இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி யுள்ள திரைப்படம் ‘செவ்வாய் கிழமை’.
‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் அஜய் பூபதி தான் ‘செவ்வாய் கிழமை’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மாவுடன் இணைந்து தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள அஜய் பூபதியின் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
தனிமை ஒரு பெண்ணை எந்த சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது அவள் படும் துன்பங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு தன்னையே தொலைத்து நிற்கும் சைலஜா என்ற கதாபாத்திரத்தின் ஒரு அற்புதமான படைப்பு தான் செவ்வாய்க்கிழமை
இப்படத்திற்கு
பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளா
பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒவ்வொரு காட்சிக்கும் உயிரோட்டமான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்
இப்படத்திற்கு தாசரதி சிவேந்திரா ஒளிப்பதி செய்துள்ளார்
இருட்டில் நடக்கும் அந்த திகிலான சம்பவங்களும் சைலஜாவின் இளமைக் காலத்தில் நடக்கும் அந்த வசந்த காலங்களும் மாறி மாறி வண்ணத்துப்பூச்சிகளை சிறக்கடிக்கிறது சைலஜா ரவி ஆரம்பகால குழந்தைகளின் அந்த அன்பை ஒளிப்பதிவாளர் அருமையாக வடிவமைத்திருக்கிறார் மாலச்சம்மாவின் அந்த கோபுரமும் அந்த பச்சை பசல் வயல் காடும்
கண்ணுக்கு குளுமை ஒளிப்பதிவாளரின் மிக அற்புதமான படப்பிடிப்பில் இந்த செவ்வாய்க்கிழமை ரசிக்க வைக்கிறது
. , பாயல் ராஜ்புத் கதாபாத்திரமான ‘ஷைலஜா’ பாத்திரத்தின் வடிவமைப்பு இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை அருமையாக நடித்திருக்கிறார் சைலஜாவாக
பாயல் ராஜ்புத்
அவரது தோரணையும் அவளது கண்களில் இருக்கும் கசப்பான உணர்ச்சியும், பட்டாம்பூச்சியாய்
மனதை விட்டு அகல மறுக்கிறது
செவ்வாய்க்கிழமை படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
சைலஜா ரவி இருவரும் சின்ன வயதிலேயே அன்பாக பழகுகிறார்கள் அவர்களது அன்புக்கு எதிராக ரவி தன் தந்தையுடன் இறந்து போகிறார் இதனால் மனமுடைந்த சைலஜா விரக்தியின் விளிம்புக்கு தள்ளப்படுகிறாள்
சைலஜா வின் தந்தைக்கும் சைலஜாவின் சித்திக்கும் சைலஜாவின் இறந்து போன அம்மா 3 ஏக்கர் நிலத்தை எழுதி விட்டுப் போனது கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள் சைலஜாவின் பாட்டி தர மறுப்பதால் சைலஜா விடம் இருந்து தந்தையும் சித்தியும் விலகுகிறார்கள் ஒரு கட்டத்தில் சைலஜாவின் பாட்டியும் இயற்கை மரணம் அடைய சைலஜா தனிமை அடைகிறாள் கல்லூரிக்குப் போகும் போது அங்கு வரும் பேராசிரியர் ஒருவர் இடம் மனம் பறிகொடுத்து உடலையும் பறிகொடுக்கிறார் சைலஜா அந்த ஆங்கில பேராசிரியர்
சைலஜாவை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணைதிருமணம் செய்து கொண்டு மாற்றலாகி போய் விடுகிறார் அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் பகீர் என்று இருக்கிறது. இப்படி எல்லாம் நடக்குமா என்ற கேள்வியை நம்முள் எழுப்புகிறது பெண்ணின் உணர்ச்சிகள் அவள் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை தான் அவள் புனிதம் அதே அவளின் கட்டுப்பாட்டை இழந்து விட்டால் என்னவாகும் என்ற ஒரு புதிய கேள்வி எழுப்புகிறது இந்த படத்தின் கதையும் திரைக்கதையும்
கிராமத்தில் தெய்வமாக போற்றப்படும் பிரகாசம் பாபு அவர் சொன்னது தான் சட்டம் அப்படி ஒரு மரியாதையோடு வாழ்ந்து வருகிறார்
செவ்வாய்க்கிழமை என்றால் மானச்சி அம்மனுக்கு உகந்த நாள் அதே நாளில் அந்த கிராமத்தில் உள்ள சுவற்றில் கள்ளக்காதல் செய்யும் இருவரை பற்றி எழுதப்பட்டிருக்கிறது அதன்பின் அந்த இருவரும் விஷம் குடித்து இறந்து போகிறார்கள் அப்பொழுது அங்கு வரும் போலீஸ் அதிகாரி மாயவான நந்திதா அது கொலையா தற்கொலையா என்று துப்பு துலக்குகிறார் . ஆனால் ஊரின் ஜமீந்தர் பிரகாசம் பாபு எங்கள் கிராமத்து பழக்கப்படி அந்த உடலை அறுக்க முடியாது இது தற்கொலை தான் என்று கண்டிப்பாக உடலை கொடுக்க மறுத்து மாயாவுடன் மோதுகிறார்
