‘சந்திரமுகி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்குசொல்வதுஎன்ன
“படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு. தான் பயந்து ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக லாரன்சுடன் வடிவேலு பேசும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு மழை”
மேலும், “நாயகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் அழகு தேவதையாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சந்திரமுகியாக நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். லட்சுமி மேனன் பாவமாகவும், சந்திரமுகி ஆத்மா புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார்”
”ரஜினி காந்த், ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சந்திரமுகியில், இருந்த டெம்ப்ளேட் இந்த படத்தின் கதை இருக்கிறது
பல வருடங்களாக மூடியிருக்கும் சந்திரமுகி அரண்மனையை வடிவேலு பெயரில் பிரபு எழுதிக்கொடுத்துவிட்டார், இந்த நேரத்தில் ராதிகாவின் குலதெய்வம் இதே ஊரில் இருக்க, அவர்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் நடக்கின்றது.
அந்த நேரத்தில் ஒரு குருநாதர் கண்டிப்பாக அந்த குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று சொல்ல ராதிகா தன் குடும்பத்துடன் சந்திரமுகி ஊருக்கு செல்கின்றனர்.
சென்ற இடத்தில் தங்க சந்திரமுகி அரண்மனையையே வாடகைக்கு எடுக்க, பிறகு என்ன சந்திரமுகி முதல் பாகத்தில் என்ன நடந்ததோ, அதையே
சந்திரமுகி 2 வாக எடுத்து உள்ளனர்.
ரஜினி, ஜோதிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம் ‘சந்திரமுகி’. திகில், காமெடி, பாடல்கள், மாஸ், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்று எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்திய படம் அது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்..
காட்டன் மில் ஓனரான ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு துர்சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு சொந்தமான காட்டன் மில்லில் தீ விபத்து நிகழ்கிறது. ஒரு விபத்தில் ரங்கநாயகியின் இளைய மகளால் (லட்சுமி மேனன்) நடக்க முடியாமல் போகிறது. அவரது மூத்த மகள் வேறு மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார். தங்கள் குலதெய்வத்தை ரங்கநாயகியின் குடும்பம் மறந்து போனதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக அவர்கள் குடும்ப சாமியார் (ராவ் ரமேஷ்) சொல்வதைக் கேட்டு சந்திரமுகி பங்களா இருக்கும் ஊருக்கு செல்கின்றனர்.
வேற்று மதத்தை சார்ந்தவரை திருமணம் செய்த மகளுக்கு பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாமியார் கூறியதால், அந்தக் குழந்தைகளும் அவர்களது கார்டியனான பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) அந்த ஊருக்கு வருகின்றனர். சந்திரமுகி பங்களாவின் தற்போதைய ஓனர் முருகேசனிடம் (வடிவேலு) அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்கும் அவர்களை, தங்கள் குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுக்கிறார் ஒரிஜினல் சந்திரமுகி (கங்கனா). சந்திரமுகியை தடுத்து ரங்கநாயகியின் குடும்பம் குலதெய்வம் கோயிலில் பூஜை செய்ததா என்பதே மற்றவை.
படத்தின் தொடக்கத்தில் ராதிகாவின் குடும்பக் பிரச்சனை முடிந்து லாரன்ஸின் அறிமுகக் காட்சி. அவர் பராமரிப்பில் இருக்கும் இரண்டு குழந்தைகளையும் யாரோ கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகையில், பைக்கிலே பறந்து சென்று பஸ்ஸின் பின்பக்கத்தை உடைத்து உள்ளே சென்று, அடுத்த நொடி இரண்டு குழந்தைகளையும் அலேக்காக இரு கைகளில் பிடித்தபடியே பஸ்ஸின் முன்பக்கத்தை உடைத்துக் கொண்டு பைக்கோடு வெளியே பறந்து வருகிறார் லாரன்ஸ்.
இரண்டு குழந்தைகளையும் வெறுத்து ஒதுக்கும் ராதிகா குடும்பத்தை ஒரே சீனில் வசனம் பேசியே திருத்தி விடுகிறார் ஹீரோ லாரன்ஸ். அட டா லட்சுமி மேனன் வீல் சேரில் அமர்ந்து வரும்போதே தெரிந்து விடுகிறது, அந்த கேரக்டருக்கு என்ன ஆகப் போகிறது
இத்தனை ஆண்டுகளாக லாரன்ஸ் ரஜினியாக நின்றார். லாரன்ஸ் ரஜினியாக நடந்தார். லாரன்ஸ் படத்தில் அறிமுகக் காட்சி தொடங்கி இறுதி வரை தன் ஒவ்வொரு அசைவிலும் ரஜினியை அப்படியே நகலெடுத்து நடித்து வைத்திருக்கிறார். .
அடுத்து வடிவேலு. முந்தைய பாகத்தில் வந்த அதே முருகேசன் பாத்திரத்தில் வருகிறார். ஆனால், காமெடி என்ற பெயரில் வடிவேலுவும் லாரன்ஸும் செய்பவை சிரிப்புக்கு பதில் எரிச்சலை மட்டுமே வரவைக்கின்றன. அதிலும் முந்தைய பாகத்தில் “பேய் இருக்கா இல்லையா?” என்று வரும் கிளாசிக் காமெடியை வேறு மாதிரி எடுக்கிறேன் என்று ‘பேய்க்கு வயசாகுமா? ஆகாதா?’ என்று ஒரு நீ….ண்ட காட்சியை வைத்திருக்கிறார்கள். அரங்கம் முழுக்க மயான அமைதி நிலவுகிறது. படம் ஜம் முழுக்க ஆங்கிலத்தை கொஞ்சம் கொனஷ்டையாக வடிவேலும்
என்ன செய்யப் போகிறார்கள் மீதி படம் பார்ப்பவர்களுக்கு சந்திரமுகி மிரட்டினாளா படம் பார்க்க வந்தவர்களை விரட்டினாலா என்பது போக போக தெரியும்
