட்சிகள் உயிரோட்டமாக இருந்திருக்கும் ஆதிஷ் வித்யார்த்தி அதே கர்ஜனை அதே உதட்டை பிதுக்குவது என பல படங்களில் பார்த்த நடிப்பு அப்படியே நடித்திருக்கிறார் இயக்குனர் திரைக்கதையில் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் கொலையாளி யார் என்பதை மறைத்துக் கொண்டு செல்வதில் சிரமப்பட்டு திரைக்கதை எழுதியிருக்கிறார் ஒன்றின் மீது சந்தேகம் வைத்து இன்னொன்றை கிளைமாக்ஸ் காட்சியில் காட்டுவது தான் கிரைம் திரில்லர் மாமுல் ஃபார்முலா அதேபோல இப்படத்திலும் கொலைகாரன் இவர்தான் என காட்டும்போது நமக்குள் பரபரப்பு விறுவிறுப்பு ஏற்படுகிறது மொத்தத்தில் இந்த இறைவன் எல்லோரையும் காப்பாற்றுவான்