மார்கழி திங்கள பட விமர்சனம்

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் வரும் அக்டோபர் 27ம் தேதி வெளியாகிறது

மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள ‘மார்கழி திங்கள்’ படம் எப்படி
காதலுக்கு மரியாதை செய்கிறதா

அல்லது காதலர்களை துவம்சம் செய்கிறதா

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதனைத் தொடர்ந்து ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’, ‘சமுத்திரம்’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவரின் புதியபாதைஇயக்குனர் அவதாரம் அதில்வெற்றிபெற்றுள்ளார் வாழ்த்துக்கள்

இளையராஜா இசையில் ‘மார்கழி திங்கள்’ உன் நினைவால் என்கிற பாடல் ஒன்று போதும்
படத்தின் தரம் சொல்ல பின்னணி இசை இனிமை..

இந்த படத்தில் அவரது தந்தையும் இயக்குநருமான பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருமையான நடிப்பு பாசமான தாத்தா ஒரு புறம் உறவுகள்மிரட்டல் ஊருக்குபயப்படுவதுதுணிந்து பேத்தி பாசத்துக்காக முடிவெடுப்பது. பின் தவறான முடிவால் தடுமாறுவது என நடிப்பில்பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறார் இந்த ஆண்டின் தேசிய விருது இவருக்குத்தான் அவ்வளவு அற்புதமான நடிப்பு வசன உச்சரிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது

படத்தில் ஷியாம் செல்வன், நாயகனாக நடித்துள்ளார் துள்ளலான முகபாவம் கதையை உள்வாங்கி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது வித்தியாசம் மாநிறமான நடிகர்கள்தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருப்பதால் ஷியாம் செல்வன் வினோத் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா மீண்டும் ஒரு நாயகனாக வலம் வர வாய்ப்பு உள்ளது

ரக்ஷனா :
கவிதாஎன்ற வேடத்தில் நடித்துள்ளார் செம கச்சிதமாக இருக்கிறது இளமையான வரவு இனி வரும் காலங்களில் இவரும்ஒரு கலக்குகலக்குவார். கிளைமேக்ஸ் காட்சிகளில் நடிகை ரேவதி “ஷோபனா இவர்களை ஞாபகப்படுத்துகின்றார்.

பள்ளியில் காதலர்களை போட்டுகொடுக்கும்போதும் சரி தன்னோடு படிக்கும் சகமாணவர்
அதிக மதிப்பெண் பெற்றபோதும் பொங்குவது சரி தாத்தாவிடம் அவனை வீழ்த்து வேன் என சொல்லும் போதும் சரி நடிப்பில் அசத்துகிறார் . தன் தோழியிடம் தன் காதலனை பற்றி உண்மைகளை தெரிந்து கொள்ளும்போது மழையில் நனைந்து கொண்டு ஆக்ரோஷமாக பொங்கி எழும் அந்த காட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது. காதலனின் தாய் தந்தை நிலையை கண்டு உருகுவது வெள்ளந்தியாக பேசுவது என நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் கவிதா என்கிற ரக்ஷனா தோழியாக வரும் , நக்ஷா சரண் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தை இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்

ரக்க்ஷனாவும் பாரதிராஜாவும் பாசமான தாத்தா பேத்தி அம்மா ‘அப்பா இல்லாத பேத்தி மீது அன்பை பொழிகிறார் தாத்தா. பேத்தி எது கேட்டாலும் வாங்கி தருவார்

ரக்ஷனா பள்ளியில் முதல் மார்க் எடுத்து பள்ளியில் முதல்நிலை மாணவியர் இருப்பவர

அவர் படிக்கும் வகுப்புக்கு கதாநாயகன் ஷியாம் செல்வன் புதிதாக வருகிறார்

நாயகி நன்றாக படித்தாலும நாயகனின் முன்னால் இரண்டாம் நிலைக்கு தள்ள படுகிறார்

இதை பொறுக்காத கதாநாயகி ரக்ஷனா பத்தாம் வகுப்பு பப்ளிக் தேர்வில் முதல் மார்க் எடுப்பேன் என்று சவால் விடுகிறார்.

ஒருவேளை அப்படி எடுக்காவிட்டால் நாயகன் படிக்கும் 11 ஆம் வகுப்பிற்கு வரமாட்டேன் என்கிறார்.