அடுத்த வார செவ்வாய் கிழமை அதே போல
மற்றொரு காதல் ஜோடி கள்ள காதலை சுவற்றில் எழுதி வைத்து இருவரும் மரத்தில் தூக்கில் தொங்குகிறார்கள் ஊரே அல்லா கோல ப்படுகிறது யார் இதை எழுதியது எப்படி இவர்கள் இறந்தார்கள் என்று புரியாத யாததால் ஊரே இரவில் இளைஞர்களை வைத்து தேடுகிறார்கள் கண்டுபிடிக்க முடியவில்லை அடுத்து என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது படம்
இடைவேளைக்கு பிறகு தான் சைலஜாவின் வருகை அதன்பின் கதை சூடு பிடிக்கிறது ஒவ்வொரு காட்சியும் ரெக்கை கட்டி பறக்கிறது யார் அந்த கொலையாளிகள்? கொலை ஏன் நடக்கிறது சைலஜாவுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் சுவற்றில் யார் எழுதுகிறார்கள் இதெல்லாம் மர்மமான புதிராக இருக்கிறது
அந்த ஊர்ல இருக்கும் டாக்டர் அவருக்கும் சைலஜாவுக்கும் என்ன தொடர்பு ஊர் மக்கள் அவர்கள் மீது ஏன் பழி சுமத்துகிறது சைலஜா ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அந்த நோயால் அவர் எடுத்த விபரீதமான முடிவு என்ன. இப்படி எல்லா வகையிலும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று ரெக்கை கட்டி பறக்கும் திரைக்கதையில் செவ்வாய்க்கிழமை தூள் கிளப்புகிறது
நாயகி சைலஜா படம் முழுக்க நம் மனதுக்குள் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த லட்சுமி கல்யாணம் படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலான யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே என்ற பாடல் நினைவுக்கு வந்து போகிறது மனிதன் என்ற போர்வையில் மிருகங்கள் வாழும் நாட்டில் பெண் எப்படி புனிதமாக இருக்க முடியும் அவளைஎப்படி வாழ விடுவார்கள்? அதுவும் இளம் பெண் தனியாக இருந்தால் சும்மா விடுவார்களா நிச்சயம் அவளை சீரழிக்கும் கும்பல் காத்துக் கொண்டிருக்கும் சீரழிப்பது மட்டுமல்ல அவளை ஓட விரட்டும் அந்த சதிகார கும்பலின் முகத்திரையை கிழிக்க ஒருவன் வருகிறான் அவன் யார் இப்படி சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வந்திருக்கிறது செவ்வாய்க்கிழமை
காந்தாரப்பட பாணியில் உருவாகியுள்ள இந்த செவ்வாய்க்கிழமை நிச்சயமாக பார்க்க வேண்டிய படம் தாயும் தந்தையும் இல்லாத ஒரு பெண்ணின் நிலைமை என்னவாக மாறும் என்ற பரிதாப கோணத்தை ஏற்படுத்துகிறது
ஊர் ஜமீந்திரான பிரகாசம் பாபு முதல் வில்லனாக தெரிந்தாலும் பின்னாளில் அவர் செய்யும் காரியம் சபாஷ் போட வைக்கிறது
டாக்டராக வந்து சைலஜாவின் மர்ம நோயை கண்டறிந்து சைலஜாவுக்காக ஒரு அப்பாவை போல் வருத்தப்பட்டு நியாயத்துக்கு போராடும் அந்த கதாபாத்திரம் படத்தின் சிறப்பு
அஜ்மல் சில மணித்துளிகளே வந்தாலும் கொடூரமான படித்த வில்லனாக வந்து போகிறார்
நந்திதா உண்மையை கண்டுபிடிக்க துடிக்கும் பெண் போலீஸ் அதிகாரி மாயவாக வந்து உண்மைக்காக ஞாயம் பேசுகிறார் கிளைமாக்ஸ் காட்சியில் சைலஜா மீது இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவர் புறப்படும் அந்த காட்சி சபாஷ் போட வைக்கிறது
இயக்குனர் அஜய் பூபதி ஒரு அருமையான படத்தை கொடுத்திருக்கிறார் வித்தியாசமான திரைக்கதை யாருமே யோசிக்க முடியாத திரில்லர் சஸ்பென்ஸ் மாலச்சி அம்மாவின் முகமூடி அணிந்த மர்ம மனிதன் யார் சைலஜாவுக்கு நியாயம் கிடைத்ததா அந்த ஊர் மக்கள் உண்மையை புரிந்து கொண்டார்களா
பெண்களை ஏன் தனிமையில் விடக்கூடாது அப்பா அம்மா ஆதரவு தாத்தா பாட்டி ஆதரவு இப்படி யாராவது ஒருவர் பராமரிப்பில் இருப்பது தான் நல்லது என்று சொல்லும் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டும் இந்த செவ்வாய்க்கிழமை குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் பெண்களைப் பெற்ற அனைவரும் இந்த படத்தை அவசியம் காண வேண்டும் டிரைண்ட் ஆர்ட் ரவீந்திரன் ஒரு படத்தை தயாரித்தாலோ வாங்கி வெளியிட்டாலோ நிச்சயமா படம் தரமான படமாக இருக்கும் அந்த வகையில் இந்த செவ்வாய்க்கிழமை ஒரு தரமான வித்தியாசமான திரில்லர் படமாக வந்திருக்கிறது
