இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாக்கர்’.

இப்படத்தின் திரை விமர்சனம் பார்க்கலாம் வாங்க

இரட்டை இயக்குனர்கள் ராஜசேகர் என்- யுவராஜ் கண்ணன் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் ‘லாக்கர்’. இப்படத்தில் எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர், மாஸ்டர் படங்களில் நடித்த விக்னேஷ் சண்முகம் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார்.

மேலும், வில்லனாக தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்த நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். பிரின்ஸ், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார். தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்

இந்த படத்தின் கதை என்ன.

ஊரை ஏமாற்றி உல்லாசமாக வாழும் மூன்று பேர் திருடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் டெக்னிக்களாக கொள்ளையடித்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் வாழ்வில் காதல் வருகிறது அந்த காதல் அவர்கள் வாழ்க்கையை மாற்றி போட இனி திருட்டு வேலையே வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள் அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் நடந்தது என்ன காதலி அவர்களை நல்வழிப்படுத்தினாளா? அவர்களை திருட்டுப் பழியில் இருந்து கரை ஏற்றினாளா அல்லது மீண்டும் அந்த மூன்று பேரையும் அதல பாதாளத்துக்கு கொண்டு சென்றாளா இதுதான் படத்தின் மையக்கதை

படம் இன்னொரு சதுரங்க வேட்டை போல பயணிக்கிறது நாயகன் ஆரம்பக் கட்சியில் 40 லட்சம் ரூபாயை காரில் போகும்போது ஆட்டையை போட அப்போது விறுவிறுப்பாக பறக்கும் திரைக்கதை அதற்கடுத்து ஷேர் மார்க்கெட்டில் புரோக்கராக அவதாரம் எடுத்து ஆடிட்டரை ஏமாற்றும் போது இன்னும் விறுவிறுப்பாக போகிறது கதை

இவர்கள் திருடுவதை கண்டுபிடித்த காதலிஅவர்களிடம் ஒரு கேம் ஆடுகிறார் சக்கரவர்த்தி என்ற பெரிய கேங்ஸ்டரால் எங்கள் குடும்பமே சின்ன பிண்ணாமானது அவனை பழிவாங்க வேண்டும் என்று காதலி கேட்கிறார் காதலுக்காக ஒப்புக் கொள்ளும் நாயகன் சக்கரவர்த்திக்கு ஸ்கெட்ச் போடுகிறான் அந்த ஸ்கெட்ச் ஒர்க் அவுட் ஆனதா?ஆகவில்லையா? என்பது மீதி திரைக்கதை

படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் திரைக்கதை சிறப்பாக போகிறது பாடல் கட்சியும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கச்சிதமாக இருக்கிறது

இயக்குனர்கள் இரட்டையர்கள் இருவரும் செம புத்திசாலித்தனமாக கதையை செதுக்கி இருக்கிறார்கள்

ட்விஸ்ட் மெயில் ட்விஸ்ட் வைத்து படத்தை ராக்கெட் வேகத்தில் கொண்டு சென்று இருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது கிளைமாக்ஸ் காட்சியில் கதை இப்படித்தான் முடியும் என்று நினைக்கும் பொழுது இன்னொரு வடிவத்தில் பயணிக்கிறது ஆடிட்டர் யார் காதலி யார் ?வில்லன் எப்படி பழி வாங்கப்பட்டார்? அவரிடமிருந்து இந்த மூன்று பேரும் தப்பித்தார்களா? என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது

தமிழ் சினிமாவில் வலம் வருவார்கள் இவர்கள் கரூரை சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள் நாயகியின் நடிப்பு நன்றாக இருக்கிறது நாயகன் மீண்டும் கிரைம் படங்களில் வெற்றி அவதாரம் எடுக்க வாய்ப்பு நிறைய இருக்கிறது இப்படத்தை வாங்கி வெளியிடும் ஜெனிஸ் நல்ல படங்களை மட்டும் குறி வைத்து வெளியிட்டு வருகிறார் அவருக்கு இப்படம் மீண்டும் ஒரு வெற்றி படமாக அமையும் மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன் அவர்களுக்கு இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் சின்ன பட்ஜெட் தரமான விறுவிறுப்பான ஒரு நல்ல படத்தை கொடுத்த பட குழுவுக்கு வாழ்த்துக்கள் குறைகள் இருக்கத்தான் செய்கிறது தங்கத்தை வில்லன்இடம் இருந்து கொள்ளையடிக்க போகும் நாயகன் லாக்கரில் மாட்டிக்கொள்கிறார் அங்கிருந்து எப்படி தப்பித்தார் என்பதற்கு விளக்கம் இல்லை கடைசியில் பாம் வெடித்து வில்லன் இறந்தாரா பிழைத்தாரா என்ன ஆனார் என்பது அவசர அவசரமாக காட்டி இருக்க வேண்டிய அவசியம் இல்லை இது தான் கதையின் முக்கிய நாடி
அதை தெளிவாககாட்டி இருக்கலாம் மமொத்தத்தில் இந்த லாக்கர் ரசிகர்களை லாக் செய்துள்ளது வெற்றி படமாக அமைந்துள்ளது