முதல் காதல் முதல் முத்தம் மறக்க முடியாது முதல் காதல் இழந்து விட்டால் வாழ்க்கை வசந்தம் பறி போகும்
அதன் பின்னர் வரும் காதல் நன்றாக அமைந்தால் வாழ்க்கை பொண்ணாகும்
ஜோ “சுஜி “ஸ்ருதி
இந்த மூன்று பேர் வாழ்க்கையில் நடந்த சுவையான காதல் ஜோடிகள் கதை “ஜோ”
கல்லூரி காலங்களில் மட்டுமே வசந்த காலம் அதிமாக வந்து போகும் சிறகடித்து பறக்கும் இளமை நிறைந்த வாழ்க்கை இந்த பருவத்தில் பயணம் செய்யும்
அப்படி காதலை கொண்டாடும் வெற்றி படமாக வந்துள்ளது ஜோ
முதல் காதல் ஜோடிகள் கதை அழகான பட்டாம்பூச்சி யாக சிறகடித்துப் பறக்கிறது
இரண்டாம் காதல் ஜோடிகள் வாழ்க்கையை உளவியல் கலந்து சொல்லியிருக்கிறார்
இயக்குனர்
இரண்டு கதைகளம் ரசிக்க வைக்கிறது வெல்டன் இயக்குனர்
உணர்வு பூர்வமான கதையிலும் ஜெயிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் சிலருக்கு முதல் பாதி பிடித்திருக்கலாம் சிலருக்கு இரண்டாம் பாதிப்பு இருக்கலாம் ஆனால் இரண்டு கதைகளுமா மனித வாழ்வோடு ஒன்றிப்போகும் கதைக்களம் அதனால் நம் மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுத்திருக்கிறது
ஜோ பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள் உடன் ஒரு கல்சுரல் பார்ட்டி நடக்கும் போது ஒரு பெண்ணை காப்பாற்றுகிறார்
அந்த பெண் யார்?
அடுத்து ஜோ கல்லூரியில் படிக்கும் போது மலையாள கரையோரம் மலர்ந்த சுஜியின் அழகான முகம் பொன்னிற மேனி கண்டு காதல் கொள்கிறார்
அந்த காதலில் ஈகோ அதிக அளவில் பகிரபடுகிறது
ஒருவர் மீது ஒருவர் அன்பில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் கோபம் நீயா நானா விவாதம் செய்யும் அந்த ஜோடிகள் பிரிவுக்கு அது வே காரணமாக அமைந்தது என்று சொல்லலாம்
ஆரம்ப கால காட்சியில் “ஜோ”
சுஜியிடம் காதல் சொல்ல தயங்குவது
நண்பர்கள் வற்புறுத்தி காதலை சொல்ல வைக்கும் அந்த காட்சிகள் இளமை புதுமை என்று சொல்லலாம் பல படங்களில் பார்த்த ஒரு தலை ராகம் என்றாலும் ரசிக்க வைக்கிறது.
சுஜியிடம் அழகு அழுகை பொய் கோபம் சினுங்கள் என ரசிப்பதற்கு நிறைய இருக்கிறது
ஆலப்புழா தேடி வரும் காதலனை போக சொல்வது பிரிய முடியாமல் கட்டிக் கொண்டு கண்ணீர் வடிப்பது எல்லாம் செம
கல்யாணம் பேச ரியோவை வரச்சொல்லி பின் அப்பாவை ரியோ அடித்து விட்டார் என்று அவரை வெறுக்கும் காட்சிகள் மனதில் பதிகிறார் அந்த மலையாள அழகு மங்கை
அந்த காதல் கதை இயக்குனர் சொந்த கதை என்று இயக்குனர் சொல்லும் போது விழிகள் ஆச்சரியமாக பார்த்தது அவரை அடப்பாவி மனுஷா இப்படியா உறுகி உறுகி காதலித்தாய்என்று நம் மனது பதறியது
இரண்டாம் பாதியில் வரும் ஸ்ருதி ரியோவிடம் இந்த திருமணத்தை நிறுத்த சொல்லி கேட்பதாகட்டும்
அதன் பின்னர் திருமணம் நடந்த பிறகு ரியோ வெறுப்பை ஏற்படுத்தி அவரை விட்டு விலகிச் செல்லும் போது பரிதாபப்பட வைக்கிறார்
கல்லூரியில் அவர் காட்டும் கண்டிப்பு
தங்கையின் வாழ்க்கையில் நடக்கும் அசம்பாவிதம் இதனால் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்பது என நடிப்பில் பட்டையை கிளப்பும் இளம் புயல்
சார்லி அவர் மனைவி யிடம் பேச துடிப்பது
ரியோ ஆறுதல் கூற அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சார்லி
நண்பர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது
ரியோ அம்மா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் வெல்டன்
ரியோ ராஜ் இதற்கு முன் நடித்த படங்களில் நடித்தார் என்பதை விட நடிக்க முயற்சி செய்தார் என்று சொல்லலாம் ஆனால் இந்த படத்தில் மனுஷன் எல்லோரையும் அழ வைத்து ஜம் என்று மனதில் இடம் பிடித்துக் கொள்கிறார்.