இதை கேட்டநாயகன் நாயகிக்கு விட்டு கொடுக்க

தேர்வில் முதல் மார்க் எடுக்கிறார் நாயகி . 11 ஆம் வகுப்பு ஆரம்பமாகிறது கதாநாயகன் ரக்ஷனாவை காதலிப்பதாக அவளது தோழியிடம் சொல்ல காதல்னா அவளுக்கு பிடிக்காது என்று சொல்ல சில நாளில் கதாநாயகன் விட்டுகொடுத்ததால்தான் தான் முதல் மார்க் வாங்கினோம் என்ற உண்மை கதாநாபகிக்கு தெரியவர அதன்பிறகு இருவரும் காதலிக்கிறார்கள். +2 முடிகிறது. கதாநாயகன் சென்னைக்கு படிக்கபோகிறேன் நீயும் படிக்க சென்னை வா என்கிறார்.

நாயகியோ தாத்தா பக்கத்து ஊரில்தான் படிக்கவைப்பார் சென்னைக்கு அனுப்பமாட்டார் என்று சொல்கிறாள். இருவருக்கும் சின்ன ஊடல் வர கதாநாயகி ரக்ஷனா தாத்தா பாரதிராஜாவிடம் தான் காதலிக்கும் விஷயத்தை சொல்கிறாள். தாத்தா மறுப்பேதும் சொல்லாமல் கதாநாயகன் அவரது அப்பா அம்மா பாரதிராஜா பேத்தி ஒன்றுகூடி பேசும்போது, கல்லூரி படித்து முடித்துவிட்டு வரும்வரை ஒருவரையொருவர் பார்க்ககூடாது பேசக்கூடாது படிக்கிற இடத்தில் நீ யாரையும் லவ் பண்ணக்கூடாது அவனும் யாரையும் லவ் பண்ணக்கூடாது அப்படி இருந்து படிச்சு முடிச்சிட்டு வந்தீங்கன்னா இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிறேன் என்று பாரதிராஜா சொல்லி சத்யம் வாங்கி கொள்கிறார்
அதன்பிறகு நடக்கும் கதையில்தான் விறுவிறுப்பும் பரபரப்பும் அடுத்து என்ன நடக்கப்போகுது என்ற பீதியை கிளப்புகிறது . கதை கிராமத்தில் இருக்கும் உறவு முறைகள் சாதிய மோதல் ஆதிக்கம் அதைத் தாண்டி போக முடியாத காதல் என எல்லா கோணத்திலும் இந்த படத்தை அணுகி இருக்கிறார் இயக்குனர் ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை’ பள்ளி காதல் ‘தாத்தா’ தாய் மாமன்’ என்ற வட்டத்துக்குள் போகும் கதையில் என்ன விறுவிறுப்பை காட்டப் போகிறார் என்று நினைக்கும் பொழுது இடைவேளைக்கு பிறகு பகிர் என நெஞ்சில் பற்றவைக்கும் தீபோல ஒரு பதற்றமான திரை கதையை கொண்டு வந்திருக்கிறார் அதுதான் படத்துக்கு வெற்றியும் கூட

தாத்தாவாக பாரதிராஜா அவர்கள் நடித்திருக்கிறார் என்பதைவிட கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகனாக ஷியாம் செல்வன் புதுவரவாக இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகி ரக்ஷனா பள்ளி பருவம் காலேஜ் பருவம் என்று அருமைமாக நடித்து கைதட்டல் பெறுகிறார். இயக்குநர் சுசிந்திரன் கேரக்டர் அருமை. மற்றும் இதில் நடித்திருக்கும் அப்புகுட்டி கதாநாயகி தோழி சூப்பர்குட் சுப்ரமணி என எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு அருமை கிராமத்து அழகு கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்

. இளையராஜாவின் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது

நடிகராக இருந்த மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். பள்ளி பருவத்தில்வருகின்ற காதல் ‘சாதி பார்ப்பதில்லை

பணக்காரனா ஏழையா என்றெல்லாம் பார்ப்பதில்லை அப்படி இளம் நெஞ்சில் பூத்த காதலுக்கு தடையாக வருகிறது சாதி

அந்த சாதி இளம் நெஞ்சங்களை வாழவிட்டதா என்ன செய்தது இந்த கொடிய சமுதாயம். என்பதை சொல்லும் படம்

மார்கழி திங்கள். என்பது பனிபடர்ந்தவசந்த காலம். அந்த காலத்தில் பூத்த பூக்களாய் பூத்த காதல அழகானது அங்கு புயல் வீசினால் என்ன ஆகும்

வில்லனாக களம் இறங்கி உள்ளார். நல்ல நடிப்பு : ‘மார்கழி திங்கள்’ திரைப்படம் ஒரு உன்னதமான பள்ளி பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரனின் வில்லத்தனம் மிரட்டலாக இருக்கிறது அவர் இனி தொடர்ந்து வில்லனாக களம் இறங்கலாம். அவரின் பார்வையும் அந்த ஜாதிய பிற்போக்கு தனமும் நன்றாக கைகொடுத்து இருக்கிறது

மேலும் இப்படம் 90ஸ் கிட்ஸின் காதல் கதையை நினைவு படுத்தும் விதத்தில் உள்ளது .

