குய்க்கோ திரை விமர்சனம்

விதார்த் மற்றும் யோகி பாபு கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் படம் ‘குய்கோ’. நாயகிகளாக ஸ்ரீபிரியங்கா, துர்கா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஸ்ரீபிரியங்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

’குய்கோ’ என்ற தலைப்பு ‘குடியிருந்த கோவில்’ என்பதன் சுருக்கம் தலைப்பை போல் வித்தியாசமான கதையம்சம் கொண்டது இந்த படம்

இயக்குநர் அருள்செழியன், “ஜீ தமிழ்ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது, 3 ஸ்க்ரிப்ட் பெளண்ட் பண்ணியள்ளார். அதுல ஒன்னுதான் ஆண்டவன் கட்டளை. மணிகண்டனோட ‘காக்கா முட்டை’ படம் பார்த்துவிட்டுப் பாராட்டுறதுக்காகக் கூப்பிட்டாராம்
அப்போ அவர் இவரது ‘ஆண்டவன் கட்டளை’ கதையைக் கேட்டு ள்ளார். அவர் மூலமாக ஃப்ரீசர் பெட்டி கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, கடைசி விவசாயி தயாரிப்பாளர் சமீர் பரத் அழைத்தார். யோகிபாபுவுக்கு, ஆண்டவன் கட்டளை சமயத்திலேயே கதை சொல்லியிருந்தாராம்
அப்படி உருவான படம் தான் குய்க்கோ

கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகப் பண்ணியிருக்கார் விதார்த், மிகச் சிறந்த மனிதராக நடித்து இருக்கிறார். . .

இளவரசு அவர் நடிப்பு சூப்பர்
யோகிபாபுவிற்கு ஜோடியாக ஜோடியாக நடித்திருக்கும் துர்கா நடிப்பு நன்றாக இருக்கிறது

முத்துக்குமார்
கேரக்டர். வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை இதுல சொல்லியிருக்கார். இந்தப் படம் எந்தச் சூழ்நிலையிலும் பார்வையாளர்களை ஏமாத்தாது. நூறு சதவிகிதம் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கும்.” .

ஃப்ரீசர் பெட்டிக்கு ஒரு எமோஷன் வச்சு அருமையான திரைக்கதையாக அமைச்சிருக்கார்
இயக்குநர் அருள் செழியன்

கிராமத்தில் மாடு மேய்க்கும் வேலை செய்யும் யோகிபாபுவுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வர, மாடு மேய்க்கும் ஒருவனுக்கு எனது தங்கையை திருமணம் செய்து தரமாட்டேன் என மறுத்துவிடுகிறார் அப்பெண்னின் அண்ணன். இதனால் வெளிநாடு சென்று ஒட்டகம் மேய்த்து பணக்காரராகி விடுகிறார் யோகிபாபு.

அந்த சமயத்தில் தாய் இறந்த செய்தி கிடைக்கு ஊருக்கு வரும் யோகிபாபுவுக்கு அதிர்ச்சி, தாயின் சடலத்தை காணவில்லை தொடர்ந்து என்ன நடக்கப்போகிறது என்பதே மீதி கதை.

படத்தில் யோகி பாபு கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது ஒட்டகம் மேய்த்துவிட்டு பணக்காரராக வந்த பிறகு அவர் காட்டும் தெனாவெட்டு பிரமாதம் அசால்டாக ஒவ்வொருவரையும் கலாய்த்து தள்ளுகிறார் நயன்தாரா வடிவேலு போலீஸ்காரர்கள் இப்படி எல்லோரையும் கலாய்க்கிறார் ஆனால் இது எந்த வகையிலும் யாரையும் மன வருத்தப்படி இல்லாமல் இருப்பது சிறப்பாக இருக்கிறது
விதார்த் நடிப்பு இயல்பாக இருக்கிறது இளவரசு நடிப்பு இயல்பாக இருக்கிறது அந்தோணி தாசின் இசை பாடல்கள் அருமையாக இருக்கிறது ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு முத்திரை பதிக்கிறது இயக்குனர் அழகான ஒரு கிராமத்து கதையில் காதலையும் காமெடியையும் கருத்துக்களையும் வைத்து படமாக்கி இருக்கிறார் 4 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ஒரு வெற்றி படமாக வந்திருக்கிறது இயக்குனருக்கு வாழ்த்துக்கள்