காதலியிடம் காதலை சொல்ல தயங்கி தயங்கி தயங்கி பின் வாங்கும் போது
கல்லூரியில் டான் ஆக வலம் வரும் போது
காதல் பிரிவு தாங்காமல் நண்பர்கள் முன் கண்ணீர் விட்டு அழுவது
காதலியின் மரணம் கண்டு கதறி அழுவது
பஸ்ஸில் காதலியை பிரிய மனமில்லாமல் உன் மூச்சு காற்று என் மீது பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று முத்தம் இடும் போதும்
வெளுத்து வாங்கியிருக்கிறார் வெல்டன் ரியோ
அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ரெடியாகி விட்டார்
மனைவி ஸ்ருதி தன்னை விட்டு விலகி போகும் போது பரிதாபப்பட வைக்கிறார் ரியோ
கல்லூரிக்கு சென்று மாமனார் அட்வைஸ் கேட்டு மனைவியிடம் அவமானப்படுத்தும் போதும் அமைதியான நடிப்பு ஆஹா
இப்படி ஒவ்வொரு காட்சியிலும் கைதட்டல்களை வாங்கி கொண்டு போகிறார் ரியோ எனும் ஜோ
சித்து குமார் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிக்க வைக்கிறது
ஒளிப்பதிவு அருமை கேமரா கவிஞர் கேரளா அழகை அள்ளி வந்து உள்ளார்
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது அதிகமாக ரியோ அழும் காட்சியில் கொஞ்சம் கத்தரி வைத்து இருக்கலாம்.
இயக்குனர் முதல் படத்தில் முத்திரை பதித்துள்ளார்
வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லலாம் அவரின் காதல் அனுபவம் படத்திற்கு கை கொடுத்துள்ளது
தயாரிப்பாளர் தரமான படத்தை கொடுத்திருக்கிறார் அவரை தமிழ் சினிமா திரும்பி பார்க்க வைக்கும்
மொத்தத்தில் இந்த “ஜோ”
நட்பில் காதலில்
கணவன் மனைவி உறவில் அம்மா மகன் பாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்
ஜோ காட்டில் ஜோ என வெற்றி மழை பெய்கிறது
நல்ல படம் வேண்டும் என்று படம் பிடிக்கும் ரசிகர்கள் தரமான படத்தை தலையில் தூக்கி கொண்டாட வேண்டும் அப்போதுதான் வெட்டு குத்து அடிதடி போன்ற படங்கள் விலகி ஓடும் தமிழ் சினிமா தரமான பாதையில் வெற்றி நடை போடும்
ஜோ படத்தில் இடைவேளை வரை காதல் இளமை இனிமை என்று செல்கிறது இடைவேளைக்கு பிறகு கணவன் மனைவி குடும்பம் கல்லூரி என கலகலப்பாக போகிறது இரண்டாம் பாதியில் ஆறுதலான ஜோமனதுக்கு நெருக்கமாகிறார்
நண்பர்கள் எப்போதும் அருகில் இருந்தால் வாழ்க்கையில் தோல்விகள் தள்ளிப்போகும் என்பதை இப்படம் சொல்கிறது
ஜோவின் அம்மா ஜோதிடம் அந்த பொண்ணுக்கு தற்கொலை செய்து கொள்கிறாயே எங்களுக்காக வாழ மாட்டாயா? நாங்கள் உன் மீது அன்பு காட்டவில்லையா என்று கேட்கும் காட்சியில் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அத்தனை பேரையும் கன்னத்தில் பளார் என்று அறைவது போல் இருக்கிறது சின்ன வயதில் இருந்து ஏகப்பட்ட கனவுகளோடு தன் மகன் நன்றாக வருவான் முதுமை களத்தில் காப்பாற்றுவான் என்று ஏங்கி நிற்கும் தாய் தந்தையர் தன் கண் முன்னே மகன் தற்கொலை செய்து கொள்ளப் பார்க்கிறேன் என்றவுடன் துடித்து போகிறார்கள் என்ற அற்புதமான நல்ல கருத்தை வழங்கி இருக்கிறது ஜோ மொத்தத்தில் இந்த ஜோ உங்களை ரசிக வைக்கும்
உருக வைக்கும் காதல் அமுதத்தை பருக வைக்கும் எவ்வளவு பாராட்டினாலும் அதுவும் இந்த ஜோ இந்த ஆணின் வெற்றி படத்திற்கு அட்சாரம் போட்டிருக்கிறது