இதுவரை ஒரு நடிகராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படும், மனோஜ் பாரதிராஜா இந்த படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் ரசிக்க வைக்கும்பத்து அம்சங்கள்.

|) பள்ளி பருவத்து காதல் அதை அப்படியே பிரதிபலிக்கிறாரகள் நடித்துள்ள இளசுகள் நல்ல தேர்வு

2)இயக்குனர் பாரதிராஜா நடிப்பும் அவர் கதாபாத்திரமும் எதார்த்தமான கிராமத்து மனிதர்களை கண் முன் நிறுத்துகிறார் எவ்வளவு நியாயமான பேர் வழியாக இருந்தாலும் ஜாதி என்று வந்துவிட்டால் மனம் மாறிவிடுவார்கள் என்ற கருத்தை அழுத்தமாக. பதிய வைத்திருக்கிறார் இயக்குனர்

3)காதலுக்கு தூது போகும் தோழி கூட சில நேரங்களில் கவிழ்த்து விடுவாரோ என்றஅபாயம் இன்றைய காலத்துக்கு உண்டு எனவே காதலிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்ற நல்ல நியாயமான கருத்தை சொல்லி இருக்கிறது இந்த படம்

4)இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு பெரிய பலம் அவரின் பின்னணி இசை மிக அருமையாக இருக்கிறது கிராமத்து படங்களுக்கு ராஜாவை விட்டால் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது படத்திற்கு மிக பலமாக இருப்பது இசை கிளைமாக்ஸ் கட்சியில் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசைஞானி

5)தன் காதலன் வினோத்தை தேடி நாயகி புறப்படும் அந்த காட்சியில் இருந்து கதைக்களம் விறுவிறுப்பாக மாறுகிறது அடுத்து என்ன நடக்கும் வினோத் எங்கு போய் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு படம் பார்ப்பவர்களுக்கு தொற்றிக்கொள்கிறது அதை சொன்ன விதம் நன்றாக இருக்கிறது

6)கிராமங்களில் இன்றும் நடக்கும் அவலங்கள் திரையில் பார்க்கும் போது இந்த சமுதாயம் எப்போது மாறும் என்ற கேள்வியை எழுப்புகிறது உடுமலைப்பேட்டை சம்பவங்களும் தர்மபுரி சம்பவங்களும் கண் முன்னே வந்து போகிறது வேங்கை வயலில் குடிக்கும் நீரில் மலத்தை கலந்த மனிதநேய மில்லாத வர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நெற்றியில் அடறந்தது போல் இந்த படம் அமைந்துள்ளது

7)நாயகனின் அப்பா அம்மா நண்பர்கள் காதலியின் தோழி இயக்குனர் பாரதிராஜாவின் வேலைக்காரன் அப்புகுட்டி சுசீந்திரனுக்கு துணையாக வரும் இரண்டு உயர் ஜாதிக்காரர்கள் என எல்லா கதாபாத்திரங்களும் கதையை விட்டு விலகாமல் கச்சிதமாக கதைக்கும் பொருந்தி இருப்பது சிறப்பு

8)படத்தின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் லேக்ஆகாமல் கொண்டு சென்று இருப்பது படத்தின் தொகுப்பாளருக்கு போய் சேரும்

9)பிரமாண்ட படம் எடுக்கிறேன் என்று சொல்லி பட்ஜெட்டை அள்ளி வீசிவிட்டு கதையில்லாமல் திண்டாடும் தமிழ் சினிமாவில் அன்றாட வாழ்வில் நிஜமாக சந்திக்கும் மனிதர்களின் பிம்பங்களாக
கதாபாத்திரங்களை உருவாக்கி கண்முன் உலவவிட்டு சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லி வந்திருக்கும் இந்த காதல் படம் இன்னொரு அலைகள் ஓய்வதில்லை. அன்று மதத்திற்கு எதிராக போராடினார் தந்தை இன்று ஜாதிக்காக போராடி இருக்கிறார் மகன்

10) தேசிய விருதை குறி வைத்து படம் எடுத்திருக்கிறேன் என்று இயக்குனர் சுசீந்திரன் சொன்னார் அது நிச்சயம் 100% பொருந்தும் வடமாநிலங்களிலும் இந்த ஜாதி தீ கொழுந்து விட்டு எரிகிறது எனவே எல்லா மொழிகளுக்கும் ஏற்றவாறு இந்த படம் இருப்பதால் நிச்சயம் தேசிய விருதுக்கான படம் தான் மார்கழி திங்கள்